Home Blog Page 3681

மத்திய மாகாணத்தில் 2,679 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் 2 ஆயிரத்து 679  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் இரண்டு பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை 2,059 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 175 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 1,001 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கம்பளையில் இருவேறு பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா

கம்பளையில் இருவேறு பகுதிகளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி கடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கம்பளை தொழுவ சுகாதார பிரிவுக்குட்பட்ட கம்பளவத்த பகுதியைச் சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களும், அவருடன் நெருங்கி பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குடும்ப உறுப்பினர்களிடம் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு (இரு ஆண்கள், இரு பெண்கள்) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியைச் சேர்ந்த மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றாளர்கள் அனைவரும் பொல்கொல்ல கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

மாத்தளை மேயராக சந்தனம் பிரகாஸ் தெரிவு!

மாத்தளை மாநகரசபை முதல்வராக பிரதி மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகரசபையின் முதல்வர் பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி புதிய மாநகர முதல்வரை ஒருவரை தெரிவுசெய்யும் போட்டி மத்திய மாகாண உள்ளாட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

பிரதி முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமிடையில் போட்டி நிலவியது.

இரகசிய வாக்கெடுப்பின்போது சந்தனம் பி ரகாஸ்க்கு ஆதரவாக 10 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜயசேகரவுக்கு 9 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு மேலதிக வாக்கால் பிரகாஸ் வெற்றிபெற்றுள்ளார்.

மாத்தளை மாநகரசபையின் முதல்வராக இருந்த அலுவிகார அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

1000 ரூபா விடயத்தில் அடுத்த கட்டம் என்ன? திங்களன்று அமைச்சரவை ஆராயும்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது என ஆளுங்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தொழில் அமைச்சர் தலைமையில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இது விடயம் குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தவுள்ளதுடன், மாற்று யோசனையையும் முன்வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்களின் முகாமைத்துவம் மீள் பரீசிலனை செய்யப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

‘ஆயிரம் ரூபா விடயத்தில் பல்டி’ வேண்டாம் – உடன் வெளியேறவும்! இணைந்து போராட இ.தொ.காவுக்கு திகா அழைப்பு!!

ஆயிரம் ரூபா விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை ‘பல்டி’ அடிக்க முடியாது. கம்பனிகள் இழுத்தடிப்பு செய்வதால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் உடன் வெளியேறவேண்டும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன்பின்னரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கினார். ஆயிரம் ரூபா தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பாதீடு ஊடாக முன்வைத்தார்.

தாம் ஆளுங்கட்சியில் இருப்பதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இருப்பதாலும் ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் வழங்கியது. ஆனால் தற்போது ஆயிரம் ரூபா விடயத்தில் ‘பல்டி’யடிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்கமுடியாது. ஆகவே, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறினால் அனைவரும் இணைந்து, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடலாம்.

‘கொரோனா’ – மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.53, 62 மற்றும் 89 வயதுடைய ஆண்கள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 209 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘உயிரிழந்த யாசகரின் பையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம்’

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த யாசகர் ஒருவரின் பையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் இருந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த மூன்று நாட்களாக கிசிச்சை பெற்று வந்த குறித்த நபர் இன்று உயிரிழந்தார்.

அவர் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயம், வங்கிகளுக்கு முன்னாள் நின்று தர்மமம் பெற்று வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மரணித்த பின்னர் அவர் வைத்திருந்து பழைய பைகளில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் இருந்தமை வைத்தியசாலையால் கண்டறியப்பட்டுள்ளது. உறவினர்கள் எவருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆவது அலைமூலம் 42,753 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 661 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 42 ஆயிரத்து 753 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

1000 ரூபா வழங்க கம்பனிகள் மறுப்பு! கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலக தொழிற்சங்கங்கள் முடிவு!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் பச்சைக்கொடி காட்டாவிட்டால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு அதில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டமைப்பு ஆகியனவே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

தொழில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொழிற்சங்க மற்றும் கம்பனிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். எனினும், நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.

இதனையடுத்தே ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரதான மூன்று தொழிற்சங்கங்களும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா’விலிருந்து 39,661 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 638 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 368 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 219 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா...

717 மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

0
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765...

அலகல தோட்டம்: கற்பாறைகளின் மேல் ஊசலாடும் வாழ்க்கை !

0
கட்டுரையாளர் - : வேலு இந்திரசெல்வன் 'நேர்படப் பேசு' – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508...