Home Blog Page 3589

ஆயிரம் ரூபாவை உறுதி செய்தமைக்கு இ.தொ.கா இளைஞர் அணிசார்பில் நன்றி தெரிவிப்பு

ஆயிரம் ரூபாவை உறுதி செய்துள்ள அரசாங்கத்திற்கு இ.தொ.கா. இளைஞர் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இ.தொ.கா. இளைஞர் அணியின் பொதுச் செயலாளர் அர்ஜூன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த வெற்றிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளைஞர் அணிப் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :க

மறைந்த தலைவர் கெளரவ ஆறுமுகன்  தொண்டமான் அவர்களின் கனவை நனவாக்க  அயராது பாடுபட்டு  கௌரவ ராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான்  அவர்களின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ,தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக  1000 ரூபாய் என்ற முன்மொழிவை அரச வர்த்தமானியின் ஊடாக உறுதி செய்தமைக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச , கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச ,  மற்றும் தொழில் அமைச்சர் கௌரவ நிமால் சிறிபால டி  சில்வா ஆகியோருக்கு  மனமார்ந்த நன்றிகளை இ தொ கா இளைஞர் அணி சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம் .

இந்த வெற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செய்த அணைத்து தரப்புகளுக்கும் நன்றிகள் .

ஜெ அர்ஜுன்
பொது செயலாளர்
இ தொ கா இளைஞர் அணி

பதுளையில் முறிந்து விழுந்தது மரம் – வாகனங்களுக்கு சேதம்!

பதுளை , கிங்ஸ் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் இருந்த அரச மரம் இன்று (10) பிற்பகல் பெய்த கடும் மழையில் வேரோடு முறிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள், இரண்டு லொறிகள்,ஒரு கெப் ரக வண்டி, ஒரு முச்சக்கர வண்டி என்பன கடுமையாக சேதமடைந்துள்ளன.

அரச மரம் முறிந்து வீழ்ந்த சமயம் பயணித்த மோட்டார் வண்டி ஒட்டுநர் காயங்களுக்கு உள்ளாகி மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். மின்கம்பம் ஒன்று சேதமடைந்தால் பதுளை நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பதுளை தீயணைக்கும் படையணியிலுள்ள வீரர்களும், பதுளை பொலிஸாரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை, பசறை, நமுகுகல நிருபர்கள்

ஆறுமுகன் தொண்டமானின் கனவு நனவாகியது என்கிறார் பாரத் அருள்சாமி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா வழங்குவதற்கு தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கனவாகவும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் விடா முயற்சியும் சாணக்கியத் தன்மையின் வெளிப்பாடாகுமென இ.தொ.காவின் உபசெயலாளரும் பிரஜாசக்தி பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மக்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்று கொடுப்பதற்கு கோரிக்கை முன்வைத்து அதனையே குறிக்கோளாகவும் இறுதி கோரிக்கையாகவும் முன்வைத்திருந்தார். அவர் துரதிஷ்ட வசமாக எம்மை விட்டு பிரிந்திருந்தாலும் அவருடைய வழியில் எங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் விடா முயற்சி மற்றும் மக்களின் பலத்தாலும் பல சவால்களைத் தாண்டி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த காலங்களில் எங்களுடைய மக்கள் பல கோணங்களிலும் அப்போதைய அரசாங்கத்தினால் தவறி வழிநடத்தப்படிருந்தாலும் கூட எங்களுடைய அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டு கோளுக்கிற்கிணங்க நாங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பெரும் வெற்றியாகும்.

நாங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டும். 80 வருட பழைமையான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் பல உரிமைகளை வென்று கொடுத்துள்ளது. மேலும், அவர்களின் நில உரிமைகளை பெற்றுக் கொடுக்க முன்னின்று செயற்படுவோம். சிலர் இந்த ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது போனமையினால் மக்களை திசைத்திருப்ப முயற்சிப்பார்கள் ஆனால் மக்கள் தெளிவாக சிந்தித்து அவர்களை நிராகரித்து விட்டனர். எம் மீது நம்பிக்கை வைத்தனர் என்றும் மக்களுக்கு நம்பிக்கைக்கு ஏற்ப இருப்போம் என குறிப்பிட்டதோடு ஆயிரம் ரூபாய் வழங்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு நன்றிகள்! செந்தில் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு

மறைந்த தலைவர் ஆறுமுகன்  தொண்டமான் அவர்கள்  முன்வைத்த ,தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாய் என்ற முன்மொழிவை அரச வர்த்தமானியின் ஊடாக உறுதி செய்தமைக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தொழில் அமைச்சர் கௌரவ நிமால் சிறிபாலடி சில்வா ஆகியோருக்கு  மனமார்ந்த நன்றிகள்.
ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அயராத முயற்சியின் பலன் இன்று  வெற்றியாகியுள்ளது.

கடந்த காலங்களில் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டம்,தோட்ட தொழிலாளர்களின் போராட்டம், ஊடகங்களின் விழிப்புணர்வு செயற்பாடுகள் ,சமூக வலைதளங்களில்  பகிரப்பட்ட சாதகமான விடயங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களின்  நேரடி,மறைமுக ஒத்துழைப்பு என்பன கம்பனிகளுக்கு பாரிய அழுத்ததை வழங்கியது.

அவ்வாறு  பல்வேறு தரப்பினர்களினால் வழங்கப்பட்ட அழுத்ததிற்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மனமார்ந்த நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பம் முதல் இன்று வரை பல்வேறு காலக்கட்டங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. எந்த  ஒரு போராட்டமும் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

எனவே தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்விற்கு வலு சேர்த்த அனைவருக்கு மீண்டும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

எதிர்காலங்களில் தொடர்ந்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடும்.

– செந்தில் தொண்டமான்
உபதலைவர் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும், இது தொடர்பில் அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டி யினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். அந்த அழைப்பின் பின்னர், அவர் தனது சகோதரரான ரிஷாட் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை பொலிசார் எம்மிடம் தெரிவிக்கவில்லை.

மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடமே தெரியப்படுத்தியுள்ளனர். அவரது சகோதரர் கைதான போது, அவர் இதனை வியாபார ரீதியிலான தொலைபேசி அழைப்பு என்று கூறியுள்ளார்.”

அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று (09) இடம்பெற்ற “இஸ்லாமிய அடிப்படைவாதம்: உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுக்கு அப்பால்” – பொது பிரச்சாரம்’ என்ற நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விமலுக்கு எதிராக சி.ஐ.டி யினரிடம் முறைப்பாடொன்றை கையளித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதிலிருந்து, விமல் வீரவன்ச என்னைப் பற்றி மிகவும் மோசமான, பொய்யான குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து வருகின்றார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும், சி.ஐ.டி யினரின் விசாரணைகளிலும் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அண்மையில் வெளிவந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும், எனக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் என்னைப் பற்றி விமல் வீரவன்ச பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார். அத்துடன், என்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில், தான் அரசியலில் இருந்து வெளியேறுவதாகவும் சூளுரைத்தார். எனவே, அவர் இந்தச் சந்தர்ப்பத்தில், அரசியலில் இருந்து வெளியேறி, தான் கூறியதை செயலில் காட்ட வேண்டும். தவிர நேற்று மாலை மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறியுள்ளார். எனவேதான் இன்று அதற்கெதிராக முறைப்பாடு செய்துள்ளேன். அதுமாத்திரமின்றி, எனது சட்டத்தரணி ஊடாக விமலுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருகின்றேன்.

விமலின் பேச்சுக்கள் அப்பட்டமான பொய்யாகும். இதுவரை காலமும் கூறியது போன்றே இப்போதும் கூறியுள்ளார். சஹ்ரானை எந்தக் காலத்திலும் நான் சந்திக்கவில்லை. அதேபோன்று, எனது சகோதரரும் சந்திக்கவுமில்லை, பேசவுமில்லை. அவருக்கும் எங்களுக்கும் இடையிலே எந்தத் தொடர்பும் கிடையாது.

இதைத்தான் நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கின்றேன். இவ்வாறான அபாண்டங்களை கூறி வரும் விமல் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆனால், அவருக்கு இரண்டு பிறந்த தினம், இரண்டு அடையாள அட்டைகள், இரண்டு கடவுச்சீட்டுக்கள். இலங்கையில் இவ்வாறு எவருக்குமே இல்லை. அவ்வாறானவர்தான் இந்த விமல்.

நாட்டு மக்களிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். விமல் வீரவன்ச, தனது அரசியல் இருப்புக்காகவே இவ்வாறு செய்கின்றார். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு விமலிடம் சவால் விடுகின்றேன். அத்துடன், எனது முறைப்பாட்டை சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டுமெனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், சந்தேக நபர் ஒருவரை விடுவிக்குமாறு இராணுவத்தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக, உங்கள் மீது குற்றச்சாட்டொன்று இருக்கின்றதே” என்ற ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரிஷாட் பதியுதீன் எம்.பி,

“நான் அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எனது மாவட்டத்தைச் சேர்ந்த மொய்னுதீன் என்பவரின் மகன் ஒருவரை முகமூடி அணிந்தவர்கள், அவரது வீட்டுக்கு வந்து கொண்டு சென்றதாகவும், அவர் எங்கு இருக்கின்றார் என்பது தொடர்பில் அறிந்து கூறுமாறு அவரது குடும்பத்தார் என்னிடம் வேண்டினர். நான் இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் பலருடன் தொடர்புகொண்டு தகவல்களை பெறமுடியாது போகவே, முன்னாள் இராணுவத் தளபதியிடம் தொலைபேசியில் விசாரித்தேன். அதுவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்க, தங்களிடம் அவ்வாறான ஒரு நபர் இல்லையெனவும்,

இராணுவத்திடம் கேட்டுப் பாருங்கள் என்றார். அதன் பின்னர் தான், இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, இவ்வாறானவர் இருக்கின்றாரா? எனக் கேட்ட போது, இராணுவத் தளபதி, “இப்போது கூறமுடியாது. மீண்டும் அழையுங்கள்” என்றார். இராண்டாவது முறை நான் அவரிடம் கேட்ட போது, “அவ்வாறான ஒருவர் இருக்கின்றார்” எனக் கூறினார். அதை விடுத்து, நான் எந்த சந்தர்ப்பத்திலும், எவரிடமும் அந்த நபர் தொடர்பில் எந்தவொரு அழுத்தமும் வழங்கவில்லை” என்றார்.

‘ஆறுமுகன் தொண்டமானின் கனவு நிறைவேறிவிட்டது’- இ.தொ.கா.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாட் சம்பளம் மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தேயிலை, இறப்பர் வளர்த்தல் உற்பத்தி செய்தல் மற்றும் கைத்தொழில் சம்பந்தப்பட்ட சம்பள நிர்ணயசபைகளின் தீர்வுகளை உத்தியோகபூர்வமாக கடந்த 5ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இதன் படி ஆகக்குறைந்த சம்பளம் 900 ரூபா வாழ்க்கைச் செலவு நிவாரண கொடுப்பனவாக 100 பாவாகவும் மொத்தம் 1000  ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும் என இ.தொ.கா. உப தலைவரும் சம்பள நிர்ணயசபையின் அங்கத்தவரும் சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

” தோட்ட தொழிலாளர்களின் இச் சம்பள உயர்வுக்காக இ.தொ.கா. பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தமையே இதற்கு முழுமையான காரணமாகும்.

அவரது தீர்க்கதரிசனமிக்க காய்நகர்த்தல் மூலம் அரசாங்கத்தின் அனுசரனையை முழுமையாக பெற முடிந்தது. அவரது ஆளுமைக்கு கிடைத்த பெறுவெற்றியாகும். தக்கத்தருணத்தில் சாதுரியமாக செயற்பட்டதன் மூலம் தொழிலாளர் சம்பள பிரச்சினையை சம்பள நிர்ணய சபையிடம் கையளிக்க முடிந்தது. இதன் நிமித்தமே இந்த ஆயிரம் ரூபா சம்பள நிர்ணயம் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை இதன் மூலம் நனவாக்கியுள்ளார் ஜீவன் தொண்டமான். இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள் என சட்டத்தரணி கா. மாரிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் பிணையில் விடுவிப்பு!

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஓல்ட்டன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒல்ட்டன் தோட்ட நிர்வாகத்துக்கும், தொழிலாளர்ளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து தோட்ட நிர்வாகம், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் 26 தொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டிற்கமைய   10 பேரை பொலிஸார் கைது செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை சந்தேக நபர்களை   மார்ச் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார். ஏனைய 16 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேரும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கான பிணையை இ.தொ.காவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வழங்கினர் என அக்கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பேரில் 12 பேர் இன்று ஆஜராகியிருந்தனர். அவர்களும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பசறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தவர் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ஆம் கட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இதன்போது ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்த, அதிரடிப்படையினர் அவரை பசறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரை இன்றைய தினம் (10.03.2021 ) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2024 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய களமிறங்குவாரா?

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதி எஞ்சியிருந்தாலும், பிரதான அரசியல் கட்சிகள் அத்தேர்தல் தொடர்பிலும் தமது பார்வையை செலுத்தியுள்ளன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பரந்தப்பட்ட கூட்டணி அமைத்து களமிறங்கினாலும் வேட்பாளர் ‘சஜித் பிரேமதாசதான்’ என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆளுங்கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில்தான் பல கோணங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசமைப்பின் பிரகாரம் நபரொருவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகிக்கலாம். அந்தவகையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பு இருந்தாலும், அவர் போட்டியிடமாட்டார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

பங்காளிக்கட்சி தலைவர்கள் சிலருடன் அண்மையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றின்போது, அடுத்த தேர்தலில் தான் போட்டியிடமாட்டார் எனவும், பொருத்தமான வேட்பாளர் ஒருவரை தயார்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் என கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

இலங்கை அரசியலில் புரட்சியை ஏற்படுத்தி புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலக்காக இருக்கின்றது. எனினும், அதனை நோக்கி பயணிப்பதற்கு பல தடைகள் இருப்பதாலும், மேலும் சில காரணங்களாலுமே ஜனாதிபதி இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்திருக்க கூடும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

0ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்காவிட்டால், பஸில் ராஜபக்சவே போட்டியிடுவார் எனவும் கூறப்படுகின்றது. எனினும், புதிய அரசமைப்பின் ஊடாக எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதனை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சியில் இறுதி முடிவு எடுக்கப்படக்கூடும்.

பெண் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

தேயிலை, இறப்பர் மலைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு நீர்வசதியுடன் கூடிய ஒய்வு அறை, மலசலகூடம் என்பன அமைக்கப்படுவது அடிப்படை உரிமையாகும் என செங்கொடி பெண்கள் இயக்க செயற்பாட்டளர் ஆனந்தி சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெருந்தோட்ட துறையில் பெண் தொழிலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர், இன்றுவரையில் அது தீர்க்கப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பாதை ஓரங்களிலும் கற்பாறைகளிலும் மரங்களுக்கு அடியிலும் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, காலகாலமாக அவர்கள் இவ்வாறு நடத்தப்படுதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொட்டும் மழையில் கூரை ஏதுவும் இன்றி ஒருவரால் சாப்பிட முடியுமா? ஆனால் பெண் தோட்ட தொழிலாளர்கள் அவ்வாறு சாப்பிடுகின்றனர், சில வேளைகளில் நாய், குரங்கு, காகம் வனஜீவராசிகள் சாப்பாட்டை நாசம் செய்து விட்டு சென்று விடுகின்றன. அதன் போது சாப்பிடாமல் பட்டினியாக இருந்து பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தண்ணீர் வசதிகள் எந்த மலையிலும் ஏற்படுத்தப்படவில்லை. குடிப்பதற்கும், கைகளை கழுவுவதற்கும் தொழிலாளர்கள் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் 8 மணி நேரத்துக்கு போதுமானதாக இல்லை.

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மலசல கூடவசதிகள் தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் இல்லை என்பது மேலும் ஒரு பிரச்சினையாகும். 8 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு நீர் வசதியுடன் கூடிய மலசல கூடங்கள் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர்கள் மரங்களின் மறைவுகளையும் புதர்களையும் தேடிச்செல்கின்றனர்.

அவ்வாறான மறைவான இடங்களில் பூச்சிப்பட்டடைகள் தாக்குவதும், வழுக்கி விழுந்து உபாதைகளுக்கு உள்ளாவதும் அன்றாட நிகழ்வாகும். மாதவிடாய் காலங்களில் தங்களுடைய உடைகளை மாற்றிக்கொள்ளவோ, அதற்கான தேவைகளை செய்துகொள்ளவோ வாய்ப்பில்லை. மலைகளில் யாரும் பார்த்துவிடுவார்களோ என பயந்து பயந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி தொழிலாளர்கள் தங்களது இயற்கை உடல் கழிவுகளை வெளியேற்றுவது என்பது வேலைத்தள உடல் நல பாதுகாப்பு மற்று தொழில் உரிமை மீறலாகும்.

தொழில் அமைச்சு,பெருந்தோட்ட அமைச்சு, தொழில் ஆணையாளர்கள் என தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் அமைதியாக இருந்துவிடுகின்றன. இது தொழிலாளர் வர்க்கத்திற்கே இழைக்கும் அநீதியாகும்.இது இலங்கையின் தொழில் சட்டங்களின் தரம் தொடர்பான கேள்வியை எழுப்பும் நிலையையும் உருவாக்குகின்றது.

அதே போன்று தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும். பெண் தொழிலாளர்களின் பிரச்சினையை பொதுபிரச்சினையாக அடையாளப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்ட மட்டத்தில் ஏனைய தொழிலாளர்களக்கு இப்பிரச்சினையின் விளைவுகளை தெளிவுப்படுத்துவதோடு, கம்பனிகள் மற்றும் அரச மட்டத்தில் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் செங்கொடி பெண்கள் இயக்கம் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் அநீதியை தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு அறிவூட்டும் வகையிலும் அரசு மற்றும் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் சுவரோவியங்களை தீட்ட ஆரம்பித்துள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...