Home Blog Page 3588

1000 ரூபா வழங்காவிட்டால் 6 மாத சிறை தண்டனை – தொழில் திணைக்களம் எச்சரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1,000 ரூபா சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில் பெருந்தோட்டத் தொழிலார்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை வழங்குவதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் வரவு செலவுத் திட்ட சலுகை கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் ஆட்சியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் 21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு, கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்தான் பிரதானி எனக்காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.  புலிகள் அமைப்புக்குகூட தற்கொலை தாக்குதல் போராளி ஒருவரை உருவாக்குவதற்கு பல வருடங்கள் எடுத்தன. எனவே, சஹ்ரான் திடீரென உருவான நபர் கிடையாது. 2005 காலப்பகுதியில் இருந்து அவர் கருத்தியலை விதைத்து வந்துள்ளார். 2014வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தகவல் வெளியிடப்படவேண்டும்.
ஜனாதிபதி ஆணைக்குழு என்பது நாடகம். எனவே, நாடகம் முடியும்போது நிச்சயம் உண்மை தெரியவரும்.

எமது ஆட்சியின்கீழ் 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்படும். கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் அறிந்துகொள்ளகூடியதாக இருக்கும்.” – என்றார்.
அதேவேளை, இவ்விவாதத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ,

“பொன்சேகா கூறுவதுபோல ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையாது. நாடாளுமன்றக் தெரிவுக்குழுதான் கண்டிதுடைப்பு நாடகம். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை என்பது இறுதியானது அல்ல. அதில் நல்ல விடயங்களும் உள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாத சில விடயங்களும் உள்ளன. எது எப்படி இருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். “ – என்றார்.

இலங்கையில் 752,098 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை 752,098 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.

ஜனவரி 29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும் , 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும், 19 ஆம் திகதி 30,307 பேருக்கும், 20 ஆம் திகதி 39,078 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி  35,912 பேருக்கும், 22 ஆம் திகதி 15,583 பேருக்கும், 23 ஆம் திகதி 12,555 பேருக்கும், 24 ஆம் திகதி 11,696 பேருக்கும், 25 ஆம் திகதி 14,866 பேருக்கும், 26 ஆம் திகதி 13,164 பேருக்கும், 27 ஆம் திகதி 35,343 பேருக்கும், 28 ஆம் திகதி 24,374  தடுப்பூசி போடப்பட்டள்ளது.

மார்ச் முதலாம் திகதி முதல் நேற்றுவரை ஏற்றப்பட்டவர்களின் விபரம்

கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 515  ஆக அதிகரித்துள்ளது.

தேயிலை தொழிற்சாலை கூரையிலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி!

ஹட்டன், எபோட்சிலி தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலை கூரையில் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சுப்ரமணியம் அருணாசலம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையில் உள்ள கூரையில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவர் கீழே விழுந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கம்பனிகளுக்கு சார்பாகவே வர்த்தமானி வெளியீடு – வடிவேல் சுரேஷ் போர்க்கொடி!

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சார்பான வகையிலேயே வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அது உடனடியாக மாற்றியமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் – என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுள் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் கூறியதாவது.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டு மொட்டையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வேலை நாட்கள் தொடர்பிலோ அல்லது தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் பற்றியோ அதில் எதுவும் இல்லை. எனவே, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல்தான் இது விடயத்தில் அரசு நடந்துகொண்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தால் கம்பனிகளுக்கே நன்மை. பழம் விழுந்து பாலில் விழுந்ததுபோல அமைந்துள்ளது. எனவே, வர்த்தமானி அறிவித்தல் மாற்றியமைக்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் தன்னிச்சையாக வெளியேறமுடியாது.” – என்றார்.

நிபந்தனைகளின்றியே ஆயிரம் ரூபா வேண்டும் – தொழிலாளர்கள் திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், சம்பள உயர்வை சம்பள நிர்ணயசபை ஊடாகவேனும் நிர்ணயித்து வழங்குவதற்கு முன்வந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

தமக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் போராடிவருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு பிறகே அவர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்படாமல், தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமல்தான் தமக்கு இந்த சம்பள உயர்வு வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு அது தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதேவேளை, ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு வேலை நாட்களில் கை வைத்தால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் கம்பனிகள் – விடுக்கப்பட்டது அறிவிப்பு!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வௌியேறுவதற்கான அறிவித்தலை, தொழில் அமைச்சிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.

இன்று வௌியாகியுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, ஆகக் குறைந்த சம்பளத்தை வழங்க தாம் தயார் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேனம் அறிவித்துள்ளது.

எனினும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஏனைய வசதிகள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே தீரமானிக்கப்படும் என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

தம்மால் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விதத்தில் தினமும் கொழுந்து பறிக்க வேண்டும் எனவும், வேலை நாட்களை தீர்மானிப்பதில் காலநிலை உள்ளிட்ட பல விடயங்கள் தாக்கும் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை வழங்குவது என்பதனை தற்போதைக்கு கூற முடியாது எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் முன்னறிவித்தல் கொடுத்து, 1992 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தமது தரப்பினரால் வௌியேற முடியும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வௌியேறுவதற்கான அறிவித்தலை தொழில் அமைச்சிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் ஏற்கனவே தாம் அனுப்பிவிட்டதாகவும் ரொஷான் இராஜதுரை மேலும் கூறினார்.

வாகன இறக்குமதி குறித்து ஆராய்ந்து வரும் அரசாங்கம்!

எதிர்காலத்தில் சில கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து வாகன இறக்குமதிகளுடன் அரசாங்கம் விசேட சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளது.

வாகன இறக்குமதி துறையின் வர்த்தகர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகன இறக்குமதியாளர்கள் அந்நிய செலாவணி வீதத்தைப் பாதுகாக்கும் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது, இறக்குமதி ஒதுக்கீட்டிற்கான அதிகபட்ச டாலர் வீதத்தை நிர்ணயிப்பது மற்றும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் புதிய வாகன இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

வாகன இறக்குமதியாளர்களுக்கு மேலதிக திட்டங்களை சமர்ப்பிக்கவும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கவும் அரசாங்கம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியிருந்தது.

வெளிநாட்டு நாணயத்தின் மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020 மார்ச்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்கள் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

99X நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இலங்கை பெண்களுக்கான சிறந்த பணி இடங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது

தொழில்நுட்ப நிறுவனமான 99x இலங்கையில் பெண்களுக்கான சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதன் ஊடாக பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்திற்கான சிறந்த உத்திகள் இதனூடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை கருத்திற்கொண்ட பணியிடத்தை உருவாக்குவது 99x இன் முக்கிய தேர்வாக உள்ளது. இலங்கையில் Great Place To Work நிறுவனத்தின் தலைமையில் இந்த பட்டியலில் 99x நிறுவனம் தரப்பட்டுள்ளதுடன், தமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளது.

‘Great Place To Work நிறுவனம் ஊடாக மீண்டும் நாம் மதிப்படப்பட்டமை எமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். நிறுவனம் என்ற வகையில் மட்டுமல்ல, கைத்தொழில் மற்றும் நாடு என்ற வகையில் நாம் அனைவரும் துறையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதவிர ஆண் பெண் பேதமற்ற உழைப்பாளர் படையணியைமேம்படுத்த ஒன்றாக இணைய வேண்டியது முக்கியம்’ என 99x இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஷெஹானி செனவிரத்ன தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றின் பின்னணியில் அவரது இந்த கருத்து உண்மை என புலனாகின்றது. ஆண், பெண் பாலின சமத்துவம் மற்றும் மகளிரை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பிரிவு விசேடமாக குறிப்பிடுவதைப்போன்று அநேக பெண்கள் பூகோள ரீதீயாக தமது பெண் என்ற ‘நிழல் தொற்றில்’ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

எவ்வித பேதமின்றி அனைவரையும் ஒரே மாதிரி மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த இன்னும் அநேக விடயங்கள் செய்ய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்த துறையில் பாரிய அபிவிருத்தி இருந்தாலும் துரதிர்ஷ்டமாக பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது. இலங்கையில் பெண்கள் பணியாற்ற சிறந்த பணியிடம் போன்ற குறிகாட்டிகள் அதன் க்கியத்தை அடிக்கடி ஞாபகமூட்டுகின்றதுடன் கைத்தொழிலில் முக்கியமான தரங்களை ஏற்படுத்த அந்த குறிகாட்டிகள் உதவுகின்றன.

ஒரு திறந்த நிறுவன கட்டமைப்பிற்குள் அனைவருக்கும் சம வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம், 99x இன் சமத்துவம் அனைத்து நிறுவன மட்டங்களிலும் செயற்படுகின்றதுடன் அதன் அனுகூலஙங்களை பல வழிகளில் பெறுகின்றது.

படைப்பாற்றல் மற்றும் சுறுசுறுப்பான ஊழியர்கள் சக்தி, ஊழியர்களின் குறைந்த வருவாய் மற்றும் மூன்று கீழ்நிலை காரணிகள் ஆகியவற்றின் நேர்மறையான தாக்கம் இதில் அடங்கும்.

‘பல வருடங்களாக, சிரேஷ்ட தர மதிப்பீடு தலைவராக எனது தொழில் வாழ்க்கை மேம்பட்டுள்ளதுடன், 99x பயிற்சி ஊடாக எனது அறிவு விரிவுப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு அனுபவம், MBA பட்டப்படிப்பு முழுமைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப குழுவை வழிநடத்துதல் என்னை பலப்படுத்த எனக்கு சந்தர்ப்பம் வழங்கின’ என 99x தர மதிப்பீடு தலைவி மிஹிரி லேகம்கே தமது அனுபவத்தை விபரித்தார்.

‘பெண்ணாக மற்றும் தாயாக இருந்து தொழில்சார் வாழ்க்கையை முன்னெடுப்பது கடினமாக இருந்தாலும், இலங்கை மற்றும் ஒஸ்லோவில் எனது அன்பான குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆதரவு காரணமாக இது எப்போதும் சமப்படுத்தப்படுகிறது.

99x எனது வாழ்க்கையை வடிவமைத்தது மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட ஒருமைப்பாடு, நம்பகத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் நேர்மறை ஆகியவற்றை மேம்படுத்த தேவையான ஆளுமையை எனக்கு தந்து உதவியது. இந்த தொழில்நுட்ப குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.’ அவர் மேலும் கூறினார்.

இலங்கையை தலைமையகமாக கொண்ட 99x டெக்னொலஜி என்பது ஸ்காண்டிநேவிய சந்தைக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட புதுமையான டிஜிட்டல் தயாரிப்புகளை வடிவமைக்கும் பொறியியல் நிறுவனமாகும். இது 2004 முதல் உலகின் முன்னணி சுயாதீன மென்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து 150 க்கும் மேற்பட்ட உலகளாவிய டிஜிட்டல் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. 99x டெக்னொலஜி 300க்கும் மேற்பட்ட திறமையான, ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் குழு உணர்வுடன் செயற்படும் வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த பணியிடமாகவும், தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த பணியிடமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

99x பிரதம செயற்பாடு அதிகாரி ஷெஹானி செனவிரத்ன (நடுவில்) மற்றும் 99x பிரதம மக்கள் அதிகாரி தமித் ஜயசிங்க (வலது) பெண்கள் சிறந்த இடத்திலிருந்து பணிபுரியும் சிறந்த இடத்திற்கான விருதைப் Great Place To Work நிறுவனத்தின் இலங்கையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷானிகா ரத்நாயக்கவிடமிருந்து பெறுகின்றனர்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...