Home Blog Page 3692

வீரியம்மிக்க புதிய கொரோனா சீனாவுக்கும் பரவியது

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியம்மிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.

உருமாறிய கொரோனா முதன்முதலில் இங்கிலாந்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த புதியவகை உருமாறிய கொரோனா பழைய கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.இதுவரை கொரோனா பாதிப்புகளால் உலகமெங்கும் மொத்தம் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமரர் சந்திரசேகரனின் 11 ஆவது சிரார்த்த தினம் இன்று

மலையகத்தில் உரிமை அரசியலுக்கு உயிர்கொடுத்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். பெரியசாமி சந்திரசேகரனின் 11 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு அமரர் சந்திரசேகரனின் புதல்வியும், சட்டத்தரணியும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” பாடசாலை மாணவனாக இருந்தும் தனது 20 வயதிலேயே மலையக மக்களின் விடிவுக்கான போராட்ட அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டு தான் பிறந்து வளர்ந்து நேசித்த தலவாக்கலை மண்ணிலேயே விதையாகவும் விழுந்த என் அன்பு தந்தை அமரர் பெ.சந்திரசேகரனின் 11வது சிரார்த்த தினம் இன்றாகும்.

 அமரர் பெ.சந்திரசேகரன் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். அவர் மண்ணுலகை விட்டு பிரிந்த போது நான் சிறுமியாக இருந்தேன்.

11 வருடங்கள் 11 நிமிடங்களாய் கடந்து விட்டாலும் கூட என்  தந்தையின் பாச நினைவுகளோடு அவர் விட்டுச் சென்ற மக்கள் சேவையில் அவரது அடியொற்றி நடக்கிறேன்.நான் சந்திக்கும் அனைத்து மக்களும் இன்று வரை என் தந்தையின் நினைவுகளோடு வாழ்ந்து வருவது எனக்கு புதிய சக்தியை தருகிறது.

அவரது இழப்பை எண்ணி பலர் கண் கலங்குவது என் தந்தையின் பாசத்தை மீட்டு காட்டுகிறது. அவர் விட்டுச்சென்ற சேவை தொடர்ந்து முன்னெடுக்கத் துடிக்கும் இளைஞர்களின் ஆர்வம் எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கிறது.

என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியவர்களின் அனுபவங்கள் நான் பயணிக்க வேண்டிய பாதையை வடிவமைத்து கொடுக்கிறது.

மக்களின் உயர்ச்சியை முதன்மைப்படுத்திய என் தந்தையின் சேவைகள் மலையக மண்ணில் வேர் பதித்து கிளைகள் பரப்பி பரந்து விரிந்து கிடப்பதை மன நெகிழ்ச்சியுடன் அவதானிக்கிறேன்.

நல்லது நடக்கும் என அமைதி காப்பது அடிமைத்தனம் செய்து முடிப்பேன் தீமைகள் அழிப்பேன் என்பது வீரத்தனம்.

சித்திரை புத்தாண்டில் பிறந்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் எம்மை விட்டு பிரிந்த நம் தலைவன் எம் அனைவருக்கும் பதிய வாழ்க்கையை தந்து விட்டே சென்றுள்ளார். அர்த்தமுள்ள கொள்கைகளை தந்து விட்டு சென்றுள்ளார்.
நம்பிக்கை என்ற விதையை மலையகமெங்கும் விதைத்து விட்டுச்சென்றுள்ளார்.

இதனை காப்பாற்றி வளர்த்தெடுத்து எம் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் வரை என் சமூகப் பணிகளிலிருந்து நான் ஓய்வெடுக்க மாட்டேன்.” – என்றுள்ளது.

சஜித்துடன் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தார் நவீன்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே நவீன் திஸாநாயக்கவின் தம்பியான மயந்த திஸாநாயக்கவால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.

“ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு உங்கள் அண்ணன் தயாராகிவருகின்றார். அவரை இந்த பக்கத்துக்கு வருமாறு நீங்கள் அழைக்கவில்லையா அல்லது அந்த பக்கம் சென்றுவிடுவீர்களா.” – என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மயந்த திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,

” நான் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்லமாட்டேன். ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு எனது சகோதரருக்கு தேர்தலுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டார்.

எப்படி இருந்தாலும் அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது என்றே நம்புகின்றேன். 25 வருடங்களாக அப்பதவியில் இருப்பவர் இன்னும் பல வருடங்கள் இருப்பதற்கு முற்படுவார்.” – என்றார்.

இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த ‘2020’

2020 ஆம் ஆண்டானது எல்லோர் மனங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் துன்ப அலைகளை முட்டிமோதவைத்த வருடமாகவே பார்க்கப்படுகின்றது. கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் 18லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலகளவில் அதிகளவானவர்கள் உயிரிழந்த காலப்பகுதியாகவும் 2020 மாறியது. உலக நாடுகளின் பொருளாதாரம் மட்டுமல்ல அனைத்து துறைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இவ்வாறு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லாம்.
எனினும், கொரோனாவுக்கு மத்தியிலும் இலங்கையில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் பல சம்பவங்கள் அரங்கேறின. அதேபோல் 2020 ஆண்டானது இலங்கை அரசியல் வரலாற்றில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் பார்வையை செலுத்துவோம்.
1951 ஆம் ஆண்டு உதயமான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தனித்தும், கூட்டணியாகவும் போட்டியிட்டது. கூட்டணி அமையும் பட்சத்தில் அதற்கு சுதந்திரக்கட்சியே தலைமை வகித்தது. ஆனால் 6 தசாப்தங்களுக்கு பின்னர் மற்றுமொரு கட்சியுடன் இணைந்து போட்டியிடவேண்டிய நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டது. (யாழ். மாவட்டத்தில் மட்டுமே தனிவழி) கூட்டணி என்ற போர்வையில் அக்கட்சிக்கு தற்போது சரணாகதி அரசியலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மற்றுமொரு பழமையான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் 2020 அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது என்றே கூறவேண்டும். 73 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சி இல்லாமல் நாடாளுமன்றம்கூடிய சம்பவமும் பதிவானது. தேசியப்பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஓர் ஆசனத்துக்குகூட உறுப்பினர் ஒருவரை நியமித்துக்கொள்ளமுடியாமல் அக்கட்சி திண்டாடுகின்றது.
புதிதாக உருவான இரு கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றுமொரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன.
இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கொரானா வைரஸ் தாக்கத்தால் தேர்தலானது மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவமும் இவ்வாண்டு பதிவானது. வாக்களிப்பு நேரமும் அதிகரிக்கப்பட்டிருந்தது. வழமையாக தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். ஆனால் இம்முறை வாக்களிப்பு தினத்துக்கு அடுத்த நாள் காலையில் இருந்தே வாக்கெண்ணும் பணியும் ஆரம்பமானது.
வழமையாக மே தினம் மற்றும் கட்சி மாநாடுகளின்போது ஆளனி பலத்தை காட்டுவதற்காக அரசியல் கட்சிகள் பெருமளவில் ஆதரவாளர்களை திரட்டிவந்து கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவது அரசியல் கலாச்சாரமாக பின்பற்றப்பட்டுவந்த நிலையில், இம்முறை மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தன. கட்சி மாநாடுகள்கூட கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே நடத்தப்பட்டன.
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றது. தொகுதிவாரியாக நடைபெற்ற தேர்தலில் இதுவே பெரு வெற்றியாக அமைந்தது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்றது. விகிதாசார முறைப்படி நடைபெற்ற தேர்தலில் கட்சியொன்று பெற்ற கூடுதல் ஆசனங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இப்படி பல மாற்றங்களை இலங்கை அரசியலில் 2020 ஏற்படுத்தியுள்ளன.
ஆர்.சனத்

கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 191 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

43 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 123 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 35 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 39 ஆயிரத்து 400 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கம்பனிகள் தொழில் அமைச்சரிடம் அவகாசம் கோரியதாலேயே பேச்சுவார்த்தைகள் 7ஆம் திகதி வரை ஒத்திவைப்பு ; பாரத் அருள்சாமி விளக்கம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் அது ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்தி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இ.தொ.காவின் உப செயலாளரும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி கூறியவை வருமாறு,

” கடந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் தங்களது பணிப்பாளர் குழாம் மற்றும் தலைவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் 31ம் திகதி கூடுவதாக கூறி இருந்தனர். எனினும், காலம் போதாமையினால் முதலாளிமார் சம்மேளனம், தொழில் அமைச்சரிடம் 7ம் திகதி வரை பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே இன்றைய தினத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் இ.தொ.காவினர் காணோளி ஊடாக கலந்து கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது.

ஆனால், இ.தொ.காவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தான் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜீவன் தொண்டமான் தலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப் பை இ.தொ.கா. நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். அதுகுறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.'” என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’விலிருந்து 35,329 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 706 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 174 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

காலத்தை கடத்தவே ஆயிரம் ரூபா விடயத்தில் ‘ஒத்திவைப்பு நாடகம்’ – திகா சீற்றம்

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தாலும் , அரச சார்ப்பு தொழிற்சங்கங்களாலும் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் சம்பள உயர்வுக்கு சாத்தியமில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளதுடன், இது விடயத்தில் இழுபறி நிலை தொடர்கின்றது. ” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பள உயர்வு கிடைக்கவேண்டுமெனில் இந்நேரம் பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தீர்மானம் எட்டப்பட்டிருக்கவேண்டும்.ஆனால் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் திட்டமிட்ட அடிப்படையில் பிற்போடப்பட்டுவருகின்றது.

ஜனவரி 7 ஆம் திகதிதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டாலும் எப்போது இறுதி முடிவு எட்டப்படும் என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. சிலவேளை இதன் பின்னணியில் இழுத்தடிப்பு என்ற நாடகம்கூட அரங்கேறலாம். பேச்சுவார்த்தை நடக்கின்றது என்ற போர்வையில் காலம் கடத்தப்படலாம்.

குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபா தொடர்பான முன்மொழிவு இருந்தாலும் அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.  கம்பனிகள் நினைத்தால் மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்ற நிலைமை காணப்படுகின்றது. பேரம் பேசி, தீர்வை பெறுவதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய அக்கறை செலுத்தவில்லை.

எது எப்படியிருந்தாலும் எமது மக்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம், ஜனவரியில் தீர்வு எட்டப்படாவிட்டால்கூட, ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பளம் கணிக்கப்பட்டு நிலுவைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டும்.” – என்றார் திகாம்பரம்.

கருணை காட்டியது இ.தொ.கா.! தப்பியது கதிர்ச்செல்வனின் தவிசாளர் பதவி!!

காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் அக்கரப்பத்தனை தவிசாளர் பதவியில் கதிர்ச்செல்வன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று இ.தொ.கா. அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், சிகிச்சைகளின் பின்னர் முழுமையாக குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று அவர், இ.தொ.கா. அலுவலகத்துக்கு  விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தனது செயலுக்காக மன்னிப்பு கோரிய அவர், இனிமேல் அவ்வாறான தவறுகள் இடம்பெறாது என இ.தொ.கா. உயர்பீடத்திடம் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சொந்த பணத்தில் நிவாரண திட்டங்களை முன்னெடுக்குமாறு உயர்பீடத்தில், கதிர்ச்செல்வனுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதேச சபைகளின் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கதிர்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...