Home Blog Page 3649

‘கொரோனா’வில் இருந்து 55,398 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 963 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து891 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 297  பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 61 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளிட்ட வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 2 ஆயிரத்து 300 கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக அதனை இன்று பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கோவிட்-19 தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

அந்த தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனோவின் கருத்து பிற்போக்குத் தனமானது – செந்தில் தொண்டமான் பதிலடி

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்ற கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரி பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்க வாக்குறுதியின்படி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை :

” நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவை அனைத்து நிறைவேற்றப்படவில்லை. அப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியேறியதா என்பதைக் கேட்கவிரும்புகிறேன். தற்போது ஆயிரம் ரூபாவைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பெரும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தில் தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே அங்கம் வகிக்கிறது. இதன்போது மக்களன் குறைகளையும், தேவைகளையும் அரசாங்கத்திடம் நேடியாக எடுத்துச் சென்று அவற்றைப் பூர்த்தி செய்யும் பொறுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை அரசாங்கத்தை விட்டு வெளியேறச் சொல்வது பொறுப்பான அரசியல்வாதி கூறும் பதிலாக இருக்காது. எதிர்க்கட்சியில் இருப்பதைவிட ஆளும் கட்சியில் இருந்தால் மட்டுமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை நீண்ட அரசியல் அனுபவம் உள்ள கௌரவ மனோ கணேசனுக்கு புரியும்.

தற்போதைய அரசாங்கம் ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூற முடியாது. அமைச்சரவையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சம்பள நிர்ணய சபைக்கு இதனை எடுத்துச் செல்ல அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் அமைச்சருடன் 20இற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கவில்லை எனில், முற்போக்குக் கூட்டணித் தலைவர் கௌரவ மனோ கணேசனின் கருத்து குறித்து சிந்திக்கக் கூடியதாக இருக்கும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் பட்சத்தில் நாளை தங்களால் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க மாற்று வழி இருக்குமாயின் அதனை முன்வைக்க வேண்டும்.

ஆளும் கட்சியில் இருந்து இதனை செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சியில் இருந்து எதனையும் செய்துவிட முடியாது. எனவே, ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க பக்க பலமாக இருக்க வேண்டுமே தவிர அதனைப் பலவீனப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. ‘ என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவருமான செந்தல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைமைத்துவத்தை உருவாக்க எல்லே குணவங்ச தேரர் களத்தில்

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. 69 லட்சம் பேர் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்படக்கூடிய தேசிய தலைமைத்துவம் நாட்டில் இல்லை – என்று தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதுவரை தான் அரசியல் மேடை ஏறியதில்லை எனவும், எதிர்காலத்தில் ஏறவேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் எல்லே குணவங்ச தேரர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தேசிய தலைமைத்துவம் என்பது இல்லை. அரசியல் தலைமைத்துவமே இருக்கின்றது. இதனால் அரசியல் இலக்குகளை மட்டும் நோக்கிய பயணம் அமைந்துள்ளது. நாடு குறித்தோ மக்கள் தொடர்பிலோ சிந்திக்கப்படுவது இல்லை. தலைவர்களை உருவாக்க முடியாது. அவர்கள் உருவாக வேண்டும்.

நாடுதான் எமக்குள்ள மிகப்பெரிய சொத்து, எமது முதாதையர்கள் எமக்கு வழங்கிய மிகப்பெரிய சொத்து அது. எனவே, வாடகைக்காரர்கள்போல் அல்லாமல், இது எமது நாடு, எமது சொத்து என நினைத்து நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் போராடுவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய வகையில் அமைத்த குழுவில் நானும் இருக்கின்றேன். ஆனால் ஒரு தடவை மாத்திரமே அக்கூட்டத்தில் பங்கேற்றேன். அதன்பிறகு அங்கு செல்லவில்லை. எதிர்ப்பார்த்தப்படி நகர்வுகள் அமையவில்லை என்ற வேதனையே இதற்கு காரணம்.

நாம் கட்டிய தோரணம் இது (நாம் உருவாக்கிய அரசு) . அப்படி இருந்தும் எமக்கு தெரியாமல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொருத்தமற்ற விதத்தில் கட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. 69 லட்சம் பேர் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படவேண்டும். அதற்காக எமது போராட்டம் தொடரும்.

தேசிய தலைமைத்துவம் உருவாக்கப்படவேண்டும். அதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். இதுவரை நான் அரசியல் மேடை ஏறியதல்லை. தேசிய தளத்தில் இருந்தே நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். எனவே, எதிர்காலத்தில் அரசியல் மேடை ஏறுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன். கொழும்பு துறைமுகத்தின் ஒருவீதமேனும் எவருக்கும் விற்பனை செய்யப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. ” – என்றார்.

ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் 189 ஆவது நினைவு தினம் நாளை

கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் (கண்ணூசாமி நாயக்கர்) 189 ஆவது குரு பூஜை விழா நாளை 30ஆம் திகதி சனிக்கிழமை தமிழகத்தின் வேலூர் நகரில், புதுப் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கண்டி மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கண்டி மன்னரின் வாரிசுகளில் ஒருவரான வி.அசோக்ராஜாவினால் வருடந்தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு இந்த வருடமும் வெகுவிமர்சையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கண்டி மன்னரின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்த்தி வைக்கப்பட்டிருக்கும் மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு மாலை 4 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

மேலும் இதன் போது மன்னரின் வாரிசுகளில் ஒருவரான வி. அசோக்ராஜா வேலூர் புதுப் பேரூந்து நிலையத்துக்கு அருகிலிருக்கும் செல்லியம்மன் ஆலயத்திலிருந்து குதிரையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக முத்து மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்னரே மன்னருக்கான பூஜைகள் ஆரம்பமாகும்.

கள்ளத் தொடர்பு – மனைவியை கொலைசெய்த கணவன்! கினிகத்தேனயில் பயங்கரம்!!

ஹட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுக்கு மற்றுமொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அடிப்படையாக வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மாலையே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மறுநாள் 27 ஆம் திகதி மாலை குறித்த பெண்ணின் கணவர், தாமாகவே முன்வந்து பொலிஸில் சரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஸ்தல விசாரணையை மேற்கொண்டனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன்

5 மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் படத்தில் சுருதிஹாசன்

நடிகர் பிரபாஸ் அடுத்து நடிக்கும் 5 மொழிகளில் தயாராகும் சலார் என்ற படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

பாகுபலி படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ் அடுத்து 5 மொழிகளில் தயாராகும் சலார் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் தயாராகி பல மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமானவர்.

தெலுங்கில் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாராகும் சலார் படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதில் கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை திஷா பதானியிடம் பேசி வந்தனர். கால்ஷீட் இல்லாததால் அவரால் நடிக்க முடியவில்லை.

எனவே அவருக்கு பதிலாக நடிப்பது யார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது சுருதிஹாசனை தேர்வு செய்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். சலார் படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் ஜான் அபிரகாமை பரிசீலித்தனர்.

தற்போது அவருக்கு பதிலாக மாஸ்டர் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய்சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 565 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 139 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில்   ஆயிரத்து 454 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

1000 ரூபா விடயத்தில் அரசு தோல்வி – உதயா குற்றச்சாட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தோல்விகண்டுவிட்டது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

” நாட்டில் எல்லா விடயங்களிலும் தோல்விகளை சந்தித்துவரும் அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்திலும் தோல்வி கண்டுள்ளது. எனினும், தோல்வியை ஏற்காமல் , சமாளிப்பு பாணியில் காலத்தை கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அமைச்சரவை தீர்மானம், பேச்சுவார்ததை எல்லாம் இதன் ஓர் அங்கம்தான். தீர்மானம் எடுக்கலாம். ஆனால் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமாகவே இருக்கின்றது.” – என்றும் அவர் கூறினார்.

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? பேராசிரியர் விஜயசந்திரன் விளக்கம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வானது பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தற்போதைய சம்பள பிரச்சினையை முடிவு காண முடியும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தினை அடிப்படையாக கொண்டு ஒரு கட்டளையை பிறப்பித்து அதன் ஊடாக இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

புதன்கிழமை பிற்பகல் ஹற்றன் மலையக மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

ரூபா. 1000 சம்பளம் என்பது எவ்வித கழிப்பீடுகளும் இன்றி முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மலையக மக்கள் முன்னணியினதும் மலையக தொழிலாளர் முன்னணியினதும் நிலைப்பாடாகும்.

மேலும் தோட்ட தொழிலார்களின் சுகாதாரம், பாதுகாப்பு, சமூக நலன் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சம்பள விடயத்தை மட்டும் மையப்படுத்திக் கொண்டு கூட்டு ஒப்பந்தந்தில் உள்ள ஏனைய விடயங்களை தாரைவார்த்து விடக் கூடாது என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்றாம் தரப்பாக தொழில் அமைச்சரையும் உள்வாங்க வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் தோட்ட தொழிலார்களின் நலன் சார்ந்த விடயங்களை பாதுகாக்க அரசின் தலையீட்டை தொடர்ந்து தக்க வைக்க வழிசெய்யும் என்றார்.

இன்றும் தோட்டங்களின் முழுமையான உரிமையாளன் அரசாங்கமே. தோட்ட காணிகள் அரசாங்கத்துக்கே சொந்தம். தோட்ட கம்பனிகள் முகாமைத்துவத்தையே வாடகைக்கு எடுத்துள்ளன, இந்த அடிப்படையில் தோட்ட கம்பனிகளை அரசினால் வெளியேற்ற முடியும் என்பதனை தோட்ட கம்பனிகள் கவனத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு விடயத்தில் இறங்கி வர வேண்டும என்று கோரினார்.

மேலும் தற்போதய அரசின் இந்த சம்பள உயர்வு முயற்சி வெற்றியளிக்கும் போதுதான் தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை எதிர்காலத்தில் வென்று கொள்வதற்கு அரசின் ஆதரவினை பெற்றக் கொள்ள முடியும். மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் தலைமைகளும் தங்கள் சுயநல போக்கினையும் போட்டிகளையும் கைவிட்டு இவ்விடயத்தில் அரசிற்கு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

மேலும் அரசின் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றால் மலையக தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து அரசிற்கு ஆதரவாகவும் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் பாரிய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சீனா பறந்தார் டர்ம்ப்: முடிவுக்கு வருமா வர்த்தகப் போர்?

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இன்று (13) பீஜிங் நோக்கி பயணமானார். என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang உள்ளிட்ட முக்கியத்...

பாகிஸ்தானை வீழ்த்தியது பங்களாதேஷ்!

0
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. மிர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 413 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 386 ஓட்டங்களையும் பெற்றன. 27 ஓட்டங்கள்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...