Home Blog Page 3691

நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 39 ஆயிரத்து 891 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’விலிருந்து மேலும் 826 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 826 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 940 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 204 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஸ்கெலியாவில் குரங்கு தொல்லை அதிகரிப்பு

மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்டத்திலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

தேயிலை மலைகளில் தொழில் செய்யும் தொழிலாளர்கள்,   பகல் உணவையும் காலையிலே தயாரித்து விட்டு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு இவர்களால் தயாரிக்கப்படும் உணவுகளை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி வாழும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உண்டு விட்டு செல்வதாக குறிப்பிடுகின்றனர்.

இதனால் பாடசாலை முடிந்து வரும் தமது பிள்ளைகள் பட்டினியுடன் தாம் வரும் வரை காத்திருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, நகரங்களில் உள்ள கடைகளுக்கும் சென்று உணவு வகைகளை எடுத்து செல்வதாகவும், கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி காணப்படும் சிறிய காட்டு பகுதிகளில் இருந்தே குரங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை அறிவித்தும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை என இம்மக்கள் சுட்டிக்காட்டினர். எனவே அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இந் நகர வர்த்தகர்கள் மற்றும் இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.கிசாந்தன்

புத்தாண்டில் டிக்கோயாவில் கோர விபத்து – மூவர் படுகாயம்!

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (01) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற ஆட்டோவொன்றும், மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸும், டிக்கோயா வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ , வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

ஆயிரம் கதைகூறி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் அவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. அதன்பின்னர் 2021 ஜனவரி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இன்னும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனவே, தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் ,அவர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

கம்பளையில் மேலும் இருவருக்கு கொரோனா!

கம்பளை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை, கம்பளவத்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும், ஆண்டியாகடவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

24 வயதுடைய இளைஞன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் வேலைசெய்துள்ளார். இவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் நேற்று (31) வெளியாகின. இதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆண்டியாகடவத்த பகுதி தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு பகுதிகளிலும் 4 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

கம்பளை நிருபர் – லாவண்யா

பசறை பகுதியில் 19 வயது யுவதிக்கு கொரோனா!

பசறை – ஹிங்குருகடுவ பகுதியில் (19 வயது) யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி 54 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் அறிக்கையின் அடிப்படையிலே குறித்த தொற்றாளர் இன்று உறுதிப்படுத்தப்பட்டார் என  பசறை பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.

இதன்படி பசறை பிரதேசத்தில் இதுவரைக்காலப்பகுதியில்
25 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இவர்களில் 20 பேர் குணமடைந்து தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

நடராஜா
மலர்வேந்தன்

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் புத்தாண்டு வாழ்த்து…

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல் பிரமுகர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது.

எனவே,  மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம்.

கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது.

மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் செயற்படாது என்ற அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீண்போக நாம் இடமளிக்கமாட்டோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

“பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.

ஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும்.

கொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.

வைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது.

கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்தி வருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவும் அளப்பரியதாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி.

அதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும். மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.

எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

மலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.

செந்தில் தொண்டமான்

பாரிய எதிர்பார்ப்புகள், இலட்சியங்களை நிறைவேற்றும் எண்ணங்களோடு ஆரம்பித்த 2020ஆம் ஆண்டு, கனவுகளாகவே கரைந்துபோன சோகத்தில் இருக்கும் எம்மக்களின் வாழ்வில், மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு, வசந்தத்தைக் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

கொரோனா எனும் கொடிய நோய் எம்மை ஆட்கொள்ளத் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகின்ற நிலையில், அதிலிருந்து மீள முடியாத பெருந்துயருக்குள் சிக்கியுள்ள அனைவரதும் வாழ்விலிருந்து இருள் நீங்கி, கதிரொளி பரப்பி, கவலைகள் துடைத்திடும் ஆரம்பத்தை, இந்நாள் இனிய நாளாகப் பெற்றுத்தரட்டும்.

நெருக்கடி மிகுந்த தொற்று நோய்ப் பேரிடர்காலத்திலிருந்து, உலகத்தாரும் எம்மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் புதிய ஆண்டாகவே, இந்த 2021 மலர்ந்துள்ளது.

எண்ணற்ற சவால்களும் சங்கடங்களும் நிறைந்த 2020ஆம் ஆண்டின் தாக்கம், ஓரிரு நாள்களில் தணிந்துவிடாது. அதேபோன்று, அதை நீக்குவதற்கான ஆயுதமும், மக்களிடமே இருக்கிறது. சுய பாதுகாப்பை ஒவ்வொருவரும் கடைபிடித்து, வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளின் பிரகாரம் நடந்துகொள்வதன் ஊடாகவே, இந்தப் பிணியிலிருந்து நாம் மீளமுடியும்.

வருங்காலத்தைப் பற்றி வருடக்கணக்காய் யோசிப்பதைவிட, நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தாலே போதும். வாழ்வு வளமாக முன்னேறிச் செல்லும். இந்நிகழ்காலத்தில் நாம் எதிர்நோக்கிவரும் தடைகளைத் தகர்த்தெறிந்து, வளமான வாழ்வை நோக்கி நகரும் காலம் கனிந்துள்ளது.

இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவரும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உதயா எம்.பி. – தொழிலாளர் தேசிய சங்கம்

மக்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து புத்தாண்டை வரவேற்ற கலாசாரம் மாறி, இம்முறை கைகழுவி, கைகூப்பி வரவேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கொரோனாவின் ஓராண்டு கால அச்சுறுத்தல் நீங்கி மலரும் புத்தாண்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிபிறக்க வேண்டும்.

நாட்டு மக்கள் யுத்தம், சுனாமி முதலான எத்தனையோ சவால்களுக்கு முகங் கொடுத்து வந்துள்ள போதிலும், “கொரோனா” போன்ற கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். “வருமுன் காத்தல், வந்தபின் சிகிச்சை” என்ற சுகாதார நடைமுறைக்கு ஏற்ப முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டும், சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில் தனிமனித சுய கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே எமது சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம், மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சம்பள உயர்வுக்கு தகுந்த முறையில் தீர்வு காணப்பட வேண்டும். மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

மலையக மக்கள் காலங் காலமாக எதிர்நோக்கிவரும் காணி, குடியிருப்பு பிரச்சினைகள் தீர்ந்து, அவர்களின் வாழ்வில் சுபிட்சம் தோன்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருந்து எமது பிரச்சினைகளை வென்றெடுக்க மனதில் உறுதி பூணுவோம்.

ஆயிரம் ரூபா வழங்க கம்பனிகள் மறுப்பு – உறுதிப்படுத்தினார் அமைச்சர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.

” பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். இது பற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளில் இருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை.

பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? சின்மயி சீற்றம்

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்க
ளுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் தவறாக தெரிகிறது.

ஊர்ல 4 பேர் என்ன சொல்வாங்கனு சொல்லி பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் பெற்றோர் எனில், தயவு செய்து உங்கள் மகளின் குணாதிசயங்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் பேசுங்கள்” என சின்மயி கூறியுள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...