Home Blog Page 3690

‘கொரோனா’வால் உலகளவில் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 8 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 650 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 96 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அண்ணா சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் கொடி!

அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 11ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் முதலாவது கொடி, முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.

டயகம , சந்திரகாமம் பிரிவின் தோட்டகமிட்டி தலைவர் தியாகு உட்பட ஆரம்ப ஆதரவாளர்களாலும்,  சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் இளைஞர் அணி அமைப்பாளர்களாான வீரமலை குணசேகரன் மற்றும் ராமஜெயம் பிரசாத் ஆகியோர்களால் பூஜை வழிபாடுகளின் பின்னர் சுப நேரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

2024 ஜனாதிபதி தேர்தல் – ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதலா?

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் போட்டி நிலவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மேற்படி தகவலை நிராகரித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மேற்படி தகவலை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அரசியல் எதிரிகளே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்துவிட்டு, முரண்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறு எந்தவொரு போட்டியும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு என்பது ஜனநாயக அம்சம் கொண்டது. தலைவர் பதவிக்கு வருவதற்கு எவருக்கும் தடை இல்லை.

எனினும், பதுளையில் நடைபெற்ற சம்மேளனத்தின்போது சஜித்தை தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் தலைமையில் முன்னோக்கி பயணிப்போம்.” – என்றார்.

’45 வயதுவரை ஓய்வுபெறும் எண்ணம் இல்லை’

” வயது என்பது வெறும் நம்பர் தான். திறமைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 45 வயது வரை விளையாடுவேன்.” – என்று மேற்கிந்திய தீவுகள் அணியின்  அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடிய அவர் 23 சிக்ஸர்கள் உட்பட 288 ஓட்டங்கள் சேர்த்தார். உலகம் முழுவதும் பல்வேறு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் கெய்லிடம் ஓய்வு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலில் ‘இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை. இன்னும் 5 ஆண்டுகள் என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என்று நம்புகிறேன். அதாவது 45 வயதுக்கு முன்பாக ஓய்வுக்கு வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.

என்னை பொறுத்தவரை வயது என்பது வெறும் நம்பர் தான். திறமைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்றார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்த ஆண்டில் இந்தியாவிலும், 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நடக்கிறது. இவ்விரு உலக கோப்பை போட்டிகளிலும் பங்கேற்கும் குறிக்கோளுடன் கெய்ல் உள்ளார். அவருக்கு தற்போது 41 வயதாகின்றது.

2021 மார்ச்சுக்குள் இலங்கையில் 20 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப்பெறுமென தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உலகில் ஒவ்வொரு மில்லியனுக்கு 522 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டுள்ளனர். தெற்காசியாவில் இது மிகவும் அதிகமாகும். ஒவ்வொரு மில்லியனுக்கும் 5,809 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எமது நாட்டில் மில்லியனுக்கு 1,886 பேர் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் எமது நாட்டில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து கொவிட்19 தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பணியாற்றிவரும் நிலையில் எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கொவிட்19 தடுப்பூசி கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.”

சு.கவின் புதிய யோசனைக்கு சஜித் அணி போர்க்கொடி

மாகாணசபை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைக்கு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறும்வரை பழைய மாகாணசபைகளை ஸ்தாபித்து முன்னாள் உறுப்பினர்களை இயங்கு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற யோசனையை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

சு.கவின் இந்த யோசனை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு,

” தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்கு பதவிகளை வழங்குவதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தி, மக்களின் இறைமைக்காகவே அது நடத்தப்படுகின்றது. எனவே, தேர்தலை எந்நேரமும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஆனால் தேர்தல் என்ற போர்வையில் பதவிகளை வழங்கும் திட்டத்தை ஏற்கத்தயாரில்லை.” – என்றார்.

புத்தாண்டில் உலகளவில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன

புத்தாண்டு தினத்தில் உலகமெங்கும் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது.

உலகளவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை 10 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணித்து வருகிறது யுனிசெப் நிறுவனம். அந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி இன்று புத்தாண்டு நாளில் 3 லட்சத்து 70 ஆயிரம்  குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்திருக்கலாம் என கணித்துள்ளது.

மொத்தத்தில், 2021 ஆம் ஆண்டில் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

 இந்தியாவில் 59,995 குழந்தைகள்

சீனாவில் 35,615 குழந்தைகள்

நைஜிரியாவில் 21,439 குழந்தைகள்

பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள்,

எத்யோப்பியாவில் 12,006 குழந்தைகள்

அமெரிக்காவில் 10,312 குழந்தைகள்

எகிப்தில் 9,455 குழந்தைகள்

வங்காள தேசத்தில் 9,236 குழந்தைகள்,

காங்கோ குடியரசில் 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்தித்த ஜீவன், செந்தில், பாரத்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இதன்போது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

– ஊடகப் பிரிவு

‘கொரோனா’ மேலும் நால்வர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 60 வயதைக் கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 195 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘மலையக மக்கள் முன்னணி வியாபார ஸ்தாபனமாகிவிட்டது’ – அனுசா சீற்றம்

” என் தந்தையின் மரணத்தால் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பினை விடவும் எம் சமூகத்துக்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகமாக இருப்பதை உணருகிறேன்.” – என்று சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

அமரர் சந்திரசேகரனின் 11ஆவது நினைவு தின நிகழ்வு தலவாக்கலை சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா,

” இன்று ( 01.01.2021) எனது தந்தையும் மறைந்த பெருந்தலைவருமாகிய அமரர் சந்திரசேகரன் அவர்களின் 11ஆவது சிரார்த்த தினமாகும். எனது தந்தை மக்களுக்கான பிரச்சினைகளின் போது வெறுமனே பேசி கொண்டுமட்டுமிருக்காமல், செயலில் காட்டிய நேர்மையான அரசியல் தலைவர், அவர் மறைந்த நாளிலும் பிறந்த நாளிலும் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் அவரது சேவைகளை எண்ணி பெருமைக் கொள்கிறோம்.

தான் சார்ந்த சமூக அவலத்தினைப் போக்குவதற்காக தனிமனிதனாக அவர் முகம் கொடுத்த துயரங்களும் வேதனைகளும் வீணாகவில்லை என்பதனை மக்கள் மத்தியில் இருந்து அறியும் போது அவரது மகளாக பெருமைப் படுகிறேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மரணத்தின் பின்னர் அவர் ஆரம்பித்த அமைப்பு வியாபார ஸ்தானமாகியதோடு அவரது பெயரும் சேவைகளும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ஆனால் விமர்சனங்களினால் இவர்களுக்கு பதில் அளிப்பதில் பயனில்லை என்பதால்தான் இன்று அவரது பெயரிலேயே அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி எனும் தொழிற்சங்கத்தையும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி எனும் அரசியல் கட்சியையும் ஆரம்பித்திருக்கிறோம்.

நேர்மையான சிந்தனை கொண்ட ஆதரவாளர்கள் உள்ளவரை என் பயணம் என் தந்தை வழியில் கடைசிவரை தொடரும்.
நேர்மையான அரசியல் தலைமை அமரர் சந்திரசேகரன் அவர்களின் ஆசியுடன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...