Home Blog Page 3704

2022 முதல் ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள்

2022 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதில் எதிர்பார்த்தபடி 2022 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011-ம் ஆண்டில் இந்த போட்டியில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 1,794 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 794 பேர் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம்’ – பாப்பரசர்

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

வேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை பாப்பரசர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர்,

“இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார்.

இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ளதால், பொது மக்கள் வேட்டிகன் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.

‘மலையகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேவ ஆராதனை’

உலகில் பல நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையானது, கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே கொண்டாப்படுகின்றது. ஆராதனைகளுக்குகூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில்  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் வீடுகளில் இருந்தே தேவ ஆதராதனைகள் இடம்பெற்றன. ஏனைய பகுதிகளில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் இடம்பெற்றன.

அந்தவகையில் மலையகத்திலுள்ள தேவலாயங்களில் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.  இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.

ஹட்டன் நகரில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் 25.12.2020 அன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

கம்பளையில் வேகமாக பரவும் கொரோனா! மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று!!

கம்பளை நகரசபைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோழிக்கடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. தொற்றாளர்கள் பொல்கொல்ல மற்றும் பெனிதெனிய ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின்போது கம்பளை பகுதியில் ஓரிருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்றியது. எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் பல இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கம்பளை கோழிக்கடை கொத்தணியின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றது. இதனால் மக்கள் மத்தியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும், அநாவசியமாக பொதுவெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி

கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி

– நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

ஒரே நாடு ஒரே சட்டம் எங்கே?அதனை அமுல்படுத்த அதிகாரிகள் விரும்பவில்லையா? கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா?

இராதாகிருஸ்ணன் கேள்வி

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் கோட்பாடு வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அது நடைமுறையில் இல்லை.கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கு ஒரு விதமாகவும் சாதாரண பொது மக்களுக்கு ஒரு விதமாகவும் நடைமுறைபடுத்தப்படுகின்றது.

ஆனால் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (24.12.2020) நுவரெலியா மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற தோட்ட தலைவர்களுடனான கலந்துரையாடலின் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.அதற்கு காரணம் சுகாதார அதிகாரிகளின் அசமந்த போக்கே.கொரோனா சட்டங்களுக்கு அமைய திருமண வீட்டில் 50 பேர் மரண வீட்டில் 25 பேர் ஆலயங்களில் 10 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என சட்டம் இருக்கின்றது.

ஆனால் இன்று அந்த சட்டம் நுவரெலியா மாவட்டத்தில் பொது மக்களுக்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கின்றது.அந்த சட்டங்கள் அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை.

அமைச்சர்களும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கின்ற நிகழ்வுகளில் 300 அதிகமானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள்.அதற்கு சுகாதார பிரிவினரோ அல்லது பாதுகாப்பு தரப்பினரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.மாறாக அதற்கு பாதுகாப்பு வழங்குகின்றார்கள்.ஆனால் சாதாரண ஒரு பொது மகன் இதனை செய்தால் சட்டம் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது.இதுதான் ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டமா?என்ற கேள்வி எழுகின்றது.இந்த விடயத்தில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில சுகாதார அதிகாரிகளின் அசமந்த போக்கும் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள்.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்பு பெறுபேறுகள் வருவதற்கு 3 நாட்கள் ஆகின்றது.இந்த நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை.அவர்கள் வெளியில் நடமாடுகின்றார்கள் இதனால் தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இது அமைந்துவிடுகின்றது.

இது தொடர்டபாக சுகாதார அதிகாரிகள் காவல் துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இடையில் முறையான தொடர்பாடல் இல்லை.இது ஒரு முக்கிய காரணமாகும்.எனவே இவ்வாறான விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை முறையாக தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.இது சரியாக இல்லாமையின் காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச சபை தலைவர் ஒருவர் வெளியில் நடமாடியதன் காரணமாக இன்று பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட சலுகைகளை அரசாங்கம் வழங்காமல் அனைவருக்கும் பொதுவாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க கம்பனிகள் மறுப்பு – புதிய திட்டம் முன்வைப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கே கம்பனிகள் தயாராக உள்ளன என்று தெரியவருகின்றது.

அதுவும் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தொழிற்சங்கங்கள் உறுதிவழங்கியிருந்தன.

ஆனாலும் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கான 105 ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 70 ரூபாவும், உற்பத்தி கொடுப்பனவாக 75 ரூபாவும், அதிகளவில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்திற்காக 75 ரூபாவும் வழங்க கம்பனிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இதன்படி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 25 ரூபா கிடைத்தாலும், அடிப்படை சம்பள உயர்வுக்கு கம்பனிகள் தயாரில்லை. கடந்த முறையும் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவே வழங்கப்பட்டது.

மேல் மாகாணத்தில் 28,418 பேருக்கும் மத்திய மாகாணத்தில் 1,882 பேருக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 28 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 588 தொற்றாளர்களில் 451 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 748 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 84 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 550  பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி நேற்றுவரை ஆயிரத்து 882 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘அறவழி போராட்டத்துக்குகூட அஞ்சுகிறது அரசாங்கம்’ – ஹக்கீம்

” கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் விரைவில் சாதகமான முடிவொன்றை எடுக்கும் என நம்புகின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலை உருவானபோது, தேர்தலும் நெருங்கியதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக அக்கறை காட்டியது. நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால் தேர்தலின் பின்னர் இரண்டாவது அலை உருவானபோது முன்பிருந்த அக்கறை இல்லை. 2ஆவது அலையால் வைரஸ் தொற்று மட்டுமல்ல சமூக,பொருளாதாரம் மற்றும் இதர பிரச்சினைகளும் உருவாகியுள்ளன. இதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை.

இந்த அரசாங்கம் தற்போது கலக்கமடைந்துள்ளது. இதனால்தான் மயானத்துக்கு முன்னால் உள்ள இரும்பு கம்பி வேலியில் வெள்ளை துணியை கட்டி அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக்கூட ஒடுக்குவதற்கு முற்பட்டது. துணிகள் கழற்றி எறியப்பட்டுள்ளதுடன், சிவில் உடையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் அறவழியிலான போராட்டங்களுக்குகூட இந்த அரசு அஞ்சுகின்றது என்பது புலனாகின்றது.

முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவுக்கு அனுப்பும் முயற்சியை முன்னெடுத்து, தாம் செய்வது தவறுதான் என்பதனை அரசாங்கமே இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி தர மறுப்பது – மறுத்தது வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு விரைவில் உரிய தீர்வை எதிர்ப்பார்க்கின்றோம். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ” – என்றார்.

‘கொரோனா’ – மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 185 ஆக உயர்வு!!

கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185  ஆக அதிகரித்துள்ளது.

அகலவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...