Home Blog Page 3590

‘மேற்குலகின் ஒத்துழைப்பு இன்றி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிரானது என காண்பித்து அரசியல் நடத்தாமல், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் . மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரம் மேம்படும். – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தும் மனித உரிமைகள் பேரவையை, நாட்டுக்கு எதிரான அமைப்பாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். மனித உரிமை என்பது அனைத்து இன மக்களுக்கும் உரித்தானது.  எனவே, அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்கூட. குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவே இலங்கை மக்களுக்கு ஜெனிவாவைக்காண்பித்தார்.

போர்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு அப்பால் ரதுபஸ்வெல துப்பாக்கிச்சூட்டு சம்பவம், வெலிகடை சம்பவம், அண்மையில் அரங்கேறிய மாஹர சிலைச்சாலை  சம்பவம் ஆகியனவும் மனித உரிமை விவகாரத்தில் உள்ளடங்கும்.

மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் என்பது இரண்டரக்கலந்தவை. எனவே, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்காது, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.  1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கைக்கு மேற்குலக நாடுகள் கொடையாக எதையும் வழங்கவில்லை. எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. சலுகையும் இல்லாமல்போனால் என்ன நடக்கும்? மனித உரிமை விவகாரத்தையும் அரசியல் மயப்படுத்தியதாலேயே இந்நிலைமை உருவாகியுள்ளது.

இலங்கையும் மனித உரிமைகளை மதிக்கும் நாடாக மாறவேண்டும். ஜெனிவாவில் இலங்கைக்கு 21 நாடுகள் ஆதரவு வழங்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த 21 நாடுகளில் எந்தவொரு மேற்குலக நாடும் இல்லை.  மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.” – என்றார்.

சந்தாக்கட்டணத்தை அதிகரிக்காதிருக்க திகாவின் சங்கமும் முடிவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்தாலும், சங்கத்துக்கான சந்தாக்கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தொழிலாளர் தேசிய சங்கம் உத்தேசித்துள்ளது என அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் பக்கம்நின்று குறித்த முடிவை எடுக்க வேண்டும் என பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே சங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது எனவும் அறியமுடிகின்றது.

தற்போது தோட்டத்தொழிலாளி ஒருவரிடமிருந்து மாதாந்தம் 233 ரூபாவை தொழிற்சங்கங்கள் சந்தாவாக பெற்றுவருகின்றன.

அடிப்படை நாட் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்கள் மாதாந்த சந்தாவாக செலுத்த வேண்டும். இதன்படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது சந்தா கட்டணமும் கடந்தகாலங்களில் அதிகரிக்கப்பட்டது.

கடந்த முறை அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டபோது தொழிற்சங்கங்கள் 233 ரூபாவை சந்தாவாக பெற்றன, இம்முறை அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபா வழங்கப்படும்பட்சத்தில் 300 ரூபாவை சந்தாவாக பெறக்கூடும். ஆனாலும், தொழிலாளர் தேசிய முன்னணி இம்முறை சந்தா கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியும் ஏற்கனவே இந்த முடிவை எடுத்துள்ளது.

இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வெளியானது வர்த்தமானி! வேலை நாட்களுக்கு உத்தரவாதம் இல்லை!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் 5 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாயாகவும், வரவு – செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாயாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபா வழங்கப்படவுள்ளது.

ஆனாலும் வேலை நாட்கள் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
 
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும். ஆனால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக கம்பனிகள் அறிவித்துள்ளன. சம்பளம் வழங்கக்கூடிய அளவுக்கே வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளன.
மாதம் 13 அல்லது 15 நாட்கள் வேலை வழங்குவதே கம்பனிகளின் திட்டமாக உள்ளது. அவ்வாறு நடைபெற்றால் அது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஏற்கனவே பெற்ற சம்பளத்தைவிடவும் குறைந்தளவான தொகையையே பெறவேண்டிவரும்.
 
எனினும், விசேட சட்டத்தை தொழில் அமைச்சு இயற்றும் பட்சத்திலோ அல்லது புதியதொரு உடன்படிக்கை கைச்சாத்திடும்பட்சத்திலோ தொழில் சலுகைகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

‘ஜெனிவாப் பிரேரணையை தோற்கடிப்பது கடினமான செயல்’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையை தோற்கடிப்பதென்பது கடினமாக செயலாகும் – என்று பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய  தெரிவித்தார்.

ஜெனிவாத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கு 24 நாடுகளின் ஆதரவு அவசியம். அதற்கான சாத்தியம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தற்போதைய பூகோள அரசியலின் அடிப்படையில் இது கடினமான செயலாகும். போர்காலத்தில் நடந்த சம்பவங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு பிரேரணை வந்திருந்தால் 24 அல்ல 47 நாடுகளின் ஆதரவைக்கூட பெற்றிருக்கலாம்.

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட பதினான்கரை (14.5)  பக்கங்கள் கொண்ட அறிக்கையில், பதினொன்ரரை (11.5) பக்கங்களில் கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. இதனால் பூகோள அரசியல் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எதுஎப்படி இருந்தாலும் மனித உரிமைமீறல் குற்றச்சாட்டு தொடர்பில் முடிவொன்றை காணவேண்டும் என ‘கோ குறூப்’ நாடுகளிடம் தெரிவித்துள்ளோம். இப்பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுவைக்ககூடாது. இதற்கு மேற்குலகம் உடன்படுமா என்பது எமக்கு தெரியாது.

இணை அனுசரணை வழங்குமாறு இம்முறையும் இலங்கையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நாம் ஏற்கவில்லை. பிரேரணை. தீர்மானம் என்னவாக இருந்தாலும், அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் சிறந்த உறவு இருக்கின்றது. எனவே, பொருளாதாரத் தடை உட்பட கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என நம்புகின்றோம். பொருளாதாரத் தடை விதிப்பதாக இருந்தால்கூட அதனை ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாகவே முன்னெடுக்கவேண்டும்.

அதேவேளை, அரபுலகம் இலங்கைக்கு ஆதரவு வழங்கும். இந்தியாவும் நேசக்கரம் நீட்டும் என நம்புகின்றோம்.” – என்றார்.

வடமாகாணத்திற்கான வலையமைப்பு மேம்பாட்டை Airtel நிறைவு செய்துள்ளது

• அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய 900 MHz ஒலி அலைக்கற்றையை பயன்படுத்துகிறது

• பரீட்சார்த்த சோதனைகளின் போது ஒப்பிட முடியாத உள்ளக அனுபவங்களை உறுதிபடுத்துகின்றன

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் லங்கா,

வடமாகாணம் முழுவதும் பாவனையாளர் அனுபவத்தை துரிதமாக மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு 900 MHz ஒலி

அலைக்கற்றை இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய ஒலி அலைக்கற்றையை (Spectrum) பயன்படுத்துவது மேம்பட்ட வலையமைப்பு அனுபவத்தை பாவனையாளர்களுக்கு

ஏற்படுத்துவதோடு, அதனூடாக புவியியல் ரீதியாக விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட வட மாகாணத்திலுள்ள மக்களுக்கு
முழுமையான தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க முடியுமென்பது விசேட விடயமாகும். இந்த

வலையமைப்பு மேம்பாடானது அந்த பகுதியில் Airtel 4G சேவைகளை எதிர்பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் பிரதம் நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப்
பணிப்பாளருமான ஆஷீஷ் சந்திரா, “புதிய ஒலி அலைக்கற்றையை (Spectrum) பயன்படுத்தப்படுவது எமது வளர்ச்சி
மூலோபாயத்திற்கு முக்கியமானது. Spectrum சிறந்த உள்ளக அனுபவத்தை செயல்படுத்த சிறந்த சமிக்ஞை ஊடுருவலை
அனுமதிப்பதுடன் எமது அதிர்வெண் அலைவரிசைகள் மீதான திறனை விடுவிக்கிறது, இதன் மூலம் பிராந்தியத்தின் பாரிய
மக்கள் தொகையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய எமக்கு உதவுகிறது.” என தெரிவித்தார்.

பாவனையாளர் அனுபவத்தை உச்ச அளவிற்கு கொண்டு செல்வதற்கு இந்த மேம்பாடுகளானது எயார்டெல் லங்காவினால்
முன்னெடுக்கப்பட்ட மிக முக்கிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம்
தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு
வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல்
நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா
தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு
சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை
பார்வையிடவும்.

கொரோனாவிலிருந்து 82,753 பேர் மீண்டனர் – 2,779 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 240 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 779 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

கமலுக்கு வில்லனாக களமிறங்கும் ராகவா லாரன்ஸ்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்சிடம் பேசி வருகிறார்கள். கதையும், கதாபாத்திரமும் லாரன்சுக்கு பிடித்துள்ளதாகவும், இதனால் படத்தில் அவர் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். முந்தைய மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதியின் வில்லன் வேடம் விஜய்க்கு இணையாக இருந்தது. அதுபோல் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லாரன்ஸ் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் விக்ரம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

டிஜிட்டலில் வருகிறார் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

எம்.ஜி.ஆரின் பழைய படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி திரையிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், ரிக்‌ஷாக்காரன், நினைத்ததை முடிப்பவன், எங்க வீட்டு பிள்ளை, அடிமைப்பெண் உள்ளிட்ட படங்கள் டிஜிட்டலில் வந்தன. இதுபோல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி இருந்தனர்.

தற்போது நவீன டால்பி அட்மாஸ் ஒலியுடன் டிஜிட்டலில் மெருகேற்றி ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜ் மீண்டும் வெளியிடுகிறார். உலகம் சுற்றும் வாலிபன் 1973-ல் திரைக்கு வந்தது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இந்த படம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.கவை தொடங்கிய பின் வந்ததால் கட்சி கொடியும் இடம்பெற்றது. முருகன், ராஜு என்ற இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்து இயக்கி இருந்தார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என்று மூன்று கதாநாயகிகள்.

அசோகன், நம்பியார், நாகேஷ் ஆகியோரும் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் படத்தில் இடம்பெற்ற சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, அவள் ஒரு நவரச நாடகம், தங்க தோணியிலே, பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

21/4 தாக்குதலின் பின்னணியில் இந்தியாவா? – ரணில் வெளியிட்டுள்ள தகவல்!

21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருந்திருக்காது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா உள்ளது எனவும், தாக்குதலை ‘றோ’ அமைப்பே வழிநடத்தியது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2019 ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியவால் புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. கடைசி இரு நாட்களில்கூட எச்சரிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யமுடியாமல்போனதையிட்டுதான் நாம் கவலையடைகின்றோம்.

தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளது என்பதற்கான தகவல் எதுவும் இல்லை. புலனாய்வு அமைப்புகளும் அது தொடர்பில் தகவல் வழங்கவில்லை.

அதேவேளை சாரா என்பது யாரென தெரியாது. அவர் ஊடாக தகவல் சென்றிருக்ககூடும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் மூன்றாம் தரப்பொன்றுக்குகூறி அதன் ஊடாக தகவல் சென்றிருக்ககூடும். சாரா ‘றோ’ உளவாளியா என்பது குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் ஊடாகவே தகவல் சென்றிருக்ககூடும் என நம்பப்படுகின்றது. நேரடியாக சென்றதா அல்லது மூன்றாம் தரப்பு ஊடாக சென்றதா என்பது தெரியாது.” – என்றார்.

 

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறக்கப்படுகிறது. 19 ஆம் திகதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை 17ஆம் திகதி அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வருகிற 19 ஆம் திகதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூதபலி, உத்சவ பலியும், 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28 ஆம் திகதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...