Home Blog Page 3669

14 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் இருந்து பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது.

தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.

இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கராச்சியில் ஜனவரி 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும், 2-வது டெஸ்ட் ராவல் பிண்டியில் பெப்ரவரி 4-ஆம் திகதியில் இருந்து 8 ஆம் திகதி வரையிலும் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரசு அமீரகத்தில் 2010 மற்றும் 2013-ல் சுற்றுப் பயணம் செய்து விளையாடியுள்ளது.

‘கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டார் மொயின் அலி’

வீரியம்மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் மொயின் அலி, இன்று குணமடைந்துள்ளார்.

இரு தடவைகள் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவரின் உடலில் தற்போது வைரஸ் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொயின் அலி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இலங்கைக்கு கடந்த 3 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மொயின் அலிக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது இங்கிலாந்தில் பரவிய புதிய வகையான கொரோனா என்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த செந்தில் தொண்டமானின் காளைகள்

தமிழகம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் நான்கு காளைகள் சீறிப்பாய்ந்தன.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கின்றது. அதுவும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் செந்தில் தொண்டமானின் காளைகள் சிறப்பாகச் செயற்பட்டன.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலவாரிய சங்கத்தின் தலைவராக செந்தில் தொண்டமான் செயற்படுகின்றது. அண்மையில் இவரின் காளைக்கு தமிழ் நாடு அரசின் சிறந்த காளைக்கான விருது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கிவைக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய செந்தில் தொண்டமானின் காளை, கார் ஒன்றை பரிசாக வென்றது.

2ஆவது அலைமூலம் 48,153 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 800ஐ தாண்டியுள்ளது.  இவர்களில் 44 ஆயிரத்து 746 பேர் குணமடைந்துள்ளனர். 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 48 ஆயிரத்து 153 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

51,594 பேருக்கு கொரோனா – 44,746 பேர் குணமடைவு – 255 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 487 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 593 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 51 ஆயிரத்து 594 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இந்தியாவில் முதலாவது கொரோனா தடுப்பூசி யாருக்கு செலுத்தப்பட்டது தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று ஆரம்பமானது. முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக  ஆரம்பித்து வைத்ததும், முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளர் மணிஷ் குமாருக்கு செலுத்தப்பட்டது. அதன்பின்னர் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மற்றவர்களுக்கு செலுத்தப்பட்டது.

மஸ்கெலியாவில் காணாமல்போன மூதாட்டி சடலமாக மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து இன்று 16.01.2021 உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று நோர்வூட் பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்ட ஸ்ரீபாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மணி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போய்விட்டார் என பொலிஸ் நிலையத்தில் அவரின் உறவினர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கைப்பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரணைமடு குளத்தின் 101 ஆண்டு நிறைவில் 101 பானைகளில் பொங்கல்

கிளிநொச்சி இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16) 101 பானைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் வருடந்தோறும் இந் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 101 ஆண்டு நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் , மாவட்ட நீர்ப்பாசன பிரதம எந்திரி இராஜகோபு, பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதசந்திரன் , விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர், கமக்கார அமைப்புகளின் பிரநிதிகள், விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1000 ரூபாவுக்கு குறைவான சம்பள உயர்வை ஏற்கமாட்டோம் – ஜீவன் திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் நேற்று  பிற்பகல் நடைபெற்றது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மேற்படி சந்திப்பு குறித்து வினவியபோதே ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

” சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சரிடம் பேசினோம். ஆயிரம் ரூபாவுக்கு குறைவான எந்தவொரு சம்பள உயர்வையும் ஏற்பதற்கு நாம் தயாரில்லை. கம்பனிகளும் அவர்களின் முடிவில் உறுதியாக உள்ளனர். எதுஎப்படி இருந்தாலும் 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிவொன்றுக்கு வரவேண்டும். நல்ல முடிவு வரும். அதற்கான அழுத்தங்கள் கம்பனிகளுக்கு கொடுக்கப்படும்.” – என்றார்.

ஐ.தே.க. மீண்டெழும் – புதிய பொதுச்செயலாளர் அறிவிப்பு!

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சி பலமாக இருந்தது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் அமைப்பாளர்கள் இருந்தனர். அதேபோன்றதொரு நிலைக்கு கட்சி மீண்டும் கட்டியெழுப்படும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கட்சியை பலப்படுத்துவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டு, அதன்பிரகாரம் நாடு முழுவதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக தற்போதைய அரசு ஜனநாயக விரோத வழியில் பயணிக்கின்றது. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் எமது அரசியல் பயணம் தொடரும்.

ஐக்கிய தேசியக்கட்சி என்பது இன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு முன்நோக்கி பயணிக்ககூடிய கட்சியாகும். 1977 ஆம் ஆண்டில் நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கென தொகுதி அமைப்பாளர்கள் இருந்தனர். அதேபோன்றதொரு நிலைமையை உருவாக்குவோம்.

அத்துடன், கட்சியின் அடுத்தக்கட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக விசேட ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டு, அதன் ஊடாக அறிவிக்கப்படும்.” என்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...