Home Blog Page 3674

50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 584 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 621பேர் குணமடைந்துள்ளனர். 240  பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 45 ஆயிரத்து 770 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த மாஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் நாளை வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தீவிரத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிக காட்சிகள் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு கிடைத்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு மற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் விதத்தில், முதல் நாளில் கிட்டத்தட்ட 220 காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெல்தோட்டையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை தோட்டத்தில் மேலும் நால்வருக்கு இன்று (12) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் இருவருக்கும், பெண்கள் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் மூவர் 25 வயதுக்கும் குறைந்தவர்கள்.

கண்டியில் பணிபுரியும் பெண்ணொருவர் அண்மையில் தெல்தோட்டை பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். குடும்ப உறுப்பினர்களிடம் கடந்த 7 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில் குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் பொல்கொல்ல மற்றும் பெனிதெனிய கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கலஹா நிருபர் – ரம்யா

‘நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

இவ்வாறான நினைவு தூபிகள் வடக்கில் மாத்திரமின்றி நாட்டில் ஏனைய பல்லைக்கழகங்களிலும் உண்டு. இவ்வாறான நினைவு தூபிகளை உடைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்த பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டது பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஆகும். அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே ஆகும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 45 ஆயிரத்து 496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அமெரிக்காவில் கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ!

அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் செயல்பட்டு வரும் விலங்கு பூங்காக்களை அரசு மூடியது. பொதுமக்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவி விட கூடாது மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி சான் டீகோ நகரில் உள்ள விலங்குகளுக்கான சபாரி பூங்கா பொதுமக்களின் வருகைக்கு தடை விதித்தது. இந்த பூங்காக்களில் கொரில்லாக்கள் வளர்க்கப்படுகின்றன.

இங்குள்ள 2 கொரில்லாக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருமல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள் அவற்றின் மலக்கழிவு பொருட்களை பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கடந்த 8 ஆம் திகதி வெளிவந்த முடிவில், அவற்றுக்கு வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அதிகாரிகளும் நேற்று உறுதி செய்துள்ளனர்.

இந்த பரிசோதனை முடிவுகள் கொரில்லா குழுக்களுக்கும் பரவி இருக்க கூடும் என்பது மறுப்பதற்கில்லை. இதுபற்றி பூங்கா செயல் இயக்குனர் லிசா பீட்டர்சன் கூறும்பொழுது, இருமல் தவிர்த்து கொரில்லாக்கள் நன்றாகவே உள்ளன. வேறு பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. கொரில்லா குழுவானது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

அவற்றுக்கு தனியாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவை மீண்டும் நலமுடன் திரும்பும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார். பூங்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

எனினும், அறிகுறி தென்படாத பூங்கா ஊழியரிடம் இருந்து கொரில்லாக்களுக்கு இந்த பாதிப்பு பரவி இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

‘உண்மையை சொன்னதால் உள்ளே போகின்றேன், கடவுள் துணை’

” கொள்ளையடிக்கவில்லை, குடு விற்பனை செய்யவில்லை. உண்மையை பேசிவிட்டே உள்ளே செல்கின்றேன். அனைவருக்கும் கடவுள் துணை…….”
 
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
 
நீதிமன்ற வளாகத்திலிருந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்படும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருடகால கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் நடுவர்களாக இலங்கையிலிருந்து ஆறுபேர் தெரிவு

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் பிபா நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -பிபா ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும். இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட ஆறு பேர் பிரதான நடுவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

கல்முனையை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் , சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாட்டிற்க்கும் அம்பாறை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சிறு வயது முதல் கால்பந்தாட்ட துறையில் ஆர்வம் கொண்ட இவர் தாம் இத் துறையில் நடுவராக வர வேண்டுமென விரும்பியதாகவும் அயராத கடின முயற்சி மூலம் தாம் இவ் இலக்கை அடைந்ததாகவும் ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் தெரிவித்தார்.

கால்பந்தாட்ட போட்டிகளில் தேசிய ரீதியில் பல திறமைகளை வெளிக்காட்டியதுடன் இவர் பல தேசிய ரீதியிலான மற்றும் உள்ளூர் உதைப்பந்தாட்ட போட்களில் பிரதான நடுவராக கடமையாற்றியுள்ளார்.

தனது 16வது வயதில் 2010 ம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் FFSL Grade -lll இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடைந்து நடுவராக தனது மத்தியஸ்துவ பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2012 ல் FFSL Grade – ll REFEREE யாகவும் 2017ல் FFSL Grade – l REFEREE யாக சித்தியடைந்து தரமுயர்த்தப்பட்டார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டிகளில் மிகத் திறமையாக மத்தியஸ்துவம் செய்து FFSL NATIONAL ELITE REFEREE யாக உயர்ந்து இலங்கை முழுவதும் பிரபல்யமடைந்தார். குறிப்பாக 2020 FFSL Champion League அரை இறுதிப் போட்டியில் REFEREE யாக மிகத் திறமையாக கடமையாற்றி அனைவரினதும் பாராட்டுகளைப் பெற்றார்.

ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC REFEREE ACADEMY யில் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டு மலேசியாவில் வருடத்திற்கு மூன்று தடவைகள் என்று REFEREE COURSE யினை இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார் அத்துடன் இவர் FIFA வினால் நடாத்தப்பட்ட FIFA REFEREEING MA COURSE யில் மூன்று தடவைகள் பங்குபற்றியுள்ளார்.

இவர் மாலைதீவு Champion. League போட்டிக்கு மத்தியஸ்துவம் செய்ய இரண்டு தடவைகள் மாலைதீவுக்கு சென்று சர்வதேச ரீதியாகவும் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உப செயலாளராகவும் உள்ளார். மேலும் இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றும் இவர் இப் பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கல்முனையை சேர்ந்த யூ. எல்.ஆதம்பாவா மற்றும் செயின் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வராவார்.

மேலும் கடுமையான முயற்சியுடன் இந்த இலக்கை அடைந்ததாக நெகிழ்சியுடன் தெரிவித்தார் ஜப்ரான். தனது 26வயதில் சர்வதேச நடுவராக தெரிவு பெற்றது என்பது கால்பந்தாட்ட துறையில் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாகும் .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து முதன்முறையாக பிபா நடுவராக இவர் தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

‘ மெசேஜ், அழைப்பு விபரங்களை சேமித்து வைக்க மாட்டோம்’ – WhatsApp நிறுவனம் விளக்கம்

தனி நபரின் விவரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என்று WhatsApp (வாட்சப்) நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்சப்ப்” பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “வாட்சப்” அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு தகவல் வந்தது.

மேலும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், “நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.

பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

வாசுவுடன் தொடர்பை பேணிய 10 எம்.பிக்கள் சுயதனிமையில்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்பினைப் பேணிய 10 பேர் முதல் தொகுதி தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்ததாக படைக்கல சேவிதர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

பொகவந்தலாவை வைத்தியசாலை குறைபாடுகள்: மே 30 ஆம் திகதிக்குள் அறிக்கை கோரல்!

0
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து, எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர்...

ஹட்டனில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல்வேறு இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. ஹட்டன் பகுதியில் இன்று (12) பிற்பகல் 2.00 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக மக்களின்...

“கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம்”

0
'டித்வா' நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்  அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்  கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம் - சட்டக்...