Home Blog Page 3684

முதன்முறையாக சங்கமிக்கும் வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகியதால், அவருக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, திடீரென விலகியதால் அவருக்கு பதில் கிஷோர் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவரும் விலகியதால், அந்தக் கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதற்காக அவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம்.

முதலில் ‘வடசென்னை’ படத்திலேயே விஜய் சேதுபதி – வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. பின்னர், அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறிப்பிடத்தக்கது.

பழிதீர்த்தது தென்னாபிரிக்கா – 2ஆவது போட்டியிலும் மண்கவ்வியது இலங்கை அணி!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டிலும் தென்னாபிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமானது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 157 ஓட்டங்களையும், தென்னாபிரிக்கா 302 ஓட்டங்களையும் எடுத்தன. அடுத்து 145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 2ஆவது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 150  ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3ஆவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக 10ஆவது சதத்தை நிறைவு செய்த அணித் தலைவர் கருணாரதன, 103 ரன்களில் (128 பந்து, 19 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 67 ஓட்டங்கள் இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி சொந்த மண்ணில் இலங்கையிடம் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதற்கு தற்போது பழிதீர்த்துக் கொண்டது.

கிரிக்கெட்டுக்கு 50 வயது – இதுவரை 4,267 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன…

சர்வதேச ஒரு நாள் போட்டி அறிமுகமாகி நேற்று 50 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே மெல்போர்னில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முதல் 1971 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதிவரை நடக்க இருந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக இவ்விரு அணிகள் இடையே 40 ஓவர் அடிப்படையில் சர்வதேச போட்டி ஒன்றை 1971ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதியில் இருந்தே மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 190 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்த இலக்கை ஆஸ்திரேலியா 35 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை ஆரவாரத்துடன் உற்சாகமாக கண்டுகளித்தனர். இது தான் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் உதயமாவதற்கு அடித்தளமாக அமைந்தது.

அத்துடன் அது முதலாவது ஒரு நாள் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாள் போட்டி அறிமுகமாகி நேற்று 50-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.

தொடக்கத்தில் ஒரு நாள் போட்டி 60 ஓவர், ஓவருக்கு 8 பந்து என்ற வகையில் நடத்தப்பட்டது. காலப்போக்கில் 50 ஓவர் என்பது நிரந்தரமானது. வீரர்கள் வெள்ளை நிற சீருடையில் இருந்து வண்ண உடைக்கு மாறினர்.

சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க பவர்-பிளே, பிரிஹிட், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் என்று பல புதுமைகள் புகுத்தப்பட்டன. இதுவரை 4,267 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இந்தியா 990 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது.

25 நாட்கள் வேலை வேண்டும் – மஸ்கெலியாவில் போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (06.01.2020) முற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், கருப்புபட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்ற கோரிக்கை 2014 இல் முன்வைக்கப்பட்டது. தற்போது 6 வருடங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.

அதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதிசெய்யவேண்டும். இது விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம்.” – என்று போராட்டக் காரர்கள் கருத்துரைத்தனர்.

க.கிசாந்தன்

அமரர் அருள்சாமியின் 2ஆவது சிரார்த்த தினம் இன்று

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் அமரர் அருள்சாமியின் இரண்டாவது சிரார்த்த தினம் இன்றாகும்.

தனது 16 வயதில் இ.தொ.காவில் கால் பதித்தவர் அமரர் அருள்சாமி. இ.தொ.காவில் இணைந்து கொண்ட அருள்சாமி தனது இறுதிக் காலம் வரை தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்தார்.

43 ஆண்டுகள் அரசியல், தொழிற்சங்க பணிகளில் சேவையாற்றி வந்த அமரர் அருள்சாமி அமரர் தொண்டமானின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்.

1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் போட்டியிட்ட வேளையில், அவரது வெற்றிக்கான உழைத்தவர். மலையக சமுதாயதுக்காக இறுதி வரை அவர் பாடுபட்டார். மனிதத்துவம் என்ற ரீதியில் சிறியோரையும் பெரியோரையும் சமமாக உயர்ந்த நிலையில் மதிக்கும் உயரிய பண்பு இவரிடம் நிறையவே காணப்பட்டது.

மும்மொழியிலும் சரளமாகப் பேசக் கூடிய புலமையைப் பெற்றிருந்தவர் அவர். தொழிற்சங்க போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய செயல் வீரர் எனலாம்.

மத்திய மாகாணத்தில் 1988ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அடுத்து வந்த மாகாணசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக பணி புரிந்தவர். இக்காலத்தில் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர் அருள்சாமி.

2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதேசத்திற்கான இணைப்பு பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

காத்திருப்பு பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவராக அங்கம் வகித்தவர். இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் 2018ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வின் போது தன்னை முழுமையாக அர்ப்பணித்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க பாடுபட்டவர்.

கலை, கலாசார ரீதியாகவும், சமூக மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றார்.

இ.தொ.கா வின் வளர்ச்சியில் அருள்சாமிக்கு பெரும் பங்கு உண்டு. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அஹிம்சை வழியில் அமைதியாக போராடினால் வெற்றி கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டியவர் அமரர் அருள்சாமி.

தொழிற்சங்கத் துறையில் மனிதரில் மாணிக்கமாக அமரர் அருள்சாமி விளகுகின்றார். அவர் மறைந்து இரு வருடங்கள் சென்றாலும், அன்னார் முழு மலையக மக்களின் உள்ளங்களில் என்றுமே வீற்றிருக்கின்றார்.

இ.தொ.காவின் ஊடகப் பிரிவு

1000 ரூபாவுக்காக மல்லியப்பு சந்தியில் களமிறங்கும் திகா!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் , முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரமும் பங்கேற்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக்கருத்திற்கொண்டு, தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கமையவே இப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘தங்க முட்டையிடும் தோட்டக் கம்பனிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே சம்பள உயர்வு’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிலாளர்களுக்கோ, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நிதானமாகவே தீர்மானங்கள் எடுக்கப்படுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றதொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளித்துள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். பெருந்தோட்டத் துறைகளில் தொழிற்சங்க தலைவர்கள் எப்போதும் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலைமைக்குள் 1,000 ரூபாவை கொடு என்றதும் அதனை செய்துவிட முடியாது. அரசாங்கம் என்ற வகையில் இந்த விடத்தில் தங்க முட்டை போடும் கோழிகளை கொன்று சாப்பிட முடியாது. இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும்.

இதனாலேயே ஒரேடியாக அடிப்படை சம்பளத்தை உயர்த்திவிட முடியாது. ஆகவே அறிவுபூர்வமாக கலந்துரையாடி தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பாக நேற்று ( நேற்று முன்தினம்) இறுதி தீர்மானம் எடுக்கப்படவிருந்தது. ஆனால் கொரோனா நிலைமையால் சில தொழிற்சங்க தலைவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த தினத்தில் அதனை நடத்த முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் 07 ஆம் திகதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதன்போது முடிந்தளவுக்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்களுக்கு இடையே சுமுகமாக இது தொடர்பாக தீர்வினை கண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு வரக் கூடிய தேவையான பின்னணியை உருவாக்குவோம். இதில் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை கைகளில் கிடைக்கச் செய்ய வேண்டிய முறைமை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்தாக உள்ளது.

ஆகவே இந்த விடயத்தில் அவசரப்படத் தேவையில்லை. இவ்வளவு காலம் இருந்துவிட்டோம் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம். தொழிற்துறையை அழித்து சம்பள அதிகரிப்பை வழங்கிவிட முடியாது.

எவ்வாறாயினும் அந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று தெரிவித்தார்.

‘தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும்’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற ‘குறைந்தபட்ச வேதனங்கள்’ (இந்திய தொழிலாளர்கள்) (திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இலங்கையர்கள். எனவே, இந்திய தொழிலாளர்கள் என சட்டமூலத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது 750 ரூபாவை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஏற்கமுடியாது. அடிப்படை நாட் சம்பளமாக அவர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவேண்டும்.

சட்டத்தை திருத்துவதைவிட பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்திலான புதிய சட்டம் அவசியம். அதில் அடிப்படை சம்பளமும் உரிய வகையில் நிர்ணயிக்கப்படவேண்டும். அதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவேண்டும்.” – என்றார்.

இன்று மாத்திரம் 479 பேருக்கு கொரோனா – இருவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 479 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 262 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 41 ஆயிரத்து 977 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் 65 வயதைக்கடந்தவர்கள். இதன்படி கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 255 பேருக்கு கொரோனா – ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 479 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 262 பேர் குணமடைந்துள்ளனர். 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 41  ஆயிரத்து 977 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் 65 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

717 மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

0
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765...

அலகல தோட்டம்: கற்பாறைகளின் மேல் ஊசலாடும் வாழ்க்கை !

0
கட்டுரையாளர் - : வேலு இந்திரசெல்வன் 'நேர்படப் பேசு' – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508...

மரக்கறி விலைப்பட்டியல் (12.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...