Home Blog Page 3679

2ஆவது அலைமூலம் நுவரெலியாவில் 449 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2020  ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில்  19 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 193 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா 2ஆவது அலைமூலம் 449 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 14 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் தேருநர் ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லையெனின் அந் நபரின் பெயரை தொடர்புடைய பிரதேச கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் 011-2860031, 011-2860032, 011-2860034 வினவுவதன் மூலம் தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கான உரிமைக்கோரலொன்றை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

https://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx

2ஆவது அலைமூலம் 43,525 பேருக்கு கொரோனா – 212 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 43 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நாட்டில் 25 மாவட்டங்களிலும் 2ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 37 ஆயிரத்து 559 பேர் இன்று காலைவரை குணமடைந்துள்ளனர்.

அத்துடன், இலங்கையில் 2020 மார்ச் முதல் நேற்றுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 47 ஆயிரத்து 304 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 316  பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 763 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சுதந்திரக்கட்சியை அடகுவைத்துவிட்டார் மைத்திரி – சந்திரிக்கா சீற்றம்!

” நானே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர். மைத்திரிபால சிறிசேன என்பவர் சட்டவிரோதமாகவே அப்பதவியை வகிக்கின்றார்.”  – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் பிரதமர் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, காலி முகத்திடலில் உள்ள அன்னாரின் திருஉருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சந்திரிக்கா அம்மையாளர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தற்போது அரசியல் பயணம் என்று ஒன்று கிடையாது. எனவே, கட்சி சரியான வழியில் பயணிக்கின்றதா அல்லது திசைமாறி பயணிக்கின்றதா என கூறமுடியாது.

சுதந்திரக்கட்சிக்கு பொதுஜன பெரமுனவால் அநீதி இழைக்கப்படுகின்றது என இன்றுதான் சிலர் கூறுகின்றனர். ஆனால் முன்கூட்டியே இது குறித்து நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

தற்போது கட்சிக்கு தலைவர் என ஒருவர் இருக்கிறார். அவர் சட்டவிரோதமாகபே அப்பதவியை வகிக்கின்றார். சுதந்திரக்கட்சியில் இருந்து நான் விலகவில்லை. ஆயுட்கால உறுப்பினர். நான்தான் தலைவர். எனினும், எந்தவொரு கூட்டத்துக்கும் எனக்கு அழைப்பு விடுக்கவேண்டாம் என சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

நான் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்லவில்லை. சிறிசேனதான் 5 தடவைகள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகம் சென்றார். ரணிலை சேர் என விளிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என கேட்டார். சுதந்திரக்கட்சியை மொட்டு கட்சியிடம் விற்பனை செய்தவர்தான் சிறிசேன.” – என்றார் .

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிப்பு – யாழ். பல்கலை வளாகத்தில் பதற்றம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளனர்.

அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. பின்னர் வருகை தந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் நியமனம் : செந்தில் தொண்டமானின் முயற்சிக்குப் பலன்

கல்வியல் கல்லூரியில் பயிற்று, ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களில் 335 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட் நெருக்கடியினால் அவர்கள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆசிரியர்களுக்கு வெளி மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், இதுகுறித்து கடந்த இரண்டு வாரங்களாக கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, குறித்த ஆசிரியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஊவா மாகாணத்தில் 53 ஆசிரியர்களுக்கும், மத்திய மாகாணத்தில் 188 ஆசிரியர்களுக்கும், சப்கரமுக மாகாணத்தில் 46 ஆசிரியர்களுக்கும், மேல் மாகாணத்தில் 48 ஆசிரியர்களுக்கும் அவர்களின் சொந்த இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெளிமாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், அப்போதைய மாகாண கல்வி அமைச்சராக இருந்த செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொவிட் நெருக்கடியினால் ஒன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களுக்கும் வெளிமாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், இதுகுறித்த செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, இதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமது சொந்த மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் கிடைத்துள்ளதால் பொங்கலுக்குக் கிடைத்த இனிப்பான செய்தி இது என நியமனம் கிடைத்துள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இன்று மாத்திரம் 524 பேருக்கு கொரோனா – மூவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு, இரத்தினபுரி மற்றும் ஹொரனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 225  ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 212 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, இன்று மாத்திரம் 524 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மின்சார வேலியில் சிக்சி 5 பிள்ளைகளின் தந்தை பலி – பொகவந்தலாவயில் சோகம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவில், மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

அந்தோனி சாமி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞர் ஒருவர் கூரையின் மீது ஏறி துணி காய வைக்கும் போது குறித்த நபர் மரக்கறி தோட்டத்தில் வீழ்ந்து கிடப்பதனை கண்டுள்ளார்.அதனை தொடர்ந்து பிரதேசவாசிகளிடம் தெரிவித்த போது குறித்த நபர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதனை 3 மணியளவில் கண்டுள்ளனர்.

பின்னர் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

குறித்த நபர் தனது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளார்.

குறித்த நபர் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் இன்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவருக்கு காயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோ, 08.01.2021 இன்று மாலை தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோவில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

47,031 பேருக்கு கொரோனா – 40,317 பேர் குணமடைவு – 6,492 பேருக்கு சிகிச்சை

நாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 317 பேர் குணமடைந்துள்ளனர்.222 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்து 492 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 43 ஆயிரத்து 274 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மஹிந்தவிடம் விசாரணை வேட்டை: திரண்டது மொட்டு படை!

0
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச...

பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும்...

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா...