Home Blog Page 3677

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்’

ஆயிரம் ரூபாவில் வாழ்க்கை நடத்த முடியாது. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,500 ரூபா வழங்கபட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க இன்னும் முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வரவு செலவு வாசிப்பின் போது ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் முன்வாராது என்று எனக்கு நன்றாக தெரியும்.

அரசாங்கம் முன்மொழிந்ததை போல் ஆயிரம் ரூபா மாத்திரம் அல்ல இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்து சமுர்த்தி கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.

ஆகையால், அரசாங்கம் இதற்கான முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறார்கள்.அப்படி என்றால் அரசாங்கத்திற்கு அதற்கான நிதியினை வழங்கி அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும்.

இது போன்ற நடடிவடிக்கையினை அரசாங்கம் ஒரு போதும் செய்யாது. இவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்வார்கள். ஆயிரம் ரூபா தருவதாக கூறுகிறார்கள், வீடு தருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஒன்றுமே நடைமுறைக்கு வருவதில்லை

உலகளவில் 9 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 748 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 6 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது’

இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை யாழ். பல்கலையில் அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

பல்கலையின் துணைவேந்தரால் கஞ்சி கொடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 8 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். சர்வதேச மட்டத்திலும் கண்டங்கள் வெளியிடப்பட்டன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நினைவுத்தூபிளை மீளவும் நிர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

48,380 பேருக்கு கொரோனா – 41,325 பேர் குணமடைவு – 232 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 219 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, நேற்று மாத்திரம் 536 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச் முதல் இன்றுவரை 48 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் இன்று மாத்திரம் 536 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 236 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இன்று மாத்திரம் 536 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 44 ஆயிரத்து 618 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக் கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?

” வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?” -என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.

யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.

வடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.

இந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது?

தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்?

இப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.

அதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.

அவசியமில்லைதான், ஆணைக்குழு தலைவரே! ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில் உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.

ஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள். தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று, முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,

இலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம். நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா? எமக்கு முடியாதா?

ஏன்?, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.” – என்றார்.

இ.தொ.கா. இளைஞர் அணித் தலைவராக ராஜமணி பிரசாத் தெரிவு

  • க.கிஷாந்தன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவராக ராஜமணி பிரசாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ராஜமணி பிரசாத் கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக பதவி வகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவருக்கான நியமனம் நாளை வழங்கப்படும் எனத் தெரியவருகிறது.

அத்துடன், இ.தொ.கா. இளைஞர் அணியின் பொதுச் செயலாளர் பதவிக்கான நியனமும் விரையில் இடம்பெறவுள்ளதாக கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 44 ஆயிரத்து 382 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ். மோகனராஜன் வலியுறுத்தினார்.

நுவரெலியா, இராகலையில் இன்று (10.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் மலையக பிராந்திய இனைப்பாளர் எஸ்.மோகன்ராஜ், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையக பிராந்திய செயற்பாட்டாளர் பீ.பத்மசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பதில் எமது தொழிற்சங்கமும் உறுதியாக நிற்கின்றது. அதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும்.

ஆயிரம் ரூபா தொடர்பான முன்மொழிவு அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. முடியாத முன்மொழிவாக இருந்தால் அது பாதீட்டில் முன்வைக்கப்பட்டிருக்காது. உரிய தேடலின் பின்னரே அந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதனை எதிர்க்ககூடிய நிலையில் கம்பனிகள் காணப்படுவது சிக்கலுக்குரிய விடயமாகும். அரச கொள்கைக்கு எதிராக செயற்படும் தொழில்துறைக்கு எவ்வாறு அரச காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்?

ஆயிரம் ரூபாவை கம்பனிகளுக்கு வழங்க முடியும். உரிய இலாபத்தை அவை ஈட்டுகின்றன. எனினும், சம்பள உயர்வை வழங்காமல் இருப்பதற்கும், வரிகளிலிருந்து தப்புவதற்கும் உப கம்பனிகளை நடத்தி பிரதான கம்பனிகள், உரிய தரவுகளை காட்டுவதில்லை. ஏனைய துறைகளில்போன்று பெருந்தோட்டத்துறையிலும் மாபியா செயற்படுகின்றது.

ஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசு கூறியதுபோல, கம்பனிகளை அரசு பொறுப்பேற்கவேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று

தாம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மஹிந்தவிடம் விசாரணை வேட்டை: திரண்டது மொட்டு படை!

0
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச...

பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும்...

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா...