Home Blog Page 3668

‘ஜனவரி மாதத்துக்குள் 1000 ரூபா இல்லையேல் போராட்டம் வெடிக்கும்’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும், மாதம் 25 நாட்கள் வேலை அவசியம் எனவும் வலியுறுத்தி ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்து, ஆயிரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இதை தொழிலாளர்கள் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன், அரசாங்கம் உறுதியளித்தப்படி தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தினை 1000 ரூபாவாக பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் இதை இழுத்தடிப்பு செய்வதற்கு இடமளிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இம்மாதம் முடிவதற்குள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், அப்படி இது இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில் கடந்த காலங்களை போல் ஏமாற்றம் செய்யாது குறிப்பிட்ட காலத்திற்கான நிலுவை பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும், மலையகத்தில் உள்ள ஏனைய பல்வேறு இடங்களிலும் இப்போராட்டத்தினை விஸ்தரிக்கவுள்ளதாகவும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

1000 ரூபா இல்லையேல் சந்தாவை நிறுத்துவோம் – தொழிலாளர்கள் எச்சரிக்கை

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டாவிட்டால் தொழிற்சங்கங்களுக்கான சந்தாப்பணத்தை நிறுத்துவதற்கு இம்முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி பகுதிகளில் உள்ள எமது செய்தியாளர்கள் தொழிலாளர்களிடம் கலந்துரையாடியபோதே அவர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம் வருமாறு,

” அடிப்படை நாட் சம்பளமாக நாம் ஆயிரம் ரூபா கோரும்போது, அதில் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு கம்பனிகள் தயாரில்லை எனக்கூறப்படுகின்றது. அடிப்படை சம்பள விடயத்தில் தொழிற்சங்கங்களும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. அடிப்படை சம்பளம் உரிய வகையில் அதிகரிக்கப்படாமல் இதர கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக்கூறப்படுவது ஏமாற்று வித்தையாகும்.

தொழிற்சங்கங்கள் பேரம்பேசி, எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், எமக்காக பேரம்பேசமுடியாத தொழிற்சங்கங்கள் எதற்கு? அவற்றுக்கு செலுத்தப்படும் சந்தாவை நிறுத்துவோம். இதன்மூலம் குறைந்தபட்ச எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். அதன்பின்னர் தக்கபாடம் புகட்டப்படும்.

ஆயிரம் ரூபா வழங்காவிட்டால் கம்பனிகளின் முகாமைத்துவம் பறிக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கை நடைமுறைக்கு வருமா, அதற்கான அழுத்தங்களை தொழிற்சங்கங்கள் பிரயோகிக்குமா என்பதனை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். ” -என்றனர்.

நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 80 வீதமானோர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதலாளிமார் சம்மேளனத்தின் யோசனை நிராகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் தொழில் அமைச்சிடம் கையளித்துள்ள யோசனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று தெரிவித்தது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் எதுவித முன்னேற்றமும் இல்லாத அந்த திட்டம் ஏற்றுகொள்ள முடியாததொன்று என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் உற்பத்தி கொடுப்பனவாக 150 ரூபாவும் வரவு கொடுப்பனவாக150 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 105 ரூபாவை உள்ளடக்கி கம்பனிகளால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சம்பள யோசனை தொடர்பில் இ.தொ.காவின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இல்லாது கம்பனிகள் முன்மொழியும் எந்தவொரு சம்பளத் திட்டத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கம்பனிகளின் யோசனை சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கட்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் போதிய உயர்வு இல்லாத சம்பள யோசனைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. கம்பனிகள் முன்மொழியும் யோசனைகளில் அனைத்துத் தொழிலாளர்களும் சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடியாது.

ஒரு தொழிலாளிக்கு அரை பெயர் வழங்கப்படும் பட்சத்தில் அவருக்கு அன்றை நாளுக்கான சம்பளம் குறைவடையும்.ஆகவே, இந்த யோசனையை சம்பள நிர்ணய சபையிடமே ஒப்படைத்துவிட்டோம்.அவர்களே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கட்டும் என்றார்.

அடிப்படை நாட் சம்பளம் 700 ரூபாதான் – கம்பனிகள் திட்டவட்டம்

முதலாளிமார் சம்மேளனம் 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன், இதர கொடுப்பனவுகள் அடங்கலாக 1,105 ரூபா மொத்தச் சம்பளத் தொகையை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் புதிய யோசனையொன்றை தொழில் அமைச்சிடம் முன்வைத்துள்ளது.

இதனைவிட எந்தவிதத்திலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாதென தோட்டத் துரைமார் சம்மேளனத்தின் தலைவர் பாத்திய புளுமுல்ல தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுகாலம் பூர்த்தியாகியுள்ளது.

அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளுடனும் கடந்த ஒருவருடகாலமாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை இந்த விடயம் தொடர்பில் நடத்தியிருந்தது.

கடந்த வரவு – செலவுத் திட்ட உரையின் போது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென பிரதமர் உறுதியளித்திருந்தார்.

அத்துடன், 1,000 ரூபா சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு எதிராக சட்டத்திருத்தத்தின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

என்றாலும் கம்பனிகள் 1,000 ரூபா சம்பள உயர்வுக்கு மறுப்பை வெளியிடுவதால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை காணப்படுகிறது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில்

புதிய யோசனையை முன்வைத்தது முதலாளிமார் சம்மேளனம்

பேசப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதலாளிமார் சம்மேளனம் சம்பள உயர்வுக்கான புதிய யோசனையொன்றை தொழில் அமைச்சிடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் தோட்ட துறைமார் சம்மேளனத்தில் தலைவர் பாத்திய புளுமுல்லவிடம் வினவிய போது,

1,000 ரூபா சம்பள உயர்வை வழங்குவது மிகவும் கடினமாகும். 1,000 ரூபா சம்பள உயர்வை தற்போதைய சூழலில் வழங்க வேண்டுமாயின் ஒரேடியாக 25 ரூபாவை அதிகரிக்க வேண்டியுள்ளது. இது எந்த வகையிலும் சாத்தியப்படாத விடயம். தொழிற்சங்கங்களுக்கும் இது தெரியும். ஆனால், 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் மொத்த சம்பளமாக 1,105 ரூபாவை வழங்குவதற்கான யோசனையை தற்போது தொழில் அமைச்சிடம் வழங்கியுள்ளோம்.

அதில் 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கு அப்பால் உற்பத்தி கொடுப்பனவாக 150 ரூபாவும் வரவு கொடுப்பனவாக 150 ரூபாவும் ஏனைய ஈ.பி.எப்., ஈ.டி.எப். கொடுப்பனவாக 105ரூபாவும் வழங்கப்படும். இந்த யோசனைக்கு கம்பனிகள் இணக்கம் வெளியிட வேண்டும். அதற்கு அப்பாலான சம்பள உயர்வுக்கு செல்வது கடினமாகும் என்றார்.

நோர்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான நோர்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோர்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட குறுகிய காலத்திற்குள் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 23 பேரில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

எஞ்சியவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. உயிரிழந்தவர்கள் நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள்.

இவர்கள் பைசர் தடுப்பூசியை பயன்படுத்திய பின் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளனர்.

உயிரிழந்த அனைவரும் 80-வயதிற்க்கு மேற்பட்டவர்கள் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என நார்வே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பைசர் தடுப்பூசியை கவனமாக பயன்படுத்த நோர்வே அரசு அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசியின் வினியோகத்தை அந்நிறுவனம் குறைத்துள்ளது.

புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 46வது ஜெனிவா அமர்வின் போது கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகளது குழுவினர் இணை அனுசரணை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் விடுத்திருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது .

இலங்கை தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகள் குழுவில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி ,வடக்கு மஸிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகியன இடம்பெற்றுள்ளன.

புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவுகள் சமரசமுடையதாக காணப்படுவதாக சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடும் அதேவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இணக்கப்பாடுடைய தீர்மானத்தைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றார்.

இணக்கப்பாடுடைய தீர்மானத்திற்கு உடன்படுவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக சவால் மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கையின் அரசியல் யாப்பிற்கும் இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால் ஜெனிவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஒரு அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் நிலைமைக்கு வழிகோலியிருந்தது. இணக்கப்பாடுள்ள தீர்மானம் என்றாலும் அது நடக்குமா இல்லையா என்று கூறமுடியாது . ஆனாலும் அதுவும் கூட அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகும்.’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி – குபோப்தமிழ்

ஜே.ஆரின் வழியில் ஆட்சியைப் பிடிப்போம் – ரணில் உறுதி

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உட்பட புதிய பதவிகளுக்கு தெரிவானவர்களை கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்தில் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,

1977களில் பெரும்பான்மையுடன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிய ஜே.ஆர். ஜயவர்தனவின் பயணத்தையே நாம் தொடர வேண்டியுள்ளது.

அன்று ஜே.ஆர். உடன் இருந்த அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல. என்.ஜீ.பி. பண்டிதரட்ண , எனது தந்தை எஸ்மன்ட் விக்கிரமசிங்க , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜீ.பி.சி. சமரசிங்க போன்றவர்கள் சிறந்த நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் ஆவர்.

மறுப்புறம் சிறில் மெத்திவ் , ஆர். பிரேமதாச , போல் பெரேரா , ஈ.எல். சேனாநாயக , வின்சன்ட் பெரேரா , காமினி மற்றும் லலித் போன்றவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவருமே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய வில்லை.

ஆனால் இவர்களை இணைத்துக் கொண்டுதான் 1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியை கைப்பற்றும் போராட்டத்தை தொடங்கினார். எனவே இவ்வாறான பயணத்தையே நாம் தொடங்க வேண்டியதுள்ளது.

அன்றைய சூழலும் இன்றைய நிலைமையும் வெவ்வேறு என்றாலும் சிறந்த திட்டமிடலே எம்மை வெற்றி இலக்கை நோக்கி கொண்டுச் செல்லும்.

எனவே கட்சியின் வெற்றி இலக்கை நோக்கிய திட்டத்தை தயாரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள். சாகல ரத்நாயக மற்றும் அனோமா கமகே ஆகியோர் இதற்கு தலைமைத்தாங்கி ஆலோசனைகள் பெற்று திட்டத்தை வரைவார்கள்.

மிக குறுகிய காலத்தில் தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது. எதிர்க்கட்சியும் அதே நிலையில் தான் உள்ளது.

ஹரின் மற்றும் ரஞ்சன் ஆகியோரை ஐக்கிய தேசிய கட்சி தனிமைப்படுத்தி விடக் கூடாது . அவர்களுக்கு ஏற்படக்கூடிய அநீதிகளின் போது நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்படின் நீதிமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜோ பைடன் அறிவித்தார்.

ஓராண்டுக்கும் மேலாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உயிர் கொல்லி கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.‌

அங்கு இந்த கொடிய வைரஸ் 2 கோடியே 35 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கியதோடு 3 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்தார்.

முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் கொரோனா வைரசை ஜனாதிபதி டிரம்பை விட சிறப்பாக கையாண்டு நாட்டை அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுப்பேன் என்ற வாக்குறுதியின் மூலமே தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் வருகிற 2ஆம் திகதி அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக டெலாவேர் தனது குழுவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் 5 விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். நாட்டின் நிலைமையை மாற்றுவதற்கான 5 விஷயங்கள். மக்களின் விரக்தியை உந்துதலாக மாற்றுவதற்கான 5 விஷயங்கள். எனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்கள் முடிவில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இலக்கை அடைய உதவும் 5 விஷயங்கள்.

100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமா என்கிற சந்தேகம் பலரிடமும் உள்ளது. ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன் எங்களால் அதை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் தைரியத்துடனும் உறுதியுடனும் அவற்றைப் பின்தொடர, பெரிய இலக்குகளை நிர்ணயிக்கும் நேரம் இது.

ஏனென்றால் தேசத்தின் ஆரோக்கியம் உண்மையில் ஆபத்தில் உள்ளது. முதலாவதாக அதிக முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க உடனடியாக மாகாணங்களுடன் இணைந்து செயல்படுவோம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் தடுப்பூசி போடும் செயல்முறை தோல்வியடைந்த ஒன்றாக உள்ளது. நீங்கள் இன்று பெரும்பாலானவர்களிடம் கேட்டால் யார் தடுப்பூசி போடுகிறார்கள் என்பதை அவர்களால் சொல்ல முடியாது.

அவர்களுக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் நாடு முழுவதும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படாமல் பல்லாயிரக்கணக்கான கொரோனோ தடுப்பூசிகள் உள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி தேவைப்படும் நபர்கள் அதை பெற முடியவில்லை. எனவே நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் இந்த நிலையை மாற்றுவோம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் எங்களது நிர்வாகம் மிகவும் வெளிப்படை தன்மையாக இருக்கும். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

சாதாரண தரப் பரீட்சைகள் 10ஆம் ஆண்டில் நடத்த யோசனை : கல்வி அமைச்சு

கல்விப் பாதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளைப் 10 ஆண்டில் நடத்துவது குறித்தும் உயர்தரப் பரீட்சைகளை 12ஆம் ஆண்டில் நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி செயற்பாடுகளை தரம் 12 வரை மட்டுப்படுத்துவதும் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ன.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10 ல் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, தரம் 12ல் நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்வி முறையில் முழுமையான மாற்றம் வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...