Home Blog Page 3705

நாட்டில் இன்று மாத்திரம் 588 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 588 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 35 ஆயிரத்து 548 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

ஹட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்செல்வன் கடந்த 17.18.19 ஆம் திகதிகளில் கண்டி ,கொட்டகலை மற்றும் தலவாகலையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மொட்டு கட்சி உறுப்பினருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணிமூலம் 388 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 18 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 35 ஆயிரத்து 366 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மொக்கா தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது

மஸ்கெலியா, மொக்கா தோட்டத் தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தோட்ட முகாமையாளரின் அடாவடி தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துமே மொக்கா தோட்ட காரியாலய வளாகத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

” தோட்ட முகாமையாளரால் எமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது. கடந்த நான்கு மாதங்களாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 20 நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டு அரைநாள் பெயர் போடப்படுகின்றது. இதனால் எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிற்சாலை கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கொழுந்து வெளி இடங்களுக்கு அனுப்படுகின்றது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை இல்லாமல்போயுள்ளது. எனவே, எமக்கு வேலை வழங்கப்படவேண்டும். முழு நாள் பெயர் வழங்கப்படவேண்டும். தொழில் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. தோட்ட முகாமையாளரின் அடாவடிதனமாக செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.” – என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

– -மஸ்கெலியா நிருபர்கள் –

‘கொரோனா’விலிருந்து 30,568 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 686 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 887 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொத்மலை பிரதேச செயலாளருக்கு கொரோனா!

கொத்மலை பிரதேச செயலாளருக்கு கொரோனா தொற்று காரணமாக நுவரெலியா பிரதேச செயலாளரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொத்மலை பிரதேச செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடைய கணவரான நுவரெலியா பிரதேச செயலாளர் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் டி.எம்.எஸ்.பி.தெல்பிட்டிய இன்று (24.12.2020) தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச சபையின் செயலாளருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தற்பொழுது ஹங்குரன்கெத்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதே நேரம் அவருடைய கணவரான நுவரெலியா பிரதேச செயலாளரும் அவருடைய குடும்பத்தை சார்ந்த 5 பேரும் அவர்களுடைய வீட்டிலும் அங்கு வேலை கடமையில் இருந்த 22 பேரும் அவர்களுடைய வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொத்மலை பிரதேச செயலாளர் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.ஏனெனில் இந்த கூட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவரும் மேற்படி கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அதே நேரம் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பிரதேச சபையின் தலைவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  • நுவரெலியா நிருபர்  எஸ்.தியாகு

அக்கரபத்தன பிரதேச சபை தவிசாளரை இடைநிறுத்தியது இ.தொ.கா.!

அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்கச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரபத்தன பிரதேச சபை தவிசாளர் தற்போது அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் அவர் குணமடைந்து வந்ததும் அவரிடம் விளக்கம்கோரப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கூறினார்.

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அக்கரபத்தன பிரதேச சபை தலைவர், தனிமைப்படுத்தல் சட்ட – திட்டங்களைமீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அசோக்குமாரின் நியமனம் ஊவா தமிழர் அரசியலின் புதிய மைல்கல்’

ஹல்துமுல்ல பிரதேச சபையின்  தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிங்கமுத்து அசோக்குமார், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் முன்னிலையில், இன்று (23) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வரலாற்றில் முதல் தடவையாக, ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு, தமிழர் ஒருவர் தவிசாளராகத் தெரிவாவது, இதுவே முதற்றடவையாகும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஹப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு, செந்தில் தொண்டமான் அவர்களின் அரசியல் தலைமைத்துவச் செயற்பாடுகளே காரணமாகியிருந்த நிலையில்,  அதேபோன்றதோர் அரசியல் தலைமைத்துவச் செயற்பாடே, ஹல்துமுல்ல பிரதேச சபையிலும் தமிழர் ஒருவர் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளமைக்குக் காரணமாகியுள்ளது. இது, ஊவா மாகாணத் தமிழர் அரசியலில், முக்கியமானதோர் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகின்றது.

412 சதுர கிலோமீற்றர் பரப்பரளவைக் கொண்ட ஹல்துமுல்ல பிரதேசம், 40,216 பேரைக் கொண்ட பதுளை மாவட்டத்தில், சுமார் 80 சதவீத பெரும்பான்மை இனத்தவர்களைக் கொண்டுள்ள நிலையில், தமிழர் ஒருவர் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட்ட உரிமையாகும்.

பதுளை மாவட்டத்தில் பல காலங்களாக பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் இருந்துவந்தாலும், இன்று தமிழர்களை உயர் பதவிகளில் அமரவைத்துள்ளமையானது, செந்தில் தொண்டமான் அவர்கள், ஊவா மாகாணத்தில் பலம்வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ்வதைப் பரைசாற்றியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஊவா மாகாணத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகமான தமிழ் வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், அம்மாகாணத்துக்கான கட்சியின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது போனது. இருப்பினும், அம்மாகாணத்தின் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் மிகப்பெரிய சக்தியாக செந்தில் தொண்டமான் அவர்கள் திகழ்கின்றார் என்பதை, அசோக்குமார் உள்ளிட்டவர்களின் தெரிவுகள் புலப்படுத்தியுள்ளன.

இவ்வாறான அரசியல் சக்தி காரணமாகவே, பெரும்பான்மையினர் அதிகளவில் வாழும் ஊவா மாகாணத்தில், தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச மட்டத்திலான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறையில், பிரதேச சபைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறானதொரு கட்டமைப்பில், தமிழர்கள் தவிசாளர் பதவிகளை வகிப்பதென்பது, ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைக்கும் கௌரவமாகவே கருதப்படுகிறது.
அரசியல் ரீதியான தேசியமட்ட முடிவுகள் வெற்றி பெறுவதற்கு, பிரதேச சபைகளின் பங்களிப்பு மிக அவசியமாகின்ற நிலையில், அத்தகைய சபைகளில் உரிமைகளை வென்றெடுத்து உள்ளமையானது, செந்தில் தொண்டமான் அவர்களின் அரசியல் பலத்தை எடுத்தியம்பியுள்ளது.

1989ஆம் ஆண்டு முதல், இம்மாகாணத்தில் தமிழர் நியமனங்கள் அற்றிருந்த நிலையில், இரு தவிசாளர்களின் நியமனங்கள், ஊவா மாகாணத் தமிழர் அரசியலின் பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.

‘முஸ்லிம்களின் மத உரிமைக்கு மதிப்பளி’ – மலையகத்தில் போராட்டம்!

கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24.12.2020) நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்களிலும் அமைதி போராட்டம் இடம்பெற்றது.

முதற்கட்டமாக மஸ்கெலியா நகரில் மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் அமைதி போராட்டம் நடைபெற்றது.

“இலங்கை அரசே” கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லீம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பதாதைகளையும், வெள்ளை கொடிகளையும் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் அரசியலமைப்பின் படி எல்லா மதங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரததில் இந்த கொரோனாவால் மரணிக்கும் நபர்களுடைய சடலங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்குமான ஆலோசனையை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் முஸ்லீம்களின் மத உரிமைக்கு அப்பால் அவர்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் சகல தரப்பும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் கூட இதற்கு எதிர்பாகவும் ஆரப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதை எதை குறிக்கின்றது என்றால் இந்த நாட்டில் காணப்படும் ஜனநாயக உரிமைகள் உட்பட நல்லிணக்கம் சமாதானம் நல்லுறவு போன்றவைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே சுமூக உறவில் விரிசல் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது.

ஆகவே மலையக சமூகம் என்ற ரீதியில் இதற்கு பாரிய எதிர்ப்புகள் தெரிவிப்பதோடு அரசாங்கம் உடனடி தீர்வை எட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த பல தசாப்பதங்களாக சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் மலையக மக்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வந்திருக்கும் அதேவேளை ஏனைய சமூகங்களிலிருந்து இவர்கள் வேறுப்படுத்தி காட்டப்படும் பாராபட்சமான நிலை இந்த நாட்டில் காணப்படுகின்றது.

அதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் இன்னுமொரு சிறுபான்மை இன மான முஸ்லீம் சமூகத்தினுடைய உரிமைகளுக்கு பாதிப்பு விளைவிப்பது இந்த நாட்டின் ஜனநாயக்க உரிமைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே அரசு காலம் தாழ்த்தாது பாரபட்சமின்றி நடுநிலைமையோடு செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா!

வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (23.12.2020) மாலை வெளியாகிய பி.சி.ஆர் அறிக்கையில் நான்கு ஆண்கள் ஆறு பெண்களுமாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகிய போது மேற்படி பத்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, ஏற்கனவே பி.சி.ஆர் பரிசோதனை செய்த 60 பேரின் குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும் என பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...

ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி!

0
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...