Home Blog Page 3700

தம்மிக்க பானி அருந்தியவருக்கும் கொரோனா தொற்று உறுதி!

வறக்காபொலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் கேகாலை ஆயுர்வேதன பானியை அருந்தியவர் எனவும் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார் என திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் – 26, கண்டியில் 52, இரத்தினபுரியில் – 50 பேருக்கும் நேற்று கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 381 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 52 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 515 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 819 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலும் நேற்று 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் – ஆளுங்கட்சிக்குள் கருத்து மோதல்!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை விரைவில் நடத்துமாறு ஒரு சிலரும், அவ்வாறு நடத்தப்படக்கூடாது என மேலும் சிலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரச உயர்மட்டத்திடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

சரத் வீரசேகர, அரசுக்கு சார்பான தேரர்களுமே தேர்தல் நடத்தப்படக்கூடாது என கருத்துரைத்து வருகின்றனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடமத்திய மாகாணசபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். ரஞ்சித்,

” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும். விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எமது கட்சியின் தேசிய அமைப்பாளரோ அறிக்கை எதனையும் விடுக்கவில்லை. ” – என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர,

” ஒரே நாடு, ஒரே சட்டமெனில் நாட்டில் 9 மாகாணங்களில் 9 சட்டங்கள் இருக்கமுடியாது. அந்தவகையில் மாகாணசபை முறைமையை நாம் நிராகரிக்கின்றோம்.  இது தொடர்பான முடிவை அரசாங்கம் எடுக்கும் என நம்புகின்றேன்.

புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டுவருகின்றது. அது வரும்வரை மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.” – என்றார்.

மாகாணசபை முறைமை குறித்து கருத்து வெளியிட்ட அரச சார்பு தேரரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

” மாகாணசபை என்பது இந்தியாவால் வழங்கப்பட்டது. இம்முறைமை வேண்டாம். எனவே, தேர்தல் நடத்தப்படவேண்டியதில்லை. மாகாணசபை தொடர்பான சட்டம் கிழித்தெறியப்படவேண்டும். இதையும்மீறி தேர்தல் நடத்தப்படுமானால் மக்களை அணிதிரட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

2 ஆவது அலைமூலம் 37,360 பேருக்கு கொரோனா – 178 பேர் உயிரிழப்பு!

கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதடைக் கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 37 ஆயிரத்து 360 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. 2ஆவது அலைமூலம் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இன்று மாத்திரம் 668 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 206 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 668 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 390 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

திரையரங்குகளை ஜனவரி முதல் திறப்பதற்கு பிரதமர் அனுமதி

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்துள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும்.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமையினால் கலைக்கும், கலைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் சமீபத்தில் கௌரவ பிரதமருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன் பிரதிபலனாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என  பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

திரைப்படத்துறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்று தெரிவித்த பிரதமர், கொவிட்-19 காரணமாக திரையரங்குகளை மூடுவதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடி மற்றும் திரைப்பட துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்கள், பல்வேறு தொழில் வல்லுனர்கள் முகங்கொடுத்துள்ள பாதிப்புகளை தவிர்த்தல் மற்றும் இரசிகர்கள் குறித்து கவனம் செலுத்தி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

திரையரங்குகளை திறக்கும்போது குறித்த திரையரங்குகள் உரிய முறையில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய  பிரதமர்  , திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு திரையரங்குகளுக்கு வருகைத்தருவோரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொவிட்-19 சவாலுக்கு மத்தியில் கலைஞர்களையும், திரைப்படத் துறையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் பல கலைஞர்கள்  பிரதமரின் இத்தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ட் விளையாட்டுக் கழகம் வெற்றிநடை

புஸல்லாவை கலுகல்ல ‘கோபி’ விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியில், அதிரடியாக விளையாடிய ‘மெல்போர்ட் விளையாட்டுக் கழகம்’ champion பட்டத்தை தனதாக்கிகொண்டது.

கண்டி மாவட்டத்திலுள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களுள் மெல்போர்ட் விளையாட்டுக் கழகமும் ஒன்றாகும்.

நாட்டில் மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணிமூலம் 408 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 54 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 954 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 154 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

குணமடைந்து வீடு திரும்பினார் ரஜினி!

இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், குணமடைந்து, மருத்துவ கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக வைத்தியசாலையிலேயே  சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை மருத்து கண்காணிப்பிலிருந்து விடுவிப்பது குறித்து அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் செய்தி குறிப்புகளை வெளியிட்டது.

அதில், ரஜினி உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் எளிதான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை வைத்தியர்கள் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் இருந்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை பகுதிகளில் 25 பேருக்கு கொரோனா!

பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 26.12.2020 நேற்று மாலை வெளியாகிய அறிக்கையின் படி 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 03 பேருக்கும், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 09 பேருக்கும், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 03 பேருக்குமாக மொத்தமாக 25 பேருக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டப்பகுதியில் வசிக்கும் 5 பேருக்கும், நோர்வூட் வெஞ்சர் கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8 மற்றும் தரம் 10 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்ற இரண்டு மாணவர்களுக்கும், நோர்வூட் போட்றி தோட்டத்தில் ஒருவருக்கும், டிக்கோயா பட்டல்கல தோட்டப்பகுதியில் உள்ள ஒருவருக்குமாக மொத்தம் 10 பேர் இணங்காணப்பட்டுள்ளனர்.

தலவாகலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் சிசு உட்பட 35 வயதுடைய பெண் ஒருவர், 20 வயதுடைய இளைஞன் ஒருவருமாக மூவரும், தலவாகலை ஒலிரூட் தோட்டத்தில் 56 வயது ஆண் ஒருவரும், கொட்டகலை டிரைட்டன் கே.ஒ பிரிவில் 59 வயது பெண் ஒருவர், டிரைட்டன் டீ.டி பிரிவில் 20 வயது பெண் ஒருவர், டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவரும், வட்டகொடை பகுதியில் இருவருமாக ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, சாமிமலை கவரவில தோட்டப்பகுதியில் ஆண் ஒருவர், பெண் ஒருவருமாக இருவரும், சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்தில் பெண் ஒருவருமாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லிந்துலை பகுதியில் ஒருவரும், லிந்துலை வோல்ட்றீம் தோட்டப்பகுதியில் ஒருவரும், நாகசேனை வலகா தோட்டப்பகுதியில் ஒருவருமாக மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...