Home Blog Page 3683

21/4 தாக்குதல் – நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைமீது திருப்தி இல்லை!

ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக நல்லாட்சியின்போது நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தற்போதைய அரசுக்கு திருப்தி இல்லை –  என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி., நலின் பெர்ணான்டோவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” 21/4 தாக்குதல் தொடர்பில் எமது அரசால் பரந்தப்பட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின்போது வெளிவராத பல தகவல்கள், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைமூலம் வெளிவந்துள்ளன. இதன்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்து எமது அரசுக்கு திருப்தி இல்லை.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் 2021 ஜனவரி 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. அவ்வாறு நிறைவடைந்த பின்னர் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்றும் சரத் வீரசேகர கூறினார்.

ஆயிரம் ரூபா கிடைக்குமா? நாளை கூட்டு ஒப்பந்த பேச்சு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நாளை (07) நடைபெறவுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு ஒப்பந்த பேச்சில், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

தமக்கான அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனினும், இந்த கோரிக்கையை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துவருகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அடிப்படை நாட் சம்பளமாக 700 ரூபாவை பெறும் நிலையில் அதனை 750 ரூபாவரை அதிகரிப்பதே கம்பனிகளின் எதிர்ப்பார்ப்பு. தொழிற்சங்கங்களும் இழுத்தடிப்பு செய்துவருகின்றன.

இந்நிலையிலேயே நாளை தீர்க்கமான சந்திப்பு நடைபெறவுள்ளது.

‘ஊதிய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஶ்ரீதரன்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.ஊழியர் சேமலாப நிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற கொடுப்பனவுகளையும் உள்ளடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குகின்றோம் என்று கூறுவது வெறும் மாயை ஆகும்.

இதனை தொழிலாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆகவே தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் நாங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.” – என்று குறிப்பிட்டார்.

இன்று மாத்திரம் 521 பேருக்கு கொரோனா – இருவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 269 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 521 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 42 ஆயிரத்து 498 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவரும்,  அலவ்வ பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

‘இலங்கைக்கு பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு நடவடிக்கை’

கொரோனா தொற்றிலிருந்து இலங்கை மக்களை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான தடுப்பூசியை அடையாளம் காண்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” தடுப்பூசியை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவு, தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான வெப்பநிலை தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இவை தொடர்பிலான விடயங்களை அங்கீகரிக்கப்பட்ட மருந்தக ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் மூலம் பெறப்பட்ட அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் .

தற்பொழுது வெளிவந்துள்ள தடுப்பூசிகள் பொரும்பாலானவற்றுக்கு இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதி என்ற வகையில் லலித் வீரதுங்க பல்வேறு நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.

கொவிட் தடுப்பூசி தொடர்பாக ழுழுமையாக மதிப்பீடுகளை மேற்கொண்டு இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கைக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன. இலங்கையில் தேசிய நோய் எதிர்ப்பு சக்தி கொள்கைக்கு உட்பட்ட வகையில் உரிய தடுப்பூசியை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான தொற்று நோய்க்கான ஆலோசனைக் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

தடுப்பூசி வழங்குவதை இலக்காக கொண்ட குழு தடுப்பூசி வழங்கப்படும் இடம், களஞ்சியப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பாகவும் இதனுடன் தொடர்புப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் Vaccine Deployment என்ற திட்டத்திற்கு அமைவான ஆலோசனை குழு இதற்கான வரைவுகளை மேற்கொண்டுள்ளது.  தடுப்பூசி கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பிலுள்ள சட்ட விதிகள் தொடர்பிலும் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடக்கம் உலக சுகாதார அமைப்புடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் கொவக்ஸ் (Covax) வசதிகளுக்கான வெற்றிகரமான கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக ஜெனிவாவிலுள்ள தடுப்பூசி அமைப்புகளான Global Alliance for Vaccines and Immunizations என்ற அமைப்பிடம் 2020.07.20ஆம் திகதி கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டதாவும் இதற்கமைவாக கொவக்ஸ் வசதிகளை வழங்குவதற்கு உறுதிமொழி தெரிவிக்கபட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைவாக கொவக்ஸ் வேலைத்திட்டதின் கீழ் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கை செய்து கொண்ட நாடு இலங்கையாகும். மக்கள் தொகையில் 20% பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.

‘கொரோனா’விலிருந்து மேலும் 761 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 761 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 486 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 217 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘தேயிலை மலையில் குப்பை’ – எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பொகவந்தலாவை, செல்வகந்த தோட்டப்பகுதியில் தேயிலை மலையில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06.01.2021)  காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான விதியில் சிறிபுர பிரதேசத்திற்கு திரும்பும் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள, குறித்த தேயிலை மலைக்கு பொகவந்தலாவை சிறிபுர பகுதியில் வசிக்கும் மக்கள் நாள் தோறும்  கழிவு பொருட்களை வீசி வருகின்றனர்.

கழிவு பொருட்களில் கண்ணாடி துண்டுகள், பெம்பஸ் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுவதாகவும் சில இடங்களில் மாணிக்கல் அகழப்பட்ட பாரிய குழிகள் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிலினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேனீர் இடைவேளைகளின் போது நிம்மதியாக தேனீர் கூட அருந்த முடியாத நிலை காணப்படுவதாகவும் இது குறித் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட  இடத்திற்கு நோர்வூட் பிரதேசசபையின் தலைவர்  மற்றும் சுற்றாடல் தொடர்பாக கடமை புரியும் அதிகாரிகள் சென்றனர். அதன் போது ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் தலைவருக்குமிடையில் காரசாரமான வாக்கு வாதங்கள் இடம்பெற்றன.

தொழிலாளர்கள் தேயிலை மலைக்கு குப்பை போடுவதனை நிறுத்து வேண்டும் என்று பொலிஸாரிடமும் தலைவரிமும் கோரிக்கை விடுத்தனர்.  தனால் அங்கு அமைதியின்மை நிலவின.

அதனை தொடர்ந்து சிறிபுர பகுதியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கமாரா பொருத்தப்பட்டு கவனிப்பதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை கட்சி பேதமின்றி எடுப்பதாக தெரிவித்தனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

க.கிசாந்தன்

‘கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுங்கள்’ – இ.தொ.காவிடம் திகா கோரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும். அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06.01.2021) அட்டன், மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற திகாம்பரம் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். அதனை நோக்கியே பேச்சுவார்த்தை தொடரவேண்டும். அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் கையொப்பமிடமாட்டேன் என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பை வரவேற்கின்றோம். அதேபோல் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் ஏனைய தொழிற்சங்கங்களும் வெளியேறவேண்டும். அவ்வாறு வெளியில் வந்தால் அனைவரும் இணைந்து போராடலாம்.” – என்றார்.

க.கிசாந்தன்

தடைகள் வந்தாலும் முன்நோக்கிச் செல்வோம் : கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்

எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து மக்கள் பணிக்காக முன்நோக்கி செல்வோம் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் மீண்டும் மக்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”முழு உலகமும் கொரோனா நெருக்கடியினால் தடுமாறியுள்ள நிலையில், அதனை வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருகிறது. எனவே, கைககளைக் கழுவிக்கொண்டு, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பேணி எமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு முன்னெடுத்து வந்த நிலையில், நாம் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது. எனினும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியதால் அந்த கொவிட்டி தொற்றில் இருந்து தப்பித்துக் கொண்டோம். இருந்தாலும் பாதுகாப்பிற்காக சுய தனிமைப்படுத்திக் கொண்டோம். தற்போது பாதுகாப்பாக மக்கள் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். அதனால் பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

  • சுசி

‘அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வேண்டும்’ – முற்போக்கு கூட்டணி போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஹட்டன், மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ. ஶ்ரீதரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என கோஷம் எழுப்பட்டதுடன், தற்போதைய வாழ்க்கைச்சுமை அதிகரிப்பையும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கமைய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

717 மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

0
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765...

அலகல தோட்டம்: கற்பாறைகளின் மேல் ஊசலாடும் வாழ்க்கை !

0
கட்டுரையாளர் - : வேலு இந்திரசெல்வன் 'நேர்படப் பேசு' – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508...

மரக்கறி விலைப்பட்டியல் (12.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...