Home Blog Page 3676

நாட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 91  பேர் குணமடைந்துள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 44 ஆயிரத்து 903 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பிள்ளையானுக்கு எதிரான வழக்கை கைவிட்டது சட்டமா அதிபர் திணைக்களம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று (11) மீள பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா தொற்று!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க உட்பட தூதுரக பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இன்று மீள திறக்கப்படவுள்ளது.

‘ நான் அரசியலுக்கு வரமாட்டேன் – என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்’

அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஒர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2021 – முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டில் முதல் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.

சுகாதார அமைச்சின்  வழிகாட்டலுக்கு அமைவாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி வலய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புரையின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சமூக இடைவெளி, கை கழுவுதல், உடல் வெப்பநிலை அறிதல், போக்குவரத்து என சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு முதல் தவணைக்கான வகுப்புகள் தரம் 02 முதல் தரம் 13 வரையிலான இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, அட்டன், வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்தை ஆகிய ஐந்து கல்வி வலயங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகின்ற காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏனைய கல்வி வலயங்களில் வழமை போன்ற கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களின் வருகையும் பாதிப்பற்ற வகையில் காணப்படுகின்றது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஆரம்ப முதல் இதுவரை நாட்டில் பாடசாலை கல்வி நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் கல்வி நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தநிலையில் ஆரம்ப கல்வி மாணவர்கள் பாதியளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அந்தவகையில் பத்து மாதங்களுக்கு பின் முறையான கல்வி நடவடிக்கையில் ஆரம்ப கல்வி மாணவர்கள் முதல் அணைவரும் காலடி எடுத்து வைக்கின்றமை குறிப்பிடதக்கது.

அதேவேளை, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பிரிதொரு நாளிலேயே ஆரம்பிக்கப்படும்.

அட ஈஸ்வரா, இப்படியும் நடக்கிறதே! பசறையில் நடந்த ஓர் சம்பவம் பற்றிய பார்வை…

ஆட்டோவுக்கான லீசிங் தொகையை செலுத்த முடியாததால் ஆட்டோவை ஒளித்துவைத்துவிட்டு, அது காணாமல்போய்விட்டதாக பசறை பொலிஸ் நிலையத்தில் போலியான முறைப்பாட்டை முன்வைத்த நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், ஆட்டோவும் மீட்கப்பட்டுள்ளது.

பசறை – தொலம்பவத்த பகுதியில் வாடகைக்கு கராஜ் நடத்தி வரும் நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

” நான் பசறைக்கு வரும்வழியில், மூவர் ஆட்டோவை நிறுத்தினர். ஹிங்குருகடுவ பகுதிக்கு செல்லவேண்டும் என கூறினர். செல்லும் வழியில் இடைநடுவே எரிபொருள் தீர்ந்துவிட்டது. இதனால் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி, எரிபொருள் வாங்குவதற்காக பசறை சென்றேன். திரும்பிசென்று பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.” – என்றே குறித்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி முறைப்பாடு தொடர்பில் விரைந்து விசாரணை நடந்திய பசறை பொலிஸார், உண்மையை கண்டறிந்தனர். மீதும்பிட்டிய பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆட்டோவையும் மீட்டனர்.

செய்தி ராமு தனராஜா

இராஜாங்க அமைச்சர் வாசுதேவவுக்கு கொரோனா தொற்று

இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட் தொற்று உறுதி

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றாவது உறுப்பினராக வாசுதேவ நாணயக்காரவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹர்த்தாலால் முடங்கியது யாழ். குடாநாடு!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொ.தே.ச. இளைஞர் அணி முன்னெடுத்த சிரமதானப் பணி

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 54 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்தச் சங்கத்தின் இளைஞர் அணியினர் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா சிவநேசன் தலைமையில் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

“கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம்”

0
'டித்வா' நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்  அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்  கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம் - சட்டக்...

மஹிந்தவிடம் விசாரணை வேட்டை: திரண்டது மொட்டு படை!

0
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச...

பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும்...