Home Blog Page 3650

நேற்று மாத்திரம் 852 பேருக்கு கொரோனா – 7 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று மாத்திரம் 852 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 435 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 57 ஆயிரத்து 630 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் எழுவர் உயிரிழந்துள்ளனர். ஐந்து ஆண்களும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

நானுஓயாவில் விரைவில் கேபிள் கார் திட்டம்

நானுஓயாவில் இருந்து நுவரெலியா வரையிலான கேபிள் கார் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக 52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலிய மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கான குழு கூட்டத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மலையகத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதன் மூலம் ஏராளமான வருமானத்தைப் பெற முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலைகளில் கொழுந்து பறிக்கும் தொழிலாளிகள் அதனை ஒரு இடத்தில் சேர்க்க அவற்றை தொழிற்சாவைகளுக்கு கொண்டுவருவதற்கு ஆரம்ப காலத்தில் கேபிள் கார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

ஆங்கிலயேர் காலத்தில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் பிற்காலத்தில் வீதிகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்ட நிலையில் கேபிள் கார் திட்டம் முற்றாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தற்போது இந்த கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அராஜகம் செய்த தோட்ட அதிகாரிக்கு கடிவாளம் போட்ட செந்தில் தொண்டமான்

தெமோதர வெவலினா தோட்டத்தில் தோட்ட ஊழியர்களை இனவாத ரீதியாகவும், தரக்குறைவாகவும் பேசிய தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த அதிகாரிக்கு எதீராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்திய போதிலும் இன்று காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து குறித்த விவகாரம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு இன்று மாலை 5 மணியளவில் கொண்டுவரப்பட்டது.

உடனடியாக செயற்பட்ட செந்தில் தொண்டமான், தோட்ட முகாமையாளரை அழைத்து, தோட்ட ஊழியர்களை தரக்குறைவாக பேசிய தோட்ட அதிகாரிக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன், குறித்த தோட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால் அவரை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தோட்ட முகாமையாளருக்கு செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று போயா விடுமுறை தினமாக இருந்த போதிலும், மூடியிருந்த அலுவலகம் திறக்கப்பட்டு, இதற்கான விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைளை எடுப்பதாகக் கூறி தோட்ட முகாமையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

‘ஆயிரத்தை பெற்றுக்கொடு – இல்லையேல் வெளியேறு! இ.தொ.காவுக்கு மனோ எச்சரிக்கை!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை மலையகத்துக்கே வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கினார். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் வழங்கப்படும் எனக்கூறினார். அமரர் ஆறுமுகன் தொண்டமானும் அறிவிப்பு விடுத்தார். ஆனால் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தொழில் அமைச்சர் தலையிட்டும் எதுவும் நடக்கவில்லை.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவுகூட அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா என்பதாகும். இறுதிக்கிரியைகளில் பங்கேற்ற ஆளுங்கட்சி பிரமுகர்கள், நிச்சயம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என உறுதியளித்தனர். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பிரதமர் முன்மொழிவு செய்தார். ஏதோ சம்பள உயர்வு கிடைத்துவிட்டதுபோல பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. தற்போது சம்பள உயர்வுக்கான நடவடிக்கையை எடுக்குமாறு தொழில் அமைச்சருக்கு, அமைச்சரவை பணித்துள்ளது. மாறாக இது சட்டரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.

எது எப்படி இருந்தாலும் அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நல்லாட்சியின்போது மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் பல நடவடிக்கைகளை எடுத்தோம். சம்பள உயர்வு விவகாரத்தில் விமர்சனம் இருக்கின்றது. அதனால்தான் இன்று எதிரணியில் இருக்கின்றோம். ஆளுங்கட்சியில் இருக்கும் இ.தொ.கா, சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசியிலிருந்து வெளியேற வேண்டும். இந்த அரசாங்கத்தின்கீழ் பெருந்தோட்டப்பகுதிகளில் எதுவும் நடக்கவில்லை. அடிக்கல் மட்டுமே நடப்படுகின்றது. இ.தொ.காவின் வகிபாகமும் பூஜ்ஜியமாகும்.” – என்றார்.

‘மலையக மக்களின் சாபத்தால்தான் ஐ.தே.க. அழிந்தது’

மலையக மக்களின் சாபத்தால்தான் ஐக்கிய தேசியக்கட்சி இன்று காணாமல்போயுள்ளது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்லாட்சியின்போது 50 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல்போனமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எமது மக்களுக்கு அந்த தொகையை வழங்காததால்தான் ஐக்கிய தேசியக்கட்சி கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. எமது மக்களின் சாபத்தால் ஒருவர்கூட அக்கட்சியின் சார்பில் இன்று பாராளுமன்றத்தில் இல்லை.” – எனவும் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 45 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 57 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற தயார்’ – இ.தொ.கா. மீண்டும் அறிவிப்பு

தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களையும் எவராவது பொறுப்பேற்றால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயார் – என்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 16 கற்கைநெறிகள் இன்று (28.01.2021) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒருதொகை கணனி மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் கையளிக்கப்பட்டன.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரவிக்கையில்,

இந்த தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கம்பனிகளுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.

கடந்த அரசாங்கத்தில் இந்த அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. எனினும் கம்பனிகள் கொடுக்கமுடியாது என்ற விடாப்பிடியிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் சம்பளநிர்ணயசபை ஊடாக சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஒரு நல்ல விடயமாகும். இந்த விடயத்தினை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளப்பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப் பேச்சுவார்த்தை மட்டுமல்ல அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெரியாதவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். தொழிலாளர்களின் நலனில் எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார். அதே நேரம் இன்று கொட்டகலையில் அமையப்படவுள்ள நகரப்பல்கலைக்கழகத்திற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனை நிர்மாணிப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்போது இங்குள்ள மாணவர்களின் தேவைக்கேற்ப அதில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்விக்குழாமும் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே மிகவிரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அவர் கடந்த காலங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நூறு நூற்றைம்பது மாணவர்களே கல்விகற்று வந்தனர் ஆனால் இன்று ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் எனவே அவர்களின் நலன்கருதி கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி கிளைநிறுவனங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.

எமது ஒரே நோக்கம் மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சிகாண வேண்டும் அவர்களுக்கு இந்த துறைகள் ஊடாக பொருளாதார நிலைமைகளை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட வேண்டும் எனவே கடந்த காலங்களில் 12 ஆக இருந்த பாடநெறிகளை 14 ஆக அதிகரித்துள்ளோம். எனவே மாணவர்கள் இடைவிலகாது முழுமையான பயனை பெற்றுக்கொள்ளவேண்டுமென அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

க.கிசாந்தன்

பூசகருக்கு கொரோனா – கதிர்காமம் வள்ளியம்மன் கோவிலுக்கு பூட்டு!

கதிர்காமம் ஸ்ரீ வள்ளியம்மன் ஆலய பிரதம பூசகருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பி.சி.ஆர். பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர் சமன் திசாநாயக்க தெரிவித்தார்.

இதையடுத்து பொது சுகாதாரப் பரிசோதகரின் உடனடி உத்தரவின் பேரில் ஸ்ரீ வள்ளியம்மன் ஆலயம் 28.01.2021 முதல் மீள் அறிவிருக்கும் வரையில் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ந்து 15 நாட்களாக இவ் ஆலயத்திற்கு வந்து வழிபாடு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தத்தம் ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் கதிர்காமத்திலிருந்து இவ் ஆலயத்திற்கு வந்து சென்றவர்கள் அவ்வப்பகுதி பொது சுகாதாரப் பரிசோதர்களிடம் உடன் அறிவிக்கும்படி கதிர்காமம் பொது சுகாதாரப் பிரிவினரால் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ் ஆலயப் பூசகரின் உறவினரொருவரது மரணச்சடங்குகளில் கலந்து கொண்டிருந்தவர்களில் எவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவர்களிடமிருந்து ஆலயப் பூசகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாமென்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றதென்று பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

விகாரையில் கொள்ளை முயற்சி – ஐந்து பிக்குகள் உட்பட எழுவர் கைது!

கதிர்காமம் மலைப்பகுதி ரஜமகா விகாரை தலைமைப்பிக்குவை கொலை செய்து அவரின் உடமைகளை கொள்ளையிட முயற்சித்த ஜந்து இளம் பிக்குகள் உள்ளிட்ட ஏழுபேரை கதிர்காமம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிக்குகள் ஐந்துபேரும் அனுராதபுரத்தின் விகாரையொன்றைச் சேர்ந்தவர்களென்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கதிர்காமம் மலைப்பகுதி ரஜமகா விகாரை தலைமைப்பிக்கு ஹல்லே ஞானத்திர தேரரிடம் பொலிசார் வினவிய போது தன்னைக் கொலை செய்து தனது உடைமைகளை கொள்ளையிடவே முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அறிகின்றேன் என்று மட்டும் கூறினார்.

கதிர்காமம் மலைப்பகுதி ரஜமகா விகாரை தலைமைப்பிக்குவின் அறையை உடைத்து உட்புக முயற்சித்த போதே பாதுகாப்புக் கடமைகளில் இருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் மேற்படி ஐந்து இளம் பிக்குகள் உள்ளிட்ட ஏழு பேரையும் கைதுசெய்தனர்.

அத்துடன் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பொலிசார் மீட்டனர்.இது தொடர்பாக கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் லியனகே தலைமையிலான குழுவினர் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மீன் வியாபாரி பலி

பெரகல கீழ் பிளக்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி 180 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 வயது நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.  இவர் பெரகல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பெரகல நகரத்தில் மீன் வியாபாரியான இவர் பெரகலயிலிருந்து வீடு செல்லும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

பாகிஸ்தானை வீழ்த்தியது பங்களாதேஷ்!

0
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. மிர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 413 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 386 ஓட்டங்களையும் பெற்றன. 27 ஓட்டங்கள்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்​கெடுப்பு

0
தவெக அரசுமீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று (12) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...