Home Blog Page 3582

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் சுகாதார தொண்டரின் உடல்நிலை பாதிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 8வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுவந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை கஜனி எனும் பெண்ணின் உடல்நிலை திடீர் என மோசமடைந்ததால் 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடியாக தேர்தல் களத்தில் இறங்கிய நகைச்சுவை நடிகர்

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சை வேட்பாளராக களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் இராணுவ வன்முறை அதிகரிப்பு – ஐ.நா. சிறப்பு தூதுவர் கண்டனம்

இராணுவ ஆட்சிக்கு எதிரான மியான்மார் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என குற்றம்சாட்டி வந்த அந்த நாட்டு ராணுவம் கடந்த மாதம் 1-ம் திகதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் என ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிரடியாக கைது செய்தது.கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக ரகசியமான இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது ராணுவம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தி வருகிறது.

ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் ராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதை ராணுவம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, மியான்மரின் முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் நேற்று போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் யாங்கூன் நகரங்களில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிகோரி நடைபெறும் அம்பிகையின் போராட்டத்துக்கு கமலும் ஆதரவு!

இலங்கையை கண்டித்து அம்பிகை செல்வகுமார் பிரித்தானியாவில் ஆரம்பித்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ருவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஈழத்தமிழ் பெண் அம்பிகை செல்வகுமார் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம 17ஆவது நாளாக தொடர்கின்றது.

‘மலையகத்தில் விரைவில் மற்றுமொரு கட்சித் தாவல்’

மலையகத்தில் விரைவில் கட்சிதாவலொன்று இடம்பெறவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்தே இத்தாவல் இடம்பெறுகின்றது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

நுவரெலியாவில் உள்ள நட்சத்திர விடுதியொன்றிலும் அதன்பின்னர் கொழும்பிலுள்ள விடுதியொன்றிலும் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘புர்காவை தடைசெய்வதால் பிரச்சினைகள் தீவிரமடையும்’ – முஜிபுர்

புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை ஒருபோதும் தணியப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புர்கா விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முஜிபுர் ரகுமான் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும்.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை.

அதேவேளை புர்கா என்பது மதரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் அதுகுறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்க முடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது.

அத்துடன் அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மத ரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப் போக்குடைய சிந்தனையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?

மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாடு என்னவென்பதை அரசு உடன் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியது.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதன்போது மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தல் எப்போது, எந்த முறைமையின்கீழ் நடத்தப்படும் என்பது தொடர்பில் அரசு இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனாலும், 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலாக வேண்டும் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியபோது, ஜுன் மாதம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை அரசு வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் அந்த அறிவிப்பு மாயமானது. தற்போது மீண்டும் கருத்து வெளியிடப்பட்டுவருகின்றது.

எனவே, மாகாணசபைத் தேர்தல் எப்போது, எந்த முறைமையின்கீழ் நடத்தப்படும் என்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும்.” – என்றார்.

‘மலையக கட்சிகளுக்கு கொள்கை இல்லை – அரசியல் வியாபாரமே செய்கின்றன’

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்று மலையகத்திலுள்ள சில கட்சிகளுக்கும் கொள்கை கிடையாது.அக்கட்சியின் அரசியல் வியாபாரத்தையே நடத்துகின்றனர். அவர்களுடன் கூட்டணி அமைக்க கூடாது என்பதே எனது நிலைப்பாடு – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு,

இலங்கை ஆளுமைகள் அணி வெற்றிநடை – புள்ளி பட்டியலிலும் முதலிடம்!

இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆளுமைகள் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை ஆளுமைகள் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்ற முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பங்குபற்றும் உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஆளுமைகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து ஆளுமைகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது. டில்சான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 79 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆளுமைகள் அணி, 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை ஆளுமைகள் அணித் தலைவர் டில்சான் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரே ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். இவ்வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

ரி -20 போட்டி – 3000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர்!

20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடந்த 2ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

கோஹ்லி 3 ஆயிரம் ஓட்டங்களை எட்ட 72 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கோஹ்லி மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் 2வது இடத்தில் உள்ளார். அவர் 99 போட்டிகளில் கலந்து கொண்டு 2,839 ரன்களை சேர்த்துள்ளார். 3வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார். அவர், 108 போட்டிகளில் பங்கேற்று 2,773 ரன்களை குவித்துள்ளார்.

கோஹ்லியின் ஆட்டம் தவிர்த்து அறிமுக போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இஷான் கிஷான் அரை சதம் (56 ரன்கள்) அடித்தது வெற்றியை எட்டி பிடிக்க உதவியது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமன் பெற்றுள்ளது. 3வது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...