Home Blog Page 3585

விமலுக்கு எதிராக வருகின்றது நம்பிக்கையில்லாப் பிரேரணை?

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சிலர் தீவிரமாக ஆராய்ந்துவருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பில் கலந்துரையாடிவருவதுடன், பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அமைச்சர் விமல் வீரசன்சவுக்கு எதிராக அரசுக்குள்ளேயே எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. குறிப்பாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான 43 எம்.பிக்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து விமலுக்கு எதிரான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். விமலால் ஆற்றப்பட்டுள்ள சில உரைகளையும் காணொளி வடிவில் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் நம்பிக்கையில்லாத பிரேரணையொன்றை முன்வைத்தால் அது அரசுக்கு சவாலாக அமையும் எனவும், மொட்டு கட்சி உறுப்பினர்கள்கூட ஆதரவு வழங்ககக்கூடும் எனவும் எதிரணி உறுப்பினர்கள் சிலர் கருதுகின்றனர். அதேபோல் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக்கூட ஆட்டம் காண வைக்கமுடியும் எனவும் கருதுகின்றனர்.

எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தால் பிளவுபட்டிருக்கும் அரச கூட்டணி  மீண்டும் ஐக்கியமாகக் கூடும் என்ற கோணத்திலும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடிய பின்னரே இது விடயம் தொடர்பில் இறுதி முடிவொன்று எடுக்கப்படக்கூடும்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு நாளை ஹட்டனில்

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு நாளை ஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற உள்ளது.

சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரதின் ஆலோசனையில் மகளிர் அணி தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வும் ஆரம்பமாகும்.

இந்த நிகழ்வில் சங்கத்தின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப் முன்னாள், மாகாண சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், மாதர் சங்க தலைவிகள், தோட்ட தலைவிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இலங்கை அணியை பந்தாடி தொடரை வென்றது மே.தீவுகள் அணி!

மேற்கிந்திய தீவுகள் , இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.

மேற்கிந்திய தீவுகள் , இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.தீவுகள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மே. தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலக பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் காப்பாளர் சந்திமல் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹசரங்க அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 47 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் மொகமது 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிசும், ஷாய் ஹோப்பும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது.

எவின் லெவிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார். ஷாய் ஹோப் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு வழங்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்து

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் மாகாணசபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்ட தலைவி சாந்தினி கோன்காகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

மாகாணசபை தேர்தலை நடத்தி அதற்கான மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அரசாங்கம் மாகாணசபைக்கு உரித்தான நிறுவனங்களின் நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றது. மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிறுவனங்களை அரச அதிகாரிகளை நியமித்து, அரசாங்கத்துக்கு தேவையான முறையில் இதன் நிர்வாகத்தை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. அதனால் மாகாணசபை தேர்தலை நடத்துவதை தொடர்ந்தும் காலம் கடத்தாமல் விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் மாகாணசபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது. சர்வதேச பெண்கள் தினத்திலே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மேலும் 2017ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 25 வீத கோட்டாவை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசிய கட்சியாகும். அதேபோன்றதொரு பிரேரணையை மாகாண சபையிலும் உள்வாங்க மாகாணசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் பிரேரித்திருக்கின்றோம் என்றார்.

மேற்கு முனையம் வேலைத்திட்டம் இவ்வருடம் நடுப்பகுதியில் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் – என்று துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மேற்கு முனையம் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயற்படுமாறு எமக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுகள் இடம்பெறுகின்றன.

சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எமது யோசனை அரசிடம் முன்வைக்கப்படும். அதன்பின்னர் சர்வதேச உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, மேற்கு முனையம் கட்டியெழுப்படும். 85 வீதம் முதலிடும் நிறுவனம் வசமும், 15 வீதம் துறைமுக அபிவிருத்தி அதிகார சபை வசமும் இருக்கும்.

இவ்வருடம் நடுப்பகுதியில் வேலைத்திட்டம் ஆரம்பமாகும். ” – என்றார்.

போலி ஆவணங்களை தயாரித்து பெருந்தோட்டக்காணிகள் அபகரிப்பு

பெல்மதுளை பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்து பெருந்தோட்ட காணிகள் அபகரிக்கப்பட்டுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பெல்மதுளை கனேகம பிரதேசத்தில் பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலரால் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச மற்றும் பெருந்தோட்ட காணிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெல்மதுளை பிரதேச இணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட காணிகளை பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதார மத்திய நிலையம் என்பன அமைப்பதற்கு ஒதுக்குவதற்கு பெல்மதுளை பிரதேச இணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பொது பணிகளுக்கான கட்டடங்களை அமைக்குமாறும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட இப்பிரதேசத்தில் காணி வழங்குவதற்கு கூட மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் பொதுமக்கள் இவ்வாறு சட்டத்திற்கு முரணாக காணிகள் அபகரிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை COVID-19 வைரஸ் (B.1.351) தொற்றுக்குள்ளான ஒருவர் முதல் தடவையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,
நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர், டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

தான்சானியாவிலிருந்து வருகை தந்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரே புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த நபர் தொடர்பான மேலதிக தரவுகள் சுகாதார அமைச்சிடம் காணப்படுவதாகவும் டொக்டர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், அவிசாவளை, குருவிட்ட, பியகம, மாத்தளை, ரத்தோட்டை, களுத்துறை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் 93 பேரிடம் கடந்த மாதம் மாதிரிகள் பெறப்பட்டதாகவும் மஹியங்கனை பகுதியில் பெறப்பட்ட மாதிரியில் அபாயமான வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாதிரிகளூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,
நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர், டொக்டர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.

இலங்கை தேசியக் கொடியுடன் காலணிகளும் பாபிசுகளும் : அமேசான் இணையத்தில் விற்பனை

உலகின் முன்னணி இணைய விற்பனைத் தளமொன்றில் இலங்கையின் தேசியக் கொடியுடன் பாபிஸ் எனப்படும் கால்துடைபான் மற்றும் பாதணிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது.

உலக பிரசத்திபெற்ற அமேசான் என்ற இணையத்தளத்தில் இந்த விற்பனை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இதனை இலங்கைக்கு தபால் மூலம் பெறுவதற்கான வசதியும் குறித்த இணையளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒரு பாப்பிசின் விலை 12 அமெரிக்க டொலர்கள் எனவும், விநியோகக் கட்டணம் 9 அமெரிக்க டொலர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை தேசியக் கொடி பொதிக்கப்பட்ட ஒரு ஜோடி காலணி, 20 அமெரிக்க டொலர்கள் எனவும் இதற்கான விநியோகக் கட்டணம் 10 அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வணிக இணைத்தளத்தில் வேறுபல நாடுகளின் தேசியக் கொடியுடனான விற்பனை பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான பொருட்களை இலங்கைக்குள் எவ்வகையிலும் அனுமதிப் போதிவல்லை எனவும், வேறு நாடுகளில் இலங்கை தேசியக் கொடியுடனான பாபிஸ் மற்றும் காலணிகள் பயன்படுத்தப்பட்டால் அவற்றுக்கெதிராக அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், கொன்சோல் அலுவலகங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்முறை வேண்டாம் – அறவழியில் போராடுங்கள்! ராதா ஆலோசனை!

வன்முறையால் எடுக்கப்படும் தீர்வு நல்ல தீர்வாக அமையாது. வன்முறையால் எதையும் சாதித்து விடவும் முடியாது. அஹிம்சை வழியில் பேசி எடுக்கப்படும் தீர்வே நல்ல முடிவாக அமையும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தற்போது நகர் புரத்தில் மாத்திரமல்ல தோட்ட புரங்களிலும் அடக்கு முறைகளை கொண்டுவருகின்றார்கள். இதற்கு நாம் இடமளிக்க கூடாது.கந்தப்பளை மாகுடுகல தோட்டத்தில் ஓய்வுபெற்ற 7 இராணுவ வீரர்களை தொழிலுக்கு அமர்த்தியுள்ளார்கள்.  இது எமது மக்கள் மத்தியில் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டங்களில் இராணுவ வீரர்களை தொழிலுக்கு அமர்த்த கூடாதென பாராளு மன்றத்திலும் கூறியுள்ளேன். அத்தோடு கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரனவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாமே நிறைவேற்றப்படாவிட்டாலும் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படு கின்றன.

உதாரணமாக பிரதமர் மஹிந்தராஜபக்ச பாராளுமன்றத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும். என்று கூறியதாலே
இன்று ஆயிரம் ரூபா சம்பளம் தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டும். என அரச வர்த்தமாணியில் வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கூடாது என்பதற்காக சரித்திரத்திலே முதன் முறையாக தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக தோட்டத்துறைமார்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லையென கூறி அட்டனிலும்
பண்டாரவலையிலும் பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இம் மாதிரியான எதிர்ப்புககளுக்கு மத்தியில் அகிம்ஷை வழியில் அனைத்து தொழிற்சங்கங்ளும் ஒன்றிணைந்து எமது தொழிலாளர்களின் உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றெடுக்க முன்வரவேண்டும்.

தோட்டத்தொழிலாளர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அர்த்தம் இல்லை. தொழிலாளர்கள் ஒரு சில விடயங்களில் அவசரப்பட்டு ஆத்திர மடைந்து செய்யும் செயலால் பின்னர் அவதிப்படுகின்றார்கள். தூண்டிவிடுபவர் களும் தொழிலாளர்களுக்கு துணைப் போவதில்லை. தொழிலாளர்களின்போராட்டதை நான் கொச்சப்படுத்த வில்லை . ஆனாலும் நாம் எதை செய்தாலும் ஆத்திரமடையாமல் சிந்தித்து செயல்படவேண்டும். என கூறினார்.

அமசோனுக்கு எதிராக செந்தில் போர்க்கொடி

இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் உற்பத்திகளை இணையவழி விற்பனைக்கு விட்டுள்ள அமெரிக்காவின் வொஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் அமசோன் நிறுவனத்தின் செயற்பாடுகளை, இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய கொடியைக் கால் துடைப்பானாகவும் அக்கொடியின் சின்னம் அடங்கிய செருப்புகளையும் விற்பனை செய்வதற்கான புகைப்படங்களைத் தனது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள அமசோன் நிறுவனம், குறித்த பொருள்களுக்கான விலைகளையும் அதில் காட்சிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள செந்தில் தொண்டமான், “உலகின் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனமாகிய அமசோன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விற்பனை தளத்தில் இலங்கையின் தேசியக் கொடி இவ்வாறு அவமதிக்கப்படுவதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவோ முடியாத குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“இணையவழி விற்பனையை முன்னெடுத்துவரும் மேற்படி நிறுவனம், இலங்கையின் தேசிய கொடியிலான கால் துடைப்பான்களை, சிங்கப்பூரிலிருந்தே உலகம் முழுவதுக்கும் விநியோகித்து வருகின்றது. இலங்கையில் இந்த கால்துடைப்பான்களை விநியோகிப்பதற்காக, 9.20 அமெரிக்க டொலர்களை, கப்பல் கட்டணமாகவும் அறவிடுகிறது.

“12 இலட்சத்து 98 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு, வருடமொன்றுக்கு 21 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டிவரும் இவ்வாறானதொரு நிறுவனம், ஒரு நாட்டின் தேசிய சின்னங்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறான உற்பத்திகளை விற்பனைக்கு விடுவது கண்டனத்துக்குரியது” என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்த நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயற்பாடு மாத்திரமின்றி, நாட்டு மக்களுடைய மனங்களையும் புண்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்துள்ள அவர், உடனடியாக அந்நிறுவனத்தின் செயற்பாடுகளை இலங்கையில் முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அமசோன் நிறுவனத்தின் மீது, இலங்கை அரசாங்கம் மானநட்ட வழக்குத் தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...