Home Blog Page 3673

ட்ரம்பை பதவிநீக்கம் செய்யும் யோசனை நிராகரிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடைமுறைகளை தடுக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டித்தனர்.

பாராளுமன்றத்தில் வன்முறையை தூண்டிவிட்ட டிரம்பை பதவி நீக்கம் செய்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கின. இதற்காக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். பதவிநீக்கம் செய்வதற்கான 25-வது திருத்தத்தை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். தனது முடிவை பாராளுமன்ற தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டரால்’ ஹவுஸ்புல்லான யாழ். திரையரங்கு பூட்டு!

சுகாதார நடைமுறைகளை மீறியதால் யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.

அதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியானது. பல இடங்களிலும் பலர் படத்தை பார்வையிடுவதற்கு செல்கின்றனர். சில இடங்களில் சுகாதார நடைமுறைகள்கூட உரியவகையில் பின்பற்றடப்படவில்லை.

தலைமைப்பதவியை தக்கவைத்தார் ரணில் – பொதுச்செயலாளராக பாலித!

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தனவும், உப தலைவராக அகில விராஜ்காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப்பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் இவ்வருடத்துக்குள் சபைக்கு!

புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்டமூலத்தை இவ்வருடத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசாங்கத்தால் 11 பேரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

மேற்படி குழு பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால்மூலம் கருத்துகளை கோரியது. இதன்படி பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட பல கட்சிகளும் காத்திரமான முன்மொழிவுகளை அனுப்பிவைத்துள்ளன.

புதிய அரசியலமைப்புக்கான இக்குழுவின் யோசனை எதிர்வரும் மார்ச்சில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, அமைச்சவை அனுமதி உட்பட சட்டபூர்வமான ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியான பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

தனது இரண்டாவது பதவிகாலம் முடிவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்குவரும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதன்படி 2021 இற்குள் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் எனவும் அறியமுடிகின்றது.

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. தேசியக்கொடி, தேசிய கீதம் உட்பட 12 பிரதான விடயங்களை மாற்றுவதாக இருந்தால் மட்டுமே சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும். எனினும், அந்த 12 விடயங்களில் மாற்றம் ஏற்படாது என தெரியவருகின்றது.

‘கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை’

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய நால்வரை விடுதலை செய்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையானுக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கம்பளையில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு – பலகோணங்களில் விசாரணை!

கம்பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) காணாமல்போன ஆணொருவர் நேற்று (12)  காலை மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை, கங்கவட்ட பகுதியில் குடும்பமொன்று சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததையடுத்து குறித்த வீட்டிலிருந்து ஆணொருவர் (வயது -60 ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பமாகியிருந்தனர்.

இந்நிலையில் கம்பளை ரயில்வே கடவைக்கு அருகில் மகாவலி கங்கையில் சடலமொன்று இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் வழங்கப்பட்டுள்ளது. அது காணாமல்போன நபருடைய சடலம் என்பதனை உறவினர்கள் ஊடாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

நிவ்வெளிகம தோட்டத்தில் காணி அபகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு!

நோர்வூட் நிவ்வெளிகம தோட்டபகுதியில் மூன்று ஏக்கர் காணியை வெளியார் அபகரிக்கமுயன்றமையினால் நிவ்வளிகம தோட்டமக்கள் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காசல் ரீ நீர்தேக்கத்தை அண்மித்த நிவ்வெளிகம தோட்டத்தில் உள்ள காணியினை குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தம்புளை பகுதியினை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தம்புளை பகுதியிலுள்ள சிலர் நேற்றைய தினம் அந்த காணியினை அபகரிக்க முயன்றபோது பொதுமக்கள் சென்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

” இது எங்கள் தோட்டகாணி, எமது பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் வெளியாருக்கு பணத்திற்கு விற்றுள்ளார், இது தொடர்பில் நாம் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாேம்.” -என்றனர்.

.இதேவேளை மக்கள் அந்த பகுதிக்கு சென்றவுடன் தம்புள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு நோர்வூட் பொலிஸார் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரஞ்சனின் எம்.பி. பதவியும் பறிபோகிறது! அஜித் மானப்பெருமவுக்கு அதிஷ்டம்!!

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் நிலை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே ரஞ்சனின் எம்.பி. பதவியும் இல்லாமல் போகலாம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்துக்கு, கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

திருக்குர்ஆன் குறித்து முஸ்லிம்களிடம் உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்!

” உயிரிழந்தவர்களை கட்டாயம் அடக்கம் செய்யவேண்டும் எனவும், அவர்களின் சடலங்களை எரிப்பது ஹராம் எனவும் திருக்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” திருக்குர்ஆனை ஆரம்பம் முதல் இறுதிவரை இரண்டு தடவைகள் நன்றாக வாசித்துள்ளேன். அதில் எந்தவொரு இடத்திலும் ‘அடக்கம்’ செய்யப்படுவது கட்டாயப்படுத்தப்படவில்லை. அதேபோல சடலங்களை எரிப்பது ஹராம் (தவிர்க்கப்படவேண்டிய விடயம்) எனவும் குறிப்பிடப்படவில்லை.

நான் குர்ஆன் தொடர்பான நிபுணர் அல்லன். எனவே, என்னால் தெரிவிக்கப்படும் கருத்து தவறெனில், அதனை சரிசெய்யுமாறு – உரிய விளக்கத்தை முன்வைக்குமாறும், எந்த இடத்தில் சடலங்களை எரிப்பது ஹராம் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கோரியிருந்தேன். இதுவரையும் எந்தவொரு நிபுணரும் முன்வரவில்லை.

சிலர் சமூகவலைத்தளங்களில் ஆர்ஆனில் உள்ள சில பதிவுகளை அனுப்பிவைத்திருந்தனர். அடக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டாயப்படுத்தப்படவில்லை. எரிப்பது ஹராம் எனவும் அதில் இல்லை.” – என்றார்.

‘கொரோனா’வால் மேலும் நால்வர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 13, வெல்லம்பிட்டிய, மாத்தளை மற்றும்  அங்வெல்ல பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 80 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 244  ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்…

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

பொகவந்தலாவை வைத்தியசாலை குறைபாடுகள்: மே 30 ஆம் திகதிக்குள் அறிக்கை கோரல்!

0
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து, எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர்...

ஹட்டனில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல்வேறு இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. ஹட்டன் பகுதியில் இன்று (12) பிற்பகல் 2.00 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக மக்களின்...

“கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம்”

0
'டித்வா' நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்  அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்  கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம் - சட்டக்...