Home Blog Page 3648

கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு!

நாட்டில் நேற்று மாத்திரம் 859 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த ஒத்துழைக்கும் ஹேலிஸ் ஃபெப்ரிக்

உலக வெப்பமயமாதலை 1.5°Cக்கு கட்டுப்படுத்த உலகளாவிய SBT திட்டத்திற்காக ஒத்துழைக்கும் ஹேலிஸ் ஃபெப்ரிக்

ஜவுளி உற்பத்தியில் முன்னோடி நிறுவனமான ஹேலிஸ் ஃபெப்ரிக் பி.எல்.சி. நிறுவனம், பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases) மாசை குறைத்தல் மற்றும் உலக வெப்பமயமாதலை 1.50C செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய SBT நிகழ்ச்சிக்கு (STi) அர்ப்பணிக்கப்பட்ட உலகில் பிரதான நிறுவனங்களுக்குள் தமது பெயரையும் இணைத்த இலங்கையின் முதலாவது ஜவுளி உற்பத்தி நிறுவனம் மட்டுமன்றி நாட்டின் நான்காவது உள்நாட்டு தயாரிப்பு நிறுவனமாக இடம்பிடித்துள்ளது.

SBTi எனும் CDP Worldwide, World Resources Institute (WRI), உலக இயற்கை பாதுகாப்பு நிதியம் (WWF) மற்றும் United Nations Global Compact (UNGC) இடையிலான புரிந்துணர்வின் விளைவாகும். இது ‘We Mean Business Coalition’s Take Action’ பெயரிலான காலநிலை மாற்றங்கள் தொடர்பான தளத்தின் ஒரு அங்கமாக நிறுவனத்தினால் தமது அர்ப்பணிப்பினை பெற்றுக் கொடுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க உலகளாவிய வேலைத்திட்டமாகும்.

அதுமட்டுமல்லாமல், பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளுக்கு அமைய உலக வெப்பமயமாதலை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக 1.50C செல்சியஸ் மற்றும் 20Cக்கும் குறைவான மட்டத்தில் வைத்துக் கொள்வதற்கு நிறுவனம் ஒன்று பசுமை இல்ல வாயு மாசுவை எந்தளவில் மற்றும் எவ்வளவு விரைவில் குறைக்க முடியும் என்பது தொடர்பில் SBTi தீர்மானிக்கும். அத்துடன் இது 2050ஆம் ஆண்டளவில் தூய பசுமை இல்ல வாயு மாசடைவதை 100%ஆல் குறைப்பதற்கு எடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகும்.

புத்தாக்கங்கள், கழிவுப் பொருட்களை குறைத்தல், செயல்திறன் அதிகரித்தல் மற்றும் ஒழுங்குமுறை அபாயங்கள், நிச்சயமற்ற தன்மை மற்றும் சக்தி செலவுகளுக்கான உறுதியற்ற தன்மையின் வெளிப்பாடுகளை குறைப்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தல் போன்றவற்றில் நிறுவனம் இந்த இலக்கை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கும். SBTi தொடர்பில் அர்ப்பணிப்பு செய்ய நிறுவனத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறந்த சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நடவடிக்கையை உறுதிசெய்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

“காபன் மாசை குறைத்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமாக உள்ளதுடன், மிகவும் கவனம் செலுத்த வேண்டியது காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது நிறுவனங்கள் அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை எடுப்பதாகும். SBTi தொடர்பில் எமது அர்ப்பணிப்புடன் காலநிலை மாசடைவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் உலகளாவிய போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் பரந்துள்ள முன்னணி அமைப்புக்களுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ள கிடைத்தமை குறித்து நாம் பெருமை அடைவதுடன், அடுத்த தசாப்தத்திற்குள் எமது பசுமை இல்ல வாயு மாசுவை குறைத்துக் கொண்டு பூஜ்ய நிலைமைக்கு கொண்டுவருவதே இந்த பிரபலமான உலகளாவிய வேலைத்திடத்தின் கீழ் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என ஹேலிஸ் ஃபெப்ரிக்கின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஹான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கிரிஸ்புரோ அனுசரணையில் பாடசாலை கபடி குழு

கந்தளாய் மஹவெலிபுரம் பாடசாலையின் கபடி குழுவிற்கு அனுசரணை கிரிஸ்புரோ

இலங்கையில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் தொடர்பில் சிறந்த கவனம் செலுத்தும் இந்த நாட்டிலுள்ள முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மஹாவெலிபுரம் வித்தியாலயத்தின் கபடி குழுவிற்கு அனுசரணை வழங்குவதன் மூலம் அணி ஒட்டுமொத்த இலங்கையை வெற்றிபாதைக்கு கொண்டுசெல்ல முடிந்துள்ளது.

நீண்டகாலமாக யுத்தம் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக கருதப்படும் கந்தளாய் பிரதேசம் வறுமையினால் பாதிக்கப்பட்டிருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் கிரிஸ்புரோ நிறுவனம் கந்தளாய் சூரியபுரம் கிராமத்தில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக நடவடிக்கை எடுத்ததுடன் கிராமத்திலுள்ள பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை வெளியே கொண்டுவருவதற்கு அனுசரணையும் வழங்கி வருகின்றது. விசேடமாக கிரிஸ்புரோவின் சிந்தனையின் படி கிராமிய பொருளாதாரம், சமூக மேம்பாடுகளின் கீழ் மஹவெலிபுரம் பாடசாலையின் கபடி குழுவிற்கு பல வருடங்களாக அநுசரணை வழங்குவதற்கு கிரிஸ்புரோ நடவடிக்கை எடுதத்துள்ளது. இந்த அனுசரணையினால் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த இலங்கை பாடசாலை மட்ட கபடி போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மஹாவெலிபுரம் இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததுடன் பாடசாலை மட்டத்திலிருந்துது தேசிய மட்டம் வரை பயணிப்பதற்கு மஹாவெலிபுரம் பாடசாலை கபடி குழு விளையாட்டு வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

கிரிஸ்புரோ அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த மஹாவெலிபுரம் பாடசாலையின் பிரதி அதிபர் எச்.எம். நவரத்ன, “கந்தளாய் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள மஹவெலிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோரில் அதிகமானோர் விவசாயத்தை நம்பியுள்ளதுடன் வருடத்தில் பெரும்பாலான நாட்களில் நிலவும் வரட்சியினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனினும் மிகவும் குறைந்த வசதிகளின் கீழ் பாரிய உறுதியுடன் விளையாட்டில் ஈடுபடும் மாணவ அணியொன்று எம்மிடம் உள்ளது. இவர்களது திறமைகளுக்கு கிரிஸ்புரோ நிறுவனம் மதிப்பளித்ததன் விளைவாக பாடசாலை கபடி அணிக்கு பூரண அனுசரணையை பெற்றுக்கொடுக்க கிரிஸ்புரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வருடம் அகில இலங்கை கபடி போட்டியில் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடிந்ததற்கு காரணம் கிரிஸ்புரோ நிறுவனத்தின் இந்த சிறந்த ஒத்துழைப்பே ஆகும்.” என தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஹாவெலி பாடசாலையின் விளையாட்டுகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் கலாநிதி மிலிந்த சம்பத் விக்ரமசிங்க, “கிரிஸ்புரோ நிறுவனத்தின் பூரண அனுசரணை கிடைத்ததுடன் கபடி அணிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், ஆடைகள், கிடைத்ததுடன் பயிற்சி அமர்வுகளுக்காக அனுசரணை, வீரர்களுக்கான உணவு மற்றும் போட்டிகளுக்கான போக்குவரத்து வசதிகள் போன்ற அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்குவதற்கு கிரிஸ்புரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிஸ்புரோ நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்த அனுசரணையின் கீழ் எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் கபடி வீரர்களுக்கு கைகொடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்குமென நான் நம்புகின்றேன்.” என தெரிவித்தார்.

“கிரிஸ்புரோ தாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள பிரதேச பொருளாதார மற்றும் சமூக கலாச்சார தேவைகளை மேம்படுத்துவதற்காக கடந்த நீண்டகாலமாக பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. விசேடமாக கிராமிய வறுமையை இல்லாதொழிப்பதற்கு மேலதிகமாக பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை வெளிகொண்டுவரும் வகையில் அவர்களை தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதற்காக பாரிய வேலைத் திட்டங்களை கிரிஸ்புரோவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிரிஸ்புரோ நெக்ஸ்ட் சேம்ப் திட்டத்தினை தற்போது இலங்கை ஒலிம்பிக் சங்கத்திடுன் இணைந்து நாட்லுள்ள விளையாட்டு வீரர்களை சர்வதேச வெற்றியை நோக்கி எடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்துள்ளது. கந்தளாய் மஹாவெலிபுரம் பாடசாலையின் கபடி வீரர்களுக்கான அனுசரணையை வழங்கும் கிரிஸ்புரோ நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையின் மற்றுமொரு பெறுமதியான சந்தர்ப்பமாக கருத முடியும்.” என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ் செலர் தெரிவித்தார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ளஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

லீனா இஸ்பைரோ நிறுவனத்தின் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் முன்னணி Metered-Dose இன்ஹேலர் தயாரிப்பு தொழிற்சாலையான லீனா இஸ்பைரோ தனியார் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஆரம்பம்

• முழுமையான ஒன்றிணைந்த முதலாவது உள்நாட்டு சுகாதார நிறுவனமான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா நிறுவனத்தின் இணை நிறுவனமாகும்

2021 ஜனவரி 25: பன்முகப்படுத்தப்பட்ட நிறுவன குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸின் ஹெல்த்கெயார் பிரிவான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா நிறுவனத்தின் (SHL) ஒன்றிணைந்த நிறுவனமான லீனா இஸ்பைரோ தனியார் நிறுவனம் (Lina Spiro (Pvt) Ltd), இலங்கையின் முதலாவது Metered-Dose இன்ஹேலர் (MDI) தயாரிப்பு தொழிற்சாலையை கடவத்தை பிரதேசத்தில் அமைத்து இன்று முதல் நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.

மருந்துப் பொருள் உற்பத்தி, விநியோகிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் இந்த தொழிற்சாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்விற்கு சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அக்மார் பிரதர்ஸ், தேசிய மருந்துப் பொருள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), அரச மருந்து தயாரிப்பு கூட்டுத்தாபனம் (SPMC) மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதி நவீன வசதிகளுடன் கூடிய இந்த தொழிற்சாலையில் தகுதிபெற்ற மற்றும் அனுபவம் உள்ள பல உத்தியோகத்தர்கள் அதில் கடமையாற்றுகின்றனர். சுவாசம் தொடர்பான தயாரிப்புக்கள் அடங்கிய வரிசைகள் இங்கு தயாரிக்கப்படுவதுடன் உலக சுகாதார அமைப்பின் GMP சான்றிதழுடன் இலங்கையில் ஒரேயொரு Metered-Dose இன்ஹேலர் (MDI) தயாரிக்கப்படும் தொழிற்சாலை இதுவாகும். பத்து வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் ஈடுபட்டுள்ள Lina Manufacturin Pvt Ltdஇன் புதிய மருந்து தொழிற்சாலையாக லீனா இஸ்பைரோ நிறுவனம் அமைந்துள்ளது.

Lina Manufacturin Pvt Ltd நிறுவனம் அரசாங்கத்திற்கும் மற்றும் தனியார் பிரிவிற்கும் பல்வேறு சுவாசம் தொடர்பான தயாரிப்புக்களை பெரிய அளவில் விநியோகிக்கும் வெற்றிகரமான உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பேடன்ட் சான்றிதழ் கொண்ட நிறுவனத்தின் சுவாசம் தொடர்பான இன்ஹேலர் கருவிகளுடன் நாட்டிற்கு தேவையான சுவாசம் தொடர்பான தயாரிப்புக்களை மேம்படுத்தும் முன்னோடிகளாக லீனா நிறுவனம் கருதப்படுவதுடன் மேலும் தயாரிப்புக்களை அறிமுகப்படுத்துவதற்காக ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2020 டிசெம்பர் மாதத்தில் சன்ஷைன் ஹோல்டிங்ஸினால் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா மற்றும் ஹெல்த்கார்ட் மருந்தகங்கள் வலைப்பின்னலுடன் கூடிய தமது ஹெல்த்கெயார் வர்த்தகம் மற்றும் அக்மார் ஹெல்த்கெயாரின் வர்த்தக பிரிவான அக்பார் ஃபாமசுடிகல்ஸ், Lina Manufacturing மற்றும் லீனா இஸ்பைரோவுடன் மூலோபாய ஒருங்கிணைப்பு குறித்து அறிவித்துள்ளது.

இந்த ஒருங்கிணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தயாரிப்புக்களை உற்பத்தி செய்வதில் இருந்து நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் இறுதி விநியோகிப்பு வரையான ஐந்து பிரிவுகளினால் உள்ளடக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சுகாதார சேவை நிறுவனமாக சன்ஷைன் ஹெல்த்கெயார் திகழ்கின்றது. அதன்படி ஆய்வுகள் மற்றும் மேம்பாடு (R&D), தயாரிப்பு, நிவனம், விநியோகித்தல் மற்றும் வாடிக்கiயாளர் போன்ற சுகாதார சேவை வழங்கும் வலைப்பின்னல் தொடர்பாக தேவையான அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி நிறுவனமாக தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷாம் சதாசிவம், ‘ஆரம்பத்திலிருந்து இறுதிவரையான அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய இலங்கையின் முதலாவது சுகாதார சேவை நிறுவனமாக சன்ஷைன் ஹெல்த்கெயார் இடம்பிடித்துள்ளமை உண்மையிலேயே முக்கியமான திருப்பு முனையாகும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு இசைவாக எமது புதிய தயாரிப்புத் திறன்களை திட்டமிடுவதற்கு உதவியாக அமையுமென நாம் நம்புகின்றோம். அதனூடாக நாட்டிலுள்ள திறமையான இளம் குழுவினருக்கு நிபுணத்துவம் கொண்ட தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான பலமான தளமொன்றை உருவாகுவதுடன் நாட்டின் மருந்து இறக்குமதியை குறைப்பதற்கும் முயற்சிக்கப்படும்.’ என தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்கும் மருந்துத் துறை தொடர்பில் முதலீடு செய்வதற்கு துறையிலுள்ள இரு முன்னணி நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இந்த ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் மருந்து தயாரிப்பு அலகும் முன்னோக்கிச் செல்லும். மேலும் அவர்களது வர்த்தக சக்தியை ஒன்று திறட்டுவதனால் ஒருங்கிணைந்த இந்த ஹெலத்கெயார் வியாபாரத்திற்கு மேலும் தயாரிப்பு அலகினை மேம்படுத்துவது போன்றே தற்போதுள்ள மற்றும் புதிய மருந்து கலவை மேம்பாட்டுக்கும் மற்றும் தயாரிப்பின் அளவை அதிகரிப்பதற்கும் பிராந்திய மருந்து நிறுவனங்களுக்கும் இடையில் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வதற்கு தூண்டப்படுதல், அதேபோன்று ஜனாதிபதியின் ‘நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய எண்ணம்’ எனும் தேசிய மருந்து தயாரிப்பின் ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டும்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. தொடர்பாக:

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத்துறைகளில் – குறிப்காக சுகாதார மற்றும் நுகர்வோர் துறைகளில், விவசாய வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் மூலோபாய முதலீடுகளுடன் மதிப்பை உருவாக்குவதன் மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்ப’ பங்களிக்கும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.

2,300க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட குழுமம் என்பதுடன் 21 பில்லியன் ரூபா வருவாயைக் கொண்டுள்ளது. சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா, இலங்கை வட்டவலைத் தேயிலை, டெய்ன்டீ இனிப்பு வகைகள், ஹெல்த்கார்ட் ஃபமசி, சன்ஷைன் எனர்ஜி மற்றும் வட்டவல பிளான்டேஷன் பி.எல்.சி. ஆகியவற்றை உள்ளடக்கியது, அவை அந்தந்த துறைகளில் முன்னணி நிறுவனங்களாக உள்ளன, 2020இல் ‘தொழில்புரிவதற்கு சிறந்த நிறுவனங்கள்’ என்ற சான்றிதழை அதிலுள்ள பல நிறுவனங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சன்ஷைன் அறக்கட்டளை சமுதாயத்திற்கு திருப்பித் தரும் குழுவின் சிந்தனையை உறுதிப்படுத்துகிறது, வசதி குறைந்த சமூகங்களுக்கு தூய்மையான நீர் வழங்களுக்கான பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளது மற்றும் கொவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் அரச மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து உபகரணங்கள் மற்றும் உட்கட்டப்பு வசதிகளையும் வழங்கியுள்ளது.

கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை மீறிய ரமேஸ்வரன் எம். பி. மீது நடவடிக்கை : கந்தப்பளை தோட்ட கம்பனி

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறையை தோட்ட உரிமையாளர்கள் மறுப்பு, குற்றவாளிகள் மீது விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவிப்பு

(கந்தப்பளை பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தோட்டக் கம்பனிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களுக்கு எழுத்துமூலம் வழங்கியுள்ள பதில்களும், அவர் தரப்பு கருத்துக்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.)

  • வன்முறையை தூண்டியதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரன் மீது பொலிஸில் முறைப்பாடு.
  • கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பயிலுனர் உதவி கண்காணி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
  • சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு பக்கசார்பற்ற விசாரணைகளும் மற்றும் இழப்பீடுகளும் கோரப்பட்டுள்ளன.
  • கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2021 ஜனவரி மாதம் 17ஆம் திகதி கந்தப்பளையிலுள்ள பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து ஒட்டுமொத்த 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மற்றும் தோட்ட துரைமார் சங்கம் ஆகியன இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வன்முறைச் சம்பவத்தைத் தூண்டிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வன்முறைத் தாக்குதலுக்கு இலக்கான குறித்த தோட்டத்தின் பயிலுநர் உதவி கண்காணி தொடர்ந்து நுவரெலிய தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு இலக்கானவர் அதிகாரி பலத்த காயமடைந்துள்ளதாகவும் இதனால் அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு பஸ்களில் பெருமளவிலான கும்பலை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட அதிகாரி வசித்த வீடு பெரும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அதனை விசாரணை செய்து நட்டஈட்டை அளவிடுவதற்கும் தோட்ட துரைமார் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது – சேதப்படுத்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் வரலாற்று மதிப்புள்ள சொத்துக்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மற்றும் வெட்கக் கேடானது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த சட்டவிரோதமான செயலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் முகமாக நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கோரவுள்ளோம். இதன்மூலம் சட்டத்தை நிலைநாட்ட எதிர்பார்த்துள்ளோம்.” என தோட்ட துரைமார் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், தோட்ட கண்காணிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2021 ஜனவரி 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் 5.30 மணியளவில் உடனடி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட கண்காணி தனது மாமனாரின் புற்றுநோய்க்கான மருத்துகளை வாங்குவதற்காக வாகனத்தில் கண்டிக்கு செல்லவிருந்தமையினால் அமைதியாகவும் மற்றும் பணிவுடனும் மாற்றுத் திகதியொன்றை வழங்கியுள்ளார்.

அதனால் அதிருப்தி அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், தொலைபேசியின் ஊடாக தகாத வார்த்தைகளால் கண்காணியை திட்டியுள்ளார். அதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் தோட்டத் தொழிலாளர்களிடம் கண்காணியின் மனைவியின் தொலைபேசி இலக்கத்தைக் கோரி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு பல சாட்சிகள் உள்ளன.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், பிரதேச சபைத் தலைவர் யோகராஜ் உடன் இணைந்து, ஒரு கும்பலைக் கூட்டி அவர்களை வன்முறைக்கு தூண்டுவதற்காக அந்தப் பகுதிக்கு வெளியே இருந்து இரண்டு பஸ்களில் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். மாலை 5.30 அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் மற்றும் யோகராஜ் ஆகியோர் அத்துமீறி சட்டவிரோதமாக கும்பலுடன் பங்களா வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அந்த நேரத்தில் பங்களா வளாகத்திலிருந்த இளம் பயிற்சி உதவி கண்காணி, திடீரென நுழைந்த கும்பலைக் கண்டு பதற்றமடைந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனும் அவரது ஆதரவாளர்களும் யாரையும் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது அதைவிட்டு வெளியே செல்லவோ அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக வளாகத்திற்குள்ளேயே தடுத்து வைத்ததுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு செல்லவிடாது சுமார் 5 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைத்தனர்.

அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, பயிலுனர் உதவி கண்காணி இறுதியாக பலத்த பாதுகாப்புடன் வளாகத்திலிருந்து வெளியே உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு நுவரெலியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் தலைமையிலான கும்பலின் பலத்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கண்காணிக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அவர் சுவாசக் கோளாறு மற்றும் சில காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனும் அவரது கும்பலும் பங்களா வளாகத்தில் 24 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு டயர்களை எரித்துள்ளனர், கட்டடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர், மற்றும் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களையும், நிறுவனத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தில் தொழில்புரிபவர்களையும் கட்டாய வேலை நிறுத்தம் செய்ய வைத்துள்ளனர் – இதனால் ஊழியர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதோடு நிறுவனத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

“தோட்ட சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தோட்டங்களை நிர்வகிப்பதன் மூலம் தொழில்துறையையும் எமது தேசிய பொருளாதாரத்தையும் மிதக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மேற்கொண்டுவரும் இந்த வேளையில், இவ்வாறான மூர்க்கத்தனமான வன்முறைகளால் எங்களது முயற்சிகள் செயலிழந்துள்ளதுடன் மற்றும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்பை அடைவார்கள்.

“இது நிதி ரீதியாக உண்மை, ஆனால் உலகளாவிய தொற்றுநோயின் பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினரின் முன்யோசனையில்லாத நடவடிக்கைகளால் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சமூகங்களில் கொவிட் தொற்றுநோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆபத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனின் நடத்தை அவர்களின் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த செயற்பாடானது முற்றிலும் சட்டத்திற்கு முரணானதும், மன்னிக்க முடியாத ஒரு செயலாகும். அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் அவரை சட்டத்தின் முன் நிறுத்த எவ்வித தடையும் இருக்காது என நாங்கள் நம்புகின்றோம்.” என தோட்ட துரைமார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மாத்திரம் 859 பேருக்கு கொரோனா – 62 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 465 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.  இன்று மாத்திரம் இதுவரை 859 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 58 ஆயிரத்து 489 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கம்பனிகளின் கொட்டத்தை அடக்க ஒன்றிணைவோம்! அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இ.தொ.கா. அழைப்பு!!

கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்கமுடியாது. அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கம்பனிகளுக்கு பலத்தைக்காட்டுவோம் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.

” இன்றைய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தென்பட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலத்தை 4 வருடங்களாக்க வேண்டும் என கம்பனிகள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்து பறிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டது. இவற்றை ஏற்கமுடியாது.

எனவே, சம்பள நிர்ணயச் சபை சம்பளத்தை நிர்ணயிக்கட்டும் என அறிவித்தோம். 6 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு சம்பள நிர்ணயச்சபை கூடவுள்ளது.

மக்கள் ஒற்றுமையாக இல்லை என நினைத்தே கம்பனிகள் ஆடுகின்றன. எதிர்தரப்பையும் இணைத்து இது விடயத்தில் பலத்தைக்காட்டி, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.” – என்றார்.

25 ரூபாவையே சம்பள உயர்வாக வழங்க முடியும் – கம்பனிகள் திட்டவட்டம்!

தமக்கான அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அடிப்படை சம்பளத்தை 25 ரூபாவால் மட்டுமே அதிகரிக்க முடியும் என பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பான யோசனையை இன்று தொழில் அமைச்சரிடமும் முன்வைத்துள்ளன.

தொழில் அமைச்சருக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அடிப்படைச் சம்பளமாக 725 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 125 ரூபாவும், வரவுக் கொடுப்பனவாக 100 ரூபாவும், விலை சகாயப்படி கொடுப்பனவாக 50 ரூபாவும் உள்ளடங்களாக ஆயிரத்து 8 ரூபாவை வழங்கும் யோசனையை கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும், குறித்த சந்திப்பில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது நாளாந்த அடிப்படை சம்பளமாக 700 ரூபாவை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ரூபாவையே சம்பள உயர்வாக வழங்க முடியும் – கம்பனிகள் திட்வட்டம்!

தமக்கான அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அடிப்படை சம்பளத்தை 25 ரூபாவால் மட்டுமே அதிகரிக்க முடியும் என பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பான யோசனையை இன்று தொழில் அமைச்சரிடமும் முன்வைத்துள்ளன.

தொழில் அமைச்சருக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது அடிப்படைச் சம்பளமாக 725 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 125 ரூபாவும், வரவுக் கொடுப்பனவாக 100 ரூபாவும், விலை சகாயப்படி கொடுப்பனவாக 50 ரூபாவும் உள்ளடங்களாக ஆயிரத்து 8 ரூபாவை வழங்கும் யோசனையை கம்பனிகள் முன்வைத்துள்ளன.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது நாளாந்த அடிப்படை சம்பளமாக 700 ரூபாவை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மலையகத்தில் வீடு கட்ட இந்த ஆட்சியில் இன்னும் ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை’

தோட்ட தனி வீட்டு திட்டங்களுக்காக, இந்த ஆட்சியில் கடந்த ஒரு வருடத்தில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர் மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கை, இந்திய அரசுகளின் உதவிகளை போராடி, கேட்டு, ஒப்பந்தம் செய்து, பெற்று, மலைநாட்டு தோட்டங்களில் தனி வீடுகள் கட்டி, அந்த வீட்டு குடியிருப்புகளை மலையகத்தில் தமிழ் பெயர்களில் புதிய மலையக தமிழ் கிராமங்களாக அடையாளப்படுத்தும் மலையக வரலாற்றின் எழுச்சி பயணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கே வருடங்களில் படிபடியாக ஆரம்பித்து முன்னெடுத்தது.

நாம் விட்ட இடத்திலிருந்து, எமது பணியை தொடர வேண்டிய இந்த அரசாங்கம், தோட்ட தனி வீட்டு திட்டங்களுக்காக, கடந்த ஒரு வருடம், இரண்டு மாத காலத்தில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

வெறும் வாய் சவடால்களும், வெற்று அறிக்கைகளும், கனவு திட்ட அறிவிப்புகளும், எவருக்கும் விளங்காத அமைச்சரவை முடிவுகளும் என சும்மா காலத்தை இந்த அரசாங்க கும்பல் ஓட்டுகிறது. இதுதான் மலைநாட்டில் இன்றைய கசப்பான உண்மை. மனசாட்சி உள்ள எவருக்கும் இது விளங்க வேண்டும்

மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக, இலங்கை, இந்திய அரசுகளின் தனி வீட்டு திட்டங்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வந்தது. நாம் 2015ல் ஆட்சியை பொறுப்பேற்ற போது, யார் அஸ்திவாரம் போடுவது, யார் சீமெந்து வாங்குவது, யார் வீட்டை கட்டுவது, யார் வர்ணம் பூசுவது என்ற இழுபறிகள் காரணமாகவும், சொந்த நிலம் இருந்தால்தான் உதவி திட்டம் அமுலாகும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு காரணமாகவும், இவற்றை அரசுக்கு உள்ளே எடுத்து பேசி, தீர்வு காண ஆளில்லாத காரணத்தாலும், இந்திய வீட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

சொந்த நிலம் தொடர்பில் அமைச்சரவை அனுமதியை போராடி பெற்றதன் மூலம் இந்த திட்டம் தேசிய அங்கீகாரத்தை பெற்று, புதிய மலைநாட்டு கிராமங்கள் அமைச்சுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இந்திய தனி வீட்டு உதவி திட்டம் கோலாகலமாக ஆரம்பமானது. இதற்காக “புதிய மலைநாட்டு கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு” என்ற பெயரில் தனி அமைச்சையே நாம் உருவாக்கினோம்.

அதையடுத்து, எமது அழைப்பை ஏற்று இந்திய பிரதமர், மலையகத்துக்கு வருகை தந்த போது, கூட்டணியின் கோரிக்கையின்படி, மேலும் பத்தாயிரம் தனி வீடுகள் கட்டப்படுவதற்கான அறிவித்தல் பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்பட்டது.

கணிசமான தனி வீடுகள் கட்டப்பட்டன. இன்னமும் கணிசமான தனி வீடுகள் கட்டப்பட உள்ளன. தனி வீடுகள், மலைநாட்டில் தமிழ் பெயர்களில் கிராமங்கள் என்ற நீண்ட வரலாற்று பயணத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆரம்பித்து வைத்தது.

இவையனைத்தும் ஆக, நான்கே ஆண்டுகளில் நடைபெற்றவை. இவற்றை தவிர கூட்டணியின் சாதனை பட்டியலில் இன்னமும் நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை நான் பிறகு கூறுகிறேன்.

2019ல் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய ஆட்சியில், கடந்த ஒரு வருடம், இரண்டு மாத காலத்தில், மலைநாட்டில் வீடு கட்ட ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதுதான் மலைநாட்டில் இன்றைய கசப்பான உண்மை. மனசாட்சி உள்ள எவருக்கும் இது விளங்க வேண்டும்.

வெறும் வாய் சவடால்களும், வெற்று அறிக்கைகளும், கனவு திட்ட அறிவிப்புகளும், எவருக்கும் விளங்காத அமைச்சரவை முடிவுகளும் என சும்மா காலத்தை இந்த அரசாங்க கும்பல் ஓட்டுகிறது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

200 MM மழை வீழ்ச்சி!

0
மேல், சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று 200 மி.மீ. இற்கும் அதிகமான மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

வடக்கின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியாவின் உதவி தொடரும்!

0
வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பு இன்று (13.05.2026)...

சீனா பறந்தார் டர்ம்ப்: முடிவுக்கு வருமா வர்த்தகப் போர்?

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இன்று (13) பீஜிங் நோக்கி பயணமானார். என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang உள்ளிட்ட முக்கியத்...