Home Blog Page 3702

சிறைச்சாலை கொத்தணி – 3,615 கைதிகளுக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 615 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 639 கைதிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 191 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.

தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட கைதிகளில் 2,850 பேர் குணமடைந்துள்ளனர்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 32,051 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 712 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 545 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 186  பேர் உயிரிழந்துள்ளனர்.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரி தீபமேற்றினார் பிரதமர்

சுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து   பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று (2020.12.26) உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்.

முதலில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக முற்பகல் 9.25 மணிமுதல் முற்பகல் 9.27 வரையான இரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திய   பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.

சுனாமி பேரழிவு இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகளாகின்றன. அக்கொடிய பேரழிவில் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழந்தனர்.

பேரழிவில் பல அன்புக்குரியர்வர்கள் உயிரிழந்தது மாத்திரமின்றி, அவர்களது இருப்பிடங்களையும் இழந்து, அந்த குடும்பங்களை சேர்ந்த இலட்சக் கணக்கானோருக்கு தங்களது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது என இதன்போது  பிரதமர் நினைவுகூர்ந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

பசறை பகுதியில் விபத்து – 3 சிறார்கள் உட்பட 7 பேருக்கு காயம்!

பசறை – லுணுகல பிரதான வீதி 13 ஆம் கட்டைப் பகுதியில் ஆட்டோவொன்று இன்று முற்பகல் 11.30 மணியளவில் (26/12) வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரும், ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள்  சிகிச்சைக்காக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒன்றரை வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகளும், மூன்று வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

இலங்கை ,தென்னாபிரிக்கா – முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார். தென்னாபிரிக்க அணியை குவின்டன் டி கொக் வழிநடத்துகிறார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் இந்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகமானது எனத் தோன்றுகிறது. இவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடாவும் காயமடைந்துள்ளார். இன்றைய ஆட்டம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வீரர்கள் வெற்றி மனப்பான்மையுடன் களமிறங்குவதாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலங்கை அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதேபோன்று இந்த முறையும் சாதிக்கும் முனைப்புடன் அந்த அணி ஆயத்தமாகி வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இலங்கை அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

நுவரெலியாவில் 348 பேருக்கும், பதுளையில் 82 பேருக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 16 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 462 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை  82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஹட்டனில் அஞ்சலி’

சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காலை 09.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்தவகையில் ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் பலர் கலந்துகொண்டு, நினைவுகூர்ந்தனர்.

க.கிசாந்தன்

பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா!

பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் பெண் ஒருவருக்கும், டெமேரியா பிரிவு மீதும்பிட்டிய பகுதி ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 23 ஆம் திகதிமேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரியின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்
ராஜதுரை தெரிவித்தார்.

இவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 8 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரத்து 155 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 64 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் 39 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 31 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்து 257 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...