Home Blog Page 3670

‘இந்திய கொரோனா தடுப்பூசி இம்மாத இறுதியில் இலங்கை வரும்’

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் மருந்தை மாத இறுதியில் இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் இந்தியா, கொரோனா வைரஸ் மருந்தை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை வழங்குவதற்கு அந்த நேரத்தில் தயாராகயிருப்பார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்தை கொள்வனவு செய்யும் முகவராக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் செயற்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான 4,000 மருந்தகங்களை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமை அளிக்கவேண்டியவர்கள் குறித்து தீர்மானித்துள்ளோமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் நாவலப்பிட்டியவில் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாவலப்பிட்டியவை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் உட்பட மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.

‘இரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம்’

இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவு நனவாகும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று (2021.01.15) தெரிவித்தார்.

இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ச சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டுவதனை முன்னிட்டு காணொளி தொழில்நுட்பம் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் 04 ஆண்டு காலத்திற்குள் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண துறையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இரத்தினபுரி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையின் தலைவர் திலக் வீரசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் நேற்று இரத்தினபுரி தெமுமாவத்தையில் இடம்பெற்றது.

அது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றிய பிரதமர்,

எமது தாய்நாடு இரத்தின தீபம் என்று போற்றப்படுகிறது. உலகின் பார்வையில் அந்தளவிற்கான மதிப்பை இரத்தினக்கல் கைத்தொழிலின் மூலம் நாம் பெற்றுள்ளோம். இந்தத் கைத்தொழில் நேற்று இன்று ஆரம்பிக்கப்பட்டதொன்று அல்ல. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் இந்த பூமியிலிருந்து வெளிப்படும் கற்களின் மதிப்பை நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

உலகின் வளர்ச்சிக்கேற்ப இந்த கைத்தொழிலும் முன்னேற்றமடைந்தது. இலங்கை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் இரத்தினக்கல் கைத்தொழிலுக்குள் போட்டியிட்டன. இருப்பினும், குறிப்பிட்ட நேரத்தில் நம் நாடு அதில் கவனம் செலுத்தவில்லை.

இதன் விளைவாக, இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்களது குடும்பங்களின் குழந்தைகளும் அதனால் பாதிக்கப்பட்டனர்.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் இரத்தினக்கல் கைத்தொழிலைப் பாதுகாக்க முயற்சித்தோம். இரத்தினக்கல்லின் மதிப்பை நாட்டின் மதிப்பிடுன் இணைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரியில் உள்ள உங்களுக்கு இரத்தினக்கல் குறித்து புதிதாக எதனையும் கூறுவதற்கு இல்லை. சப்ரகமுவ போன்றே மேலும் பல மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இரத்தினக்கல் கைத்தொழில் குறித்து நாங்கள் முன்னரைவிட அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இரத்தினபுரிக்கு இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவு இன்று முதல் நனவாவதாக நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். அது பல தசாப்தங்களாக காணப்பட்ட உங்களது கனவு நனவாகும் ஒரு சந்தர்ப்பமாகும்.

அமைக்கப்படும் இந்த அதிநவீன இரத்தினக்கல் கோபுரத்தில் தங்காபரண அதிகாரசபையின் அலுவலக வளாகமொன்று, சந்தை வளாகம், வங்கி அமைப்பு, அதி பாதுகாப்பு அமைப்பு மற்றும் உங்களுக்கு தேவையான வாகன நிறுத்துமிடம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

எமது இந்த முயற்சிகள் பலனளிக்கும் போது, எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண துறை ஊடாக 5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதனை வெற்றிக்கொள்வதற்கு பாடுபடும் கைத்தொழில்துறை அமைச்சருக்கும், தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சருக்கும், தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” -என்றார்.

பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா

பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி 78 நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்தன. இதன்படி அம்மணிவத்தை பகுதியை சேர்ந்த ஆணொருவரும் கோணக்கலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்கள் இருவரையும் இன்றைய தினம் (16) தனிமைப்படுத்தப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இதுவரையில் பசறை பகுதியில் மொத்தமாக 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பசறை பொது சுகாதார பரிசோதகர் V. ராஜதுரை தெரிவித்தார்.

செய்தி – ராமு தனராஜா பசறை.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய ஒரு புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையை வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. “இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்” என வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில் இப்படிப்பட்ட சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன என வட கொரியாவின் அரசு ஊடகம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக, ஜோ பைடன் பதவியேற்க உள்ள சில தினங்களுக்கு முன், வட கொரியா தன் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தான் வட கொரியாவின் மிகப் பெரிய எதிரி என கிம் ஜாங் உன் அண்மையில் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

வட கொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட படங்களில், அணிவகுப்பின் போது, மக்கள் வட கொரிய கொடியை உற்சாகத்தோடு அசைத்துக் கொண்டிருக்க குறைந்தபட்சமாக நான்கு வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான ஏவுகணைகள் இருப்பதை காண முடிகிறது.

இதுவரை இப்படிப்பட்ட ஆயுதங்களை முன்பு பார்த்ததில்லை. “புதிய ஆண்டு, புதிய புக்கக்சாங்” என வட கொரிய ஏவுகணையின் நீர்மூழ்கிக் கப்பலின் பெயரிலேயே ட்விட் செய்திருக்கிறார் வட கொரிய விவகார நிபுணர் அங்கித் பாண்டா.

ப்யொங்யொங் நகரில், கிம் இல் சங் சதுக்கத்தில் தரைப்படை துருப்புகள், பீரங்கிகளுடன் நடந்த இந்த அணிவகுப்பை, தோல் ஆடை கோட் மற்றும் கம்பளி வகை தொப்பி அணிந்து, சிரித்த முகத்துடன் கையை அசைத்தபடி கிம் ஜாங் உன் பங்கேற்ற படங்களும் வெளியாகியுள்ளன.

“வட கொரியாவின் புரட்சிகர ஆயுதப் படையின் பலத்தைக் காட்டும் விதத்தில், உலகின் சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இலக்கை நோக்கிப் பாயும் ஏவுகணைகள் (submarine-launch ballistic missile), கிம் இல் சங் சதுக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நுழைந்தன” என்கிறது வட கொரியாவின் அதிகாரபூர்வ அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி.

வியாழக்கிழமை (ஜனவரி 14) நடந்த இந்த வணிவகுப்பில், கடந்த அக்டோபர் மாதம், இதை விட பெரிய அணிவகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை intercontinental ballistic missile (ICBM) கொண்டு வரப்படவில்லை.

இந்த பிரமாண்ட ஆயுதம் மூலம், அமெரிக்காவின் எந்த பகுதியையும் இலக்கு வைத்து அணு குண்டு தாக்குதல் நடத்தலாம் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய ஏவுகணையின் அசாத்திய தோற்றம் வட கொரிய விவகாரங்களைத் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

வட கொரியாவின் அணு ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் மேம்படுத்துவேன் என ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் பங்கெடுத்த காங்கிரஸ் கூட்டத்தில் கிம் ஜாங் உன் கூறினார். மேலும் தனது விருப்ப ஆயுதங்கள் பட்டியலையும் அவர் குறிப்பிட்டார். அதில் நிலம் மற்றும் கடலில் இருந்து நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், பெரிய அணு ஆயுத குண்டுகளை சுமக்கும் ஏவுகணைகளும் அடக்கம்.

“யார் அமெரிக்காவின் அதிகாரத்தில் இருந்தாலும், வட கொரியாவுக்கு எதிரான கொள்கைகளில் மாற்றம் வராது. நம் புரட்சிக்குத் தடையாக இருப்பவர்கள் மற்றும் நம் மிகப் பெரிய எதிரி அமெரிக்கா தான்” என கிம் ஜாங் உன் கூறினார்.

16 பேருக்கு கொரோனா – நாவலப்பிட்டிய நகருக்கு பூட்டு!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாவலப்பிட்டிய நகரை இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மூடுவதற்கு நாவலப்பிட்டிய வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்தே நகரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாவலபிட்டி நகர் முழுவது தொற்று நீக்கி தெளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’விலிருந்து 44,259 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 512 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 389 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘மலையகத்தில் 18 வருடங்களாக மூடப்பட்டுள்ள தபாலகம்’

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் அமைக்கப்பட்ட  தபாலகம் கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் அதனை மீள திறக்குமாறு தோட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தபாலகமானது தொழிலாளர்களின் நலன்கருதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் 2002/04/06ம் திகதி அப்பூது பிரதியமைச்சராயிருந்த அமரர். பெரியசாமி சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.

ஒஸ்போன் தோட்டத்தில் தபால்சேவையை துரிதப்படுத்துவதற்காக மேற்படி நிலையம் அமைக்கப்பட்டபோதும் ஆறுமாதம் காலமே குறித்த தபாலகம் இயங்கியுள்ளது .பின்னர் காரணமேயின்றி தபாலகம் மூடப்பட்டுள்ளது.

ஹட்டன் பொது தபாலகமே தற்போது இவர்களுக்கு காணப்படுகின்றது.இந்நிலையில் குறித்த நேரத்தில் கடிதங்கள் கிடைக்கப்பெறாமையினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தபாலகத்தை தபாலகமாக மாற்றாவிடினும் அதனை ஒஸ்போன் தோட்டத்திற்கான வாசிகசாலையாக மாற்ற தற்போதைய அரசியல் வாதிகள் முன்வர வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி – நீலமேகம்பிரசாந்த்

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை ஏறிய இளைஞர்கள் கைது!

கொழும்பு – தெஹிவளையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைவந்த இரு இளைஞர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணான்டோவின் பணிப்பரைக்கமைய ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 500 மி.கீ. போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைதான இருவரும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

தலவாக்கலை பகுதியில் நாளை 12 மணிநேரம் நீர்வெட்டு

தலவாக்கலை நகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை (16) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலவாக்கலை பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஷதாழ்நிலப் பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டும் மேட்டுநில பகுதிகளில் சுமார் 24 மணித்தியால நீர்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்திற்கான நீர் விநியோகக் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...