Home Blog Page 3671

‘தோட்டக் கம்பனிகளின் நயவஞ்சக சம்பளப் பொறிமுறை’

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய அதிகரிப்பு சம்பந்தமாக, தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தலைமையில், தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் டிசம்பர் 21 நடந்த பேச்சுவார்த்தையின் போது, தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை பெருந்தோட்டக் கம்பனிகள் ஒரேயடியாக நிராகரித்தன. அதற்கு பதிலாக, உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு மாற்று ஊதிய திட்டங்களை தோட்டக் கம்பனிகள் சமர்ப்பித்தன.

அதில் முதலாவது, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு தினசரி ஊதியமும், ஏனைய நாட்களுக்கு கிலோ அடிப்படையில் பணம் செலுத்தும் ஒப்பந்த முறையையும் கொண்ட ஒரு கலப்பு முறையாக முன்வைக்கப்பட்டுள்ளது. கிலோவுக்கு சம்பளம் கொடுக்கப்படும் நாட்களில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி உட்பட, பறிக்கப்படும் தேயிலை கொழுந்து ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ. 50 கொடுக்கப்படும். இது தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு வழிவகுத்துள்ள வருமானப் பகிர்வு ஒப்பந்த முறைமையை படிப்படியாக அவர்கள் மீது திணிக்கும் கொள்கையாகும்.

நாளொன்றுக்கு 30-40 கிலோ கொழுந்து பறிக்க முடிந்தால் தொழிலாளர்கள் தங்கள் வருவாயை பெரிதும் “அதிகரித்துக்கொள்ள” முடியும் என்று கம்பனிகள் வாதிடுகின்றன.

50 ரூபாய் என்ற விகிதத்தின் கீழ், 20 கிலோ கொழுந்து பறிக்கும் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாயும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாயும் சம்பாதிக்க முடியும் என்றும், அந்த வழியில் தொடர்ந்து பணிபுரிந்தால், ஒரு மாதத்திற்கு 37,500-62,000 ரூபாய் வரை சம்பாதிப்பார் என்றும் கம்பனிகள் கூறுகின்றன. ஆனால் தோட்டங்களின் விளைச்சல், காலநிலை மற்றும் தொழிலாளர்களின் வயது உட்பட பல காரணிகளைப் பொறுத்து, தற்போதுள்ள 16-18 கிலோ கொழுந்து பறிக்கும் இலக்குகளை அடைவது கூட அவர்களுக்கு கடினம் ஆகும்.

இந்த திட்டங்களை முன்வைத்து, பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாதிய புலுமுல்ல பின்வருமாறு கூறினார்:

“நாங்கள் பாரம்பரிய ஊதிய முறையிலிருந்து விலக வேண்டியிருப்பதோடு, தொழிலாளர்களை தொழில்முனைவோராக மேம்படுத்தக் கூடியவாறு தொழில்துறையின் ஸ்திரத்தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தித்திறன் மாதிரியை செயல்படுத்திய உடன், தொழிலாளர்கள் நெகிழ்வான வேலை நேரத்தினையும், அதே போல், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சம்பாதிக்கும் செயல்முறைக்கு பங்களிக்கக் கூடிய தொழிலாளர் ஒத்துழைப்பையும் பெறுவார்கள். வேலை செய்ய வேண்டிய நேரம் மற்றும் முறை பற்றி தீர்மானிப்பதில், நமது தொழிலாளர்களுக்கு ஒரு வகிபாகம் கிடைப்பதோடு, அவர்களின் வருவாய் செயல்முறை வியத்தகு முறையில் வளர்ச்சியடையும்.”

கம்பனிகள் மிகைப்படுத்திக் காட்டும் சித்திரத்துக்கு மாறாக, அவர்கள் கணிக்கும் தொகையை சம்பாதிக்க வேண்டுமெனில், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட தொழிலாளியின் முழு குடும்பமும் உழைக்க வேண்டும்.

இரண்டாவது, தினசரி சம்பளத் திட்டம் 1,025 ரூபா ஆகும். அடிப்படை நாள் சம்பளம் 700 ரூபாயும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி 105 ரூபாவும், வருகை கொடுப்பனவு ரூபா 70, உற்பத்தி கொடுப்பனவு 75 ரூபாய் மற்றும் விலை பங்கு மேலதிக கொடுப்பனவு 75 ரூபாயுடன் சேர்த்து, மொத்தம் 1,025 என்ற நாள் சம்பள திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு தொழிலாளியின் மாத வருமானம் சுமார் ரூ. 4,250 அளவில் அதிகரிக்கும் என்று பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தற்போதைய அடிப்படை தினசரி ஊதியத்தில் 20 ரூபா வெட்டப்படும் அதே நேரம், வருகை, உற்பத்தித்திறன் மற்றும் தேயிலை விலை உட்பட்ட காரணிகளின் அடிப்படையில் ஏனைய கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்படுமே ஒழிய, நிச்சயமாக மற்றும் கட்டாயமாக தொழிலாளியின் வருமானத்திற்கு எந்த சேர்க்கையும் கிடையாது.

இரண்டு திட்டங்களில் எது செயல்படுத்தப்பட்டாலும். அதன் மூலம் மேலும் மேலும் தொழிலாளர்கள் மீது கொடூரமான சுரண்டல் நிலைமைகள் திணிக்கப்படும்.

அதே போல், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தினசரி ஊதியம் 1,000 ரூபா கிடைத்தாலும், அது தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. 2015 ஆம் ஆண்டிலேயே தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளம் கோரினர். இப்போது வரை ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதன் ஊடாக ஊதியங்களின் உண்மையான மதிப்பில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சி போன்ற காரணங்களால், வாழ்க்கைச் செலவு 2015 ஆம் ஆண்டை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், பதீட்டு பிரேரணையாக அரசாங்கம் இந்த திட்டத்தை முன்வைத்தது, தோட்டத் தொழிலாளர்கள் மீது கொண்ட அக்கறையினால் அல்ல. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் கொந்தளிப்பை தணிப்பதே ஆகும். மற்றொன்று, பெருந்தோட்டப் பிரதேசங்களில் சுற்றுலா, வணிக வேளாண் பயிர்கள் மற்றும் ஆடை உட்பட ஏற்றுமதி தொழில்களுக்கு முதலீட்டை ஈர்ப்பது ஆகும்.

1,000 ரூபா சம்பளக் கோரிக்கையை செலுத்த முடியாத கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள், திரும்பப் பெறப்பட்டு “பொருத்தமான” முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என்ற அமைச்சர் சில்வாவின் அறிக்கையின் அர்த்தம் இதுதான்.

அண்மையில் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தின் இந்த திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. “பிரச்சினை சம்பளம் மட்டும் அல்ல. தோட்டத் தொழிலாளர் இளைஞர்கள் வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தோட்டங்களைத் தவிர, சுற்றுலா போன்ற பிற தொழில்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்,” என தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கங்களின் வகிபாகம், அரசாங்கம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளால் எடுக்ப்படும் முடிவுகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதும் அவர்களின் போராட்டங்களை நாசமாக்குவதும் ஆகும்.

2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் ஊதியம் கோரி இரண்டு வாரங்களுக்கும் மேலாக உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் சங்கம் (ஜ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) உட்பட சகல தோட்டத் தொழிற்சங்கங்களாலும், தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பை தொழிலாளர்கள் மீது திணித்து, இந்த போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது.

தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2018 இல் கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில், உற்பத்தித்திறன் மற்றும் வருமான விநியோகத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்த முறையின் விதிமுறைகள் அடங்கும்.

இந்த முறைமையின் கீழ், தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகளை கொண்ட ஒரு நிலத்தைப் பெறுகிறார்கள், அவை அனைத்தும் அவர்களால் பராமரிக்கப்பட வேண்டும். நிறுவனம் வழங்கிய உரங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களின் விலையைக் கழித்த பின்னர், மீதமுள்ள வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே தொழிலாளர்கள் பெறுகிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் ஊழியர் சேமலாபா நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளிலிருந்தும் ஓய்வூதிய உரிமைகளையும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சமூக நலன்களையும் இழக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் ‘சிறு தொழில்முனைவோராக’ மாற்றப்படுவது குறித்து தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அளித்த மோசடி அறிக்கைகளின் பொருள் இது.

தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் 2018 இல் கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில், உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற மற்றும் வருமானப் பகிர்வு ஒப்பந்த முறைமையையும் அறிமுகப்படுத்தும் நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.

இந்த முறைமையின் கீழ், தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகள் கொண்ட ஒரு நிலம் வழங்கப்படுவதோடு, அவை அனைத்தும் அவர்களால் பராமரிக்கப்பட வேண்டும். கம்பனி வழங்கிய உரங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களுக்கான செலவுகளை கழித்த பின்னர், மீதமுள்ள வருமானத்தில் ஒரு அற்ப பகுதியை மட்டுமே தொழிலாளர்கள் பெறுவார்கள். அதே நேரம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி போன்ற ஓய்வூதிய உரிமைகளையும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலன்களையும் தொழிலாளர்கள் இழக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களை “சிறு தொழில்முனைவோராக” மாற்றுவது பற்றி தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூறும் மோசடி கதைகளின் உண்மையான அர்த்தம் இதுவே.

தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை அலட்சியம் செய்து, தொழிற்சங்கங்களின் நேரடி ஆதரவுடன், இப்போதே களனி வெலி, வட்டவல மற்றும் பொகவந்தலாவா உட்பட்ட தோட்டக் கம்பனிகளால் வருவாய் பகிர்வு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளன. அந்த தாக்குதல், புதிய திட்டங்களுடன் கூர்மைப்படுத்தப்படும். உலகசோசலிசவலைத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த பல தொழிலாளர்கள், வருமானப் பகிர்வு முறை மற்றும் தொழிற்சங்கங்களின் பிற்போக்கு நடவடிக்கைகள் குறித்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு கடினமான வேலை நிலைமைகளையும் விவரித்தனர்.

சாமிமலை, கிளனூஜி தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் தொழிலாளி தேவிகா கூறியதாவது: “700 ரூபாய் சம்பளம் பெற நாளொன்றுக்கு 16 கிலோ பறிக்க வேண்டும். அதை விட குறைவாக இருந்தால், எட்டு மணி நேரம் வேலை செய்தாலும் அரை நாள் சம்பளம்தான் கிடைக்கும். அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவுடன் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் வாழ முடியாது. முன்னர் நான் சாப்பாட்டுக்காக சுமார் 12,000 ரூபாய் செலவிட்டேன். இப்போது சாப்பாட்டுக்கு 7,000 ரூபா மட்டுமே செலவிடலாம்.”

மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் மொக்கா தோட்டத்தின் மேல் பிரிவில் உள்ள தொழிலாளர்கள், டிசம்பர் 23 முதல் ஊதிய வெட்டுக்கு எதிராக தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அன்றாட கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோ ஆகும். இலக்கு பூர்த்தி செய்யாவிட்டால், தொழிலாளர்கள் பெறும் சம்பளம் 350 ரூபாய் மட்டுமே. இது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் பாதி மட்டுமே. தொழிற்சங்கங்களின் கட்டுப்பாடுகளை மீறியே தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களது போராட்டத்தை குழப்புவதற்காக, தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதாக தொழிலாளர்கள் கூறினர்.

கிளனூஜி தோட்டத் தொழிலாளியான எம். ரவீந்திரன், 48, “1,000 ரூபா கோரிக்கை இப்போது பழசாகிவிட்டது” என்றார். “உயரும் வாழ்க்கைச் செலவின்படி, 1,500 ரூபா இப்போது கிடைத்தாலும் போதுமானதல்ல. அரசாங்கத்தின் பிரேரணை ஒரு பொய் ஆகும். முந்தைய அரசாங்கமும் 1,000 கோரிக்கையை தருவதாக வாக்குறுதியளித்தது. எல்லா அரசாங்கங்களும் எங்களை ஏமாற்றுகின்றன.

தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களை ஆதரித்து எங்களை காட்டிக் கொடுத்தன. கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இலக்கை நாளொன்றுக்கு 2 கிலோ அதிகரிக்க வேண்டும் என்று கம்பனிகள் தெரிவித்துள்ளன. எங்கள் அனைத்து உரிமைகளையும் அழிக்கவே தோட்ட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இந்த பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கே சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன் தொழிலாளர் வழிநடத்தல் குழு ஒன்றை நாங்கள் அமைத்தோம். அதன் கீழ் நாங்கள் தொழிலாளர்களை ஒழுங்கமைக்க வேண்டும்,” என அவர் மேலும் விளக்கினார்.

தோட்டத் தொழிலாளர்கள், அரசாங்கமும் மற்றும் தோட்ட கம்பனிகளும் முன்வைக்கும் ஊதிய திட்டங்களை நிராகரிக்க வேண்டும். ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழக்கூடிய மாத சம்பளம் மற்றும் வீட்டுவசதி உட்பட சமூக உரிமைகளுக்காக அவர்கள் போராட வேண்டும்.

தொழிலாள வர்க்க கட்டுப்பாட்டின் கீழ் தோட்டக் கம்பனிகளை மக்கள்மயப்படுத்துகின்ற, சோசலிச உற்பத்தி பொருளாதார முறையொன்றை செயல் படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் அந்த உரிமைகளை வெல்ல முடியும்.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்கள் மூலம், அதற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப தோட்டத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.

எம். தேவராஜ்

கொரோனாவால் உலகளவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 35 லட்சத்து 36 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 6 கோடியே 68 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இலங்கையில் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

முடிந்தால் அரசிலிருந்து வெளியேறவும் – இ.தொ.காவுக்கு வேலுகுமார் சவால்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான காரணத்தையும் அவர் பட்டியலிட்டுக்காட்டியுள்ளார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்தார். இது தொடர்பில் 2020 ஜனவரியில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரும் ஆயிரம் ரூபா தொடர்பில் உத்தரவாதங்களை வழங்கியிருந்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதம் இருப்பதால் அரச தலையீட்டுடன் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே, ‘அடிப்படை நாட் சம்பளம் ஆயிரம் ரூபா’ என்பது அரசாங்கத்தின் உறுதிமொழியாகும். அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களை பங்காளியான காங்கிரஸ் விடுக்கவேண்டும்.

அதனைவிடுத்து ஆயிரம் ரூபா கிடைக்கவில்லையெனில் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என கூறுவது இயலாமையின் வெளிப்படாகும். பேரம் பேசுவதில் ஏற்படும் தோல்வியை மூடிமறைத்து, மக்கள் மத்தியில் அனுதாபம் பெறுவதற்கு முன்னெடுக்கப்படும் நயவஞ்சக திட்டமாகும். எனவே, அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனில் அரசாங்கத்தில் இருந்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறவேண்டும்.

ஆளுங்கட்சியில் இருப்பதால் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் காங்கிரசுக்கு இருக்கின்றது. அந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்தவேண்டும். அதனைவிடுத்து, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி – மக்களை வீதிக்கு இறக்கி போராடினால் சம்பள விடயத்தில் மேலும் இழுத்தடிப்புகள் இடம்பெறும். காலம் கடத்தப்படும். வெளியில் இருந்து நாம் போராடுவோம். அரசாங்கத்துக்குள் இருந்துக்கொண்டு காங்கிரஸ் போராடவேண்டும். இதுவே பொருத்தமான நடைமுறையாகும்.

குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்க தரப்பையும் இணைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணியே நல்லாட்சியின்போது செய்திருந்தது. அடிப்படை நாட் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட்ட நிலையில் அதனை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கான அழுத்தங்களை ஆளுந்தரப்பில் இருந்து வழங்கினோம். இதனால் வரலாற்றில் முதற்தடவையாக 40 வீத சம்பள அதிகரிப்பு கிடைத்தது. எனவே, ஆயிரம் ரூபாவுக்கு இன்னும் 300 ரூபா என்ற தொகையே அவசியம். அதற்கான ஏற்பாடுகளை திறைசேரி ஊடாகவேனும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.” – என்றுள்ளது.

புதிய வகை கொரோனாவால் சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சுமார் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணம், சமீபத்தில் உருமாறியுள்ள புதிய வீரியம் மிக்க கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 2019-ல் வுஹான் நகரில் கொரோனா பரவல் கண்டறிந்ததன் பின்னர் சீனா கடுமையான ஊரடங்கு விதிகளை அமுலுக்கு கொண்டு வந்து, பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பெருந்தொற்றை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இருப்பினும் நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் ஒருவித ஊரடங்கு விதிகளின் கீழ் உள்ளனர். ஹைலோங்ஜியாங் மாகாணத்தை பொறுத்தமட்டில் புதன்கிழமை மட்டும் 28 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,அதில் 12 பேர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனையடுத்தே மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்களை வீட்டில் இருந்து வெளியே அனுமதிக்கின்றனர்.

மஹர சிறைச்சாலை கலவரம் குறித்து 120 கைதிகளுக்கு எதிராக வழக்கு!

மஹர சிறைச்சாலை மோதலின்போது சொத்துகளுக்கு சேதம்விளைவித்து வன்முறையில் ஈடுபட்ட 120 கைதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 116 கைதிகளுக்கும், சிறை தண்டனை அனுபவிக்கும் 4 வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் 6 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா’வால் மாத்தளையில் இதுவரை நால்வர் உயிரிழப்பு

மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்தது. உயிரிழந்தவர்கள் இருவரும் பெண்களாவர்.

அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்தது.

80 வயதுடைய பெண்ணொருவர் மாத்தளை வரக்காமுறை, மட்டாவ வீதியிலுள்ள தனது வீட்டில் உயிரிழந்ததை அடுத்து சடலம் மாத்தளை தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

மற்றுமொரு கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தெல்தெனிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவுக்குள் மோதல் – நவீன், அர்ஜுன ரணதுங்க சஜித் அணியுடன் சங்கமம்?

ஐக்கிய தேசியக் கட்சியில் பதவி மாற்றங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இந்த புதிய நியமனங்கள் முன்னாள் பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம் பெற்றுள்ளதுடன் அந்த நிகழ்விற்கு ரவி கருணாநாயக்க உட்பட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சமுகமளிக்கவில்லை.

அர்ஜுன ரணதுங்க , நவீன் திசாநாயக்க போன்றோர் மேற்படி நியமனங்களில் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. அதேவேளை ஐ.தே. கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் புதிய செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளராக ஏ. எஸ். மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கிணங்கமீண்டுமொரு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகின்றது.

நவீன், அர்ஜுன போன்றவர்கள் சஜித் அணியில் இணையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குர்ஆன் குறித்து கருத்து வெளியிட்ட கம்மன்பிலவுக்கு ஜம்-இய்யதுல் உலமா பதிலடி

கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெரிதும் ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எழுதிய கடிதத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கொவிட் 19 காரணமாக உயிரிழப்போர் விடயத்தில் தாங்கள் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை எமக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாகவுள்ளது.

அமைச்சர் என்ற ரீதியிலும், ஒரு சட்டத்தரணி மற்றும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரென்ற ரீதியிலும் தாங்கள் இதனைவிட இவ்விடயத்தை மேலும் ஆராய்ந்து செயற்பட்டிருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோம். தாங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பொருந்தாததாகவும் மிகவும் தவறானதுமாகும்.

இஸ்லாமிய மத விவகாரங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அவ்விடயத்தில் அதிகார அறிவை கொண்டுள்ள இஸ்லாமிய கல்விமான்களுக்குப் பொறுப்பானதாகும்.

இந்நிலையில் புனித குர்ஆன் தொடர்பாக தாங்கள் இரண்டு முறை கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். உயிரிழப்போரை அடக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல என குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தாங்கள் கூறியிருப்பது தவறானதாகும் என்பதை விளக்கிக்கூற அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை விரும்புகிறது. அத்துடன் இஸ்லாம் மத போதனைகள் தொடர்பாக சில விடயங்களை புகட்டவும் விரும்புகிறது.

தாங்களின் அறிக்கைக்கு மாறாக அடக்கம் பற்றி குர்ஆன் கிட்டத்தட்ட 10 இடங்களில் கூறுகிறது. அடக்கம் பற்றிய கடப்பாடு மற்றும் அது தொடர்பான நடைமுறைச் செயற்பாடு நபிகள் நாயகத்தின் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாகும்.

ஒவ்வொரு மதமும் அதற்குரிய தனித்துவமான போதனைகளை கொண்டதென்பதை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்பது முக்கியமானதாகும். அதனை மூலத்திலிருந்து பெற்று நடைமுறைப்படுத்துவது முஸ்லிம் மத கல்விமான்களின் பொறுப்பாகுமென்று அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

50,899 பேருக்கு கொரோனா – 251 பேர் பலி – 6,901 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிர் இழந்தவர்களின்  எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. 43 ஆயிரத்து 747 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 901 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஐ.தே.க. உப தலைவர் பதவியிலிருந்து ரவி ‘அவுட்’!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக்கூட்டம் நேற்று கூடியது. இதன்போது புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இக்கூட்டத்தை ரவி புறக்கணித்திருந்தார். இந்நிலையிலேயே அவரிடமிருந்து உப தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...

‘உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி’

0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் உயிரைக் காத்து நின்ற ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. யுத்தம்...