” தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கரை வருடங்கள் அரசுடன் இருந்தது. இக்காலப்பகுதியில் மலையகத்தில் உரிமை அரசியல் வென்றெடுக்கப்பட்டது. எமது காலம்தான் மலையகத்துக்கு பொற்காலமாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
87,465 பேருக்கு கொரோனா – 84,253 பேர் குணமடைவு!
நாட்டில் மேலும் 179 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 87,465 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் 525 பேர் உயிரிழந்துள்ளனர். 84 ஆயிரத்து 253 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 2,508 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
‘காட்டிக்கொடுக்க வேண்டாம்’- சிவநேசனுக்கு இ.தொ.கா. இளைஞர் அணி தலைவரும் பதிலடி!
” பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் சந்தா பணத்தை அறவிடுகின்றது. வாக்குகளையும் பெறுகின்றது. எனவே தொழிலாளர்களின் நலனிலும் உரிமைகளிலும் அவர்களும் அக்கறை செலுத்த வேண்டும். அதை விடுத்த காட்டிகொடுப்புகளை செய்ய கூடாது.” – என்று இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
சிவநேசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” கடந்த பல்வேறு வருடங்களாக பேசு பொருளாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாய் விடயம் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியின் ஊடாக நிறைவேறியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன் அப்போது இ.தொ.கா வின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானால் ஆயிரம் ரூபாய் தொடர்பான கோரிக்கை முன்வைக்கபட்ட போது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என்று வழங்கப்பட்ட உறுதி மொழியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
இதற்கான முழுமையான நடவடிக்கையினை இ.தொ.கா வின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ஜீவன் தொண்டமான் முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பள தொகையை வழங்க வேண்டும் என வர்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இது மலையக மக்களுக்கு கிடைத்துள்ள பாரிய வரப்பிரசாதம் ஆகும்.
இவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பளம் உறுதியாகியுள்ள நிலையில் வழமை போன்றே எதிர் தரப்பினர் பல்வேறு விமர்சனங்களையும் அரசியல் இலாபத்திற்கு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்ற நிலையில் தொழிலாளர் தேசிய சங்க இளைஞர் அணி தலைவரும் ஏதோ உளறுகின்றார். கடந்த பல வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது,
தொழிலாளர்கள் தலைநிமிர்ந்து கௌரவமாக தொழில் செய்ய இ.தொ.கா முன்னின்னு சேவை செய்துள்ளது. அந்த வகையில் தற்போதும் தொழிலாளர்களின் உரிமைக்கும் அவர்களின் கௌரவத்திற்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
ஆயிரம் ரூபாய் சம்பள தொகை வழங்கினால் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த சலுகைகள் இல்லாமல் போகும் என்பது எதிர்தரப்பினர் அரசியல் இலாபத்திற்கென கூறும் கருத்தாகும். ஒரு போதும் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளும் உரிமைகளும் இல்லாமலாகது. அதற்கு ஒருபோதும் இ.தொ.கா வும் இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஜீவன் தொண்டமானும் இடமளிக்கபோவதில்லை. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அறிக்கை விடுவதை தவிரத்துக்கொண்டு மக்களின் நலன்சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது.
அத்தோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞன் அணி தலைவர் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் அவர் சார்ந்ந தொழிற்சங்கமும் பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் சந்தா பணத்தை அறவிடுகின்றது.வாக்குகளையும் பெறுகின்றது. எனவே தொழிலாளர்களின் நலனிலும் உரிமைகளிலும் அவர்களும் அக்கறை செலுத்த வேண்டும். அதை விடுத்த காட்டிகொடுப்புகளை செய்ய கூடாது.” – என்றார்.
‘சிறுவர் துஷ்பிரயோகம்’ – செந்தில் தொண்டமானின் தலையீட்டால் விசாரணை குழு அமைப்பு
இரத்தினபுரி, பலாங்கொடை கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஓபநாயக்க பகுதியிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் அதிபர், 10 வகுப்பு மாணவர் ஒருவரை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியாக பொலிஸில் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளதுடன், அதிபரை உடனடியாக பதவி நீக்குமாறு கோரி, பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதையடுத்து, குறித்த அதிபர் ஓபநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பலாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இ.தொ.காவின் பலாங்கொடை அமைப்பாளர் ரூபன் பெருமாள் இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தத்தை அடுத்து மாகாண பணிப்பாளர் குருப்பு ஆராய்ச்சியுடன் கலந்துரையாடி உடனடியாக அதிபருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன் பாடசாலையின் செயற்பாடுகளையும் திங்கட்கிழமைமுதல் வழமைக்கு கொண்டுவர ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை விசாரணை குழு கூடிய அதிபர் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
மத்தியில் கூட்டணி – மாகாணத்தில் தனிவழி! சுதந்திரக்கட்சி அதிரடி!!
இவ்வாண்டுக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திரக்கட்சி பங்காளியாக இருப்பதால், கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து பரீசிலிக்க வேண்டும் எனவும், தேவையான இட ஒதுக்கீடுகள் கிடைக்காத பட்சத்தில் தனி வழி செல்வதே சிறந்தது எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் தனி வழி சென்றால்கூட அரசியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறாது எனவும், மத்தியில் கூட்டணி பயணம் தொடரும் எனவும் சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதேஷிற்கு விஜயம் செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு செல்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது.
இந்த விஜயத்தின்போது அவர் பங்களாதேஷ் நாட்டின் அரச பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து 3 படங்களில் அதிரடி காட்டவுள்ள விஜய்!
விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அடுத்து 3 படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார்.
இது விஜய்க்கு 65-வது படம். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
பெரும்பகுதி படப்பிடிப்பை ரஷியாவில் நடத்துவது என்றும், அக்டோபர் மாதத்துக்குள் முழு படத்தையும் முடித்து அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவது என்றும் திட்டமிட்டு உள்ளனர்.
விஜய்யின் 66-வது படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க உள்ளது. அடுத்த வருடம் கோடையில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. 2 படங்களையும் இயக்க சுதா கொங்கரா, மகிழ் திருமேனி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
‘பக்கத்து வீட்டு கதவை தட்டும் சிவநேசன்’ – பதிலடி கொடுத்தது ம.ம.மு!
அரசியல் நாகரீகமும் இல்லாமல் , சுயமனித ஒழுக்கமும் இல்லாமல் தொடர்ந்து மாற்று கட்சியினரை விமர்சிப்பதையே தனது அரசியலாக சிவனேசன் கொண்டுள்ளார். உள்வீட்டு பிரச்சனையே ஓராயிரம், இதில் அடுத்தவர் வீட்டு கதவை தட்டுகிறார் என மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி பொதுச்செயலாளர் சுரேன் கதிர்காமத்தம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையகத்தில் மக்களின் உரிமைக்குரலாய் சந்திரசேகரனால் தொடங்கபட்டு இன்று ஒரு தனி தாற்பறியத்துடன் பயணிப்பதே ம.ம.மு .
கல்விமான்களை புத்திஜீவிகளையும் , சமூக ஆர்வாலர்களையும் எப்போதும் கொண்டுள்ள ஒழுக்கம் நிறைந்த எம்மை போன்ற அமைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.கூட்டணி பிளவுபட்டால் மாகாண சபை தேர்தல்களில் இலகுவில் வெல்ல முடியும் என்ற ஒரு குறுகிய எண்ணத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் சிவனேசன் ஈடுபடுகின்றார்.
சிறந்த ஆளுமை மற்றும் அரசியல் அறிவு கொண்ட திலகரை வெளியேற்றி விட்டு , தம் உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யாமல் எம்மை நோக்கி விரல் நீட்டுகின்றார்.ஒரு பொதுச்செயலாளரை தெரிவு செய்ய முடியாத கட்சி எம்மை விமர்சிப்பதில் அர்த்தமில்லை வேடிக்கைக்குறியது,
மேலும் எமது கட்சியின் கட்டமைப்பை பற்றி அவர் கவலை பட தேவையில்லை! நாம் சரியாக செயற்பட கூடியவர்களை இனம் கண்டு வாய்ப்பு வழங்கி வருகின்றோம் மலையகத்தில் சரியான ஜனநாயகம் நிறைந்த கட்சி நாம் தான்! எம்மில் தலைவர் மட்டும் முடிவெடுப்பதில்லை தலைவரின் வழிகாட்டலில் கவுன்சில் ,மத்திய குழு போன்ற முக்கிய சபைகளில் தீர்மானிக்க படுகின்றன!
யாரையும் நாம் ஒதுக்கவில்லை கட்சியுடன் பயணிக்க சொல்கின்றோம் வாய்ப்பு வரும்போது வழங்குவோம்.இனியொருமுறை இவ்வாறு விமர்சனம் படுத்தினால் விளைவு எதிர்பாராத விதமாக இருக்குமென சுரேன் கதிர்காமத்தம்பி குறிப்பிட்டார்.
‘கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் வெளியேறினால் முறுகல் ஏற்படும்’
“வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமையாகும். சம்பள நிர்ணய சபை உடன்பாட்டை காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முற்பட்டால் அது கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் முறுகலை ஏற்படுத்துமென்பதை எச்சரிக்கையுடன் வலியுறுத்த விரும்புகிறேன்.”
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்று கொடுக்க வேண்டுமென்ற அமரர் ஆறுமுகம் தொண்டமானின் கனவை அவரது புதல்வர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என இ.தொ.கா உப செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி.சென்னன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர்மேலும் கூறியதாவது,
கடந்த 5 வருடங்களுக்கு முன்னராக இ.தொ.காவின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூபா ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார்.
தாம் எதிர் கட்சியில் இருந்த போதும் குறித்த சம்பள உயர்வு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஒரு கட்டத்தில் இக்கோரிக்கை சமூக போராட்டமாக மாற்றமடைந்து மலையகத்தில் புதுவித எழுச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பள கோரிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தான் முன்வைத்த காலை பின் வைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவருடைய திடீர் மறைவுக்கு பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோஷம் முற்று பெற்றுவிடுமென எதிர்தரப்பினரும் கம்பனி நிர்வாகத்தினரும் நினைத்தனர்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் படி முதலாளிமார் சம்மேளனத்துடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் முன்னிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை.
இறுதியில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. காலங் கடந்தேனும் பெற்றுக் கொடுக்கப்பட்ட இச்சம்பள உயர்வால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் இவ்விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு இ.தொ.கா என்றும் மலையக மக்கள் நலனில் அக்கறையுள்ள அமைப்பு என்பதை நிரூபித்துள்ளது.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமையாகும். சம்பள நிர்ணய சபை உடன்பாட்டை காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முற்பட்டால் அது கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் முறுகலை ஏற்படுத்துமென்பதை எச்சரிக்கையுடன் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்வரும் காலங்களில் மலையக மக்களின் சமூக நலனில் இராஜாங்க அமைச்சர் ஜீவனுடன் இணைந்து தொடர்ந்து அர்பணிப்புடன் செயற்பட்டு பல நன்மைகளை பெற்று கொடுப்போம் என்றார்.
நீதிகோரி நடைபெறும் போராட்டம் 14ஆவது நாளாகவும் தொடர்கிறது!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 14ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இன்றையதிம் போராட்டத்திற்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியார் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தின் கோரிக்கைகளாவன,
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.
தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைது குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




