Home Blog Page 3594

‘சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்பிப்பு’ – இந்தியா உதவி!

சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்தி மொழியை கற்று கொடுப்பதற்கு சகல வளங்களும் பெற்று கொடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கும் ஹிந்தி மொழியினை கற்று கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்று கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான சகல வளங்களும் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளதுடன். தேவையான புத்தகங்களை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

‘கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு தொழிலாளர் தேசிய சங்கம் முழு ஆதரவு

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு தொழிலாளர் தேசிய சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் பணிப்பில் சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு,

“இலங்கையில் சுமார் 250ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொழிலாளர் தேசிய சங்கம் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறது. இந்த தாக்குதலில் மலையகத்தைச் சேர்ந்த உறவுகளும் பலியாகினர். தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முழுமையாக ஈடுசெய்யப்படவில்லை.

விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என பல தரப்பினரும் அறிவித்துள்ளனர். எமது நிலைப்பாடும் அதுவே. இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள கருப்பு ஞாயிறு அறிவிப்பை நியாயமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தொழிலாளர் தேசிய சங்கம் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்.”   – என்றார்.

கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 493 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.

தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் ஒத்திவைப்பு

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் இன்று (05.03.2021) நகர சபையில் நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் மூன்று பேர் மாத்திரம் வருகை தந்தமையினால் மீண்டும் தலைவர் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 05 திகதி நடத்துவதற்கு பிற்போடப்பட்டதாகவும் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்காகவே இன்று (05.03.2021) இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் லெச்சுமணன் பாரதிதாசன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பாக கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவர் தலைவர் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்கள் விட்டுக்கொடுத்தோம். அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையினை காட்ட முடியாது போனதன் காரணமாக நாங்கள் தோல்வியடைந்தோம். அதனால் சுயேட்சையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோக சேபால தலைவர் பதவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிலையில் அவர் முறைகேடு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின் உப தலைவராக இருந்த நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் மூன்று மாதத்தின் பின் உள்ளுராட்சி சட்டத்தின் படி மீண்டும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் இந்நிலையில் தான் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்தவருக்கு பெரும்பான்மையிருப்பதாகவும் அதனால் அவர் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதனை தொடர்ந்து, அவருக்கு பெரும்பான்மையிருந்தால் அவர் தெரிவு செய்யப்படட்டும் என நான் இன்று இந்த வாக்கெடுப்புக்கு செல்வில்லை. இதை எனக்கு ஆதரவான 09 பேரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததனால் மீண்டும் இந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஆகவே நான் அடுத்த வாக்கெடுப்பில் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் தலவாக்கலை லிந்துல நகர சபையின் தலைவராவேன்.” -என்றார்.

மனித இறைச்சி சமைத்து விற்பனை செய்த பெண் கைது!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரிய, இதற்கு முக்கிய காரணங்கள் வறட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும்.இந்தநிலையில், அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, திடீரென பொலிஸார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.

2015 ஆம் ஆண்டு இதே அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

31 பேருக்கு கொரோனா – பதுளை வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவு மூடப்பட்டது

பதுளை மாவட்ட பிரதான வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவு இன்று தொடக்கம் (05-03-2021) காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் புற்று நோயியல் பிரிவில் வைத்தியர் ஒருவரும் 30 நோயாளர்களுமாக 31 பேருக்கு, இன்று 05-03-2021 கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறினார்.

கடந்த 3 ஆம் திகதி இம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கைகள் 05-03-2021ல் வெளிவந்த போதே, இவ் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் தாதிகள் இருவருக்கும் பணியாளர்கள் அறுவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகிருப்பமையும் தெரிய வந்துள்ளது. இவர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை ஏற்கனவே ஏற்றியிருந்தவர்களென்றும் தெரிய வருகின்றது.

கோவிட் 19 தொற்றாளர்கள் மொத்தம் 39 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பமையினால், மருத்துவமனையின் புற்று நோயியல் பிரிவு கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 60 நோயாளர்கள் பணியாளர்கள் 9 பேர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

ஹட்டனில் தேயிலை தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு! பலகோணங்களில் விசாரணை!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து விட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 55 – 60 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வெள்ளை சாரமும், மெருன் நிற ஷேட்டும் அணிந்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

பஸிலுக்காக அதிரடியாக களமிறங்குவாரா மங்கள?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது எனவும், தெற்கு அரசியலில் இது திடீர் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் தகவல்கள் வெளியானதால் கடந்தவாரம் இவ்விவகாரமும் பேசுபொருளாக மாறியது.

நாடாளுமன்ற அரசியலுக்கு ‘குட்பாய்’ கூறினாலும் செயற்பாட்டு அரசியலுக்கு மங்கள சமரவீர இன்னும் விடைகொடுக்கவில்லை. பலமானதொரு சிவில் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். எந்நேரத்தில் வேண்டுமானாலும் மங்கள அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் என்பதால் அவர்மீதான கழுகுப்பார்வைகள் தொடரவும் செய்கின்றன.

மறுபுறத்தில் பஸில் ராஜபக்சவும் திரைமறைவில் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றார். ஆளுங்கூட்டணியிலுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பஸிலை வெளிப்படையாகவே விமர்சித்துவருவதுடன், அவர்களின் கட்சி சார்ந்த பிக்குகளும் சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.இதனால் கடுப்பில் இருக்கும் பஸில், பங்காளிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு மொட்டு கட்சியிலுள்ள உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துபோட்டுவருகிறார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தெற்கு அரசியலில் இரு முக்கிய புள்ளிகளாக கருதப்படும் பஸிலும், மங்களவும் சந்திப்பில் ஈடுபட்டமைதான் பலருக்கு தலையிடியாக மாறியது.உண்மையாலுமே அவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றதா, இது பற்றி நாம் சுழியோடினோம்.

கொழும்பிலுள்ள சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மங்கள பங்கேற்றிருந்தார்.இந்நிகழ்வுக்கு பஸில் ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். இதன்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர் எனவும், ஓரிரு நிமிடங்களே இருவரும் உரையாடினர் எனவும் அறியமுடிந்தது.

எதுஎப்படி இருந்தாலும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இருவரும் பெயர் போனவர்கள்.  இருவரையும் சில பிக்குகள் வெறுக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே, எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலையொன்று வரும்பட்சத்தில் இருவரும் சங்கமித்து செயற்படுவதற்கான சாத்தியமும் இல்லாமல் இல்லை.

அரசின் மற்றுமொரு தீர்மானத்துக்கு சுதந்திரக்கட்சி போர்க்கொடி!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை (WCT) வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

” துறைமுகம், விமான நிலையம் ஆகியன தேசிய வளங்களாகும். அவற்றை வெளியாருக்கு வழங்குவதனை ஏற்கமுடியாது.” – என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் பங்களிப்புடன், இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அரச – தனியார் வர்த்தகமாக துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு தேசியவாத அமைப்புகளும், சில தொழிற்சங்கங்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே 14 எம்.பிக்களைக்கொண்ட பிரதான பங்காளியான சுதந்திரக்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.

அதேவேளை, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததால் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. இந்நிலையிலேயே மேற்கு முனையத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலையில் கோர விபத்து – 78 வயது முதியவர் பலி!

கொட்டகலை நகரில் நேற்றிரவு (04) இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபர்மீது,  லொறி மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கொட்டகலை வூட்டன் பகுதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி ராஜலிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் திசையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறியொன்று, கொட்டகலை வூட்டன் பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் லொறியை பின் தொடர்ந்துள்ளனர்.

இதன்போது, குறித்த லொறியை பத்தனை சந்திப்பில் நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், லொறியின் சாரதி, லொறியை மீண்டும் அட்டன் நோக்கி செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், லொறியின் சாரதி, லொறியை கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் விட்டு,விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்த விபத்து, கொட்டகலை நகரின் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த லொறியை, சில தரப்பினர் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி, திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் பின்னர் சரணடைந்துள்ளதுடன், அவரை இன்றைய தினம் (05.03.2021) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

வலி சுமந்த எபோஸ்லி வீதி: தீர்வு எப்போது?

0
மலைவாஞ்சான் ஹட்டன் டிக்கோயா பிரதான பாதையினை இணைக்கும் எபோஸ்லி வீதி, தற்போதைய மழைக்காலங்களில் கால்வாய்போல் மாறி வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். ஹட்டன் - எபோஸ்லி பிரதான வீதியில் அமைந்துள்ள பன்மூர் பகுதியில், சுமார்...

முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி நேரில் வாழ்த்து

0
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன்...

தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய மேம்பாட்டுக்காக பழைய மாணவர்களின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி

0
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட க/ கம்/ தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்தின் (K/GP/Dolosbage Tamil Vidyalayam) உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட்...