Home Blog Page 3699

நாட்டில் மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 366 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 221 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 8 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 726 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் ‘லொக்டவுன்’!

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் இன்று (28.12.2020) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுன்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இந்நிலையிலேயே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மவுன்ஜீன் தோட்டம் முடக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இத்தோட்டத்தில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

‘கொரோனா’விலிருந்து 33,221 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 520 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 642 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கனரக லொறி விபத்து – இருவர் படுகாயம்!

வலப்பனை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து ரம்புக்பத் ஓயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

28.12.2020 அன்று காலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992 ஆம் ஆண்டு ரோஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், சைனீஸ் என பல்வேறு மொழிகளில் சுமார் 145க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார். தனது தாய் துணிச்சலானவர் என ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதிய கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலி – தமிழ் படங்களை வெளியிடுவதில் சிக்கல்!

புதிய கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் திரையரங்குகளும் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் தடைபட்டன. கடந்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் புதுவகை கொரோனா வைரஸ் இன்னும் வீரியமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். எனவே எப்.எம்.எஸ் எனப்படும் வெளிநாட்டு திரையீட்டு உரிமையும் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால் இந்த பொதுமுடக்கத்தால் அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லாபத்தில் கணிசமாக பாதிக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.

பிரபல மல்யுத்த வீரர் லூக் ஹார்ப்பர் காலமானார்!

பிரபல மல்யுத்த வீரரான லூக் ஹார்ப்பர் நேற்று மரணமடைந்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்தமும் ஒன்று. இந்த விளையாட்டிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த விளையாட்டில் உள்ள பிரபலமான வீரர்களில் லூக் ஹார்ப்பரும் ஒருவர். இவர் ’வயட் பெம்லி’ என்ற பெயருடைய குழுவுடன் இணைந்து மல்யுத்தத்தில் பங்கேற்றுவந்தார். பின்னர் அந்த குழுவில் இணையாமல் தனியாகவே போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

லூக் ஹார்ப்பரின் உண்மையான பெயர் ஜானத்தன் ஹுபர். 41 வயதான லூக் ஹார்ப்பர் மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் 2019 ஆம் ஆண்டு டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லூக் ஹார்ப்பர் நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மனைவி அமேண்டா உறுதிபடுத்தியுள்ளார்.

லூக் ஹார்ப்பரின் மறைவுக்கு டபுள்யூ டபுள்யூ இ மல்யுத்த வீரர்களும், ரசிகர்களும் இரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், லூக் ஹார்ப்பரின் மறைவால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பிக்க, பொன்சேகா, ராஜித, வெல்கமவுக்கு ஐ.ம.சக்தியில் சிரேஷ்ட உப தலைவர் பதவி!

6 சிரேஷ்ட உப தலைவர்களையும்,  5 உப தலைவர்களையும் நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சியின் புதிய யாப்பின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, குமார வெல்கம, தலதா அத்துகோரல மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சிரேஷ்ட உப தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ரவி சமரவீர, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க, சந்ராணி பண்டார, ரஞ்சன் அளுவிகார ஆகியோருக்கு ‘உப தலைவர்’ பதவி வழங்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாசீமும், உப செயலாளராக அசோக அபேசிங்கவும் செயற்படவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்புக்கு அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு பண்டாரவளையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஒப்புதல் வழங்கியது.

குறித்த யாப்பின் பிரகாரம் புதிய உறுப்பினர்கள் தேர்வு ஜனவரியில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

தலைவர் உட்பட நிர்வாகப் பதவிகளுக்கு வருடாந்தம் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும். செயற்குழுவுக்கு 80 பேரை உள்வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைந்த பின்னர் தலைமைத்துவ சபையொன்று உருவாக்கப்படும்.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தில் யாழில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம் நல்லூர் பின் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே, விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், கொல்லாதே கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளும் மனிதர்களே, சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா? உட்பட  பல்வேறு கோஷங்களை இதன்போது எழுப்பட்டன.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி
மன்றங்களில் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 16 பேருக்கு கொரோனா!

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அங்கு தொழில் புரிந்தவர்களிடம் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (27.12.2020) வெளியாகின. இதில் மேலும் 16 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ, கினிகத்தேனை பலன்தொட, வட்டவளை, டெம்பல்ஸ்டோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...