பெல்மதுளை பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்து பெருந்தோட்ட காணிகள் அபகரிக்கப்பட்டுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல்மதுளை கனேகம பிரதேசத்தில் பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலரால் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச மற்றும் பெருந்தோட்ட காணிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெல்மதுளை பிரதேச இணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட காணிகளை பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதார மத்திய நிலையம் என்பன அமைப்பதற்கு ஒதுக்குவதற்கு பெல்மதுளை பிரதேச இணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பொது பணிகளுக்கான கட்டடங்களை அமைக்குமாறும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட இப்பிரதேசத்தில் காணி வழங்குவதற்கு கூட மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் பொதுமக்கள் இவ்வாறு சட்டத்திற்கு முரணாக காணிகள் அபகரிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
