Home Blog Page 3592

மகளிர் தினத்தில் யாழில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

நுவரெலியாவில் 7 நாட்களில் 72 பேருக்கு கொரோனா தொற்று

2021 மார்ச் முதலாம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 72 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 114 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 76 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1,072 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்றியுள்ளது.

புர்கா, நிகாப் அணிந்து முகத்தைமூட சுவிஸில் தடை

முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் உள்ளிட்ட முகங்களை மூடும் உடைகளை அணிவதை  தடை செய்வதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் குறுகிய வாக்குவித்தியாசத்தில் வாக்களித்துள்னர்.

மார்ச் 07.03.21 இன்று ஞாயிறன்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அனைத்து பொது இடங்களிலும் இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்த பெண்கள் நிகாப் மற்றும் புர்கா உள்ளிட்ட முழு முகங்களை  மூடுவதற்கு தடை விதிக்க சுவிஸ் வாக்காளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில் தடைக்கு  ஆதரவாக 51.2% மும் 48.8% எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்துள்ளனர்.

இவை அதிகாரப்பூர்வ முடிவுகள்.

இதன் விளைவாக, தெருக்களில், பொது அலுவலகங் களில், பொது போக்குவரத்து, உணவகங்கள், கடைகள் மற்றும் கிராமப்புறங்களில் உட்பட, பொது அணுகக்கூடிய அனைத்து இடங்களிலும் முகத்தை மூடும் புர்கா என்றழைக்கப்படும் உடையை அணிவது தடை செய்யப்படும்.

சர்ச்சைக்குரிய இந்த முன்மொழிவு 51.21% வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றது, நாட்டின் 26 கன்டோனின் பெரும்பான்மை, மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தற்காலிக முடிவுகளின் படி. இது மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் மக்கள் தடைக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி உட்பட பல குழுக்களால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, குறிப்பாக இஸ்லாத்தைப் பற்றி குறிப்பிடவில்லை, ஆனால் சுவிஸ் ஊடகங்களில் “புர்கா தடை” என்று பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் விதிவிலக்குகள் இருக்காது என்று அரசாங்க ஆவணம் கூறியது.

St.Gallen மற்றும் Ticino ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே புர்க்கா மீது  தடை விதித்துள்ளன.

லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி , சுவிட்சர்லாந்தில் யாரும் புர்கா அணிவதில்லை, சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணிகிறார்கள்.

8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 5% முஸ்லிம்கள், பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து வந்தவர்கள்.

டிக்கோயாவில் மினி சூறாவளி – 23 வீடுகளுக்கு சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளன. இதனால் இந்த குடியிருப்பில் 16  வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.

இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.

இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.குறித்த பகுதியில் சுமார் 50 மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன

மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்த தனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன .

சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி, இன்று (08.03.2021) காலை சமூகம் தந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடக செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

2024 இல் ஐ.தே.கவை ஆட்சிக்கு கொண்டுவருவேன் – ரணில் சபதம்!

ஐக்கிய தேசியக்கட்சியை 2024 ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவருவேன் – என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்கள், 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணல்.

பழம்பெரும் நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாற்று கதையில் தமன்னா

நடிகர்- நடிகைகள் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன.

நடிகர்- நடிகைகள் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடித்து தேசிய விருது பெற்றார்.

இதுபோல் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

என்.டி.ராமராவ், சஞ்சய்தத், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோர் வாழ்க்கை வரலாறும் படங்களாக வந்தன. ஜெயலலிதா வாழ்க்கை தலைவி பெயரில் படமாகியுள்ளது.

இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா, நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையும் படமாக உள்ளது. இந்த வரிசையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஜமுனா வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற போட்டிகளில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் சபைக்கு கோடிக்கணக்கில் பணமழை கொட்டுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததாலும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக மகுடம் சூடியது.

இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதில் தீவிரம் காட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டி அட்டவணை குறித்து அணிகளின் நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அரசு சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோரிடம் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டனர்.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் 14-வது ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார்.

இதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் இந்த முறை ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மராட்டிய அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக போட்டிக்குரிய இடங்களில் மும்பையும் சேர்க்கப்பட்டு உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் யார்?

8 அணிகள் இடையிலான ஐ.பி.எல். திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 9 ஆம் திகதி  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30 ஆம் திகதி அரங்கேறுகிறது. ஒவ்வொரு ஆட்டமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதுவே ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் இருந்தால், முதலாவது ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மொத்தம் 11 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல். ஆரம்பகட்ட போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டி அட்டவணை திகதி – மோதல் இடம் – நேரம்

ஏப்.9 மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.10 சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.11 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.12 ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.13 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- மும்பை இ்ந்தியன்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.14 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை

ஏப்.15 ராஜஸ்தான் ராய்லஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.16 பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.17 மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.18 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மாலை 3.30 மணி

ஏப்.18 டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.19 சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.20 டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.21 பஞ்சாப் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் சென்னை மாலை 3.30 மணி

ஏப்.21 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.22 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.23 பஞ்சாப் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.24 ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.25 சென்னை சூப்பா கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை மாலை 3.30 மணி

ஏப்.25 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.26 பஞ்சாப் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

ஏப்.27 டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

ஏப்.28 சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

ஏப்.29 மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி மாலை 3.30 மணி

ஏப்.29 டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

ஏப்.30 பஞ்சாப் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.1 மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.2 ராஜஸ்தான் ராயல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.2 பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.4 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.5 ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.6 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.7 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.8 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆமதாபாத் மாலை 3.30 மணி

மே.8 ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.9 சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மாலை 3.30 மணி

மே.9 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.10 மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.11 டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே. 12 சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.13 மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மாலை 3.30 மணி

மே.13 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா இரவு7.30 மணி

மே.14 பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.15 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.16 ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா மாலை 3.30 மணி

மே.16 சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.17 டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.18 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு பெங்களூரு இரவு 7.30 மணி

மே.19 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.20 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.21 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் பெங்களூரு மாலை 3.30 மணி

மே.21 டெல்லி கேப்பிட்டல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.22 பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.23 மும்பை இ்ந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா மாலை 3.30 மணி

மே.23 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.2 இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.26 வெளியேற்றுதல் சுற்று ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.28 இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே. 30 இறுதிப்போட்டி ஆமதாபாத் இரவு 7.30 மணி

‘குறுக்கு வழியில் ஓடவும் முடியும் – கவ்வாத்து கத்தியை எடுக்கவும் தெரியும்’

” தங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள்,  ஆட்சிக்கு வந்தால் யானையைத் தருவோம், பூனையைத் தருவோம் என சூளுரைத்தவர்கள் இன்று ஒளிந்துவிட்டனர்.20 பேர்ச்சஸ் காணியில் வீடு கட்டப்படும் என கூறியவர்கள் இன்று 7 பேரச்சஸ் காணியில்கூட வீடு கட்டவில்லை. நான் 100 நாட்கள் ஆட்சியின்போது 300 வீடுகளைக் கட்டினேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
 
” என்னையும் இந்த அரசாங்கம் அழைத்தது, நான் செல்லவில்லை. 2024 இல் எமது ஆட்சி உருவாகும். சஜித் ஜனாதிபதியாவார். அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் நாம் அமைச்சர்களாக இருப்போம். உரியவகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
 
எனவே, துரோகிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நல்லவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள். இதனைவிடுத்து ஏமாற்றுபவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். ஓல்டன் தோட்டத்தில் காட்டிக்கொடுப்பு நடந்துள்ளது. தொழிலாளர்களை தூண்டிவிட்டு தற்போது மௌனம் காக்கின்றனர்.
துரைமாரை அடிக்குமாறு நான் தொழிலாளர்களை தூண்ட மாட்டேன். அடிப்பதாக இருந்தால் நான் சென்று அடிப்பேன், சிறைக்கும் செல்வேன்.  நான் எதற்கும் அஞ்சமாட்டேன். எனக்கு குறுக்கு பாதையிலும் ஓட தெரியும். கவ்வாத்து கத்தியையும் கையில் எடுக்க முடியும். எனவே, மக்களை கைவிடமாட்டோம்.” – என்றார்.

3ஆவது ரி -20 போட்டியில் மே.தீவுகள் அணி வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் மே. தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

Coolidge Cricket Ground, Antigua மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும், அசேன் பண்டார 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

‘கெட் அவுட்’ சொன்னார் திகா! ‘குட்பாய்’ கூறுவாரா ராதா?

தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு மலையக மக்கள் முன்னணிக்கு, அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் இதர பங்காளிக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் தலைவர்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

20 இற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, தன்னிச்சையான வகையில் சில முடிவுகளை எடுத்தமை , ஆளுங்கட்சியுடன் மலையக மக்களுக்கு உள்ள இரகசிய உறவு உட்பட சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அக்கட்சியை வெளியேற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாகாணசபைத் தேர்தலில் கூட்டணியின் வேட்பாளர்களை மனோவும், திகாவுமே தீர்மானிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

19 ஆம் திகதி சீனா பறக்கிறார் புடின்!

0
ரஷ்ய ஜனாதிபதி புடின் மே 19 ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இரு நாள் பயணமாகவே அவர் பீஜிங் செல்கின்றார் என தகவல்...

வலி சுமந்த எபோஸ்லி வீதி: தீர்வு எப்போது?

0
மலைவாஞ்சான் ஹட்டன் டிக்கோயா பிரதான பாதையினை இணைக்கும் எபோஸ்லி வீதி, தற்போதைய மழைக்காலங்களில் கால்வாய்போல் மாறி வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். ஹட்டன் - எபோஸ்லி பிரதான வீதியில் அமைந்துள்ள பன்மூர் பகுதியில், சுமார்...