Home Blog Page 3706

நான்கு பேருக்கு கொரோனா – ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து!

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.

அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன்பாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரிடம் அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14 ஆம் திகதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர்.

இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்த காட்சிகளை படமாக்கினர். ரஜினி பங்கேற்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது.

ரஜினி தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதாகவும், இதனால் திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் பொங்கலுக்கு பிறகு தனி கட்சி தொடங்க வசதியாக அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்குள் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக அண்ணாத்த படப்பிடிப்புக்குள் கொரோனா நுழைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அப்போது படக்குழுவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.

பின்னர் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அண்ணாத்த படப்பிடிப்பில் வழக்கமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. பாதுகாப்பை கருதி அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

படப்பிடிப்பில் ஏற்கனவே கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சமூக விலகலை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. படக்குழுவினர் வெளியே செல்லவும் தடை விதித்து இருந்தனர். அதையும் மீறி கொரோனா பரவியது எப்படி? படக்குழுவை சேர்ந்த யாரேனும் வெளியில் சென்று வந்தார்களா? என்று விசாரணை நடக்கிறது.

ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். வருகிற 31ஆம் திகதி தனி கட்சி தொடங்கும் தேதி உள்ளிட்ட சில முக்கிய அரசியல் விஷயங்களை அறிவிக்க உள்ளார்.

கண்டியில் நேற்று மாத்திரம் 40 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 15 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 314 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 மாத்தளை மாவட்டத்தில் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சி.பி., ஜீவன், ரமேஷ் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மேற்படி அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இதனையடுத்தே அவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிகழபிரதேச சபை தலைவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் இல்லை’

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களில் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 228 பேரும் கம்பஹாவில் 108 பேரும் களுத்துறையில் 68 பேரும் திருகோணமலையில் 18 பேரும் கண்டியில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

43 ஆம் அரசியல் படையணியை உருவாக்குகின்றார் சம்பிக்க!

ஜாதிக ஹெல  உறுமயவிலிருந்து வெளியேறியுள்ள சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.

குறித்த இயக்கத்துக்கு ’43 ஆம் பிரிவு’ என பெயரிடப்படவுள்ளது எனவும், இது இலக்கமல்ல தலைமுறை என்ற மகுடனத்தின் கீழ் அவ்வியக்கத்தின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் எனவும் அறியமுடிகின்றது.

கடந்த பொதுத்தேர்தலின் பிறகு செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்த இயக்கத்துக்கு இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கபபட்டுவருகின்றது.

1943 ஆம் ஆண்டில்தான் இலங்கையில் இலவசக்கல்விக்கான சட்டமூலம் இயற்றப்பட்டது. தரம் ஒன்று முதல் பல்கலைக்கழக கல்விவரை இலவசக்கல்வி வழங்கப்பட்டது. இதுவே இலங்கையில் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது. எனவேதான் ’43’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் ஒரு பங்காளியாக குறித்த இயக்கம் செயற்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

‘கொரோனா’ – உயிரிழப்பு எண்ணிக்கை 184 ஆக உயர்வு!

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இன்று மாத்திரம் 579 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 579 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 600 ஐ தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 34 ஆயிரத்து 960 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச்செயய வேண்டும்’

” எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2020.12.23) தெரிவித்தார்.

இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோர்மோன் மாத்திரை உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே  பிரதமர் இவ்வாறு கூறினார்.

புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ஃப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை கௌரவ பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தல் மற்றும் நிறுத்துவதுடன் நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் காணப்படுவதாக இதன்போது  பிரதமர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

” விசேடமாக 2012 ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்று 4,470 மில்லியன் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. அதனால் இந்நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து நான் புதிதாக எதையும் கூற தேவையில்லை.

எனினும், நாம் 70 வீதமான ஒளடதங்களை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். நாம் அவ்வாறு இறக்குமதி செய்கின்றோமாயின், அந்த ஒளடதங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதனை செய்வதற்கான ஞானம் மற்றும் அறிவு மிகுந்தவர்கள் எம்மிடம் உள்ளனர்.

அதனால், அவ்வாறான ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும் என நம்புகின்றோம். இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனால் அதற்கான வேலைத்திட்டங்களை நாம் அனைத்து துறைகளிலும் செயற்படுத்த வேண்டும்.

ஒளடத உற்பத்தி வலயமொன்றை அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கவுள்ளோம். நான் அது தொடர்பில் தற்போது செயலாளரிடம் வினவினேன். அது வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாத்திரம் எனக் கூறினார்.

அம்பாந்தோட்டையிலும் நாம் ஒளடத உற்பத்தி வலயமொன்றை நிறுவுகின்றோமாயின், அது தொடர்பில் முதற்படிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதே மிகவும் சிறப்பாக அமையும் நான் நம்புகிறேன். முதற்படி எடுக்காவிடின், எந்தவொரு வலயமொன்றையும் ஆரம்பிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை எனக் கூறினார்.

தோட்ட முகாமையாளர் அடாவடி – மொக்கா தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா, மொக்கா தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தோட்ட முகாமையாளரின் அடாவடி தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துமே மொக்கா தோட்ட காரியாலய வளாகத்தில் குறித்த போராட்டம் இன்று (23) முற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட தோட்டத்தொழிலாளர்கள் கூறியவை வருமாறு,

” தோட்ட முகாமையாளரால் எமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது. கடந்த நான்கு மாதங்களாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 20 நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டு அரைநாள் பெயர் போடப்படுகின்றது. இதனால் எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிற்சாலை கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கொழுந்து வெளி இடங்களுக்கு அனுப்படுகின்றது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை இல்லாமல்போயுள்ளது. எனவே, எமக்கு வேலை வழங்கப்படவேண்டும். முழு நாள் பெயர் வழங்கப்படவேண்டும். தொழில் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. தோட்ட முகாமையாளரின் அடாவடிதனமாக செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.” – என்றனர்.

– -மஸ்கெலியா நிருபர்கள் –

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணிமூலம் 276 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 72 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 34 ஆயிரத்து 729 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...

ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி!

0
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...