Home Blog Page 3586

‘தனிமைப்படுத்தல் நடைமுறை’ – அரசிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை!

தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாட்கள் கட்டாய தனிமைக்காக, அரசு நடத்தும் நிலையங்களுக்கோ அல்லது சொந்த நிதியை செலுத்த சொல்லி ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளுக்கோ அனுப்பப்படக்கூடாது. இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளேயிடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்று பாராளுமன்றத்தில் அவர் என்னிடம் தெரிவித்தார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

” தொழில் காரணமாகவோ அல்லது விடுமுறை நோக்கிலோ வெளிநாடு சென்றுள்ள இலங்கையர், தாம் இன்று வாழும் நாட்டில் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று இருப்பார்கள் எனில், அவர்கள் இன்று தாய் நாடு திரும்பும் போது, அவர்களை தமது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைக்கு உள்ளாக்க வேண்டும்.

ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது, அதற்கான கட்டண நிர்ணயம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் விமான பயணசீட்டு கட்டணம் ஆகியவவை தொடர்பில் பெரும் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுபோல், அரசு நடத்தும் நிலையங்களில் நாட்கள் தங்க வைக்கப்படும் நாடு திரும்பும் இலங்கையர்களும், அங்கே முறையாக கவனிக்கப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இவற்றால், வெளிநாடுகள் சென்று உழைத்து அதன்மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்று தந்து, இன்று தொழில் இழந்து, பெரும் பொருளாதார சிக்கல்களில் மாட்டி இருக்கும் நம் நாட்டு மக்கள் பெரும் அவதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

நோயுற்றவர்கள் உடனடியாக வைத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனையோர் சொந்த வீடுகளில், கண்காணிப்பின் கீழ் சுய தனிமைக்கு உள்ளாகப்பட வேண்டும். உலகின்பல நாடுகளில் இந்த முறை இப்போது அமுலுக்கு வந்துள்ளது.

எனது இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இதுபற்றி, இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் நேற்று பாராளுமன்றத்தில் என்னிடம் தெரிவித்தார்

எது எப்படி இருந்தாலும், நம் நாட்டு அப்பாவி மக்களின் நிர்க்கதி நிலைமையை பயன்படுத்தி பணம் பண்ணும் கோஷ்டிகளுக்கு இடம் அளிக்கும் முறையில் அரசின் சட்ட திட்ட விதி முறைகள் ஒருபோதும் அமைய கூடாது.

ஐ.தே.கவின் 6 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் சஜித்துடன் சங்கமம்

நுவரெலியா நகரசபை மற்றும் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அறுவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.

சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

ஐ.தே.கவின் நுவரெலியா நகரசபை உறுப்பினர்களான விஜயகுமார், மஹிந்த சில்வாவும், பிரதேச சபை உறுப்பினர்களான சரத் குமார், இந்தபால, சாந்தனி ஹெட்டியாராச்சி ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு! பசறையில் பட்டப்பகலில் கொள்ளை!!

பசறை, சிங்கள மத்திய மகா வித்தியாலயம் அமைந்துள்ள வீதியில் சென்று கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை இனந்தெரியாத நபரொருவர் அறுத்து சென்றுள்ளார்.இச்சம்பவம் நேற்று  பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பசறை பகுதியில் உள்ள அரச நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார். அவரது மகளை மேலதிக வகுப்பில் இருந்து அழைத்து வர சென்ற வேளையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சீசி டிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபரை தேடி வருகின்றனர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பசறை நிருபர்கள்

சீனி இறக்குமதியால் 15.9 பில்லியன் இழப்பு – ஜே.வி.பி. உயர்நீதிமன்றில் மனு!

சீனி இறக்குமதியால் அரசுக்கு 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி, அதனுடன் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி ஜே.வி.பி.இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனித் ஹத்துனெத்தியால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக நிதி அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல, ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்படுள்ளனர்.

2021 மெய்வல்லுநர் போட்டி அட்டவணை வெளியீடு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் பல மெய்வல்லுநர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வருடத்துக்கான மெய்வல்லுநர் அட்டவணையை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் முதலாவது மெய்வல்லுநர் போட்டியாக தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற தேசிய மரதன் ஓட்டம் மற்றும் வேகநடைப் போட்டிகள் இம்மாதம் 28ஆம் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மெய்வல்லுநர் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை எதிர்வரும் மே மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் போலந்தில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்றச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெறுவதற்கான இறுதி தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, சுமார் ஒரு வருடமாக எந்தவொரு மெய்வல்லுநர் போட்டிகளிலும் பங்குகொள்ளாத கனிஷ்ட வீரர்களை இலக்காகக் கொண்டு தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரை ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள், ஆகஸ்ட் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரியா வாரியருக்கு வந்து குவியும் காதல் கடிதங்கள்

மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் கண் சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

”ஒரு அடார் லவ் படத்தின் மூலம் இவ்வளவு பெயர் கிடைக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. நிறைய பிரபலங்கள் என்னை மாதிரி கண் அடிக்க முயன்று முடியவில்லை என்றனர். நான் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில்தான் படித்தேன். கல்லூரியில் கலாட்டா செய்வேன். லூட்டி அடிப்பேன்.

கல்லூரியில் படிக்கும்போது எனக்கும் காதல் கடிதம் வந்தது. இப்போது ரசிகர்கள் நிறையபேர் காதல் கடிதம் அனுப்புகிறார்கள். காதல் கடிதங்களை அழகாக எழுதி அனுப்புகின்றனர். அவை என்னை ஈர்ப்பதாக உள்ளன. அதில் சிலவற்றை பார்க்கும்போது சிரிப்பு வரும். சில கடிதங்களில் என்னை வர்ணித்து இருப்பதை பார்த்து பிரமிப்பேன். அழகான காதல் கடிதங்களை மறுபடிமறுபடி படித்து பார்ப்பேன்.’’

இவ்வாறு பிரியா வாரியர் கூறினார்.

மியன்மார் இராணுவ தளபதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடை

மியான்மரில் இராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த முதலாம் திகதி கூடவிருந்த நிலையில் இராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார். ஆனால் இதை வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த நிலையில் மியான்மரில் ஆட்சியை கவிழ்த்த ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மியான்மர் இராணுவத்தின் ஐந்து வார கால சதி மற்றும் எதிர்ப்பாளர்கள் மீது அது நடந்துகொண்டிருக்கும் கொடூரமான ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க இந்த பொருளாதார தடை விதித்துள்ளது.

கருவூலத் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள், இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹேலிங்கின், வாரிசுகள் நடத்தி வரும் ஆறு வணிகங்களை குறிவைக்கின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அரசியல் தலைவர்களையும் சட்டமியற்றுபவர்களையும் குறிவைத்து இராணுவத்தை கையகப்படுத்தும் தலைவர்கள், “வன்முறையை நாடுவதாலும், ஜனநாயகம் மீதான அதன் நெரிசலை இறுக்குவதாலும் ஆட்சியில் இருந்து தொடர்ந்து நன்மைகளைப் பெற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் கனவுப் படம் ஏப்ரல் 16 வெளியாகிறது

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடில்ஸி, எஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘99 ஸாங்ஸ்’.

‘99 ஸாங்ஸ்’ தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். ஏனெனில் இப்படத்திற்கு அவர் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், அவரே கதையும் எழுதி உள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படம், 2015ல் தொடங்கப்பட்டது. இதில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ரிலீஸ் திகதியை ஏ.ஆர்.ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இசையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் – அதிரடிக்கு தயாராகும் ரணில்!

பாரியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

இதற்காக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உதவியையும் அவர் கோரியுள்ளார். இதனை ஏற்று மங்களவும் இம்முயற்சியில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ரணில் விக்கிரமசிங்கவை தனது மகன் சகிதம் கடந்தவாரம் சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி ரணிலின் அதிரடி அரசியல் ஆட்டம் மீண்டும் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

‘வேட்டையாடுகிறது அரசு’ – சி.ஐ.டி. வளாகத்தில் சீறிய பொன்சேகா!

எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கைக்கே தற்போதைய அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷ் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அசோக அபேசிங்க எம்.பியுடன் நேற்று சி.ஐ.டி. வளாகத்துக்கு வருகை தந்திருந்த பொன்சேகா, ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

” 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. குறித்த அறிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி இல்லை. தாக்குதலின் பின்னணி என்ன, பிரதான சூத்திரதாரி யார் என்பதனை கண்டறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் இருக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களில் கருத்துகள் வெளிவருகின்றன. ஊடகங்களிலும் வெளியாகின்றன. அந்த வகையிலேயே அசோக அபேசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார். அதனை சல்லலையிடுவதற்கு தயாராகிவருகின்றனர் என்பது புலனாகின்றது. எதிரணி அரசியல்வாதிகளை இவ்வாறு இரவு, பகலாக விசாரணைக்கு அழைத்து, அரசியல் இலாபம் தேடுவதற்கு அரசு முயற்சிக்கின்றது.

எதிரணி உறுப்பினர்களை பழிதீர்ப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்கிவருகின்றது. நாட்டை கட்டியெழுப்ப முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. நாம் சிறைக்கு செல்வதற்குகூட அஞ்சமாட்டோம்.” – என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...