Home Blog Page 3593

பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் தலையீடு ஏன்?

பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் தலையீடு ஏன்?

இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கின்றதா?

கேள்வி எழுப்புகின்றார் பா.உ இராதாகிருஸ்ணன்

– நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

நுவரெலியா ஹல்கரனோயா மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.இது எங்களுடைய மக்களுக்கு எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (07.03.2021) நுவரெலியா எல்பன் விருந்தகத்தில் நடைபெற்றது.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த இராதாகிருஸ்ணன்

என்றுமே இல்லாத வகையில் பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.இது பல சந்தேகங்களை எங்களுடைய மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.எதிர்காலத்தில் எங்களுடைய மக்களை அடக்கு முறையில் நிர்வாகம் செய்வதற்கு கம்பனிகளும் அரசாங்கம் திரை மறைவில் செயற்பட்டு வருகின்றதா?

இன்று இலங்கையில் அனைத்து அரசாங்க தனியார் துறைகளிலும் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைக்கப்பட்டு வருகின்றார்கள்.இது அரசாங்கத்தின் திட்டமிட்;ட அடிப்படையில் நடைபெறுகின்றது.இதே நிலைமையை அரசாங்கத்தின் அணுசரனையுடன் கம்பனிகள் முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றதா?என்ற சந்தேகம் எங்குளுக்கு எழுகின்றது.

நுவரெலியா ஹல்கரனோயா மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் 7 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.இன்று மலையகத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களுக்கு இந்த தோட்ட கம்பனிகள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வருவதில்லை.அதற்கு காரணமாக அவர்கள் கூறுவது அனுபவம் இல்லை என்பதே அப்படியானால் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு பெருந்தோட்ட நிர்வாகத்தில் என்ன அனுபவம் இருக்கின்றது?

ஒரு பக்கத்தில் தோட்ட அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்று போராட்டம் செய்கின்றார்கள்.மறுபுறத்தில் தோட்ட நிர்வாகத்திற்கு ஒய்வு பெற்ற இராணுவத்தினர் இணைக்கப்படுகின்றனர்.

வுpடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற ஜனநாயக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிசாரும் இரகசிய பொலிசாரும் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்.இப்படி இந்த நாட்டில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த அனைத்து விடயங்களையும் பார்க்கின்ற பொழுது இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே எங்களுக்கு தோன்றுகின்றது.இது ஒரு நல்ல விடயம் அல்ல.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.ஆனால் அரசாங்கமே அந்த ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது சர்வதேசத்தில் எங்களுடைய நாட்டின் மீது பிழையான ஒரு பார்வையை கொண்டு வரும் எனவே இவ்வாறான விடயங்களை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை பெருந்தோட்ட நிர்வாகத்தில் இணைத்து அரசாங்கத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்த கம்பனிகள் முயற்சிக்கின்றதா?

இந்தியா வெற்றிநடை – டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடம்!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
2 ஆம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டங்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்‌ஷர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3-ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும், அக்‌ஷர் படேலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இந்த இருவர் கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் – அக்‌ஷர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் அக்‌ஷர் படேல் தேவையில்லாமல் ரன் எடுக்க ஓடியதால் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என நம்பினார்கள் இந்திய ரசிகர்கள். ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் வெளியேறினார்.
இதன்மூலம் இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்த்னர்.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலேயா இந்திய அணியின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே கிராவ்லியை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து அடுத்த பந்தில் ஜானி பேர்ஸ்டோவை வெளியேற்றினார். இதனையடுத்து அஸ்வின், அக்சர் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (30 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். பின்னர் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களான பென் போக்ஸ் 13 ரன்களும், அடுத்து களமிறங்கிய டொம்னிக் பெஸ் 2 ரன்னும், ஜேக் லீச் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரன்ஸ், தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முடிவில் இங்கிலாந்து அணி 54.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசம் மற்றும் ஒரு இன்னிங்கிஸ் வெற்றியை சுவைத்தது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3-1 என்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, லண்டனில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
குறித்த வெற்றியின்மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.

‘இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி’ இன்று உதயமானது

‘இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ எனும் பெயரில்  யாழ்ப்பாணத்தில் புதியதொரு அரசியல் கட்சி இன்று உதயமாகியுள்ளது.

 யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தக்ககட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர் செயற்படுவார்கள்.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகாடியதாக உள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.

எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும்.

எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுவார்கள். இலங்கை பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கிய பணிகளாக.

தமிழ் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி அதற்கூடாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் 10ஆண்டு திட்டத்தை முன்னெடுத்தல்.

இதற்காக தமிழ் பேசும் கல்வி சமூகத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை கோருகிறோம்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுய வருமான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு உந்துதலை வழங்குதல்.

இதற்கான ஆலோசனைகளை தமிழ் பேசும் சமூகத்தின் பொருளியல் மற்றும் வர்த்தகத்துறையினரிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.

தமிழ் பேசும் மக்களின் விளையாட்டுத்துறை மற்றும் அழிந்துப்போகும் கலாசார விழுமியங்களை பாதுகாத்தல்.

இந்த விடயத்தில் தமிழர் மத்தியில் செயற்படும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

பெருந்தோட்டங்கள் இராணுவ வசமாவதை ஏற்கமுடியாது – ராதா

மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (06.03.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘சம்பள நிர்ணய சபை 1000 விடயத்தில் தலையிட்டதனால் இன்று வித்தியாசமாக தோட்ட துரைமார் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஹோல்டன் மற்றும் கந்தப்பளை தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தோட்ட துறைமார் வீதியில் இறங்கி போராடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பிரதிபளிப்பாக தற்போது ஹய்போரஸ்ட் மாகுடுகல தோட்டத்தில் 6 இராணுவ வீரர்கள் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்க தயாராவதாக அறிய முடிகின்றது. இது குறித்து மகுடுகல தோட்ட நிர்வாகத்திடம் வினவியதற்கு தமக்கு அது குறித்து தெரியாது என்கின்றனர். இவ்வாறு இராணுவத்திடம் தோட்ட நிர்வாகத்தை ஒப்படைப்பது பூதாகரமானது.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை கொண்டுவந்ததன் மூலமே யுத்தம் ஏற்பட்டது. ஆகவே தொழிலாலளர்களை நசுக்க கம்பனிகளும் அரசாங்கமும் முற்படுகிறதா? ஏன்ற சந்தேகமுள்ளது. ஆகவே அரசாங்கம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் மக்கள் போராட்டம் இடம்பெறும்.

தற்போதைய நிலையில் 1000 ரூபாவை கொடுத்து ஏனைய நலன்புரி விடயங்களில் கம்பனிகள் கைவைத்தால் மலையகத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும். இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ என்றார்.

க.கிசாந்தன்

ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு எதிராக மைதானத்தில் போராட்டம்!

ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தீர்ப்பின் மூலம், உதைப்பந்தாட்ட கழகமொன்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி, யம் மேட்ஸ் விளையாட்டு கழக வீரர்கள், இன்று (06.03.2021) ஹட்டன் டன்பார் மைதானத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டனில் உதைப்பந்தாட்டத்தை பாதுகாப்போம், குற்றத்தை வளர்ப்பவர்களை வெறுக்கிறோம், ஒரே கிண்ணத்திற்கு இரண்டு சட்டங்களா?, தலைவரின் இறுதி முடிவு செல்லுபடியற்றதா? போன்ற வாசகம் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு சுகாதார பொறிமுறைக்கமைய அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதைப்பந்தாட்ட தொடரொன்று கடந்த வருடம் நடைபெற்றது. இதன்போது யம் மேட்ஸ் விளையாட்டு கழகம், ஸ்மோல் டிரேட்டன் விளையாட்டு கழகம் ஆகியவற்றுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதனை விசாரணை செய்த ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று குழு,

ஒரு விளையாட்டு வீரர் பதிவு செய்யப்பட்ட ஒரு கழத்திற்கு மாத்திரமே விளையாட வேண்டும் எனவும்,  காலிமுத்து கிசாந்தன் என்பவர் இரண்டு கழங்களில் விளையாடி விதிமுறைகளை மீறி செயற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இரண்டு கழகங்களையும் 2020.01.31. இருந்து 2021.01.31 வரை தடை செய்யப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் அதே அட்டன் தலைவர் கிண்ண இறுதி போட்டிக்கு ஒரு குழுவினை மாத்திரம் மீண்டும் இணைத்துக்கொண்டு இதில் யம் மேட்ஸ் கழகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக விளையாட்டு வீரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து தாங்கள் நீதி மன்றத்தினை நாடி தடை உத்தரவு ஒன்றினை பெறப்படவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

இரத்தினபுரியில் 82 பேருக்கும், பதுளையில் 31 பேருக்கும் நேற்று கொரோனா

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 82 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஹலியகொடவில் 21 பேர் உட்பட 10 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை பதுளை மாவட்டத்தில் 31 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 11 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்றியுள்ளது.

பதுளையில் பஸ் விபத்து! 35 பேருக்கு காயம்!!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 06.03.2021 இன்று காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 35 பேரில், 10 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர், ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

10 ஆம் திகதி மௌனத்தை கலைப்பாரா மைத்திரி?

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் தனது நிலைப்பாட்டை விளக்கவில்லை. எதிர்வரும் 10 ஆம் திகதி அவர் மௌனத்தை கலைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேற்படி அறிக்கையை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்திருந்தாலும், அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுவதை மைத்திரிபால சிறிசேன தவிர்த்தே வருகின்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் 21/4 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார்.

இதனால் அறிக்கை தொடர்பில் மைத்திரி தனது சட்டத்தரணிகளுடன் கடந்த நாட்களில் ஆலோசனை நடத்தினார்.

21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கைமீது எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகின்றது. இதன்போது மைத்திரி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் எனவும், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் எனவும் அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை பயன்படுத்தி சில தகவல்களை அவர் வெளியிடக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

பதிலடி கொடுத்தது இலங்கை – மண்டியிட்டது மே. தீவுகள் அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

Coolidge Cricket Ground, Antigua மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. தனுஷ்க குணலதிக்க 56 ஓட்டங்களையும், நிஷாங்க 37 ஓட்டங்களையும், அசேன் பண்டார 21  ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும்  இழந்து 117 ஓட்டங்களைம மாத்திரமே பெற்றது. இதன்படி இலங்கை அணி 43 ஓட்டங்களில் வெற்றிபெற்றது.

புதிய அரசமைப்பு – தெரிவுக்குழுவை அமைக்குமாறு சஜித் அணி வலியுறுத்து

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான நிபுணர்குழு என்பது கண்துடைப்பு நாடகம். எனவே, இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பியே அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தைக் கையாளும் நிபுணர்கள் குழுவில் அரசுக்கு சார்பான சட்டத்தரணிகளே இடம்பெற்றுள்ளனர். இப்படியான குழுவின் முன்னால் யோசனை முன்வைத்து தமது தரப்புக்கு பழக்கமில்லை என்று எமது சட்டத்தரணிகள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

ஒன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு நிர்ணய சபையாகமாற்றி அதன் ஊடாக புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். பல தரப்பு கலந்துரையாடல்களை நடத்தி, உரிய தீர்வை எட்டுவதற்கு இதுவே பொருத்தமான களமாக அமையும்.

அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து அரச தரப்புக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என நிபுணர்கள் குழுவினால், எமது சட்டத்தரணிகள் குழாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமே குழப்பமாகவும், அரசுக்குள் முரண்பாடும் உருவாகியுள்ளது. இந்நிலையில் எப்படி நாம் யோசனைகளை முன்வைப்பது. இது கண்துடைப்பு நாடகமாகும்.

தேர்தலை நடத்தினால் அரசுக்கு தோல்வி உறுதி. எனவே, புதிய அரசியலமைப்பை காரணம்காட்டி தேர்தலை இழுத்தடிப்பதே அரசின் நோக்கம். ” -என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

வலி சுமந்த எபோஸ்லி வீதி: தீர்வு எப்போது?

0
மலைவாஞ்சான் ஹட்டன் டிக்கோயா பிரதான பாதையினை இணைக்கும் எபோஸ்லி வீதி, தற்போதைய மழைக்காலங்களில் கால்வாய்போல் மாறி வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். ஹட்டன் - எபோஸ்லி பிரதான வீதியில் அமைந்துள்ள பன்மூர் பகுதியில், சுமார்...

முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி நேரில் வாழ்த்து

0
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன்...

தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய மேம்பாட்டுக்காக பழைய மாணவர்களின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி

0
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட க/ கம்/ தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்தின் (K/GP/Dolosbage Tamil Vidyalayam) உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட்...