Home Blog Page 3685

‘தென்னாபிரிக்காவில் பரவும் புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி பலன் அளிக்காமல் போகலாம்’

தென்னாபிரிக்காவில் காணப்படும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல நாடுகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும், தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

“தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசில் உள்ள புரதத்தில் பல பிறழ்வுகளை கொண்டுள்ளது. இது அதிக தாக்கத்துடன் நோயாளிகளின் உடல்களில் வைரஸ் துகள்களை செறிவூட்டுகின்றன. இதனால் அதிகளவில் பரவுவதற்கு பங்களிக்க கூடும்” என்றனர்.

இங்கிலாந்து அரசின் தடுப்பூசி பணிக்குழு ஆலோசகர் பெல் கூறும் போது, “இங்கிலாந்தில் பரவும் புதிய மாறுபாடு வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யும் என்று நினைக்கிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

நாட்டில் மேலும் 224 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 224 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 262 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 41 ஆயிரத்து 772 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபா அவசியம் – கூட்டமைப்பு வலியுறுத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் சாதகமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சபையில் தெரிவித்தார்.

‘கொரோனா’விலிருந்து மேலும் 445 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 445 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 765 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரம் ரூபா அவசியம் – கூட்டணி உறுப்பினர்கள் சபையில் கூட்டாக வலியுறுத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியது.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன், உறுப்பினர் உதயா ஆகியோர்,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது. எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை என்ற பல்லவி வேண்டாம். நடக்கவில்லை என்பதால்தான் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.” – என்றனர்.

லிந்துலை சுகாதார பிரிவில் 10 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை சுகாதார பிரிவில் இன்று (05.01.2021) 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி லிந்துலை ராணிவத்தை தோட்டம், மவுசாஎல்ல தோட்டம், நோனா தோட்டம், வோல்ட்றீம் தோட்டம், அக்கரப்பத்தனை தொன்பீல்ட் ஆகிய தோட்டங்களில் தலா ஒரு தொற்றாளர்கள் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள்.

ஏனைய ஐந்து தொற்றாளர்களும் லிந்துலை தியனலகல தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் வட்டவளை ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள்.

தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

‘தோட்டத் தொழிலாளர் விடயத்தில் அரசு பித்தலாட்டத்தை கைவிடவேண்டும்’

” அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களின் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இவர்களின் நலன்களை பேணாத அரசாங்கம், தனியார் கம்பெனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நலன்கள் குறித்து பேசி வருவது வேடிக்கையான விடயமாகும்.

அரசாங்கம் இத்தகைய பித்தலாட்ட நிலைமைகளைக் கைவிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதில் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பி. யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டங்களும், தொழிலாளர்களும் இன்று மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் இவற்றிலிருந்தும் மீட்டெடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பு காணப்படுகின்றது. இல்லையேல் தோட்டங்களினதும் இருப்பு கேள்விக்குறியாகும்.

சுதந்திரத்திற்கு முன்னும்சரி சுதந்திரத்திற்கு பின்னும்சரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு சவால்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இவற்றுள் பொருளாதாரச் சவால் மிகவும் முக்கியமானதாகும். இச்சவால் காரணமாக மலையக சமூகத்தின் நிகழ்காலமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றது.

இலங்கை வரலாற்றில் தோட்டத் தொழிலாளர்கள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. இனியும் இந்த வரலாற்றினைத் தொடர விடுவதா? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்து பேசப்பட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு அரசாங்கங்கள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. இந்த இரண்டு அரசாங்கங்களுக்கும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் உண்மையான மனப்பாங்கு இருக்கவில்லை.

தேர்தல் காலங்களில் மேலெழும்பும் கோஷங்களும் கோரிக்கைகளும் பின்னர் கீழிறங்கிப் போவது வரலாறாகும். இதுவே இம்முறையும் நடந்தேறி இருக்கின்றது. ஆயிரம் ரூபா என்பது பேச்சளவில் முற்றுப்பெற்றுள்ளது. கம்பெனிகளுடன் எவ்விதமான கலந்துரையாடல்களிலும் ஈடுபடாத அரசாங்கம், வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போவதாக உறுதியளித்திருந்தது. எனினும் இந்த வாக்குறுதியின் நம்பகத்தன்மையை பெருந்தோட்ட மக்கள் இப்போதுதான் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலை நாட்கள் குறைவாக வழங்கப்படுகின்ற நிலையில் வேலை நாட்களுக்குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதிலும் இழுபறிநிலை காணப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இவற்றை தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டாத அரசாங்கம், கம்பெனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நலன்கள் குறித்து பேசி வருவது வேடிக்கையான விடயமாகும். அரசாங்கம் இத்தகைய பித்தலாட்ட நிலைமைகளைக் கைவிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவது குறித்து இதயசுத்தியுடன் செயற்படவேண்டும்.

சமகால வாழ்க்கை நிலைமைகளை கருத்தில்கொண்டு நோக்குகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாவையேனும் நாளாந்தம் வழங்குதல் வேண்டும். ஆனால் ஆயிரம் ரூபாவுக்கே இழுபறியாக இருப்பது வேதனைக்குரியதாகும் என்றார்.

-ஊடகப்பிரிவு-

சவால்களை எதிர்கொள்ள தயார் – நடராஜன்

வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள தயார் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார். முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு  முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.

‘அடிப்படை சம்பளத்தை பாராளுமன்றம் நிர்ணயிக்க வேண்டும்’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும், பாராளுமன்றத்தின் ஊடாக அது ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அடிப்படை சம்பளமானது நாடாளுமன்றத்தின் ஊடாக நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

‘குறைந்தபட்ச வேதனங்கள்’ (இந்திய தொழிலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (04) நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே வேலுகுமார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

வேலைக்கு ஆட்களை சேர்க்கும் வயதெல்லையை 15 இல் இருந்து 16 ஆக அதிகரிப்பதற்காகவே மேற்படி சட்டதிருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏற்பாட்டை வரவேற்றாலும் இச்சட்டம் நடைமுறைக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படாமை தவறாகும் என வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

14 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அரிசி மானியம் வழங்கப்படவேண்டும் என முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஏற்பாடும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அரிசி மானியம் என்பது இல்லை. இதனை வழங்காத பட்சத்தில் 100 ரூபா தண்டப்பணம் என்பதும் உள்ளது. இவை தற்போதைய நிலைக்கேற்ப மாற்றப்படவில்லை. எனவே, முழுமையானதொரு திருத்தம் அவசியம் எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறைந்தபட்ச வேதனத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடு இருந்தும், நடவடிக்கைகள் யாவும் இதுவரை மூடிமறைக்கப்பட்டே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நாடாளுமன்றமே இனி நிர்ணயிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அப்புத்தளை நகரின் புதிய மேயராக உபுல் திசாநாயக்க பதவியேற்பு!

அப்புத்தளை நகரின் புதிய மேயர் உபுல் திசாநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று (2021.01.05) பதவியேற்றார்.

முன்னாள் மேயர் சம்பத் லமாஹேவா பதவி விலகலை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் உபுல் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த உபுல் திசாநாயக்க  , இதற்கு முன்னரும் அப்புத்தளை மேயராக பதவி வகித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில்  இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே,  பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

717 மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

0
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765...

அலகல தோட்டம்: கற்பாறைகளின் மேல் ஊசலாடும் வாழ்க்கை !

0
கட்டுரையாளர் - : வேலு இந்திரசெல்வன் 'நேர்படப் பேசு' – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508...

மரக்கறி விலைப்பட்டியல் (12.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...