Home Blog Page 3688

மத்திய மாகாணத்தில் 2,469 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை மத்திய மாகாணத்தில் 2 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 18 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 436  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை 1,887  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 146 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜெனிவாவுக்கான வரைபைத் தயாரிக்க தமிழக்கட்சிகள் ஓரணியில்!

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான வரைபு ஒன்றினை தயாரிப்பதற்கு மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனைக்குழு கூட்டம் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மதியம் தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.

குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தமிழர் தரப்பு ஜெனிவா விவகாரத்தை கையாள்வதற்கான வரைபு தயாரித்தல் தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட நிலையில் ஜெனிவா கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

இதன்போதே வரைபு தயாரிப்தற்கான குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதில் தமிழ்த்சிதேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

செ.கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2ஆவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா முன்னிலை!

இலங்கை – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் 2ஆவது போட்டியிலும் தென்னாபிரிக்க அணியின் ஆதிக்கம் தொடர்கின்றது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

ஜொகன்னஸ்பேர்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இருப்பினும் தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்களையும் இழந்து இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக குசல் பெரேரா 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலெடுத்தாடியதென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 2ஆம் நாள் ஆட்டம் இன்றாகும்.

வட்டவளை கொத்தணி – தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக வட்டவளை தோட்டத்தில் 07 பேருக்கும், வட்டவளை நகரப் பகுதியில் 03 மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளனடன் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 72 பேருக்கு இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களோடு தொடர்புகளை பேணிவந்த600 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை அதிக தொற்றாளர்கள் உறுதியான வட்டவளை மவுண்ஜின் தோட்டம் சுயதனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதோடு குறித்த தோட்டப் பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்லவோ வெளியார்கள் உள் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

‘போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவா மாநாட்டிலும் நிரூபிப்போம்’

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிய சாட்சியங்களுடன் இம்முறை நிரூபிப்போம் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் 2021 பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 19 ஆம் திகதிவரை நடைபெறும் குறித்த கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்நிலையில் மேற்படி கூட்டத்தொடர் தொடர்பில் விபரிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. தீவிரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. உரிய சாட்சிகளுடன் இதனை நிரூபிப்போம்.

நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தாருஷ்மன் குழு மற்றும் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஆகியோர் இடமளிக்கவில்லை. இம்முறை இவ்விரு அறிக்கைகளையும் முன்வைப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என சாட்சியங்களுடன் சுட்டிக்காட்டுவதற்கு தயார். சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளன.” – என்றார்.

‘கொரோனா’ இலங்கையில் நேற்றுவரை 213 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
57 மற்றும் 76 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 200 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் 44,586 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 215 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 586 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 252 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 40 ஆயிரத்து 843 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனாவை எதிர்க்க கொத்தை தவிர்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக கொத்து உள்ளிட்ட துரித உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிக்க மலவிகே தெரிவித்துள்ளார்.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல், மருத்துவ அறிவியல் பீடத்தின் பேராசிரரியரான நீலிக்க மலவிகே, சிலரின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமானது எனவும் அவர் தெரவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மக்கள் ஆரோக்கியமான உணவுகளைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டும் எனவும், மரக்கறி, பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் தினந்தோறும் உடல் பயிற்சிகளை செய்வதுடன் உடலில் விற்றமீன் டி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விற்றமின் டி என்பது கொரோனா வைரசை எதிர்த்து சிறந்த முறையில் செயற்படுவது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதால், கொவிட் 19 வைரசிற்கு எதிரான ஒரு வியூகமாக இதனை முன்னெடுக்க வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக சொந்தங்களின் கண் துடைக்க ஆதரவு தந்த புலம்பெயர் உறவுகள்

அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க புலம்பெயர் உறவுகள் சிலர் முன்வந்துள்ளனர்.

ஹட்டன் நகரில் இருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிவ்வெளிகம பகுதியிலேயே இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தீக்கிரையாகிய சுமார் 12 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 45 குடுமபங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

இவர்களிற்கான கற்றல் உபகரணங்களை பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் ஊடாக செல்வி. ச.கவிதா(Germany) .தனது பிறந்த நாள் பரிசாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவு, சீனி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணய விலை

10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை விதிப்பதற்கு நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி அரிசி, மாவு, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 10இற்கு இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

6 மாத காலத்திற்கு இந்த விலை நிரணயம் அமுலில் இருக்கும் என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்துள்ளார்.

நிர்ணய விலையில் பொருட்களை விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல்கள் அடுத்த சில தினங்களில் கோரப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெப்ரவரி மாதம் முதல் நிர்ணய விலையில் இந்த 10 அத்தியவாசியப் பொருட்களையும் நாடு முழுவதும் ச.தொ.ச. மற்றும் சமூர்த்தி விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிகிந்தலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

வடக்கின் அபிவிருத்திக்கு விசேட செயற்றிட்டம்

0
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு...

இன்றைய வானிலை!

0
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும்...

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...