Home Blog Page 3682

‘இந்திய வீட்டுத் திட்டம் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவேண்டும்’

” மலையகத்தில் கடந்த ஒரு வருடமாக எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கின்றது. எனவே, இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்படவேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து, பேச்சு நடத்தியது.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் பெற்றனர்.

இதன்போது இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கடந்த ஒருவருடமாக மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கிறது, ஆகவே இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்,

ராமேஸ்வரம்-மன்னார், தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவையை ஆரம்பிக்க உங்கள் பக்கத்தில் ஆவன செய்யுங்கள், நோர்வூட் கிளங்கன், நுவரெலியா மருத்துவமனைகளுக்கு பிசிஆர் இயந்திரங்கள் இரண்டு கொடுங்கள், இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கி கூறி எடுத்து காட்டுங்கள் ஆகிய கோரிக்கைககள் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், 13ஆம் திருத்தம், மாகாணசபைகள் தொடர்பான இந்திய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது, புதிய அரசியலமைப்பு வரைபு குழுவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி யோசனைகளை முன் வைத்துள்ளது, எதிரணியில் இருந்தாலும் நாமே, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பெரிய அரசியல் இயக்கம், இன்றைய இலங்கை அரசு செல்வாக்கு இழந்து வருகிறது. வெகு விரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை எமது தேசிய கூட்டணி உருவாக்கும், ஆகிய கருத்துகளும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

மேலும், இன்றைய நரேந்திர மோடி அரசே, இலங்கையில் வாழும் எமது மக்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை நாம் பிரதமர் மோடிக்காக நோர்வுட்டில் கூட்டினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள், சந்திப்பின் போது கலந்துக்கொண்டனர்.

அமெரிக்க செனட் சபை கலவரம் – நால்வர் பலி! 52 பேர் கைது!

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். எதிர்வரும் 20 ஆம் திகதி அவரது பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பைடன் பொறுப்பேற்கவுள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் சூழலில், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் நாடாளுமன்றத்தில் நடந்து வருகின்றன. இதற்காக உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள் என பதிவிட்டார்.

தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது நேற்று மதியம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்புடன் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில், டிரம்பின் 3 டுவிட்டர் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குடிமக்கள் ஒற்றுமை அல்லது வன்முறை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்புடைய டுவிட்டரின் கொள்கை விதிகளை மீறும் வகையிலான செயல்கள் வருங்காலத்தில் நடைபெற்றால், டொனால்டு டிரம்பின் கணக்கு நிரந்தரம் ஆக முடக்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவன ஒருமைப்பாடு துணை தலைவர் கை ரோசன் கூறும்பொழுது, வீடியோவை நாங்கள் நீக்கியுள்ளோம். ஏனெனில், அது நடந்து வரும் கலகங்களை மறைப்பதற்காக அல்ல. ஓரளவு வன்முறை கட்டுக்குள் வருவதற்கான சமநிலையை அது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனமும் டிரம்பின் கணக்கை 24 மணிநேரம் முடக்கம் செய்துள்ளது.

இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொஸ்சேரி கூறும்பொழுது, அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எங்களுடைய நிறுவனத்தின் 2 கொள்கை விதிகளை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதனால், அந்த கணக்கு 24 மணிநேரம் முடக்கப்படுகிறது. அந்த நேரத்தில், சமூக பக்கத்தில் அவரால் பதிவு எதுவும் பதிவுகளை வெளியிட முடியாது என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கதவை உடைத்து அத்துமீறி நுழைய முயன்றனர். அந்த கும்பல் மீது நடத்தப்பட்ட பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மருத்துவ சிகிச்சையில் பலனின்றி 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, கலகத்துடன் தொடர்புடைய 52 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘தோட்டப்பகுதி வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும்’

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள  வைத்தியசாலைகளை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். வைத்தியசாலையொன்றுக்கு இரு வைத்தியர்கள் வீதம் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகளில் எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் இல்லை. ஈ.எம்.ஓக்களே இருக்கின்றனர். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘பொகவந்தலாவையில் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையம்’

பொகவந்தலாவை மோரா தோட்டப் பகுதியில் இயங்கி வந்த தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகம் நேற்று புதன்கிழமையிலிருந்து கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட ஆரம்பித்துள்ளது என்று மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிகால்வீரசூரிய தெரிவித்தார்.

மேற்படி சிகிச்சை நிலையத்தில் முதற்கட்டமாக லிந்துலை, பத்தனை ஆகிய பகுதியிலிருந்து 10 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களும் இதில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை காரணமாக, தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு – தனிமைப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் மூன்று நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டன.

இதில் பொகவந்தலாவை மோரா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் மாத்திரம் ஒரே தடவையில் 138 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘மலையக மக்களுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும்’

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (7) கொழும்பிலுள்ள இந்திய உயர்த்தானிகரின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெற்றது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என சந்திப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் 993 பேருக்கும், கண்டியில் 1,987 பேருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை இரத்தினபுரி மாவட்டத்தில் 993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2ஆவது அலைமூலம் மேற்படி மாவட்டத்தில் ஆயிரத்து 987 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 19,196 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 19 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 206 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் அணியை கிலிகொள்ள வைக்கும் சம்பிக்கவின் ‘43’ இயக்கம்!

ஜாதிக ஹெல  உறுமயவிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் முடிவை எடுத்துள்ள சம்பிக்க ரணவக்க,43 ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் பணியில் இறங்கியுள்ளமையானது சஜித் அணியினரை கிலிகொள்ள வைத்துள்ளது என கொழும்பு அரசியல் களத்தில் கதை அடிபடுகின்றது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்தே சம்பிக்க ரணவக்க, மேற்படி அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமையை பெறுவதற்கு தயாரான சம்பிக்க ரணவக்க எதற்கு இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற வினாவுக்கு சஜித் அணியினரிடமும் தெளிவான பதில் இல்லை. அரசாங்கத்துக்குஎதிராக பல அணிகள் செயற்படுவது சிறப்பு என சஜித் அணியினர் கூறினாலும், அவர்கள் மத்தியில் ஒரு குழப்பநிலை இருப்பதை ஊகிக்கமுடிகின்றது.

இதன்காரணமாகவே 2024 இல் நடைபெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது தமது அணி வேட்பாளர் யார் என்பதனை தற்போதே வெளிப்படையாக அறிவிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமல்ல தமது கட்சி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

சஜித்தின் பெயரை இவ்வாறு முன்னிலைப்படுத்தி, சம்பிக்க களமிறங்கமாட்டார் என்ற தகவலை சமூகமயப்படுத்துவதே மேற்படி அறிவிப்புகளின் கருப்பொருளாகும். எனினும், அரசியல் களத்தில் இறுதிநொடியில்கூட மாற்றங்கள் நிகழக்கூடும். இதன்காரணமாகவே சம்பிக்கவின் புதிய இயக்கம்மீது சஜித் அணி கண் வைத்துள்ளது.

’43 ஆம் பிரிவு’ எனும் அரசியல் இயக்கமானது, இது இலக்கமல்ல தலைமுறை என்ற மகுடனத்தின் கீழ் அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின் பிறகு செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்த இயக்கத்துக்கு இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்க்பபட்டுவருகின்றது.

1943 ஆம் ஆண்டில்தான் இலங்கையில் இலவசக்கல்விக்கான சட்டமூலம் இயற்றப்பட்டது. தரம் ஒன்று முதல் பல்கலைக்கழக கல்விவரை இலவசக்கல்வி வழங்கப்பட்டது. இதுவே இலங்கையில் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது. எனவேதான் ’43’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

ஆன்மீகத்துக்குள் மூழ்கிய நடிகை அமலாபால்

ஆன்மிகத்துக்கு மாறிய நடிகை அமலாபால், ஆசிரமத்தில் தியானம் செய்து வருகிறார்.

நடிகை அமலாபால் ஆன்மிகத்துக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் எனக்கு ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்து இருக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் தியானம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உள்மனதை பற்றி கற்றுக்கொள்ள எனது 19-வது வயதில் முதல் முதலாக ஈஷா யோகா மையத்துக்கு சென்றேன்.

அப்போது சத்குருவிடம் 3 கேள்விகள் கேட்டேன். அதற்கான விடைகள் யோகா பயிற்சியில் இருக்கிறது என்றார். அது எனக்கு அப்போது புரியவில்லை. அதை ஏற்றிருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வந்து இருக்கும். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்த பிறகு எனது வாழ்க்கை முழு வட்டத்துக்குள் வந்து விட்டது. இது ஆன்மிகத்தின் சிறப்பான தொடக்கம்’’ என்று கூறியுள்ளார்.

ஆன்மிகத்துக்கு மாறிய அமலாபாலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒரு புறமிருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார்.

டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த
போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.

குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கமான @realDonaldTrump பக்கத்தில் இருந்து சில டுவிட்டுகள் செய்தார்.

இந்த டுவிட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிகளை மீறியதற்காக
அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

அடுத்த 12 மணி நேரம் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னரும் தொடர்ந்து டிரம்ப் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா...

717 மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

0
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765...

அலகல தோட்டம்: கற்பாறைகளின் மேல் ஊசலாடும் வாழ்க்கை !

0
கட்டுரையாளர் - : வேலு இந்திரசெல்வன் 'நேர்படப் பேசு' – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508...