Home Blog Page 3672

இலங்கை – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட் தொடர் கொரோனா-19 பரவலின் காரணமாக கைவிடப்பட்டது. அதன் பின் இலங்கை மண்ணில் எல். பி. எல். கிரக்கெட் தொடரைத் தவிர எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் கடந்த வருடம் நடைபெறவில்லை.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அவ்வணியில் உள்ள பிரபல வீரர்கள் காயம் காரணமாக அவதியுற்று வருகின்றனர். தென்னாபிரிக்க தொடரின் போது தனஞ்சய டி. சில்வா, கசுன் ராஜித, லஹிரு குமார போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகத் ஆடிவருகிறார். இவருடன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடும் டினேஷ் சந்திமால், காயத்திலிருந்து குணமடைந்துளள அஞ்சலோ மெத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா, நம்பிக்கையுடன் இத்தொடருக்கு முகம் கொடுக்கக் காத்திருக்கும் டிக்வெல்ல ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுசேர்ப்பார்கள் என எதிர்பார்கப்கப்படுகிறது.
முக்கியமாக இவர்களில் இருவர் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை கொடுத்தால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

பந்து வீச்சைப் பொறுத்த வரை காலி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமானதால் இலங்கை அணி அநேகமாக சுழல் பந்து வீச்சாளர்களை நம்பியே களமிறங்கும். டில்ருவன் பெரேரா, லாசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன் இவர்களுடன் தென்னாபிரிக்க அணியுடனான இரு டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடிய வனிது ஹசரங்க ஆகிய நால்வரில் மூன்று வீரர்களை ஆடும் பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சில் சகலதுறை வீரர் தசுன் சானக விஷ்வ பெர்னாண்டோ, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார போன்ற வீரர்கள் உத்தேச அணியில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் இவர்களில் இருவரையே களமிறக்கும் வாய்ப்புள்ளது.

இங்கிலாநது அணியைப் பொறுத்தவரையில் கடைசியாக அவர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் இடைநடுவில் கைவிடப்பட்டது.

எனவே டெஸ்ட் சம்பியன் ஷிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் அவ்வணி இலங்கையுடனான இத்தொடரை வென்று முன்னேறிச் செல்லவே எத்தணிக்கும். கடைசியாக இலங்கையுடன 2018ம் ஆண்டு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அவ்வணி முழுமையாகக் கைப்பற்றிது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் எந்த மைதானத்திலும் சிறப்பாகச் செயற்படக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். தலைவர் ஜோ ரூட், கிறிஸ் வோக்கஸ், றொரி பெலன்ஸ், ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

இலங்கை அணியை விட அவர்களின் வேகப்பந்து வீச்சு குழாம் பலம் பொருந்தியது. ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவர்புரோட் அண்மைக் காலமாக எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியாக பந்து வீசி வருகின்றனர். கடந்த வருட நடுப்பகுதியில் முடிவுற்ற மேற்கிந்திய, பாகிஸ்தான் தொடர்களைக் கைப்பற்ற இவர்களின் பந்து வீச்சே முக்கிய காரணமாய் அமைந்தது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இவ்விரு பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது கவனம் தேவை, சுழற்பற்து வீச்சைப் பொறுத்துவரை இலங்கை அணியின் கையே ஓங்கியுள்ளது. என்றாலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஆதில் ரஷீத், ஜக் லீச், மொயின் அலி போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை மண்ணில் பந்து வீசும் போது சிறப்பாகச்செயற்பட்டுள்ளதை கடந்த கால பெறுபேறுகளை பார்த்தால் புரியும். 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணி 3 – 0 என்று தொடரை வெல்லவும் இச் சுழற் பந்து வீச்சாளர்களே முக்கிய காரணமாய் அமைந்தனர்.

அத்தொடரில் எமது துடுப்பாட்ட வீரர்கள் அநேகமாக இவர்களின் பந்துகளை எதிர்கொள்ளவே சிரமப்பட்டனர். இரு அணிகளில் அண்மைக்காலமாக துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றாலும் எதிர்வுகள் கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் எதிர்மறையான பெறுபேறுகளும் ஏற்படலாம். இத்தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவது இலங்கை அணிக்கு அனுகூலமாக அமையலாம்.

40 வருட வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி 1982ம் ஆண்டு பி. சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இது வரை இரு அணிகளுக்கிடையிலும் 34 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 15 போட்டிகளிலும், இலங்கை அணி 08 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையில் கூடிய ஓட்டங்களாக இலங்கை அணி 2003-12-18ம் திகதி எஸ். எஸ். சி. மைதானத்தில் பெற்ற 8 விக்கெட் இழப்புக்கு 628 ஓட்டங்களும் இங்கிலாந்து அணி 2014ம் ஆண்டு லோட்ஸ் மைதானத்தில் பெற்ற 9 விக்கெட் இழப்புக்கு 515 ஓட்டங்களும் பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக இலங்கை 2001-.03-.15ம் திகதி எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 81 ஓட்டங்களும் இங்கிலாந்து அணி 2007-.12-.18ம் திகதி காலியில் நடைபெற்ற போட்டியில் 81 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்துள்ளது.

தனி நபர் கூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்தன 18-.12-.2007ம் திகதி காலியில் நடைபெற்ற போட்டியொன்றில் 213 ஓட்டங்கள் பெற்றார். இங்கிலாந்து சார்பில் 2011-.05-.26ம் திகதி கார்ட்டிபில நடைபெற்ற போட்டியொன்றில் ஜோ ரூட் பெற்ற 203 ஓட்டங்களே கூடிய ஓட்டங்களாகும். கூடிய மொத்த ஓட்டங்களாக இலங்கை சார்பில் மஹேல ஜயவர்தன 21 போட்டிகளில் 2212 ஓட்டங்களும், இங்கிலாந்து சார்பில் அலெக் ஸ்டூவர்ட்16 போட்டிகளில் 1290 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

ஒரு இன்னிஸில் சிறநத பந்து விச்சுப்பிரதியாக முத்தையா முரளீதரன் 1998-.08-.27ம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளும், இங்கிலாந்து சார்பில் 27-.05-.1991ம் ஆண்டு லோட்சில் நடைபெற்ற பி. சிலேட்டர்ஸ் 70 ஒட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு போட்டியில் கூடிய விக்கெட்டுக்களாக 1998ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் முத்தையா முரளிதரன கைப்பற்றிய 220 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுகளும் இங்கிலாந்து சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன் 2016ம் ஆண்டு லீட்ஸ் மைனத்தில் கைப்பற்றிய 45 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளும் பதிவாபகியுள்ளன.

கூடிய மொத்த விக்கெட் கைப்பற்றியொர் வரிசையில் முத்தையா முதளிதரன் 16 போட்டிகளில் 112 விக்கெட்டுகளும், இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அன்டர்சன் 13 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது.

இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர்.

அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.

இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும்.

 

இராஜாங்க அமைச்சர் ஜீவன்

ஒவ்வொரு வருடமும் உதயமாகும் தைப்பொங்கல் திருநாள் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும் ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது தம் பணியை தொடரும் என்பதையும் இத்தைப்பொங்கல் பெருநாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒட்டுமொத்தமாக எமது கட்டுகோப்பை பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள், இதர வரப்பிரசாதங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளவதற்கு இந்நன்நாளில் நாம் திடசங்கற்பம் எடுத்துக்கொள்வோம்.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இப்பொங்கல் தினத்தில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும். இத்தருணத்தில் அனைத்து மக்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மனோ கணேசன் எம்.பி.

செந்தில் தொண்டமான்

தமிழர்களின் தமிழினப் பண்பாட்டு அடையாளங்களை உலகளவில் எடுத்துரைக்கும் தைப்பொங்கல் பெருநாளன்றில், எம்மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கும் தம்மோடு தோழமையாக நின்று மண்ணை பண்படுத்தி, பயனடைய உழைத்த காளைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாக அமைந்துள்ள தைத்திருநாள், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒற்றைக் கருத்தோடு நின்று மகிழும் பெருவிழாவாகும்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’ என்கிறது நன்னூல் நூற்பா. அதன்படி, தமிழர்கள் அனைவரும் ‘காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதைக்கு உதவாத பழைய சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு, இன்றைய நவீன உலகியலுக்கு உகந்த கருத்தாக்கங்களோடும், முன்னோர் கடைபிடித்த, பாதுகாத்த பண்பாட்டு அடையாளங்களோடும் வீரியத்தோடும் பயணிப்போமாக!

ஆயிரமாயிரம் வருடங்களுக்கு மேலாக, அன்று தொட்டு இன்றளவும் நம்மை அகமகிழச் செய்துவரும் பொன்னான பொங்கல் திருநாளில் பொங்கப்படும் புதுப்பானை சக்கரைப் பொங்கலுடன் ஆரம்பிக்கும் இனிய நாள், அனைவரது வாழ்விலும், சந்தோஷத்தையும் அமைதியையும் வாரி வழங்கட்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன்

காலங் காலமாக ஏமாற்றத்தை சந்தித்து வரும் மலையக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் இனிமையும் பொங்க வேண்டும் என மனம் குளிர்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சம்பள உயர்வு இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ள பெருந்தோட்ட மக்களுக்கு பிறந்துள்ள தை மாதத்திலாவது வழி பிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தனி வீட்டுத் திட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டு அவர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு கல்வியே கருந்தனம் என்பதை உணர்ந்து பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சொந்த முயற்சியில் தம்மை வளர்த்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் ஒவ்வொருவரும் பிறந்துள்ள புதிய ஆண்டில் திடசங்கற்பம் பூண வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Untitled-4.jpg

‘சுகாதார பாதுகாப்புடன் மலையகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்’

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை 14.01.2021 வியாழக்கிழமை மிக எளிய முறையில் கொண்டாடினார்கள்.

அட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்ம ஸ்ரீ பூர்ணசந்திராணந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

‘கொரோனா’வால் மேலும் மூவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 247 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 10, கொழும்பு 15 மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 80 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.

‘இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும் இலங்கை அரசாங்கம்’

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் இலாப வருமானம் பெறுகிறது.  பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான்.

பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது.

இந்நிலையில் தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகை கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றை பின்னர் சிறிய இந்திய கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு செல்கின்றன.

இதுதான் பல பத்தாண்டுகளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்பு துறைமுகமே ஓடுகின்றது. கொழும்பு துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், ஹம்பந்தோட்டை, திருகோணமலை…) ஓடுகின்றன. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஒரு ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு விட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறது.

இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால “இலவு காத்த கிளி வெளிநாட்டு கொள்கை”, இதுவாகும்.

புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையக தமிழரை, இலங்கையை சந்தோஷப்படுத்த, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா இணங்கியது. இதனால், இலங்கையில் தமிழரின், மலையக தமிழரின் அரசியல் பலம் குன்றியது. அதை தொடர்ந்து, கச்சத்தீவை, தமிழகத்தின் எதிர்ப்பை கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்கு கொடுத்தது.

விஷயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.  இப்போதும், இந்தியாவின் “இலங்கை கொள்கை” காரணமாக, ஒரு பிராந்திய களஞ்சிய துறைமுகமாக, இந்திய பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்பு துறைமுகம், இந்திய துறைமுகங்களை விட சிறப்பாக செயற்படுகிறது.

இந்நிலையில் இப்படி பொருளாதரத்தில் பலமடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், “பிராந்திய களஞ்சிய துறைமுகம்” என்பதை விட, கொழும்பை “உலக களஞ்சிய துறைமுகமாக” மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்க திட்டம் போடுகிறார்கள்.

இலங்கையை தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிக கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகிறோம்” என்று சொல்லும், கனவு திட்டம் இதுவாகும்.

அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவை புறக்கணித்து விட்டு, இந்த கனவு திட்டத்திற்காக சீனா ஆதரவுடன் கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். இதில் சைனாவின் நோக்கம் என்னவென்பது சைனாவுக்கு மட்டுமே தெரியும்.

இதற்காக, கொழும்பு துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான South Asian Gateway Terminal (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்கு கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்கு கீழ் கட்டுகிறார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்கு கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம்.

SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51%, ஜப்பான் நிறுவனத்துக்கு 29%, இந்திய நிறுவனத்துக்கு 20% என்ற ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்கிறார்கள். ஆகவே இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்பு தெரியுது.

இந்நிலையில், இன்று நரேந்திர மோடியின் இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கிறது. இததனை பத்தாண்டுகளாக கொழும்பு துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய கடல் எல்லைக்கு அண்மையில், கொழும்பு துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவதையும் இந்தியாவால் சகிக்க முடியவில்லை.

தமிழகத்தின் தென்கோடியில் கொளச்சல் என்ற இடத்தில் புது துறைமுகம் ஒன்றை கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கிறது. மேலும் கேரளத்திலும், அந்தமானிலும் புது துறைமுகங்கள் கட்டவும் முனைகிறது.

இவை உருவாகிவிட்டால் இந்திய கொள்கலன்கள் கொழும்பு வர தேவையில்லை. இது இலங்கைக்கு பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்திய துறைமுகம் இறக்கி வைத்து, அவ்வந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.

தூரத்து உறவுகாரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனை பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய “ரிஸ்க்” எடுக்கிறது.

இன்றைய இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, இல்லாத வருவாயை தேடி ஓடுகிறது. “இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும்” இந்த “ரிஸ்க்”, வெறும் பொருளாதார “ரிஸ்க்” மட்டுமல்ல, அரசியல் “ரிஸ்க்கும்” கூட என்பதை உடனடி எதிர்காலம் காட்டலாம்.

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 378 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 687 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 46 ஆயிரத்து 57  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘ கணவரை நாயாக மாற்றிய மனைவிக்கு அபராதம் – கனடாவில் சம்பவம்’

‘லொக்டவுன்’ விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவருக்கு நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், பொலிஸாரிடம் வசமாக சிக்கினார்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த பொலிஸார் இது குறித்து விசாரணை அவரிடம் விசாரணை நடத்தினர்.

நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று கூலாக பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

‘நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்’

நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பான கூட்டம், நுவரெலியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் பி. புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா பிரதேச செலயகத்துக்குட்பட்ட பிரதேசங்களின் பாதை, சுகாதாரம், நீர்பாசனம், மக்களின் குடியிருப்புகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் எதிர்கால வேலைதிட்டங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் அலசி ஆராயப்பட்டுள்ளன.

அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் செயற்பாடுகள், சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சுயத்தொழி முன்னெடுப்புகள் அத்தோடு பெருந்தோட்ட பகுதிகள் நிர்மாணிக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டம் அவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

‘மொயின் அலி ஊடாகவே இலங்கைக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா’

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கே புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என இலங்கையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பரவிய புதிய புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ள ஒருவருக்கு தொற்றியுள்ளமை ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வுமூலம் நேற்று கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்துவந்த ஒருவருக்கே புதியவகை வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அதனை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  குறித்த தொற்றாளர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி என தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கடந்த 3 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்படி மொயின் அலிக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 46 ஆயிரத்து  79 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

‘உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி’

0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் உயிரைக் காத்து நின்ற ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. யுத்தம்...

பொகவந்தலாவை வைத்தியசாலை குறைபாடுகள்: மே 30 ஆம் திகதிக்குள் அறிக்கை கோரல்!

0
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து, எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர்...

ஹட்டனில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல்வேறு இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. ஹட்டன் பகுதியில் இன்று (12) பிற்பகல் 2.00 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக மக்களின்...