Home Blog Page 3689

‘ஆயிரம் ரூபா விடயத்தில் கம்பனிகளே இழுத்தடிப்பு’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றபோதிலும், பெருந்தோட்டக் கம்பனிகளே இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். இது விடயத்தால் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.

சம்பள உயர்வுக்கு அரசாங்க தரப்பில் இருந்து அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டபோதிலும் கம்பனிகளே இழுத்தடிப்பு செய்து முட்டுக்கட்டையாக இருக்கின்றன.  எனினும், இம்மாதத்துக்குள் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி எடுத்துவருகின்றோம். அமைத்து தரப்புகளுடனும் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும்.” – என்றும் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.

2ஆவது அலைமூலம் 40, 628 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 191 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 502 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 40  ஆயிரத்து 628 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’ – மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 211 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 70 வயதைக் கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் 198 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

6ஆவது நாளாகவும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் 4 பிரிவுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்று 6 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமக்கான சேவை கொடுப்பனவைக் கோரியும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன முறையாக செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தோட்டத்தை புதிய நிர்வாகத்திடம் கையளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.   நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 167 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 40 ஆயிரத்து 437 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’விலிருந்து 36,717 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 562 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 717  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 931 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீர் நெஞ்சுவலியால் கங்குலி வைத்தியசாலையில் அனுமதி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தலைவருமான சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க தலைவராக (பிசிசிஐ) செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதிய 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலிக்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது

அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தெரிவாகியுள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ லெட் படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்-க்கு வழங்கப்படுகிறது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷ் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித் குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தமிழ் சினிமா விருதுகள்:

பன்முகத்தன்மை வாயந்த நடிகர் -அஜித்குமார்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் – டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்

வைத்தியர் உட்பட தெல்தோட்டையில் ஏழு பேருக்கு கொரோனா!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வைத்தியர் ஒருவர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (02) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றாளர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

86 வயதுடைய ஆணொருவருக்கும், 53 வயதுடைய பெண்ணொருவருக்கும், இளைஞர்கள் இருவருக்கும், மூன்று சிறார்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்தோட்டை பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 3 பிரதேசங்களில் உள்ள அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தெல்தோட்டை வைத்தியசாலை வைத்தியரிடமும் கொரோனா தொற்றாளர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார். நோயாளிக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியரிடம் தனிமைப்படுத்தப்பட்டார். இவர்களிடம் கடந்த 28 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கலஹா நிருபர் – ரம்யா

‘ரஜினியாக மாறிய ஆஸி.கிரிக்கர் வீரர் டேவிட் வார்னர்’

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் பாட்டுகளுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ரஜினி போல் மாறிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தில் வரும் ரஜினி போல வேடமிட்டு உள்ளார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று லைக்குகள் குவித்து வருகிறது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

இன்றைய வானிலை!

0
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும்...

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...