Home Blog Page 3678

மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

மலையக தியாகிகள் தினம் இன்று 10 ஆம் திகதி (10.01.2021) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, பத்தனை சந்தியில் நடைபெற்றது.

மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து முற்பகல் 10.15  மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களும், மலையக புத்திஜீவிகளும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தியாகிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த 2019 டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2020 ஜனவரியில் மஸ்கெலியாவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இம்முறை பத்தனையில் நடைபெற்றது.

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்தே நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.

‘அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம்’ – நுவரெலியாவில் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில்  அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் ஆயிரம்  ரூபாவை விட்டுக் கொடுக்க கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா தபாற்கந்தோருக்கு முன்னால் இன்று (10.01.2021) நடைபெற்றது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமை தாங்கியதுடன் இந்த போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ் பிரதேச சபை உறுப்பினர்களான டி.ஜனார்தனன் ஹரிச்சந்திரன் பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மனி சிவநேசன் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்

அரசாங்கம் ஏனைய தொழிற்சங்கங்கள் அரசாங்க அதிகாரிகள் அனைவருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் பாராளுமன்றத்தில் பிரதமரால் முன்மொழியப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் 1000.00 ரூபா அடிப்படை சம்பளத்தை மாத்திரம் தோட்ட கம்பனிகள் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயமானது.?

தோட்ட கம்பனிகள் அவர்களுடைய மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைவருக்கும் சம்பள அதிகரிப்பையும் ஏனைய கொடுப்பனவுகளையும் தங்கு தடையின்றி வழங்குகின்றது.ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றது.இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தோட்ட தொழிலார்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் போராட்டம் செய்தே சம்பள உயர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமையே காணப்படுகின்றது.ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களுடைய கடமையை சரியாக செய்வதன் காரணமாகவே இன்று அரசாங்கத்திற்கு அந்நிய செலவானியை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலைமை இருக்கின்றது.ஆனால் அவர்களுடைய எந்த ஒரு கோரிக்கையையும் தோட்ட கம்பனிகள் கவனத்தில் கொள்வதில்லை.

இந்த முறை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000.00 வழங்க முடியாவிட்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு தோட்டங்களை ஒப்படைக்க வேண்டும்.கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபா அடிப்படைய சம்பளம் என்ற விடயத்தில் இருந்து பின்வாங்க கூடாது.நாங்களும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கைச்சாதிடும் தொழிற்சங்கங்கள் வெளியேறுமாக இருந்தால் மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியும்.எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பு கூறும் விடயத்தில் இருந்து பின்வாங்ங முடியாது.1000.00 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘தீர்வு தராத கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம்’ – அனுசா விளாசல்

சம்பள உயர்வுக்கு அப்பால் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தராத எந்த ஒரு கூட்டு ஒப்பந்தமும் நிச்சயமாக அடிமை சாசனமாகவே அமையும் என்று சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி செயலாளர்நாயகமும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

“கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வுவோடு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல எமது தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அதில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

ஒவ்வொரு தோட்டங்களிலும் எமது மக்கள் வெவ்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டால் வேறு ஒரு பிரச்சினை அதைவிடவும் பயங்கரமாக உருவாகிவிடுகிறது. கொழுந்து நிருவையில் இருந்து அவர்கள் ஓய்வூதியம் பெறும் வரையிலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையே வாழ்ந்துவருகிறார்கள்.

டிஜிட்டல் முறையில் 100 கிராம் குறைந்தாலும் பெயர் குறைப்பு கொழுந்து நிலுவையில் அளவுக்கதிகமான நிறை கழிவு நவீனமயப்படுத்துதல் என்ற ரீதியில் வேலை நாள் குறைவு போன்ற நெருக்கடிகளினால் இவர்களின் உழைப்பு அர்த்தமின்றி வஞ்சிக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக சரத்துக்களும் கூட்டு ஒப்பந்தத்தில் அழுத்தமாக இணைக்கப்பட வேண்டும்

குளவி கொட்டுதலாலும் வனவிலங்குகள் தாக்குதாலும் வேறு விபத்துகளினாலும் வேலை நேரத்தில் மரணிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடும் அதுபோல் வைத்திய சிகிச்சை முடிந்து மீண்டும் கடமைக்கு திரும்பும் உடல் தகுதியை பெறும் வகையிலான காலங்கள் மருத்துவ விடுமுறை நாட்களாக கணிக்கப்பட வேண்டும் , அதற்கான நட்ட ஈடுகளும் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.

வறட்சி காலங்களில் ஒரு நாள் பெயருக்காக எடுக்கப்படவேண்டிய கொழுந்தின் நிறை குறைக்கப்பட வேண்டும்.

தற்போது வழங்கப்படும் 500 கிராம் தேயிலை தூள் தரமான ஒரு கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும் உரிய விசாரணை இன்றி அல்லது ஆகக் குறைந்தது ஏழு நாள் அவகாசம் இன்றி தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தக் கூடாது.

தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகமும் நீதிமன்றமும் இரண்டு தண்டனைகள் வழங்கக்கூடாது தற்போது ஒரு குற்றத்திற்காக நிர்வாகமும் தண்டிக்கிறது நீதிமன்றமும் தண்டிக்கிறது நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னர் அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

தோட்டங்கள் காடாக்கப்படாமல் உரிய முறையில் பராமரிக்கப்படல் வேண்டும்.

Annual muster எனப்படும் வருடாந்த ஆல் கணக்கெடுப்பு காலை 7 மணிக்கு அல்லது மாலை 5 மணிக்கு என்று அடிமைகளை கணக்கெடுப்பது போல் அல்லாமல் கௌரவமான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

சம்பள உயர்வு ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வுக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் காலத்திற்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.”  என மேலும் தெரிவித்தார்

‘கொரோனா’வால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக் கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 216 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

லுணுகல பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா

லுணுகல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொக்காகல, கீனகொட பகுதிகளில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரியின் பரிசோதனை அறிக்கையின்படி உறுதிப்படுத்தப்பட்டதாக லுணுகல பிரதேக
பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர்கள் கொழும்பிலிருந்து வருகை தந்தவர்களென்றும் இவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி லுணுகல பிரதேசத்தில் இதுவரை 08 பேர் தொற்றாளர்களாக உறுதிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – தமிழக தலைவர்கள் கண்டனம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவை வருமாறு,

” யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்து விட்டு அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை இலங்கை அரசு செய்துள்ளது. இந்திய அரசு, இலங்கை அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.

நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09.01.2021) சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய செல்லையா சிதம்பரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் டயகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 01.01.2021 அன்று கொண்டு சென்ற நிலையில் நோயாளியை அங்கு ஏற்றுக் கொள்ள முடியாது என வைத்தியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுய தனிமைப்படுத்தலில் இருந்த இவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதன் காரணமாகவே இவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்;கப்பட்டிருந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த 01.01.2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 03.01.2021 அன்று மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுதே இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு இவர் நுவரெலியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09.01.2021) அதிகாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் கொழும்பு உருகொடவத்தை ஆலயம் ஒன்றில் பூசகரின் உதவியாளராக செயற்பட்டு வந்த நிலையிலேயே இவர் தனது வீட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவரை சுகாதார அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்பின்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற பொழுது அவரை அங்கு ஏற்றுக் கொள்ளாமை காரணமாக நுவரெலியா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையிலேயே இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் இறுதிக்கிரியைகள் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

க.கிசாந்தன்

சம்பளப் பிரச்சினையில் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இ.தொ.கா. வலியுறுத்தல்

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்மொழியப்பட்ட சம்பள தொகை மற்றும் ஊதிய மாதிரி திருப்திகரமாக இல்லை எனவும், அது தற்போதைய வாழ்வாதார நிலைமைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தொழிற்சங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் கூட்டு உடன்படிக்கையின் முக்கிய பங்குதாரராக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனம் சமர்ப்பித்த தோட்ட தொழிலாளர்களின் சம்பள தொகை மற்றும் ஊதிய திட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.தே.க. தலைமைப்பதவியில் மாற்றம்? அடுத்தவாரம் கூடுகிறது செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் அடுத்தவாரம் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக தலைமைப்பதவியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 2021 இல் புதிய தலைவரொருவர் நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பை 2020 இல் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது தரப்பு தயார் என சஜித் அணியும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் போராட்டம் தொடர்கின்றது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய அரசு இடித்தழித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்றிரவு குவிந்தனர். இன்றும் போராட்டம் தொடர்கின்றது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மஹிந்தவிடம் விசாரணை வேட்டை: திரண்டது மொட்டு படை!

0
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச...

பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும்...

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா...