Home Blog Page 3687

‘இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று’

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் மொயின் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இலங்கை வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் மெயின் அலிக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவருடன் நேரடி தொடர்பில் இருந்த மற்றுமொரு வீரர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

5 அரச நிறுவனங்கள் குறித்து கோப் குழு விசாரணை

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஜனவரியில் 05 அரச நிறுவங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை பரிசீலனை செய்யவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி ஜனவரி மாதம் 06, 08, 19, 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கோப் குழு கூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, ஜனவரி 06 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 08 ஆம் திகதி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் முதலீட்டு முகாமைத்துவம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையும்

ஜனவரி 19 ஆம் திகதி இலங்கையில் பெற்றோலியத்தை சேமித்துவைத்தல் மற்றும் விநியோகித்தல் பற்றிய கணக்காய்வு அறிக்கையும், ஜனவரி 21 ஆம் திகதி தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பிலும், ஜனவரி 22 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தற்போதைய நிலைமை பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கையும் கோப் குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

45 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 41 ஆயிரத்து 221 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 37, 817 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 565 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 744 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு 25 ரூபா சம்பள உயர்வை வழங்க சதி’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்கமுடியாது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், 25 நாட்கள் வேலையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும் – என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

மஸ்கெலியாவில் இன்று (04.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், 25 நாட்கள் வேலையும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும். அதனை வென்றெடுப்பதற்காக ஆயிரம் ரூபா இயக்கம் உட்பட பல அமைப்புகளும் எம்முடன் கைகோர்த்துள்ளன. இதுவரை 20 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்ற யோசனை 2014 இல் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டன. இதற்கு கம்பனிகள் உடன்படவில்லை. இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

உற்பத்தி கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு, தேயிலை விலைக்கான கொடுப்பனவு போன்றன கம்பனிகளுக்கு சாதகமாக உள்ளன. எனவே, அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்றே அன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கம்பனிகள் முன்வைத்துள்ள புதிய யோசனையில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளன. தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவாக 25 ரூபா வழங்கப்படவுள்ளது. இதன்படி தற்போது 750 ரூபா சம்பளம் பெறுபவர்கள் 775 ரூபாவை பெறும் நிலை உருவாகும். அப்படியானால் வெறும் 25 ரூபாவை மட்டுமே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுப்பதற்கான மோசடிகள் இடம்பெறுகின்றன. இதற்கு உடன்படமுடியாது.

தொழிலாளர்களின் கோரிக்கை உரிய வகையில் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்.” – என்றார்.

டிக்கோயா – பீரட் பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா – 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

பொகவந்தலாவ சுகாதார பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டம் பீரட் பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தோட்டத்தில் உள்ள 12 குடும்பங்களை சேர்ந்தவரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பீரட் தோட்டத்தில் ஏற்கனவே நால்வருக்கு கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (04.01.2021) வெளியாகின.

இதில் தாயொருவருக்கும், மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், பீரட் தோட்டத்தில் அம்மன் ஆலயத்தின் பூசகர் ஒருவர் உட்பட 12 குடும்பத்தை சேர்ந்த 45 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோட்டம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொகவந்தலாவ நோத்கோ பகுதியிலும் 28 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (03.01.2021) மாத்திரம் 18 பேருக்கு வைரஸ் தொற்றியது. கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலவரை இம்மாவட்டத்தில் இதுவரை 436 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

‘நேரடியாக மோத முடியாத அரசியல் கோழைகள் இரவில் தடுமாறுகின்றனர்’

அரசியலில் நேரடியாக மோதுவதற்கு முதுகெலும்பற்றவர்கள், நள்ளிரவில் தடுமாறி, கோழைத்தனமான அரசியலை முன்னெடுக்கின்றனர் என்று சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளரும், சட்டத்தரணியுமான அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் முதலாவது கொடி அண்மையில் டயகம பகுதியில் ஏற்றப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அக்கொடி கழற்றப்பட்டு, மலையக மக்கள் முன்னணியின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனுசாவிடம் வினவியபோது, அவர் கூறியதாவது,

” இது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரசியலில் நேரடியாக மோத முடியாதவர்களே, இரவில் தடுமாறுகின்றனர். அரசியல் கோழைகளுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.” – என்றார்.

தமிழக முதல்வரின் பாராட்டை பெற்ற செந்தில் தொண்டமான் காளை

திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர் ஆகியோருக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநிலத் தலைவர் T. ஒண்டிராஜ் தலைமையிலான குழுவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில், புதிய சுகாதார விதிமுறைகளுடன் பொங்கல் திருவிழாவிற்காக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தமைக்கு தமிழக அரசுக்கு இதன்போத நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் சிறந்த இரண்டு காளைகள் நிகழ்வில் காட்சிக்கு நிறுத்தப்பட்டன.

2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் யாராலும் அடக்க முடியாத சிறந்த காளைக்கு கார் பரிசாக வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த பரிசை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் காளை அந்த வருடம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தட்டிச் சென்றது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியிலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர் செந்தில் தொண்டமானின் காளை,  சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் செந்தில் தொண்டமானின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் காளை தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று யாரும் அடக்க முடியாத வெற்றி காளையாக வலம் வந்துள்ளது. இந்த காளைக்கென தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இத்தனை சிறப்பு மிக்க காளைகளின் கயிறுகளை பெற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காளைகளை கெளரவித்தார்.

அனுஷ்கா நடிக்க மறுத்த படத்தில் சமந்தா

அனுஷ்கா நடிக்க மறுத்த புராண கதையம்சம் கொண்ட படத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.

இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். அவர்கள் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க உள்ளார்.

கருணாவை சந்திக்க கத்தி, அரிவாளுடன் சென்ற நபர் கைது

கருணா அம்மானை சந்திப்பதற்கு கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் நேற்று தங்கியிருந்த கருணா அம்மானை, சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்தியவேளை அவரிடமிருந்து கத்தி, வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்புகையில் கருணா அம்மானை சந்தித்து செல்ல
சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

வடக்கின் அபிவிருத்திக்கு விசேட செயற்றிட்டம்

0
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு...

இன்றைய வானிலை!

0
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும்...

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...