Home Blog Page 3587

ராகலையில் தீ விபத்து! 16 லயன் அறைகள் தீக்கிரையாகின!!

நுவரெலியா, இராகலை தோட்டம் 2ம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (12.03.2021) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

இந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர். இதனால் 61 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் முதலாம் இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

க.கிசாந்தன்

2024 இல் பஸில் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்!

2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போட்டியிடமாட்டார் எனவும், பஸில் ராஜபக்சவே களமிறங்கக்கூடும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பஸில் ராஜபக்சவையும்,பிபி ஜயசுந்தரவையும் வெளியேற்ற வேண்டும் என ஆளுங்கட்சியிலுள்ள குழுவொன்று போராடுகின்றது. மறுபுறத்தில் தான் ‘பாஸ்’ என சான்றிதழ் வழங்கிவருகின்றார்.பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறெல்லாம் நடக்கின்றது.

விமல் வீரவன்ஸ உள்ளிட்ட குழுவினர் அண்மையில் ஜனாதிபதியை சந்திக்கச்சென்றுள்ளனர்.மொட்டு கட்சியின் தலைவராக மஹிந்த இருக்கட்டும், அக்கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் தலைமைப்பதவியை நீங்கள் பொறுப்பெடுங்கள் என இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளனர்.இந்த மாற்றம் நடந்தால் நாட்டில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா, இல்லை. மாறாக விமல் தரப்பின் பிரச்சினைதான் தீரும்.

கோட்டாபய ராஜபக்சவிடம் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின்னர், தன்னால் அரசியல் செய்ய முடியாது எனவும், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடமாட்டார் எனவும் கோட்டா பதிலளித்துள்ளளார்.

தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெறக்கூடிய வேட்பாளரையே தயார் செய்ய வேண்டும் எனவும் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் யார்? பஸில் என்பவரே அவர்.” – என்றார் அநுர.

நாவலப்பிட்டிய வாசி உட்பட கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 520  ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்,

கம்பனிகள் தன்னிச்சையாக செயற்படமுடியாது – சக்திவேல் எச்சரிக்கை

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை அரசாங்கம் சம்பள நிர்னைய சபையினூடாக பெற்றுக்கொடுத்துள்ளது. அதற்கு முதலில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (11) அக்கரபத்தனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடக வியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 கடந்த காலங்களில் கம்பனிகள் பல்வேறு போராட்டங்களை செய்தும் கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் வாக்குறுதிகளை வழங்கியதனை போன்று அதனை செய்துள்ளார்கள்.

கடந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பாக இவ்வாறான ஒரு அக்கறையினை கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த அரசாங்கத்திங்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதேநேரம் ஒரு ஜனநாயக நாட்டில் தாங்கள் நினைத்தது போல் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அதனை தீர்மானிக்க வேண்டியது தொழிற்சங்கங்கள் தான்.

ஆகவே கம்பனிகள் விலகினாலும் மாற்று நடவடிக்கையினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்ளும்.

மலையகத்தைச் சார்ந்த பல்வேறு தரப்பினர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பாக குரல் கொடுத்தும் கூட அது சாத்தியப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சு வார்த்தையின் போது வலியுறுத்தியும் கூட அதனை கம்பனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்பனிகள் நிராகரித்தாலும் கூட அரசாங்கம் எங்களுக்கு ஒரு வாக்குறுதியினை பெற்றுக்கொடுத்திருந்தது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுத்தருவோம் என கூறியிருந்தது. இதற்கமைய அரசாங்கம் வர்த்தமானியில் பிரசுரித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் சட்ட ரீதியாக வழங்க தமது தரப்பிலே நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகவே இனி கம்பனிகள் கட்டாயம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கிதான் ஆகவேண்டும். அரசாங்கம் எமது தலைவர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளினை ஏற்று இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. தொழில் அமைச்சர் உட்பட அனைத்து பிரிவினருக்கு தொழிலாளர்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தோட்ட நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இதில் அவர்கள் பெறும் ஆதயம் பற்றி பேசுவதில்லை. கூட்டு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இருக்காது என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அது இருக்குமா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் தனக்கு ஏற்ற வகையில் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்த மக்களை ஏமாற்றுவதற்கு அல்லது மக்களை துன்புறுத்துவதற்கு அவர்கள் முற்படுவார்கலேயானால் அதனை பார்த்து கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சும்மா இருக்காது. நாங்கள் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுப்போம்.

வேலை நாட்கள் குறைப்பது அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் இல்லாத விடயங்களை அமுல்படுத்துவது என்பது  ம்பனிகள் நினைத்த படி செய்ய முடியாது. அதற்கு என்று சட்டங்கள் உள்ளன. ஆகவே சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எமது அமைப்பு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

HNB மற்றும் இந்திரா டிரேடர்ஸ் இணைந்து பதிவு செய்யப்பட்ட,

பதிவு செய்யப்படாத வாகனங்கள் மற்றும் ஃபோடோன் டிரக் வண்டிகளுக்காக ஒப்பிட முடியாத லீசிங் வசதிகளை வழங்குகிறது

இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடிகளான இந்திரா டிரேடர்ஸுடன் மேற்கொண்டுள்ள கூட்டுமுயற்சியை புதுப்பிப்பதற்கு அண்மையில் நடவடிக்கை எடுத்தமையானது பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனங்கள் மற்றும் ஃபொடோன் டிரக் வண்டிகளுக்காக விசேட லீசிங் வசதிகள் உள்ளிட்ட அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆகும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டுமுயற்சி குறித்த உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்தும் நிகழ்வு HNB தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் HNB வாடிக்கையாளர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொதுமுகாமையாளர், சஞ்ஜேய் விஜேமான்ன மற்றும் இந்திரா டிரேடர்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹஷிந்திர சில்வா ஆகியோரினால் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியான அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் HNB ஊழியர்களுக்காக விசேட பலப்படுத்தும் யோசனை முறைமைகளும் முன்வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்த கூட்டு முயற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி காஞ்சன கருணாகம, “HNB மற்றும் இந்திரா டிரேடர்ஸுக்கு இடையிலுள்ள ஒப்பந்தத்தை புதுப்பித்து மேலும் முன்னோக்கி கொண்டுசெல்வதே எமது நம்பகமான வாடிக்கையாளர்களின் வாகனக் கனவை நனவாக்குவதற்காக அவர்களுக்காக சிறந்த சேவையை வழங்கும் முயற்சியாக இதனைக் கருத முடியும். பலத்தில் சிறந்த, நீண்ட காலம் நீடிக்கக் கூடிய, சிறந்த செயல்திறன் மிக்க டிரக் வாகனத்தை நாட்டிற்கு அறிமுகம் செய்யும் கௌரவத்தை வென்றெடுத்துள்ள இந்திரா டிரேடர்ஸுடன் ஒப்பிட முடியாத சேவை தரங்கள் காரணங்களால் தொடர்ச்சியான நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது.

எமது இந்த கூட்டு முயற்சி புதிய வாகனத்திற்கான கனவினை நனவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆறுதலாக இருப்பதுடன் அதன் மூலம் விற்பனையின் பின்னரும் சிறந்த வாடிக்கையாளர் சேவை வசதிகளும் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

இந்திரா டிரேடர்ஸிடமிருந்து வாகனமொன்றை கொள்வனவு செய்யும் HNB வாடிக்கையாளர்களுக்கு 4.5 மில்லியன் பெறுமதியான ஆயுள் காப்புறுதியொன்று வழங்கப்படுவதுடன் HNB General Insurance இடமிருந்து கழிவுடன் கூடிய மாதாந்த தவணை மற்றும் HNB லீசிங்கிடமிருந்து விசேட கழிவுகளும் மற்றும் அனுகூலங்களுடன் கூடிய இலவச கடன் அட்டையொன்றும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திரா டிரேடர்ஸ் விற்பனை மற்றும் விநியோக பிரதானி ஹஷீந்திர டி சில்வா, “HNB உடன் இந்திரா டிரேடர்ஸ் ஏற்படுத்திகொண்டுள்ள கூட்டுமுயற்சியின் மூலம் இலகுவான மற்றும் மிகவும் நன்மையான லீசிங் தீர்வுகள் கிடைக்குமென வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வருடம் இந்த சேவைகளின் மாற்றம் எதுவும் நிகழாது என்பதுடன் எமது புரிந்துணர்வின் மூலம் குறைந்த வட்டி விகிதம் போன்றே எமது விற்பனையின் பின்னரான விசேட சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருப்பதாக குறிப்பிட விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.

மேலும் அனைத்து HNB வாடிக்கையாளர்களுக்கும் இந்திரா டிரேடர்ஸினால் ஊழியக் கட்டணம் இன்றி இரு வாகன சேர்விஸ்கள் வழங்கப்படும். இந்த மேம்பாட்டு காலத்திற்குள் HNB வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் அனைத்து வாகனங்களுக்குமான பதிவுக் கட்டணம் இலவசம் என்பதுடன் கொள்வனவு செய்யும் அனைத்து வாகனங்களுக்காகவும் பொழுதுபோக்கு கட்டமைப்பும் மற்றும் ரிவர்ஸ் கெமரா ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திரா டிரேடர்ஸ் வாகனத் துறைக்குள் பல்வேறு வியாபார பிரிவுகளுக்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்ந்த தரத்தில் மோட்டார் வாகனம் மற்றும் அதனை அண்டிய சேவைகளை வழங்கும் இந்திரா டிரேடர்ஸ் இன்று சிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவது மட்டுமன்றி போக்குவரத்து தீர்வுகளையும் வழங்குகின்றது.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக்கொன்டுள்ள HNB இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும். இங்கிலாந்தில் நன்மதிப்புப் பெற்ற ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகளுக்குள் HNB அண்மையில் பட்டியலிடப்பட்டது.

தேசிய நீண்டகால வகைப்படுத்தலின் கீழ் HNBக்கு Fitch Ratings மூலம் AA-(lka)இன் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இடமிருந்து) இந்திரா டிரேடர்ஸ் விற்பனை முகாமையாளர் ரசிக்க டி சில்வா, பொது முகாமையாளர் சஜினி சில்வா, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹஷிந்திர சில்வாவுடன் HNBஇன் தனிநபர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனை வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன, தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி காஞ்சன கருணாகம, லீசிங் பிரிவு பிரதானி நிலுக அமரசிங்க, லீசிங் தொடர்பான துணை பொதுமுகாமையாளர் ரொஷான் டி சில்வா மற்றும் வர்த்தக மேம்பாட்டு நிறைவேற்று அதிகாரி மஹேஷ் ரத்நாயக்க ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு

வார்டுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்கும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB நாட்டிலுள்ள மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு அறுவை சிகிச்சை உபகரணங்களையும் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கயும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அன்றாடம் பாரியளவு நோயாளர்களுக்கு நன்மையளிக்கும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவற்காக இந்த வேலைத்திட்டத்தின் மூலம் HNBக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

அதற்காக அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக தேசிய வைத்தியசாலைக்கு வழங்கியமை தொடர்பில் HNB மூலோபாய திட்டமிடல் தொடர்பான பிரதான முகாமையாளர், பிரியங்கா விஜேரத்ன, HNB பேண் தகைமை வர்த்தக பிரதானி, ஷனேல் பெரேரா மற்றும் HNB சமூக பொறுப்புகள் மற்றும் பேண் தகைமை தொடர்பான துணையாளர் வீ. திஷாரத்னம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB Chief Transformation Officer/Trustee HNB Sustainability Foundation திருமதி. சிரன்தி குரே, “தற்போது அனைத்து இலங்கையர்களும் பரவி வரும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்றனர்.

அதன்போது நாட்டிலுள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புகளுக்காக முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சுகாதார ஊழியர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மிகவும் சிறந்தது.

அவர்களது சேவைகளுக்காக எமது நன்றிகளை அவர்களுக்கு தெரிவிக்கும் ஒரு அடையாளமாக இந்த அன்பளிப்பை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்தோம்.” என தெரிவித்தார்.

தொற்றுநோய் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நாட்டை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் HNBஇனால் நாட்டின் சுகாதார சேவைகளுக்காக பல்வேறு பங்களிப்புக்கள் செய்யப்பட்டதுடன் இந்த அர்ப்பணிப்புகளின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு வழங்கியமையை குறிப்பிட முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரால் டொக்டர் குமார விக்ரமசிங்க, “கொவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுகாதார துறையின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்க HNB நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்மூலம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்காக மிகவும் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது.

வங்கி மூலம் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் தொடர்பாக எமது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல் நிறைந்த காலப்பகுதியில் சுகாதார சேவை வசதிகளை மேம்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என தெரிவித்தார்.

இலங்கையின் விசாலமான போதனா வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை 3000 கட்டில்களுடன் காணப்படுவதுடன் ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் சுகமடையாத நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தோடு கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய பீட பட்டதாரிகளுக்கும் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்காகவுமான பயிற்சி மத்திய நிலையமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(இடமிருந்து) மேற்பார்வை அதிகாரி, அஜித் உபநன்தன, தாதியர் அதிகாரி, எம்.எம். சுகந்தபால, அவசர சிகிச்சை தொடர்பான விசேட சேவை தாதி அதிகாரி ஏ.எஸ். சுரவீர, அவசர சிகிச்சை சேவைகள் தாதி அதிகாரி ஏ.டீ.ஈ. முனசிங்க, அவசர சிகிச்சை சேவைகள் பிரதிப் பணிப்பாளர் திஸ்ஸ ஜயவீர, இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் குமார விக்ரமசிங்க, HNB மூலோபாய திட்டமிடல் தொடர்பான பிரதான முகாமையாளர், பிரியங்க விஜேரத்ன, அவசர சிகிச்சைப் பிரிவு விசேட சேவைகள் தாதி அதிகாரி, சந்தியா கருணாதாஸ, HNB பேண் தகைமை வர்த்தக பிரதானி, ஷனேல் பெரேரா, HNB சமூக பொறுப்புணர்வு மற்றும் பேண் தகைமை தொடர்பான துணையாளர் வீ. திஷாரத்னம் மற்றும் தேசிய வைத்தியசாலையின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஸா ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

சிம்ரன் – விக்ரம் மீண்டும் சங்கமம்!

நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படப்பிடிப்பு சமீபத்தில் ரஷியாவில் நடந்தது. இது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இது விக்ரமுக்கு 60-வது படம். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். இதில் 2 நாயகிகள் நடிக்க உள்ளனர். ஏற்கனவே வாணி போஜனை ஒரு நாயகியாக தேர்வு செய்து உள்ளனர்.

இன்னொரு நாயகி தேர்வு நடந்தது. தற்போது சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடித்து திரைக்கு வருவதில் தாமதமாகி உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் பிதாமகன் படத்திலும் ஒரு பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடி இருந்தார். விக்ரமின் 60-வது படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக அறிவித்து உள்ளனர்.

‘சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும்’ – சம்பந்தன் எச்சரிக்கை

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

‘இலங்கையில் போர்க்குற்றங்களில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபட்டதே இல்லை. இராணுவத் தளபதி என்ற ரீதியில் எனது மனச்சாட்சியின் பிரகாரம் இதை சர்வதேசத்துக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன்’ என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில்  ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும்.

இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தது தொடக்கம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களும் இதையே வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால், அரசுதான் ஐ.நாவின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.

இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும். இதுதான் சர்வதேச நியதி. இதை மீறி எவரும் செயற்பட முடியாது.

சர்வதேசத்தைப் புறந்தள்ளி இந்த அரசு செயற்படுமானால் நாடுதான் பேராபத்தைச் சந்திக்கும்” – என்றார்.

21/4 தாக்குதல் – சர்வதேச குழுவை அழைத்து விசாரிக்கவும்! எதிரணி கோரிக்கை!!

சர்வதேச சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அழைத்துவந்து, 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன, பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஹ்ரானை கைது செய்வதற்கு ரி.ஐ.டியின் பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த நாலக சில்வா தயாரானார். அப்போது அவருக்கு எதிராக திடீரென குற்றச்சாட்டு வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஷானி அபேசேகரவும் முடக்கப்பட்டார். எனவே, இதன் பின்னணியில் எதோ மர்மம் உள்ளது. விசாரணையை மறைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. சாரா எங்கே? அவரை உடன் நாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

ஐ.எஸ். அமைப்புக்கு 2015 இல் ஒருவரே சென்றிருந்தார். சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருக்காது. இந்தியாவில் இருந்து ஒருவர் இயக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

ஹக்கீம், ரிஷாட்டை விமர்சிப்பவர்கள், 20 இற்கு ஆதரவாக அவர்களின் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகின்றது.

21/4 தாக்குதலை வைத்து இந்த அரசே நன்மை அடைந்தது. . தாக்குதலுக்கு அவர்களும் பொறுப்புக்கூறவேண்டும் . உண்மையை மூடிமறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. எனவே சுயாதீன சர்வதேச குழுவை அழைத்துவந்து இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருகின்றோம்.” -என்றார்.

கேரளா கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர் புபுரஸ்ஸவில் கைது!

கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலதென்ன பகுதியில் நீண்டகாலமாக மிகவும் சூட்சுமமான முறையில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகை கஞ்சாவினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, புபுரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோ ரஞ்சித்தின் வழிகாட்டலுடனேயே சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் பிரிதொரு நபரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் இறங்கினர். எனினும், அவர் தலைமறைவாகியுள்ளார். தேடுதல் வேட்டை தொடர்கின்றது.

புபுரஸ்ஸ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கலஹா நிருபர்- ரம்யா

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...