Home Blog Page 3581

மக்கள் கட்டளையிட்டால் அரசிலிருந்து வெளியேறுவோம் – சு.க. எச்சரிக்கை

அரசிலிருந்து வெளியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே இருகின்றது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த பொதுத்தேர்தலின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தோற்கடிப்பதற்கு திட்டம் வகுத்தனர்.சிலர் கழுகு என்றுகூட எம்மையும் கட்சியையும் விமர்சித்தனர். இனிமேல் கிராம மக்கள் வழங்கும் தீர்ப்பின் – கோரிக்கையின் பிரகாரமே எமது தீர்மானம் அமையும்.

பதவிகளை துறக்குமாறோ அல்லது வெளியேறுமாறோ மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை ஏற்று செயற்படுவோம்.” – என்றார்.

மக்கள் கட்டளையிட்டால் அரசியிலிருந்து வெளியேறுவோம் – சுதந்திரக்கட்சி

அரசிலிருந்து வெளியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே இருகின்றது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த பொதுத்தேர்தலின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தோற்கடிப்பதற்கு திட்டம் வகுத்தனர்.சிலர் கழுகு என்றுகூட எம்மையும் கட்சியையும் விமர்சித்தனர். இனிமேல் கிராம மக்கள் வழங்கும் தீர்ப்பின் – கோரிக்கையின் பிரகாரமே எமது தீர்மானம் அமையும்.

பதவிகளை துறக்குமாறோ அல்லது வெளியேறுமாறோ மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை ஏற்று செயற்படுவோம்.” – என்றார்.

கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 532 ஆக உயர்வு!

கொரோனா வைரஸால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 178 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 83 ஆயிரத்து 676 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சிறுமியைத் துறத்தும் பொலிசார்! சிங்கராஜ வனத்திற்குள் நட்சத்திர விடுதி கட்டுவது யார்? வீடியோ

சிங்கராஜ வனப்பகுதியில் காடழிப்பு நடப்பதாக தொலைக்காட்சியொன்றில் தெரிவித்த சிறுமியொருவரின் வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று கட்டப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும் இளம் வயது சிறுமியொருவர் தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த சிறுமியின் வீட்டிற்கு பொலிசார் சென்று வாக்குமூலமொன்றைப் பெற்றுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பொதுஅறிவு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போது அதில் கலந்துகொண்ட சிறுமி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டார்.

நான் சிங்கராஜ வனப்பிரதேசத்தின் நுழைவாயில் பிரதேசமொன்றில் வசிக்கின்றேன். அங்கு காடுகள் வெட்டப்படுகின்றன. மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் அங்குள்ள ஜீவராசிகள் அநாதியற்று அலைக்கின்றன.” என்று தெரிவித்தார்.

எதற்காக இவை வெடுப்படுகின்ற என்பது குறித்து தெரியுமா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிறுமியிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அந்த சிறுமி குறித்த வனப்பிரதேசத்தில் நட்சத்திர விடுதியொன்று கட்டப்படுவதாக தெரிவித்தார். இதற்காகவே நாளாந்தம் மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்படுவது குறித்தும் விபரித்தார்.

”அந்தப் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற யானைகள் மூன்று இருந்தன. அதில் ஒன்றுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை . இன்னும் இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. மனிதர்கள் நினைக்கிறார்கள், காடுகள் தமக்கானவை மட்டும் என்று. மரங்கள் வெட்டப்படுவது மட்டும் அங்கு பிரச்சினையல்ல. அங்கு ஜீவராசிகளும் வாழ்கின்றன. அவைகுறித்தே நான் பேசுகிறேன். இந்த மனிதர்களுக்கு வீடுகள் இல்லையென்றால் பரவாயில்லை. இருந்தும் மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்நியர்கள் வந்து எமது வீட்டை கபளிகரம் செய்வதைப் போல் இவர்கள் நடந்துகொள்கின்றனர். அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயனில்லை. இலங்கை முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இவற்றைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.” என்று அந்த சிறுமி தெரிவித்தார்.

சிங்கராஜ வனத்தில் நடக்கும் இந்த காடழிப்பு குறித்து பகிரங்கமாக தெரிவிக்கவே இதனைக் களமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்த சிறுமி குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் மேடைகளிலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், குறித்த சிறுமியின் வீட்டிற்கு பொலிசார் தேடிச் சென்று வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாகவும், குறித்த சிங்கராஜ வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாகவும், காடழிப்புகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் நட்சத்திர விடுதியொன்று அமைக்கப்படுவதாகவும், இது அரசாங்கத்தில் உள்ள பெருந்தலைவர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே, குறித்த சிறுமியை பொலிசார் துறத்த ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், காடழிப்பு விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

“ராஜபக்சக்களுக்காக பந்து வீசுகிறார்” – முரளியை வறுத்தெடுத்த பொன்சேகா!

” முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக விளையாடியபோது அவரது பந்து வீச்சை பார்த்து மகிழ்ந்தோம், பாராட்டினோம். ஆனால் இன்று ராஜபக்சக்களுக்கு சோரம்போகும் விதத்தில் அவர் பந்துவீசுகின்றார். முரளிக்கு 2 ஏக்கர் காணியை அரசு வழங்கியுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா, முரளிமீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

அத்துடன் இந்த அரசை விரட்டியடிப்போம். எமது பக்கம் பலமானதொரு அணி இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டளவில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமையும் எனவும் சரத் பொன்சேகா சூளுரைத்தார்.

அமைச்சர் சரத் வீரசேகரமீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

‘ பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அம்மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. மாநாட்டில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

அதேவேளை, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயார். ஊழல் வழியில் பயணிக்கும் இந்த அரசுக்கு உரிய பதிலை வழங்குவதற்கு மக்களும் தயாராக வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்தார்.

2025 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் ஆட்சியின்கீழ்தான் கட்சி மாநாடு நடைபெறும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

ரணில், சஜித்தை விளாசித்தள்ளிய அமைச்சர் சி.பி. ரத்நாயக்க

போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைத்தேர்ந்தவர் என அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி திருடனாக இருந்ததும் இல்லை. திருடனாக மாற போவதும் இல்லை. மக்கள் நம்பிக்கைக்கு அமைய ஜனாதிபதி ஆட்சி புரிகின்றார். அதேபோல் ரணிலும் கள்ளன். ரணிலும் பொய் கூறுவதில் சிறந்தவர். வாக்குகளை பெறுவதே அவர்களின் நோக்கம். வாக்குகளை பெற்ற பின்னர் அவர்கள் இந்த பகுதிக்கு வருவதில்லை.

கொழும்பில் இருந்தே அவர்கள் மக்கள் பிரச்சினையை தீர்த்தனர். யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு சேவைகளை செய்தவர் தற்போதைய பிரதமராவார்.

யானை, யானை என்றார்கள் அதில் எந்த புண்ணியமும் இல்லை. தற்போது தொலைப்பேசி அதிலும் புண்ணியமில்லை. தற்போது தொலைப்பேசியில் மின் சேமிப்பு இல்லை. அது செயலிழந்துள்ளது.

இப்போது அது வேலை செய்வதில்லை. நாம் மக்களின் பொறுப்பை ஏற்றது போல் செயற்படுகின்றோம். ஆகவே இரண்டு கால் யானையையும் நாம் விரட்டியுள்ளோம். யானை வேலிகளை அமைக்க உள்ளோம். அதனை எடுத்த எடுப்பில் செய்ய முடியாது. எமது ஆட்சியில் யானை – மனித மோதலுக்கு தீர்வு வழங்கப்படும்” என்றார்.

‘சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள்’

சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில்முனைவோர்களாக சுயமாக முன்னேறக்கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்று அவசியம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2021.03.15) தெரிவித்தார்.

சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் ரன்தொர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்கள் இவ்விசேட கூட்டத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.

சமுரத்தி கொடுப்பனவை பெறும், எனினும் அக்கொடுப்பனவு அவசியமற்றவர்களை நீக்குவதற்கு இதுவரை முறையான திட்டம் இல்லாத நிலையில், அவ்வாறான சமுர்த்தி பயனாளர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு 4 வீத சலுகை வட்டி விகிதத்தில் 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை எதிர்காலத்திலும் செயற்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 1762655 குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறும் அதேவேளை, அதற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் 53000 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கு மேலதிகமாக 25000 சமுர்த்தி பெண் தொழில்முனைவோரை பலப்படுத்தும் வேலைத்திட்டம் 14000 கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

500 உற்பத்தி கிராமங்களை ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் செயற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 50 கிராமங்களில் இதுவரை செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் இதன்போது அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி செயலணி ஊடாக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் ஆகியோரை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
கலந்து கொண்டனர்.

‘முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்’ – அனுசாவிடம் அமைச்சர் வாசு உறுதி!

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (15) பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் பிரச்சினை மற்றும் சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அமைச்சின் மூலம் விரைவான தீர்வுத்திட்டங்களை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
மேலும் உயர்தரம், மேற்படிப்புகளை மேற்கொண்டு தொழில் இன்மை காரணமாக பாரிய  சவாலை எதிர்கொண்டிருக்கும் எம் இளைய சமுதாயத்தினருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் அமரர் சந்திரசேகரனின் நண்பர் என்ற ரீதியில்   அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,அமரர் சந்திரசேகரன் மலையகத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களையும், சேவைகளையும் அனுஷா சந்திரசேகரனின் ஊடாக தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு  தனது அமைச்சின் மூலமான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...