Home Blog Page 3675

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருடகால கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

தேரர் ஒருவர் உட்பட இருவரே ரஞ்சனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளங்கன் வைத்தியசாலையில் வைத்தியர்கள் மூவர் உட்பட 9 பேர் சுயதனிமையில்

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு உடற்பரிசோதனைக்கு வந்த ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்தே இவர்கள் ஒன்பது பேரும் 11/01 நேற்று முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹற்றன் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 08 ஆம் திகதி  உடற்பரிசோதனைக்கு கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்துள்ளார் . இவரையும் இன்னுமொறுவருமாக இருவரை 09 ஆம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் இவர்களுக்கு மேற்கொண்ட பி.சிஆர் பரிசோனையிலே ஹற்றன் நபருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபரோடு தொடர்பை பேணிய டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் மூன்று வைத்தியர்கள், மூன்று தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் மூவருமாக ஒன்பது பேர் வைத்தியசாலையிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ,தொற்றுக்குள்ளான ஹற்றன் நபரின் உறவினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘ஆயிரம் ரூபா தொடர்பில் அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளே முடிவை அறிவிக்க வேண்டும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது ஆயிரம் ரூபா தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” ஆயிரம் ரூபா தொடர்பில் கொள்கை ரீதியிலான முடிவுக்கே அரசாங்கத்தால் வரமுடியும். அந்த முடிவை நாம் எடுத்துள்ளோம். தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் பேச்சுவார்த்தை நடத்திதான் முடிவுக்கு வரவேண்டும். இது விடயத்தில் தொழில் அமைச்சரும் தலையிட்டுள்ளார். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அரசால் இறுதி முடிவை எடுக்க முடியாது.” – என்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 465 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 09 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236  பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

ஐ.தே.க. தலைவர் பதவியில் மாற்றமில்லை! 13 ஆம் திகதி கூடுகிறது செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தற்போது செயற்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி மறுசீரமைப்பு, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இக்கூட்டத்தில் இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.

கட்சிக்கான பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் இதன்போது தெரிவுசெய்யப்படவுள்ளனர். எனினும், கட்சி தலைவர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் வராது என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும், பிரதித் தலைவராக அவரின் உறவின் ருவான் விஜேவர்தனவும் செயற்படுகின்றனர். தலைமைப்பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என ரணில் முன்னதாக அறிவித்திருந்தாலும் தற்போது இழுத்தடிப்பு செய்துவருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘கொரோனா’வால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 240 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் எட்டு உயிரிழந்துள்ளனர்.

6 ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறைக்கைதியாவார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 240  ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்…

நாட்டில் இன்று மாத்திரம் 568 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இன்று மாத்திரம் 568 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 91 பேர் குணமடைந்துள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 45 ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய சர்வதேச நிபுணர்கள் குழு சீனா விரைகிறது!

கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பில் ஆய்வு நடத்த, உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்கள் குழு வியாழக்கிழமை சீனாவுக்கு செல்லவுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருக்கும் நிலையில், அந்த வைரசின் தோற்றம் குறித்து அங்கு சென்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த விசாரணைக்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அமைத்து உள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் பட்டியலை சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு அளித்துள்ளது. எனினும், இந்தக் குழுவினரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதை சீனா இழுத்தடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அதிருப்தி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. நிபுணர்குழுவை உகான் நகருக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள சீனா,

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்குழு வியாழக்கிழமை சீனா செல்ல உள்ளனர்.

இது குறித்து சீனா தரப்பில் கூறப்படுவதாவது:-

பத்து உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுவார்கள் . சீன விஞ்ஞானிகளுடன் அவர்கள் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளுவார்கள். சீனாவில் சர்வதேச நிபுணர் குழுவின் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, நாங்கள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வோம். வைரசின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பது நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது என்று கூறினார்.

விராட் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது

அனுஷ்கா ஷர்மா, விராட் கோஹ்லி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகையும் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மும்பையின் ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனுஷ்கா சர்மா இன்று பிற்பகல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

” உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என கூறி உள்ளார்.

மாமியார்மீது கொலைவெறித் தாக்குதல்! ஆசிரியை மருமகள் கம்பளையில் கைது!!

உணவு உண்பதற்காக தனது அனுமதியின்றி, கறி எடுத்த மாமியாரை அவரின் மருமகள் கத்தியைக்காட்டிமிரட்டி கடுமையாக தாக்கிய கொடூரச் சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து கம்பளை, சிங்ஹாபிட்டிய பகுதியைச் சேர்ந்த மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தாயான ஆசிரியை ஒருவரையே கம்பளை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

கைதான ஆசிரியை கம்பளை மாவட்ட நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் லலித் வீரசேன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இடியப்பம் சாப்பிடுவதற்காக தனது அனுமதியின்றி கறி எடுத்ததற்காக குறித்து ஆசிரியை தனது மாமியாரை தாக்கும் காட்சியை அவரின் 9 மற்றும் 10 வயதுகளுடைய இரு பிள்ளைகள் தொலைபேசியில் வீடியோ செய்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான வயோதிபப் பெண்ணிடம் குறித்த காணொளி சில தினங்களுக்கு முன்னர் சிக்கியுள்ளது. அதனை அவர் சமூகவலைத்தளங்களில் பதவிட்டுள்ளார். இது தொடர்பில் கம்பளை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவர்பபட்டதையடுத்தே நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை நிருபர் லாவண்யா

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

“கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம்”

0
'டித்வா' நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்  அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்  கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம் - சட்டக்...

மஹிந்தவிடம் விசாரணை வேட்டை: திரண்டது மொட்டு படை!

0
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச...

பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும்...