Home Blog Page 3583

நுவரெலியா மாவட்டத்தை ம.ம.மு. ஆளும் – ராதாகிருஷ்ணன் சபதம்!

2025 ஆம் ஆண்டளவில் நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி பலப்படுத்தப்படும் என்று முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு (14.03.2021) இன்று ஹட்டனிலுள்ள முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாக பல துன்பங்களை சந்தித்து வருகின்றது. நான்கு பக்கங்களிலும் நெருக்கடிகள். குறிப்பாக அனுசாவின் விலகல், அரவிந்தகுமாரின் செயற்பாடு, முற்போக்கு கூட்டணியின் அழுத்தம், எதிரணியில் இருக்க வேண்டிய நிலை என்பவற்றை முக்கியமாக குறிப்பிடலாம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் செயற்படுகின்றார். அனைத்தும் இறுகியுள்ளது. ஆகவே அங்கத்தவர்களின் ஒற்றுமயே இதிலிருந்து மீள ஒரே வழியாகும். 2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகும்.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஏனேனில் மலைக மக்களின் பிரச்சினை இதன்போது அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்படும். தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் அகைச்சாத்திடுகின்றன. எனவே மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில் புரையோடி போயுள்ள இன பிரச்சினையை தீர்க்க சிங்களவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல் பெண்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் ஆண்களின் அனுசரனை அவசியம். தற்போதைய நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போது வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன. ஆகவே மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.’ என்றார்.

க.கிசாந்தன்

‘நுண்கடன் நிதியை மலையக பெண்கள் வீணாக செலவு செய்கின்றனர்’

மலையக பெண்கள் நுண் கடன் மூலம் பெற்றுக் கொள்கின்ற பணத்தை தங்களுடைய பிள்ளைகளின் திருமண நிகழ்விற்கும் பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் பிறந்த நாள் விழாவிற்கும் ஆலய திருவிழாவிற்குமாகவே அதிகமாக செலவு செய்திருக்கின்றார்கள். இதன் மூலம் எங்களுடைய மலையக பெண்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக மாறியிருக்கின்றார்கள் என சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான திருமதி சோபனா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின (14.03.2021) நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இன்று இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் பெண்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு விடயமாக மாறியிருப்பது நுன் நிதிக் கடன் என்ற ஒரு விடயம். இதற்காக 26 வீதம் 32 வீதம் 36 வீதம் என வட்டிகள் அறவிடப்படுகின்றது.இந்த கடன் தொகையை மீள செலுத்த முடியாமல் பல சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.இது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகும்.

இது ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவருகின்ற காரணத்தால் இதனை எவ்வாறு மலையக பெண்களிடம் இருந்து வெளியே கொண்டு வருவது என்பது தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்கள் சமூக அமைப்புகள் ஏனைய மலையக மக்கள் தொடர்பாக செயற்படுகின்ற அமைப்புகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

இன்று மலையகத்தில் இளவயதில் முறையற்ற கர்ப்பம் தரித்தல் குடும்ப வன்முறை பெண் தற்கொலை என்பன குறிப்பிடக்கூடிய அளவில் அதிகரித்திருப்பதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான காரணங்களை ஆராய வேண்டிய ஒரு நிலையிலும் அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலும் இன்று மலையக பெண்கள் இருக்கின்றார்கள்.இதற்கான தீர்வை ஏனையவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதைவிட எங்கள் மூலமாக இதனை செய்வதற்கு மலையக பெண்கள் தயாராக வேண்டும்.

மலையக பெண்களை பொறுத்த அளவில் ஏனைய சமூகங்களை போல கல்வி சுகாதார பொருளாதார வசதிகள் குறைந்தவர்களாகவே இருக்கின்றோம்.இதுவும் இன்று மலையக பெண்களுக்கு உள்ள ஒரு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

இன்று பல குடும்பங்களில் பெண் பிள்ளைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஒரு நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.இதனை நான் ஒரு பெண் செயற்பாட்டாளனாக இருந்து கொண்டு பார்க்கின்ற பொழுது முழுமையாக எதிர்க்கின்றேன்.

ஏனென்றால் பிள்ளைகள் என்பவர்கள் அது ஆனாக இருந்தாலும் பெண்;ணாக இருந்தாலும் சமனாக பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும் ஏனெனில் குடும்ப நிலையில் இருந்தே ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க வேண்டும்.அப்படி உருவாக்குகின்ற பொழுதுதான் அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து வருகின்ற பொழுது அந்த சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்.

இன்று 109 வது பெண்கள் சர்வதேச தினத்தை நாம் கொண்டாடுகின்றோம்.ஆனால் ஏன் இந்த தினத்தை கொண்டாடுகின்றோம்.இதற்காக அர்ப்பணிப்பு செய்த பெண்கள் யார்?அவர்கள் செய்த அர்ப்பணிப்பு என்ன என்பதையும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஒரு விழாவை அல்லது ஒரு தினத்தை கொண்டாடுகின்ற பொழுது அந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.எனவே மலையக பெண்கள் எதனையும் சாதிக்கக் கூடிய திறமை இருக்கின்றது.

மலையக பெண்கள் இன்றும் பல சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.அவர்களை இனம் கண்டு அடுத்தடுத்த பெண்கள் தினத்தில் அவர்களையும் கௌரவப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால் எதிர்காலத்தில் இன்னும் எங்களுடைய மலையக பெண்கள் சாதனைகளை செய்வார்கள்.” – என்றார்.

ஆயிரம் ரூபாவுக்கு பின்னாலுள்ள ஆப்புகள் – அபாய சங்கு ஊதுகிறார் திகா!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என சிலர் மார்தட்டுகின்றனர். ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்படும் என தோட்டக் கம்பனிகள் அறிவித்துவருகின்றன. தொழில் சலுகைகளும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு யார் தீர்வை பெற்றுக்கொடுப்பது.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு இன்று (14) ஹட்டன் DKW மண்டபத்தில் மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார் எம்.பி. உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திகாம்பரம் எம்.பி., மேலும் கூறியதாவது,

” வேலை நேரம், வாக்குரிமை உட்பட தமக்கான உரிமைகளை பெண்கள் போராடியே வென்றெடுத்தனர். எனவே, பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல விடயங்களை முன்னிறுத்தி மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் நினைவுகூரப்படுகின்றது.   ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண்ணின் பங்களிப்பு நிச்சயம் இருக்கின்றது. எனவே, பெண்களுக்கான உரிய அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அது தற்காலிக நியமனம் அல்ல. அப்பதவியில் அவரே நீடிப்பார். அதுமட்டுமல்ல உள்ளாட்சி மன்றங்களிலும் நாம் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளோம்.  உலகில் பல நாடுகளில் பெண்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர். சில நாடுகளை பெண்கள் ஆள்கின்றனர்.எமது பெண்களின் வாழ்வும் மேம்பட வேண்டும். அதற்காக நாம் குரல் கொடுப்போம். குறிப்பாக பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் சம்பளத்துக்காககூட போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்துவிட்டோம் என சிலர் கொக்கரிக்கின்றனர். ஆனால் 12 அல்லது 15 நாட்கள்தான் வேலை வழங்கப்படும் எனவும், தொழிலாளர்களுக்கான சலுகைகள் இல்லாமல்போகும் எனவும் கம்பனிகள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது? எமது மக்களுக்கு ஊழைப்புக்கேற்ப ஊதியம் வேண்டும். எனவே, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘சுகாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள்’ – ஜீவனுக்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்ட தொண்டமான் குடும்பத்தாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இந்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிள்ளைகளின் வாழ்வு மேம்படவேண்டும் என்ற நோக்கில் சிரேஷ்ட தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தொண்டமான் குடும்பத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்டனர். இதற்காகவே தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தற்போது சரியான வழியை தெரிவுசெய்துள்ளார். கல்வி துறை மேம்படாவிட்டால் சமூகம் மேம்படாது. எனவே, கல்வியை ஒதுக்கிவிட்டு அபிவிருத்திகள் செய்தால் அவை பயன்தராது. அந்தவகையில் கல்வி மேம்பாட்டுக்காக ஜீவன் செயற்படுவது சிறப்பு. கல்வி கற்றால அதன்மூலம் கிடைக்கும் அறிவை எவராலும் களவாட முடியாது. கல்வியால் சாதிக்க முடியும். எனவே, கல்வி திட்டங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் முன்வைக்கும் யோசனைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதேவேளை, தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார வதிகள் தொடர்பிலும் ஜீவன் தொண்டமான் கவனம் செலுத்துவார் என நம்புகின்றோம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்பட்டுவிட்டால் எவருக்கும் அடிபணியவேண்டிய நிலை ஏற்படாது.

மாணவர்களும் கல்வியை இடைநடுவில் கைவிடாது, பயிற்சி நிறைவுபெறும்வரை கற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொழில் வாய்ப்புகள் கிடைத்தால் இப்பகுதி பிள்ளைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘ மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்’ – ஜீவன் மீண்டும் உறுதி

” நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் சிலர் குறை காண்கின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்கள் இல்லாதுபோய்விடும் எனவும் விமர்சிக்கின்றனர். நாம் தொழிலாளர்களை பாதுகாப்போம். எனினும், சந்தா வாங்கும் சிலர் தொழிலாளர்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒரு வருடகாலப்பகுதியில் எம்மால் முக்கியமான சில விடயங்களை நிறைவேற்றமுடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. மலையகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எமது இளைஞர்களும் நம்புகின்றனர். நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டாம். வீண் விமர்சனங்களை முன்வைப்பர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை.

கொரோனா தடுப்பூசி உட்பட பல திட்டங்கள் இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்தாலும் ஆயிரத்து எட்டு குறைகளை கூறுபவர்கள் இருக்கவே செய்கின்றனர்.எதுஎப்படி இருந்தாலும் எமது சேவைகள் தொடரும்.” – என்றார்.

க.கிசாந்தன்

நுவரெலியாவில் நேற்று 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நுவரெலியாவில் நேற்று 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோர்வூட் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் மூவர் உட்பட 6 சுகாதார பிரிவுகளில் இருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிக்குவாரா அசாத் சாலி? விசாரிக்க விசேட குழு அமைப்பு!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அசாத் சாலி, பணம் இருந்தால் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்தோடு, கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் அவ்வாறு சட்டங்கள் மாற்றப்பட்டாலும் அதனை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைமையை சட்டங்களினால் மாற்றிவிட முடியாது. முஸ்லிம் ஆண் ஒருவர் தனது பண வசதிக்கு ஏற்ற வகையில் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றார். அதில் எவ்வித தவறும் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

செல்வம் இருக்கும் ஓர் ஆண் வசதி குறைந்த சில பெண்களை திருமணம் செய்து அவர்களை பராமரிப்பதில் தவறில்லை. முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து, முஸ்லிம் சட்டம் தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பௌத்த தகவல் மையத்தின் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் மற்றும் தேசிய முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் உள்ளிட்ட சிலர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் அரச உளவாளியா? வெளியானது தகவல்!!

21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், புலனாய்வுப்பிரிவின் உளவாளி அல்லன் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சஹ்ரான் அரச உளவாளியெனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சஹ்ரான் புலனாய்வுப்பிரிவின் உளவாளி அல்லன். எமது கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை. அவ்வாறு எதாவது தகவல் இருந்தால் உடன் சி.ஐ.டிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனைவிடுத்து வதந்திகளுக்கு உயிரூட்டக்கூடாது.

புலனாய்வு பிரிவினர், சஹ்ரானிடமிருந்து எந்தவொரு தகவலையும் பெறவில்லை. புலனாய்வு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை. எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சி.ஐ.டியிடம்சென்று அழுது புலம்பியுள்ளார். தனது அறிவிப்புக்கு மன்னிப்பு கோரியும் உள்ளார். அவருக்கு எதிராக நிச்சயம் வழக்கு தாக்கல் செய்யப்படும்.” – என்றார்.

பெருந்தோட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

2015 ல் சம்பள உயவு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இ.தொ.கா முன்னாள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானால் தன்னிச்சையாக 1000 ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பும் கலந்தாலோசித்து இக்கோரிக்கையை ஆதரித்தன.

இக்காலத்தில் தேர்தல் சூடுபிடித்திருந்ததால் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள் 1000 ரூபா கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டினர். ஆனால் தேர்தல் முடிவடைந்தவுடன் அவர்கள் மெளனமாகி விட்டனர். தொழிற்சங்க பிரதிநிதிகளோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 1000 ரூபா வழங்க முடியாதென்பதே முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடாக இருந்தது. இறுதியில் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும் ஏனைய கொடுப்பனவாக 50 ரூபாவாக மொத்தம் 750.00 ரூபா கிடைக்கப்பெற்றது.

இக்கோரிக்கைக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கருப்புப்பட்டி போராட்டங்கள், உண்ணாவிரதப் பேராட்டங்கள் தேசிய சர்வதேச ரீதியிலும் நடைபெற்றன. ஆயிரம் ரூபா இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. 1000 ரூபா கொடுக்கா விட்டால் தோட்டங்களை அரசு சுவீகரிக்கும் எனவும் பயமுறுத்தப்பட்டது. தைப்பொங்கலுக்கு முன் கிடைக்கும், தீபாவளிக்கு முன் கிடைக்கும், கொரோனா காய்ச்சல் சுகமான பின் கிடைக்கும், தேர்தல் முடிவடைந்தவுடன் கிடைக்கும் என மாறிமாறி ஏதோதோ ஊடகங்களில் கூறிக்கொண்டே இருந்தனர்.

கடந்த வருடம் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையில் 1000 ரூபா கோரியபோது இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தால் மாற்றுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால், அவர்களின் இந்த மாற்றுத்திட்டம் தொழிலாளர்களைப் படுகுழியில் தள்ளும் திட்டமாதலால் தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினாால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது 1000 ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் பலமுறை தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் முதலாளிமார் சம்மேளனத்தினால் எவ்வித மாற்றமும் ஏறப்படாமையால் இதுகுறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டது.

அதன்பின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் பலமுறை முதலாளிமார் சம்மேளனத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததினால் சட்டத்தின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏனெனில் ஆண்டாண்டு காலம் நட்டம் நட்டம் எனக்கூறிக் கொண்டே போனால் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எப்போது?

இதனால், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய ஒரே மார்க்கம், சம்பள சபைகள் கட்டளைச் சட்டம் என்பதால் 07.01.1944ல் அங்கீகரிக்கப்பட்ட தேயிலை வளர்த்தல் மற்றும் உற்பத்தித் தொழில் சம்பள நிர்ணய சபை, 22.10.1949ல் அங்கீகரிக்கப்பட்ட இறப்பர் நடுதல் மற்றும் பொது இறப்பர் உற்பத்தி கைத்தொழில் சம்பள நிர்ணய சபை ஆகிய இரண்டு சபைகளிலும் 1000 ரூபா வழங்க வேண்டுமென்ற பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த இரண்டு சபைகளிலும் இவ்விடயங்கள் சம்பந்தமாக 08.02.2021ல் வாதவிவாதங்கள் நடைபெற்றன. அதன்பின் இறுதியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தொழிலாளர் பிரதிநிதிகளுடன் 03 நியமன அங்கத்தவர்களும் வாக்களித்ததினால் 900 ரூபா குறைந்தபட்ச தினச் சம்பளமாகவும் 100 ரூபா வரவுசெலவு திட்ட சலுகைக் கொடுப்பனவாக தேயிலை இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதை தொழில் அமைச்சரின் அங்கீகாரத்துடன் 05.03.2021ல் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டதை தோட்ட நிர்வாகங்கள் 05.03.2021 முதல் அமுல்படுத்த வேண்டும். இதுபோன்ற விடயங்கள் கடந்த காலங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, 1998ம் ஆண்டு நமது நாட்டின் தேசிய தினமான பெப்ரவரி மாதம் 4ம் திகதியை ஏனைய தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக அங்கீகரித்துள்ளதைப் போல் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் அங்கீகரித்து விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்ற பிரேரணைக்கு 29.03.2000ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தொழிலாளர் பிரதிதிகளுடன் 03 நியமன அங்கத்தவர்களும் வாக்களித்ததால் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் 01.08.2020 முதல் சம்பளத்தோடு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற அறிவித்தலின் பிரகாரம் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படுகின்றன.

அதன்பின் சிறுதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமாக சிறுதோட்ட உரிமையாளர்களின் சார்பில் 50 ஏக்கருக்கு மேலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 95 ரூபாவும், 50 ஏக்கருக்கு குறைவாக உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 88 ரூபாவும், 50-25 ஏக்கருள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 83 ரூபாவும் வழங்க வேண்டுமென்ற பிரேரணை தேயிலை உற்பத்தியும் பதனிடல் சபையில் முன்வைக்கப்பட்டது. இப்பிரேரணை சம்பந்தமாக 22.07.1998ல் நடைபெற்ற தேயிலை வளர்த்தல், உற்பத்தி தொழில் சம்பள நிர்ணய சபையில் வாதவிவாதங்கள் நடைபெற்று இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 95 ரூபா வழங்கும் பிரேரணைக்கு தொழில்கொள்வோர் 04 பிரதிநிதிகளோடு 02 நியமன அங்கத்தவர்களும் வாக்களித்தனர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

கூட்டு ஒப்பந்தமுறையை பலர் பலவிதமாக விமர்சனம் செய்ததோடு அதனை கிழித்தெறிய வேண்டும் எனக் கூறப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் மூலமாக சம்பள உயர்வை பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டன. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 1000 ரூபா வழங்க சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வழங்க வேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளமுடியும். முதலாளிமார் சம்மேளனம் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமல்ல, தொழிலாளர்கள் நீண்டகாலமாக அனுபவித்த உரிமைகள் சலுகைகள் போன்றவைகள் தோட்டங்கள் கம்பனிமயமான பின் ஒவ்வொன்றாக ஒழித்து தற்போது கொழுந்து பறிப்பதும் அதை தூளாக்கி விற்பது மாத்திரமே செய்யப்படுகின்றன. ஆகக் குறைந்தது தொழிலாளர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்ட 500 கிறாம் தேயிலைத் தூள் வழங்குவதிலும் புதியமுறை மூலம் அதிகமானவர்களுக்கு கிடைப்பதில்லை. தோட்டங்கள் காடாகி காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகரிக்கின்றன. அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றை நிர்வாகங்கள் கணக்கெடுப்பதும் இல்லை. இதேநிலை தொடர்ந்தால் தோட்டங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகிவிடுவதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

நமது மக்கள் பிரதிநிதிகள் வெறுமனே சம்பள விடயத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் தோட்ட மக்களின் மிகமுக்கிய தேவையான காணி உறுதியோடு வீடும் காணியும் பெற்றுக்கொடுக்க முன்வருவதுடன் தமிழ்மொழி பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான, கணிதபாட ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனையே பெருந்தோட்ட சமூகம் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.

நௌப்பருடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகள் யார்?

21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென ரி.ஐ.டியினரால் அடையாளம் காணப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம், மொஹமட் நௌப்பருடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகளை கண்டறியவதற்கான விசேட விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

புலனாய்புப்பிரிவினர் மற்றும் ரி.ஐ.டியினர் ஆகியோராலேயே இவ்விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மொஹமட் நௌப்பவர் என்பவர் நீண்டகாலமாக கட்டாரில் இருந்துள்ளார்.இதன்போது இலங்கை உட்பட இதர நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுள் யார், யார் இவருடன் தொடர்பை பேணியுள்ளனர் என்பதை கண்டறிவதே இதன் நோக்கம்.

2016 ஆம் ஆண்டு முதலே நௌப்பருடன், சஹ்ரானுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அன்று முதல் 21/4 தாக்குதல் இடம்பெறும்வரை சஹ்ரானை கருத்தியல் ரீதியில் இவரே வழிநடத்தியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...