Home Blog Page 3680

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் இருப்பது யார் தெரியுமா?

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருந்த எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோவை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க்.

கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு நியூயார்க்கில் நேற்று காலை 10.15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட 1.5 பில்லியன் டாலர் அதிகமாகும்.

டெஸ்லாவின் பங்கு அதிவேக வளர்ச்சியில் செல்வதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜெப் பிசாசோ கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணிக்கு எதிராக 100 சிக்ஸர்கள் – ரோகித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலி கிரிக்கெட் அணிக்கு எதிராக 100 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் முதல் நாளில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து இன்று 2வது நாள் நடந்த ஆட்டத்தில் 105.4 ஓவர்களில் ஆஸி. அணி 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடினர்.

இந்த போட்டியில் 16ஆவது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர், அவருக்கு வரலாறு படைக்க உதவியது.

அதாவது சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

அவர் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 63 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதுவே, 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்ஸர்கள் ஆகும்.

இதுதவிர வேறு சில வரலாற்று சாதனைகளையும் ரோகித் படைத்துள்ளார். அவர் இன்று அடித்த சிக்ஸரால், மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது. கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

அவரது இந்த சிக்ஸருக்கு பின்னர், கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (476) ஆகியோர் ரோகித்துக்கு முன்னாள் அடுத்தடுத்து உள்ளனர்.

எனினும், ஒற்றை அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரோகித் முதல் இடத்தில் இல்லை. ஏனெனில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கெய்ல் அனைத்து நிலைகளிலும் சேர்த்து 140 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

இந்த போட்டியில் ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து கொடுத்து ரோகித் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

‘வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு இனி வேட்டு’

பாரியளவில் வரி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை எதிர்காலத்தில் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு  அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அறவிடப்பட வேண்டிய வரியை துரிதமாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதன் மூலம் அரச வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் கணக்காய்வாளர் டபிள்யு.பி.சி. விக்ரமரத்ன  இங்கு தெரிவித்தார்.

உள்நாட்டு வருமான வரி தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்துள்ளதாகவும், அவற்றை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு நீதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியன இணைந்து வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

வரி நிலுவைச் சட்டத்தை விரைவில் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் எச்.எம்.சி. பண்டார குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுடன், அதற்கான யோசனையை விரைவில் வழங்குமாறு குழுவின் தவிசாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு அறிவித்தார்.

தேர்தல் காலத்தில் வீராப்புபேசிய ஜீவன், இப்போது பதுங்குவது ஏன்?

” அதிகாரம் தாருங்கள், தோட்ட நிர்வாகத்தினை மிரட்டுகிறேன் என்று வீராப்பு பேசி – வாக்கு வேட்டை நடத்திய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், வெறும் 240 ரூபாவை பெற்று கொடுக்க முடியாது தயங்குவது ஏன்?.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கூட்டு ஒப்பந்தம் என்பது அடிமை சாசனம். அதன் ஊடாக அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைக்கூட பெற்றுக்கொடுக்கமுடியவில்லை. எனவே, அந்த ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தையும், விலை வாசியையும் எடுத்து கூறி தேயிலை துறை மூலமாக கம்பனி காரர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தையும் சுட்டி காட்டி, தற்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 240/= ரூபாவை அதிகரித்து பெற்று கொடுக்க உங்களுக்கு திறமை இல்லை என்றால் ஏன் அதை பிடித்து கொண்டு தொங்குகிறீர்கள்?

மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க முடியாத கம்பனிகளை உடனடியாக வெளியேற சொல்லுங்கள். மக்களிடம் அதிகாரம் கேட்டீர்கள், மக்களும் கொடுத்தார்கள். இப்போ நீங்கள் தூங்குகின்றீர்களா?.” – எனவும் ஜீவனிடம் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகள்’

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ச (2021.01.07) ஆலோசனை வழங்கினார்.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற குழு அறை 2 இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாரியளவிலான அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னர் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் காணப்படும் உத்தரவாத நெல் விலைக்கு ஏற்ப பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் அரிசிக்கான நிலையான விலையை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணமாக கடன்களை செலுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின்போது  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,   இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஷெஹான் சேமசிங்க, இந்திக அநுருத்த, அஜித் நிவாட் கப்ரால், ஷஷீந்திர ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல,

பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, வங்கி, சதொச மற்றும் நெல் விநியோக சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

விமல் வீரவன்ச தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும், அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன், அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது,

“கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். இலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று வெந்து, நொந்து போயுள்ளனர். அதுமாத்திரமின்றி, உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு, பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.

முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான, படுகேவலமான செயலை செய்யமாட்டார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் எம்.பிக்கள், சிங்கள எம்.பிக்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்ற போதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்களை எல்லாம் புறக்கணித்து, கருத்திற்கெடுக்காது, சமூகத்தின் மதம் சார்ந்த கோரிக்கையை தட்டிக்கழிப்பதன் நோக்கம் வெறுமனே அரசியல் சார்ந்தது மட்டுமே.

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்கள் “இன்று சரிவரும், நாளை சரிவரும்” என்ற நம்பிக்கையை அளித்து வருவதினாலேயே, சமூகம் இன்னும் பொறுமை காக்கின்றது. “வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது” என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. எனினும், எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை. புதிய நிபுணர் குழுவின் அறிக்கையைக் கூட தட்டிக்கழிக்கும் சுபாவத்தில் தான் இன்னும் இருக்கின்றனர்” என்றார்.

மடிந்த எதிர்பார்ப்புகளுக்கு புத்துயிர் கொடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை

நாம் தனியாகத்தான் இந்த உலகத்தில் பிறக்கின்றோம். ஆனால் ஆயிரக்கணக்கான உறவினால் எங்கள் வாழ்க்கை பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்புகள் தான் எங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. ஒருவர் இன்னொருவரோடு கொண்டிருக்கும் மனிதநேயம் அல்லது அன்பின் அளவினை பொருத்துதான் இந்த உறவுகள் ஏற்படுகின்றன.

அப்பேர்பட்ட மனித உறவின் மகத்துவத்தை முன்னெடுத்துச் செல்லும் டயலொக் நிறுவனத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் ஐந்தாவது செயற்பாடு, திஸ்ஸமஹாராமையில் வசிக்கின்ற ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த எம்.கே. நிஹால் , நன்னீர் மீன்பிடி தொழிலை வாழ்வதாரமாகக் கொண்டவர். சிலகாலத்திற்கு முன் தன் துணையை இழந்த இவரும், இவரது மகளும் தற்போது தனித்து வாழ்ந்து வருகின்றனர். தனது மகளின் எதிர்காலத்தின் மீது பெரிதும் அக்கறைகொண்ட இவர், அதற்காக பல சிரமங்களை அனுபவித்துகொண்டு பாடுபட்டு வருகிறார். ஒரு புதிய வீட்டை கட்டிமுடிக்கும் கனவோடு, அதற்கான அத்திவாரத்தையும் இட்டார். ஆனால் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக அந்த கனவுகள் எல்லாம் தவிடுபொடியாகி, அவரை விட்டு தொலைவில் போய்விட்டன.

ஒரே இடத்தில் முடக்கம் பெற்ற அவரது வாழ்க்கையை கரையேற்றி கொள்வதற்காக தன் முயற்சியால் சம்பாதித்த அனைத்தையும் அவர் அடகு வைத்தார். அதேநேரம் சிறுமியாக இருந்த மகள் இன்று பருவமடைந்து, சமூகத்தின் பொல்லாக் கண்களிலிருந்து விடுபட்டு கொள்ள பாதுகாப்பு தேடுகிறாள்.

பாதுகாப்பற்ற வீட்டில் சுகாதார வசதிகள் எதுவும் இன்றி தன் மகள் படும் அவதியைக் கண்டு நிஹால், மனம் நொந்து வாழ்ந்து வருகிறார். இச்சமயத்தில் மகளுக்கும் அவருக்கும் ஆறுதலாய் இருப்பது அவரது தாயார் மட்டுமே. பல்வேறு விதத்திலும் சிரமங்களுக்கு இவர் முகம் கொடுத்து வந்தாலும் தனது மகளின் கல்வி நடவடிக்கையை இடையறாது பார்த்துகொண்டார். தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து அவர் மீண்டு வந்துவிட்டார் என்றாலும், முன்னரைபோன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு அவரால் முடியாதுள்ளது. அத்தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும்.

தற்போது உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் தனது மகளை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்வதற்கு வருந்தி உழைக்கும் நிஹாலுக்கு, வலு சேர்க்கும் வகையில் டயலொக் மனிதாபிமான நடவடிக்கைக் குழு அவரோடு கை கோர்த்து கொண்டது.

“எனக்கு மறுபடியும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட தெம்பு இருக்கிறது. ஆனால் அதனை தொடங்குவதற்குதான் வழி இல்லை. எனது வள்ளத்தை நான் அடகு வைத்திருக்கிறேன். எனது வலையும், அதற்குரிய உபகரணங்களும் தற்போது என்னிடம் இல்லை. இதையெல்லாம் திரும்ப பெறுவதற்கு என்னிடம் வசதியும் இல்லை. இவைகள் எனக்கு கிடைக்குமாக இருந்தால் நான் எவரையும் தங்கி வாழத்தேவையில்லை. என் குடும்பத்தை என்னால் பார்த்து கொள்ள முடியும்” என்று நம்பிக்கையோடு பேசினார் நிஹால்.

சிறந்த எதிர்காலத்தையும் வாழ்க்கையில் வெற்றியையும் எதிர்பார்த்திருப்போருக்கு என்றும் உற்ற துணையாய் இருக்கும் டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும்

மனிதாபிமான நடவடிக்கையானது, நிஹாலின் வள்ளத்தை அடகிலிருந்து மீட்டெடுத்து சீரமைத்து தந்ததோடு, மீன் பிடிக்கு தேவையான உபகரணங்களையும் பெற்று தந்து, ஊர் மக்களின் ஒத்துழைப்போடு அவரது வீட்டையும் மிக விரைவாக புனரமைப்பு செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களையும், மகளின் இணைய வழி கல்வி நடவடிக்கைக்குத் தேவையான ஸ்மார்ட் தொலைபேசியினையும் பெற்று கொடுத்தது. இதன் மூலமாக டயலொக் மனிதாபிமான நடவடிக்கை நிஹால் அவர்களுக்கு பக்கபலமாகவிருந்து, மீண்டும் அவரது வாழ்வை தொடங்குவதற்கு தேவையான ஊக்கத்தை வழங்கி, வெற்றிகரமாக தனது பணியை நிறைவு செய்து கொண்டது.

‘கயல்’ ஆனந்திக்கு டும்….டும்….டும்…

கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார்.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஆனந்தி திருமணம் இன்று இரவு எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

2ஆவது அலைமூலம் மேல் மாகாணத்தில் 33,086 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 33 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 532 தொற்றாளர்களில் 307 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 19 ஆயிரத்து 422 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 687 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 9 ஆயிரத்து 977 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

‘முடக்கப்பட்டுள்ள மஹியாவ பகுதியை விடுவிக்கவும்’

ஒரு மாதகாலமாக முடக்கப்பட்டுள்ள கண்டி, மஹியாவ பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடம், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளும்ற உறுப்பினருமான வேலுகுமார் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்து, மஹியாப பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்.

” கொரோனா வைரஸ் பரவலையடுத்து கண்டி மாநகர எல்லைக்குட்பட்ட மஹியாவ பகுதி கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் சுமார் 3 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மஹியாவ பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டாலும் அங்கு திட்டமிட்ட அடிப்படையில் அரச மற்றும் சுகாதார பொறிமுறை இயங்கவில்லை. இதன்காரணமாகவே ஒரு மாதம்வரை முடக்கல் நடவடிக்கை காலவரையறையின்றி தொடர்கின்றது.

அப்பகுதியில் வாழும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை, பிசிஆர் பரிசோதனை மற்றும் உடனடி எட்டிஜன்ட் பரிசோதனை ஆகியன திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் தொற்றாளர்களை அடையாளம் கண்டு , அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசென்று, 14 நாட்களுக்கு பிறகு மஹியாப பகுதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்திருக்கலாம்.

எனவே, இனியும் தாமதம் வேண்டாம். உடனடி என்டிஜன் பரிசோதனைகளை துரிதப்படுத்தி, தனிமைப்படுத்தலில் இருந்து மஹியாவ பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – எனவும் வேலுகுமார் எம்.பி. சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, மஹியாவ மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தையும் வேலுகுமார் எம்.பி. ஈர்த்துள்ளார்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும்...

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா...

717 மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

0
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765...