Home Blog Page 3703

40 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 551 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.  இவர்களில் 31 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 258 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 185 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 99  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா!

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கடந்த 14 ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து  அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் 10 பேருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் 480 பேருக்கு என்டிஜன்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  21 பெண்களுக்கும், 7 ஆண்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரஜினி நலமாக இருக்கிறார் – விரைவில் வீடு திரும்புவார்

ரஜினி ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார். யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால், யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்

22 ஆம் திகதி ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. மேற்கொண்டு அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.

ரத்த அழுத்த அளவில் மாறுபாடு மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன என தெரிவித்து இருந்தது.

இதனிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது மீண்டும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

“ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.

யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்.

தெலங்கானா ஆளுநர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி அவர்கள் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்”
இவ்வாறு அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழில் பட்டப்பகலில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம், இராமாவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய ஐயாத்துரை மோகனதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான குறித்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணிமூலம் 451 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 10 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 600 ஐ தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’விலிருந்து 31,339 பேருக்கு மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 771 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 707 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 185  பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் நத்தார் வாழ்த்துச் செய்தி…

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி..

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும்.

இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது.

சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.

இயேசு பிரான் போதித்த சமய நெறிகள் சமூகத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் பல போதனைகளை கொண்டுள்ளது. பாவத்தின் இருளகற்றி, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சகோதர வாஞ்சையுடன் உதவுவது மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்கான அர்ப்பணிப்பு என்பவை இவற்றில் முதன்மையானவை என்று நான் எண்ணுகிறேன்.

கோவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இந்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வருடத்திற்கும் முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும், அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும்.

இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக! இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான எனது நத்தார் நல்வாழ்த்துக்கள்.” – என்றுள்ளது.

பிரதமர்..

நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுபடுத்துகின்றது. இது மனித அன்பையும், கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும்.

இந்த நத்தார் தினத்தில் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவர்களது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்க நான் மனதார பிரார்த்திக்கிறேன்.அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

செந்தில் தொண்டமான் – இ.தொ.கா. உபதலைவர்

கொரோனா எனும் கொடிய வைரஸைக் கொன்றொழிக்கும் பிறப்பாக இயேசு பாலனின் பிறப்பு அமைய வேண்டும் என்றும் அத்தகைய சிசுபாலனின் பிறப்பை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

ஒவ்வொரு யுகங்களிலும், தீமைகளை அழிப்பதற்காக தெய்வங்கள், தேவர்கள் அவதாரம் எடுப்பதைப் போன்று, இந்த யுகத்தில், இந்த ஆண்டில் கொரோனா எனும் கொடிய சக்தியை அழிப்பதற்காக தேவபாலன் பிறப்பெடுக்கவுள்ளார்.

தன் மக்களுக்காக தன் இரத்தத்தையே தந்து காத்து இரட்சித்த இயேசு கிறிஸ்துநாதர், கொரோனாவால் செத்துமடியும் எம்மக்களைக் காத்து இரட்சிக்க வேண்டும்.

கிறிஸ்தவ சொந்தங்கள் மட்டுமன்றி அனைத்து இன மக்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடி மகிழவேண்டும். கொரோனாவை வெற்றிகொண்ட கிறிஸ்மஸ் தினத்தை அடுத்தவருடம் கொண்டாட வேண்டும் என்று, இந்நன்நாளில் உறுதிபூணுவோம்.

பொதுச் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியும் கொண்டாட்டங்களை வீடுகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தியும், இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

பழனி திகாம்பரம் – பா.உ.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள “கொரோனா” அச்சுறுத்தல் இலங்கைத் திருநாட்டையும் விட்டு வைக்கவில்லை. எமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தவ சகோதரர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தத்தமது வீடுகளில் இருந்தபடியே கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இயேசுவின் பிறப்பு அகிலம் முழுவதற்கும் புதியதொரு செய்தியை சொன்னது. குழந்தை இயேசு பிறந்த அந்த இனிய நாளை நினைவுப்போற்றி நிற்கின்றது அந்த நத்தார் தினம். பொதுவாக பண்டிகை என்றாலே அதன் பண்பு உற்றார், உறவினர்கள் அன்பை அயலாருடன் கூடி குழாவி குடும்பமாய் உண்டு குதூகலிப்பதே என்பதாகும்.

துரதிஷ்டவசமாக இம்முறை நத்தார் தினத்தை கொண்டாடமுடியாதபடி COVID-19 கொரோனா தொற்று தடைபோட்டுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றவேண்டும். எனவே கிருஸ்தவ சொந்தங்கள் கூடியவரை தமது வீடுகளிலிருந்து நத்தாரை கொண்டாடவேண்டும்.

கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு இடம்கொடுக்காமல் இயேசு பிறப்பின் மகிழ்ச்சியை ஆலுக்கால் பகிர்ந்துக்கொண்டு அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது.

எம். உதயகுமார் பா.உ.

நாடு எதிர்நோக்கியுள்ள “கொரோனா” அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட வேண்டும் .

உலக மக்கள் உய்வு பெற வேண்டி யூதர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொண்டும் பாரம் நிறைந்த சிலுவையை சுமந்து கொண்டும், முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டும் இயேசு பிரான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது.

மக்களுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டவரை சிலுவையில் அறைந்த நேரத்தில் “பிதாவே, இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள்: மன்னித்து அருளும்” என்று கூறிய உத்தமர் உலகுக்கு அவதரித்த உன்னத நாளை சிறப்பாகக் கொண்டாட முடியாவிட்டாலும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் நிச்சயமாகக் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

இன்று எமது நாடும், மக்களும் எதிர்கொண்டுள்ள சகல பிரச்சினைகளும் நீங்கி சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் மலர வேண்டுவதோடு, ஒவ்வொருவரும் தமது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பண்டிகையைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சோ. ஶ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கம்

நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் உலகெங்கும் வாழுகின்ற கிறிஸ்தவ மக்களுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்வு அடை கின்றேன்.

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப் போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் இயேசு பிறந்த நன்னாளில் கிறிஸ்தவ பெருமக்கள் மகிழ்ச்சிகரமாக பேருவகை யுடன் உள்ளனர்.

எமது நாட்டில் வாழுகின்ற கிறிஸ்தவ மக்கள் தமது சமய விழுமியங்களுடன் இனநல்லுறவுடனும் சகோதரத் துவத்துடனும் வாழுகின்றவர்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரையிலான வாழ்க்கைச் சம்பவங்கள் பாவ மன்னிப்பையும் உலக சமாதானத்தையும் வலியுறுத்துவன. கர்த்தரின் தூதுவரின்

உலக துன்பங்கள் ஒழிந்து இன்பங்கள் நிலைத்திட இயேசு பிரானை வழிபடுவோம். இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

இருப்பினும் தொற்று இல்லை என்றாலும் நடிகர் ரஜினிகாந்த ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இந்த நிலையில் ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா இல்லை, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. மேலும் உடல் சோர்வு தவிற வேற எந்த பிரச்சினையும் இல்லை.

ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் ரஜினி கண்காணிக்கப்படுவார். ரஜினிகாந்த உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கோப்ரா’ படத்தில் மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார்.

கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கிறிஸ்துமஸ் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.

பதிலடி கொடுக்குமா இந்தியா? 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை (26) ஆரம்பமாகின்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை ,இலங்கை நேரப்படி அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் கோதாவில் குதிக்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இதற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.

* இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை செலுத்துவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் திகதி  அன்று பெட்டியை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...