Home Blog Page 3707

டயகமவில் 225 பேரிடம் பிசிஆர் பரிசோதனை!

நுவரெலியா – டயகம மேற்கு பிரதேசத்தில்   சிறியவர்கள், பெரியவர்கள் என 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (23.12.2020) மேற்கொள்ளப்பட்டதாக, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் எட்டு பேர் இனங்காணப்பட்டதையடுத்து, அவர்கள் நெருங்கி பழகியவர்களுக்கு 23.12.2020 அன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை மாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு, லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் நான்கு கொரோனா நோயாளிகள் இன்று (23.12.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் இருவருக்கும், இராணிவத்தை நோனாதோட்டத்தில் ஒருவருக்கும், லிந்துலை மவுஸ்ஸாஎல்ல பகுதியில் ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்கள் கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகளின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

இந்த இரண்டு தினங்களாக டயகம, அக்கரப்பத்தனை பகுதிகளில் 16 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ உதிரிப் பாகங்களை திருடி விற்ற இருவர் கைது!

பசறை- ஹிங்குருகடுவ வீதியில் தனியார் விருந்தகம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் உதிரிப் பாகங்களை திருடி விற்பனை செய்த இரு இளைஞர்களை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று  (22) இரவு இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட உதிரிப் பாகங்கள் அம்மனிவத்தை மற்றும் பங்குவத்தை பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உதிரிப் பாகங்களை மீட்டுள்ளதோடு சந்தேக நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பசறை நகருக்கு அண்மையில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

பசறை நிருபர்கள்

சிறைச்சாலை கலவரம் – இறுதி விசாரணை அறிக்கை 30 ஆம் திகதி கையளிப்பு!

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஐவரடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவரத்ன செயற்பட்டார்.

சிறைச்சாலை மோதலுக்கான காரணம் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி விசாரணைகளை முன்னெடுத்த இக்குழு அண்மையில் இடைக்கால அறிக்கையை கையளித்தது.  இந்த நிலையில், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட முழு அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹர சிறைச்சாலை  மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர். இரு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 104 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொட்டகலை பிரதேச சபையின் பணிகள் முடங்கவில்லை’

கொட்டகலை பிரதேச சபையின் நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அச்சபையின் நடவடிக்கைகள் எதுவும் இடைநிறுத்தப்படவில்லை என்று  சபையின் உப தலைவர் எம். ஜெயகாந்த் , அப்பிரிவுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் ஆகியோர் தெரிவித்தனர்.

 கொட்டகலை பிரதேச சபையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமையில்

கழிவகற்றல் முறைமை தொடர்பில் இடம்பெற்ற பயிற்சி செயலர்வுக்குச் சென்ற ஹட்டன் – டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர். ஆர். மெதவெல்ல தெரிவித்தார்

கண்டி நவயாலதென்னையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட மாநகர சபை, நகர சபை ஊழியர்களுக்கு மேற்படி செயலமர்வு நடத்தப்பட்டது

இந்த வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட மாத்தளை மாநகர சபை ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படட்தையடுத்தே செயலமர்வுக்குச் சென்ற அட்டன் – டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர அதிகாரி தெரிவித்தார்,

க.கிசாந்தன்

சாமிமலை பகுதியில் 67 பேரிடம் பிசிஆர் பரிசோதனை!

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஒல்டன், பெயர்லோன் ஆகிய இரு தோட்டங்களில் 67 பேரிடமிருந்து இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

ஒல்டன் தோட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலைநகர் கொழும்பில் இருந்து கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டிற்க்கு வந்த போது கலுகல பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் முடிவு நேற்று 22 ஆம் திகதி கிடைக்க பெற்ற போது அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவந்தது.

அவர் அம்பாந்தோட்டை சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தொற்றாளியானவர் தோட்டத்தில் பலரிடம் நெருங்கி பழகியதால் அவரை சார்ந்த 67 பேரை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதுடன் அவர்களை 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

மண்சரிவு அபாயம் – கந்தபளையில் 33 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால், கந்தபளை தோட்டம் கொன்கோடியா மத்திய பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த 33 பேர் வெளியேற்றப்பட்டு, கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று, இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருட காலங்களாக மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டு வந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு கொரோனா

முன்னணி கதாநாயகி ரகுல் பிரீத் சிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தி ஜோடியாக தீரன், அதிகாரம் ஒன்று, தேவ் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். தடையற தாக்க, என்னமோ ஏதோ, யுவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ரகுல் பிரீத் சிங்குக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

ரகுல் பிரீத் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். தற்போது நன்றாக உணர்கிறேன். ஓய்வுக்கு பிறகு விரைவில் படப்பிடிப்புக்கும் திரும்புவேன்.

என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் நன்றி” என்று கூறியுள்ளார். முன்னணி கதாநாயகியான ரகுல் பிரீத் சிங் கொரோனாவில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அமிதாப்பச்சன், விஷால், பிருத்விராஜ், சிரஞ்சீவி, ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றில் சிக்கி மீண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ரி – 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 19 ஓட்டங்களிலும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 1 ஓட்டத்திலும் , டிம் செய்பெர்ட் 35 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அந்த அணி 11.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பெரும்பாலும் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக தான் ஆட்டம் தடைபடும். ஆனால் சூரிய ஒளியின் காரணமாக இந்த ஆட்டம் பாதிப்புக்குள்ளானது.

மைதானத்தில் கண் கூசும் அளவுக்கு சூரிய ஒளியின் தாக்கம் இருந்ததால் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறினார்கள். பீல்டர்களுக்கும் பீல்டிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் நிறுத்தப்பட்ட ஆட்டம், சூரிய ஒளி மறைந்த பிறகு தான் தொடர்ந்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் நியூசிலாந்து அணியினர் அதிரடியாக ஆடினார்கள்.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தேவோன் கான்வாய் 45 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் (89 ரன்கள், 59 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) நிலைத்து நின்று அதிரடியாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முகமது ஹபீஸ் (41 ரன்கள்) அவருக்கு பக்கபலமாக செயல்பட்டார். கடைசி ஓவரில் முகமது ரிஸ்வான் அவுட் ஆன போது, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மேலும் 3 ரன் தேவையாக இருந்தது. இப்திகர் அகமது சிக்சர் அடித்து வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.

இந்த ஆட்டத்தில் தோற்றாலும், முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்ததால் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

அடுத்து நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

புதிய வகை வைரஸால் அச்சத்தில் உலக நாடுகள் – தனிமைப்படுத்தப்பட்டது இங்கிலாந்து

புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கிலாந்து நாடு உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது.

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிப்பதாக அமைந்துள்ளது.

இப்படியான சூழலில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் மற்றும் அந்த நாட்டின் தெற்கு பகுதிகளில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே ஏற்கனவே சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் திணறி வரும் உலக நாடுகள் இங்கிலாந்தில் புதிய வகை கொரனோ வைரஸ் உருவாகி இருப்பதை கண்டு மிரண்டு போயுள்ளன.

இந்த புதியவகை கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கான தீவிர முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

அந்த வகையில் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

இதில் முதற்கட்டமாக இங்கிலாந்துடனான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா, கனடா டென்மார்க் உள்பட 21 நாடுகள் ஏற்கனவே இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்துவிட்டன.

இதன் தொடர்ச்சியாக தற்போது ரஷியா, கொலம்பியா, கவுதமாலா, பனாமா உள்ளிட்ட 20 நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவைக்கு தடை விதித்துள்ளன.

அதேபோல் சவுதி அரேபியா புதிய வகை கொரோனா வைரசுக்கு அஞ்சி தனது எல்லைகள் அனைத்தையும் முழுவதுமாக மூடி விட்டது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவை பின்பற்றி ஸ்பெயின், இஸ்ரேல், ஓமன், குவைத் ஆகிய நாடுகளும் தங்களது எல்லைகளை முழுவதுமாக மூடி விட்டன.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...

ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி!

0
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...