Home Blog Page 3701

2021 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டம்! அறிக்கை கோருகிறார் ரணில்!!

2021 ஆம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவேண்டிய புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனக்கு விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு, பணிப்புரை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக்கட்சியில் தற்போது மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளன. 2021 ஆம் ஆண்டு தலைமைப்பதவியில் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணிலும் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சிக்கான புதிய வேலைத்திட்டம் குறித்து அவர் அறிக்கை கோரியுள்ளார். புதிய தலைவருக்கான போட்டியில் ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன ஆகிய இருவரின் பெயரே முன்னிலையில் இருக்கின்றது.

அத்துடன், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வஜிரவிடம், ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரேனியிலிருந்து முதலாவது சுற்றுலாக்குழு நாளை வருகை

உலகளாவிய கொவிட் -19 நெருக்கடிக்கு பின்னர் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் பயணிகள் போக்குவரத்துக்காக நேற்றுமுதல் மீள திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது சுற்றுலாக்குழு நாளை 28 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

உக்ரேனின் கியு நகரத்திலிருந்தே (kyiv) இவ்வாறு முதலாவது சுற்றுலாக்கு குழு இலங்கைக்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

நாளை அதிகாலை 2.14 மணியளவில் skyup PQ 555 என்ற விமானத்தின் ஊடாக 200 சுற்றுலாப் பயணிகளைஉள்ளடக்கிய குழுவே இவ்வாறு முதலாவது குழுவாக இலங்கை வரவுள்ளது.

இவர்கள் பெந்தொட்டை மற்றும் கொக்கல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் மாத்திரமே தங்க வைக்கப்படுவார்கள் என்றும் சாதாரண மக்களுடன் பழக்குவதற்கு இடமளிக்காத வகையில் ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டாவது சுற்றுலாக் குழு உக்ரேன் விமானசேவைக்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளது.

இவ்வாறு இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களுக்கு செலுத்தும் பணத்திற்கு அப்பால் தினமும் 100முதல் 150 டொலர்கள் வரையான பணத்தை தமது தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

திருமண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதால் மனைவியை கொலை செய்த கணவன்!

28 வயது நிரம்பிய கணவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்த ஷஹாகுமாரி மற்றும் அருண் என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது.

51 வயதான ஷஹாகுமாரிக்கும் 28 வயதான அருணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் – மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்துவந்துள்ளனர்.

இதற்கிடையில், இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமார் தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார். மேலும், இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.

இந்த விவகாரங்களால் கணவன் – மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, வாக்குவாதம் உள்ளிட்டவற்றால் கோபமடைந்த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஏற்கனவே பல முறை அவரை கொலைசெய்ய முயற்சித்துள்ளார். அந்த முயற்சியில் இருந்து ஷஹாகுமாரி தப்பியுள்ளார். தன்னை கொலை செய்ய முயற்சித்தது கணவர் அருண் தான் என்ற உண்மை ஷஹாகுமாரிக்கு தெரியாமலேயே இருந்துள்ளது.

இந்நிலையில், ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால் ஷஹாகுமாரியின் கணவர் அருணிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பாயச்செய்து கொன்றதாக கணவர் அருண் ஒப்புக்கொண்டார்.

திருமண புகைப்படங்கள் பரவியதாலும், வயது வித்தியாசம், இருவருக்கும் இடையேயான சண்டையாலுமே மனைவி ஷஹாகுமாரியை மின்சாரம் பாயச்செய்து கொன்றதாக கணவர் அருண் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரணாகதியா, தனிவழியா? 30 ஆம் திகதி கூடுகிறது சு.க. மத்தியகுழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக்கட்சி கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றது. தமது கட்சிக்கு உரிய கவனிப்புகள் இல்லை என சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றனர். எனினும், ஆளுங்கூட்டணியிலிருந்து வெளியேறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அக்கட்சி எதனையும் அறிவிக்கவில்லை.

ஆனாலும் சு.கவிலுள்ள ஒரு சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தனித்து அல்லது எதிரணியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கவேண்டும் என்ற யோசனையும் சுதந்திரக்கட்சிக்குள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளதுஇவ்வாறானதொரு பின்புலத்திலேயே அக்கட்சியின் மத்தியசெயற்குழு கூடுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச வேண்டிய விடயங்கள் பற்றியும் இங்கு விவாதிக்கப்படவுள்ளது.

வீட்டிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர்

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 22 வயது இளைஞன் ஒருவர் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என தெரிவிக்கும் பொலிஸார், அவரை கண்டுபிடிப்பதற்கு
பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த இளைஞன் அதன் முடிவு வெளிவரும்வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே அவர் தப்பியோடியுள்ளார்.

இவரை கண்டாலோ, இவர் தொடர்பான தகவல் கிடைத்தாலோ 0718591599 – 0112400315 – 119 இற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸாரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இன்று மாத்திரம் 593 பேருக்கு கொரோனா – ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு, மோதரை பகுதியிலுள்ள முதியோர் வசித்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் மேலும் 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40  ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதல்கஸ்ஹின்ன தோட்டத்தை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு தனி வீடுகள்

2015 இல் மண்சரிவால் பாதிக்கப்பட்ட இதல்கஸ்ஹின்ன தோட்டத்திலுள்ள 33 வீடுகளுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் மேற்கொண்டுள்ளார்.
வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நிலத்தையும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.
650 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஒரு வீட்டுக்கு 12 லட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 33 குடும்பங்களுக்கும் 396 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு

மடுல்சீமையில் பணப்பையை திரும்பியளித்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை

தவறவிடப்பட்டிருந்த 75 ஆயிரம் ரூபா பணம், வங்கி அட்டை, தேசிய அடையாய அட்டை ஆகியவற்றை உரிய நபரிடமே மீள கையளித்து, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த இராமசாமி ஹரேராம் என்ற ஆட்டோ ஓட்டுநரே இவ்வாறு செயற்பட்டுள்ளார். அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.

மடுல்சீமை பகுதியில் 75 ஆயிரம் ரூபா பணம், அடையாள அட்டை, வங்கி ATM அட்டை ஆகியவற்றை நேற்று (25/12) இளைஞர் ஒருவர் தவறவிட்டிருந்தார். இது தொடர்பில் மடுல்சீமை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி இளைஞரால் தவறவிடப்பட்டிருந்த பணப்பை ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அடையாள அட்டைமூலம், உரிமையாளரை அடையாளம் கண்டுகொண்ட ஆட்டோ ஓட்டுநர்,அவரை தொடர்புகொண்டு பணம் மற்றும் இதர ஆவணங்களை கையளித்துள்ளார்.

இப்படியான நபர்களும் நம் சமூகத்தில் வாழ்கின்றனர். அவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

நடராஜா மலர்வேந்தன்

மேலும் 500 பேருக்கு கொரோனா – 40 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 51 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 45 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 599 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

புதிய வகை வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம்!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ், இலங்கையிலும் பரவக்கூடிய அபாயமுள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய வகை தொற்றானது நாட்டிற்குள் பரவுக்கூடிய சந்தர்ப்பம் மிக அதிகளவில் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

பிரித்தானியாவில் 60 வீதமானோர் புதிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளைத் தவிர ஆசிய நாடுகளிலும் புதிய கொரோனா தொற்று பரவியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் , சிங்கப்பூரிலும் புதிதாக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...